Advertisment

உள்நாட்டில் உருவாக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி கப்பல் IAC-1; சிறப்பம்சங்களும், முக்கியத்துவமும் என்ன?

இதன் மூலம் 2000 இந்தியர்கள் நேரடி வேலை வாய்ப்பினையும் மறைமுகமாக 40 ஆயிரம் இந்தியர்கள் வேலை வாய்ப்பினையும் பெற்றார்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Made-in-India aircraft carrier, IAC-1, Made-in-India aircraft carrier, INS Vikrant

Krishn Kaushik

Advertisment

IAC-1, the Made-in-India aircraft carrier : ஒரு வருடம் கழித்து இந்திய விமானப் படையில் நுழைய இருக்கும், உள்நாட்டிலேயே உருவாக்கபட்ட விமானம் தாங்கி கப்பல் (Indigenous Aircraft Carrier (IAC) 1), ஐ.என்.எஸ். விக்ராந்த் தன்னுடைய கடல் சோதனைகளை ஆரம்பித்துள்ளது. புதன்கிழமை அன்று இறுதிக் கட்ட சோதனைகளில் இறங்கியுள்ளது. போர்க்கப்பல்கள் என்றால் என்ன? ஒரு நாட்டிற்கு ஏன் அவை மிக முக்கியமானவை என்பதை விளக்குகிறது இந்த சிறப்புக் கட்டுரை

ஐ.ஏ.சி. 1 என்றால் என்ன?

இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி கப்பல் ஆகும். விமானம் தாங்கிக் கப்பல் ஒரு நாட்டின் மிகவும் சக்தி வாய்ந்த கடல்சார் சொத்தாக கருதப்படுகிறது. இது ஒரு கடற்படையின் விமான மேலாதிக்க நடவடிக்கைகளை, சொந்த நாட்டில் இருந்து வெகு தொலைவிற்கு சென்று மேற்கொள்ள உதவுகிறது.

பல வல்லுநர்கள் ஒரு விமானம் தாங்கி கப்பலை ஒரு ‘நீல நீர்’ கடற்படையாகக் கருதுவது அவசியம் என்று கருதுகின்றனர். ஏன் என்றால் இது ஒரு நாட்டின் வலிமையையும் சக்தியையும் கடல் பிரதேசங்களில் முன்னிறுத்துகிறது. ஒரு விமானம் தாங்கி பொதுவாக ஒரு கேரியர் ஸ்ட்ரைக்/போர்க் குழுவின் மூலதனக் கப்பலாக வழிநடத்துகிறது. கேரியர் ஒரு மதிப்புமிக்க மற்றும் சில நேரங்களில் பாதிக்கப்படக்கூடிய இலக்காக இருப்பதால், அது வழக்கமாக டெஸ்ட்ராயர்கள், ஏவுகணைகள், கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் விநியோக கப்பல்களுடன் அழைத்துச் செல்லப்படுகிறது.

IAC-1 Made-in-India aircraft carrier

ஐ.ஏ.சி. 1 இந்திய கப்பற்படையின் கப்பல் வடிவமைப்பு இயக்குநரகம் வடிவமைக்க, கொச்சின் ஷிப்யார்ட் லிமிட்டட் நிறுவனம் அதை உருவாக்கியது. கொச்சின் ஷிப்யார் லிமிட்டட் இந்திய கப்பல்துறையின் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனமாகும்.

இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட இந்த போர்க்கப்பல் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?

உலகில் ஐந்து அல்லது ஆறு நாடுகள் மட்டுமே போர்க்கப்பல் தயாரிக்கும் வல்லமை கொண்டதாக உள்ளன. தற்போது இந்த பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. நிபுணர்கள் மற்றும் கப்பற்படையினர், இந்தியாவால் மிகவும் சவால் மிக்கதாக கருதப்படும் போர்க்கப்பல் ஒன்றை உருவாக்கி தன்னிறைவு மற்றும் திறனை நம்முடைய நாடு நிரூபித்துள்ளது என்று கூறுகின்றனர்.

