Advertisment

சர்வதேச சிறுதானிய ஆண்டு: 2023இல் தானியங்களை ஊக்குவிக்க இந்திய அரசின் முயற்சிகள் என்ன?

ஐக்கிய நாடுகள் சபை 2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது. அதன்படி இந்தாண்டில் தானிய உற்பத்தியை மேம்படுத்த இந்திய அரசு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சர்வதேச சிறுதானிய ஆண்டு: 2023இல் தானியங்களை ஊக்குவிக்க இந்திய அரசின் முயற்சிகள் என்ன?

ஐக்கிய நாடுகள் சபை 2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது. உலக அளவில் சிறுதானியங்கள் உற்பத்தியில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்தியா முன்மொழியப்பட்ட நிலையில் இது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில். ஊட்டச்சத்து தானியங்களை ஊக்குவிக்க நரேந்திர மோடி அரசாங்கம் இந்த ஆண்டு வித்தியாசமான ஒன்றைச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விழிப்புணர்வு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு "சிறப்பு தினை விருந்து" ஏற்பாடு செய்வதைக் காட்டிலும் மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது .

Advertisment

அரசு என்ன செய்யும்?

சிறுதானிய நன்மைகள்

தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் உணவு நார்ச்சத்து மற்றும் அமினோ அமில விவரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அரிசி மற்றும் கோதுமையை விட சிறுதானியகள் அதிக நன்மைகள் கொண்டன. பளபளப்பான/வெள்ளை அரிசி, உதாரணமாக, 2-4 மி.கி/கி.கி இரும்பு சத்து, 15-16 மி.கி/கி.கி ஜிங்க் சத்து கொண்டுள்ளது. கோதுமையில் இரும்பு சத்து (37-39 மி.கி/கி.கி) மற்றும் ஜிங்க் (40-42 மி.கி/கி.கி) கொண்டுள்ளது. ஆனால் அதன் புரதச்சத்து அரிசியை விடவும் குறைவாக உள்ளது. கோதுமையின் சராசரி 13% புரத உள்ளடக்கத்தில் 80% வரை பசையம் உள்ளது, இது பலருக்கு இரைப்பை குடல் மற்றும் சில உடல் பாதிப்புகளை தூண்டுவதாக கூறப்படுகிறது.

publive-image

மறுபுறம், பஜ்ரா (முத்து தினை), கோதுமையுடன் ஒப்பிடக்கூடிய இரும்பு, ஜிங்க் மற்றும் புரத அளவுகளைக் கொண்டுள்ளது.

ஆனால் இது பசையம் இல்லாதது மற்றும் அதிக நார்ச்சத்து கொண்டது. பஜ்ராவிலிருந்து தயாரிக்கப்படும் ரொட்டிகள், ஜீரணிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்வதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை உடனடியாக உயர்த்தாது. நீண்ட நேரம் நிறைவாக உணர வைக்கிறது.

publive-image

அதே ஊட்டச்சத்து உயர் பண்புகள் - ஆற்றல் அடர்த்தியான ஆனால் நுண்ணூட்டச் சத்துக்கள் இல்லாத உணவுகளை உட்கொள்வதால் எழும் "மறைக்கப்பட்ட பசி" பிரச்சனையை கணிசமாக தீர்க்கின்றன - மற்ற தினைகளிலும் உள்ளன.

ஜோவர், ராகி, கோடோ, குட்கி, கக்குன், சான்வா, சீனா, குட்டு மற்றும் சௌலை ஆகியவற்றிலும் சத்துகள் உள்ளன.

ஊட்டச்சத்து நன்மைகள் தவிர, தினைகள் கடினமான மற்றும் வறட்சியை எதிர்க்கும் பயிர்கள். இது அவர்களின் குறுகிய கால (70-100 நாட்கள், அரிசி மற்றும் கோதுமைக்கு எதிராக 115-150 நாட்கள்), குறைந்த நீர் தேவை (350-500 மிமீ மற்றும் 600-1,250 மிமீ) மற்றும் மோசமான மண் மற்றும் மலைப்பகுதிகளில் கூட வளரும் திறன் ஆகியவற்றுடன் தொடர்புடையது.

சிறுதானியங்கள்

இருப்பினும், வியாபாரிகள், விவசாயிகளின் முதல் தேர்வாக சிறுதானியங்கள் இல்லை. நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள ஏழைகளுக்கு, அரிசி மற்றும் கோதுமை ஒரு காலத்தில் அரிதான உணவாக இருந்தது.

ஆனால் பசுமைப் புரட்சி மற்றும் 2013 ஆம் ஆண்டின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கு நன்றி, இந்தியாவின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் ஒரு நபருக்கு 5 கிலோ கோதுமை அல்லது அரிசியை முறையே ரூ.2 மற்றும் ரூ.3/கிலோ என்ற விலையில் பெறுகின்றனர். உண்மையில், மோடி அரசாங்கம் ஜனவரி 2023 முதல் இரண்டு நல்ல தானியங்களை இலவசமாக வழங்கியுள்ளது.

சிறுதானியங்களை விட கோதுமையில் ரொட்டி செய்வது எளிது. காரணம் பசையம் புரதங்கள், அவற்றின் அனைத்து குறைபாடுகளுக்கும், கோதுமை மாவை மிகவும் ஒத்திசைவான மற்றும் மீள்தன்மையாக்குகின்றன. இதனால் ரொட்டிகள் லேசாக மற்றும் பஞ்சுபோல் வருகிறது. ஆனால் பஜ்ரா அல்லது ஜோவரில் இது இல்லை.

விவசாயிகளுக்கு, ஒரு ஹெக்டேருக்கு குறைந்த விளைச்சல் - தேசிய சராசரியாக ஜோவருக்கு தோராயமாக 1 டன், பஜ்ராவிற்கு 1.5 டன் மற்றும் ராகிக்கு 1.7 டன், கோதுமைக்கு 3.5 டன் மற்றும் நெல்லுக்கு 4 டன் என ஊக்கமளிக்கிறது. உறுதியான நீர்ப