IAC-1 Made-in-India aircraft carrier

இதற்கு முன்பு இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட போர் கப்பல்கள் இங்கிலாந்து அல்லது ரஷ்யாவினால் உருவாக்கப்பட்டதாக இருக்கும். இந்தியாவில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் ஒரே ஒரு போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா 2013ம் ஆண்டு அதன் சேவையை துவங்கியது. இது சோவியத்-ரஷ்ய அட்மிரல் கோர்ஷ்கோவ்வாக தன்னுடைய பயணத்தை துவங்கியது. இதற்கு முன்பு இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட ஐ.என்.எஸ். விக்ராந்த் மற்றும் ஐ.என்.எஸ். விராட் ஆகிய இரண்டும் இங்கிலாந்தியின் எச்.எம்.எஸ். ஹெகுலஸ் மற்றும் எச்.எம்.எஸ். ஹெர்மெஸ் நிறுவனங்களால் உருவாக்கப்பட்டு முறையே 1961 மற்றும் 1987ம் ஆண்டு செயல்பாட்டிற்கு வந்தது.

தற்போது உருவாக்கப்பட்டிருக்கும் இந்த விமானத்தின் 76% பாகங்கள் இந்தியாவில் உருவாக்கப்பட்டவையே. 23,000 டன் எஃகு, 2500 கி.மீ கேபிள் வையர்கள், 150 கி.மீ அளவிலான பைப்புகள், மற்றும் 2000 வால்வுகள் மற்றும் ஹல் படகுகள், கல்லி கருவிகள், ஏர் கண்டிசனிங்க் மற்றும் குளிரூட்டும் ஆலைகள் மற்றும் ஸ்டீரிங் கியர்கள் போன்ற முழுதாக முடிக்கப்பட்ட கருவிகளும் இந்தியாவில் உருவாக்கப்பட்டவையே.

Made-in-India aircraft carrier, IAC-1, Made-in-India aircraft carrier, INS Vikrant , IAC-1 Made-in-India aircraft carrier<br />

இந்த கப்பல் கட்டுமான வேலையில் இந்தியாவைச் சேர்ந்த 50 இந்திய நிறுவனங்கள் பங்கேற்றது என்றும் இதன் மூலம் 2000 இந்தியர்கள் நேரடி வேலை வாய்ப்பினையும் மறைமுகமாக 40 ஆயிரம் இந்தியர்கள் வேலை வாய்ப்பினையும் பெற்றார்கள். 23,000 கோடி மதிப்பிலான திட்டச் செலவில் 80-85 சதவிகிதம் இந்தியப் பொருளாதாரத்தில் சுழலவிட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு ஏன் ஐ.என்.எஸ். விக்ராந்த் என்ற பெயர் வைக்க உள்ளனர்?

ஐ.என்.எஸ். விக்ராந்த், 19 ஆயிரத்து 500 டன் எடை கொண்ட இந்தியாவின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஆகும். 1997ம் ஆண்டு கப்பற்படை சேவையில் இருந்து விலகுவதற்கு முன்பு பல ஆண்டுகளாக மகத்தான சேவையை நம் நாட்டிற்காக புரிந்தது. இங்கிலாந்திடம் இருந்து விக்ராந்தை 1961ம் ஆண்டு இந்தியா வாங்கியது. 1971ம் ஆண்டு வங்கதேசம் உருவாகத்திற்கு காரணமாக அமைந்த பாகிஸ்தானுடனான போரில் மிக முக்கிய பங்காற்றியந்து விக்ராந்த்.

விக்ராந்த் வங்கக் கடலில் பணிக்கு அமர்த்தப்பட்டது. கடலில் இருந்த வர்த்தக கப்பல்கள், மற்ற இலக்குகள் மற்றும் துறைமுகங்களை தாக்கி அழிக்க பயன்படுத்தப்பட்ட சீ ஹாக் போர் விமானம் மற்றும் ஆலிஸ் சர்வைலன்ஸ் விமானம் ஆகியவை இந்த விமானம் தாங்கி கப்பலில் இருந்து ஏவப்பட்டது. இதன் மூலம் பாகிஸ்தான் படையினர் கடல் மார்க்கம் வழியாக தப்பிச் செல்வது தடுக்கப்பட்டது.

புதன்கிழமை அன்று, இந்தியாவிற்கு பெருமை சேர்த்த வரலாற்று சிறப்புமிக்க நாளில் விக்ராந்த் தன்னுடைய முதல் கடல் சோதனைக்காக புறப்படுகிறாள். இதற்கு முன்பு தன்னுடைய முன்னோடியான விக்ராந்த் 1971ம் ஆண்டு ஏற்படுத்திய மகத்தான வெற்றியின் ஐம்பதாம் ஆண்டில் இந்த பயணத்தை முன்னெடுத்துள்ளது விக்ராந்த் என்று தேசிய கப்பற்படை குறிப்பிட்டிருந்தது.

விக்ராந்த் கப்பலில் இடம் பெற்றிருக்கும் ஆயுதங்கள் என்ன?

இந்திய கப்பற்படை எந்தெந்த ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்களை இந்த கப்பல் கொண்டிருக்கும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதையும் வெளியிடவில்லை. ஆனால் புதிய விக்ராந்த், ஏற்கனவே இந்தியாவில் செயல்பாட்டில் இருக்கும் விக்ரமாதித்யாவுடன் ஒப்பீட்டளவில் ஒரே மாதிரியாக உள்ளது. விக்ரமாதித்யா 44.500 டன்கள் எடை கொண்ட கப்பலாகும். இதில் 34 போர் விமானங்கள் (ஜெட்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள்) உள்ளன.

மிக சக்திவாய்ந்த கடல் சார்ந்த சொத்து என்று ஏற்கனவே கப்பற்படை அறிவித்திருந்த நிலையில், ரஷ்யாவின் மிக்-29கே போர் விமானம் மற்றும் கமோவ் - 31 ஏர் இயர்லி வார்னிங் ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை கொண்டிருக்கும் என்று கூறியுள்ளது. இவை இரண்டும் விக்ரமாதித்யாவிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க வான்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின் தயாரித்த எம்ஹெச் -60 ஆர் சீஹாக் மல்டிரோல் ஹெலிகாப்டர் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் உருவாக்கிய மேம்பட்ட லைட் ஹெலிகாப்டர் (ஏஎல்எச்) ஆகியவையும் புதிய விக்ராந்த்தில் பயன்படுத்தப்படும்.

IAC-1 Made-in-India aircraft carrier

தற்போது இந்தியாவால் போர்க்கப்பல்களை உருவாக்க முடியும். எதிர்காலத்தில் மேலும் கேரியர்களை இந்தியா உருவாக்குமா?

2015ம் ஆண்டு முதல் நாட்டின் மூன்றாவது விமானதாங்கி கப்பலை உருவாக்குவதற்கான அனுமதிக்காக காத்திருக்கிறது. அந்த அனுமதி வழங்கப்பட்டால், இந்தியாவில் உருவாக்கப்பட இருக்கும் இரண்டாவது போர்க்கப்பல் அதுவாக இருக்கும். தற்போது முன்மொழிவு செய்யப்பட்டிருக்கும் அந்த போர்க்கப்பலுக்கு ஐ.என்.எஸ். விஷால் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது 65 ஆயிரம் டன் எடை கொண்ட ஐ.ஏ.சி. 1 மற்றும் விக்ரமாதித்தியாவை விட மிகப்பெரிய போர்க்கப்பலாக இது இருக்கும்.

இந்த கப்பலை வைத்திருப்பதற்கான செயல்பாட்டு தேவையை அரசுக்கு கூற முயன்று வருகிறது இந்திய கப்பற்படை. கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் கடந்த ஆண்டு கடற்படை தினத்தன்று கடற்படை "இணைக்கப்பட்ட சக்தியாக" இருக்க முடியாது என்று கூறினார். கடற்படை அதிகாரிகள், சக்தியைத் திட்டமிட, இந்தியா ஒரு பெருங்கடலில் மிக அதிக தூரம் செல்ல வேண்டியது அவசியம் என்று வாதிட்டனர், இது ஒரு விமானம் தாங்கி கப்பலை கொண்டு சிறப்பாக செய்ய முடியும் என்றும் அவர் கூறினார்.

IAC-2 இன் அவசியத்தை அரசாங்கம் உணர்வதற்கு மனநிலையில் மாற்றம் தேவை என்று கப்பற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், ஆயுதப் படைகளை கையகப்படுத்துவதில் முன்னுரிமை அளிக்கிறார், மற்றொரு விமானம் தாங்கி கப்பலில் முதலீடு செய்வதற்கு எதிராகப் பேசினார், அதற்கு பதிலாக லட்சத்தீவு மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகளை மூழ்க முடியாத கடற்படை சொத்துக்களாக உருவாக்க முடியும் என்று பரிந்துரைத்தார்.

Made-in-India aircraft carrier, IAC-1, Made-in-India aircraft carrier, INS Vikrant , IAC-1 Made-in-India aircraft carrier<br />

இந்திய பெருங்கடல் பிராந்தியத்தை பாதுகாக்க, இரவும் பகலும் அங்கே வான்வழி கண்காணிப்பு தேவை. மூன்றாவது போர்க்கப்பல் அந்த தேவையை பூர்த்தி செய்யும் என்று கப்பற்படை வாதிட்டுள்ளது. மேலும் தற்போது இது போன்ற கப்பல்களை உருவாக்க இந்தியா தன்னுடைய திறனை வளர்த்துக் கொண்டதால், இந்த முடிவில் மாற்றம் வேண்டாம் என்றும் வாதாடியுள்ளது. கடற்படை மற்றும் நாடு கடந்த 60 ஆண்டுகளில் "கடல்சார் விமானக் கலையில்" பெற்ற நிபுணத்துவமும் வீணாகக் கூடாது என்று வாதிடுகிறனர்.

தற்போது அமெரிக்காவிடம் 11 போர்க்கப்பல்கள் உள்ளன. சீனாவும் முனைப்புடன் போர்க்கப்பல்கள் உருவாக்கத்தில் ஈடுபட்டு வருகிறது. அதனிடம் தற்போது 2 போர் கப்பல்கள் உள்ளன. மூன்றாவது விமானம் தாங்கி போர்க்கப்பல் உருவாக்கப்பட்டு வருகிறது. மற்ற இரண்டும் இன்னும் 10 வருடங்களில் சேவைக்கு வரலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியா IAC-2 திட்டத்தை இப்போது வழங்கினாலும், போர்க்கப்பல் தன் சேவையை தொடங்குவதற்கு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிடும் என்று கடற்படை அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

உருவாக்கத்திற்கான 20+ ஆண்டுகள்

1999: விமானப் பாதுகாப்பு கப்பலை (ஏடிஎஸ்) உருவாக்க ‘பி 71’ திட்டம் உருவாக்கப்பட்டது

2003: விமானம் தாங்கிக் கப்பல் திட்டத்திற்கு அரசு அனுமதி கிடைத்தது

2006: ஏடிஎஸ் உள்நாட்டு விமானம் தாங்கிக் கப்பலாக மாறியதாக கடற்படை கூறுகிறது

2009: கீல் போடப்பட்டது

2011: உலர் கப்பல்துறையிலிருந்து மிதந்தது

2013: தொடங்கப்பட்டது

நவம்பர் 2020: துறைமுகம் மற்றும் பேசின் சோதனைகள் முடிவடைந்தன

அடுத்த 6-7 மாதங்களில் கடல் சோதனைகள் தொடரும; பின்பு அதனை கப்பல் படைக்கு வழங்குவார்கள்

ஆகஸ்ட் 2022: செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமானம் மற்றும் கூறு பாகங்களின் சோதனைகள் தொடரும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Indian Navy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment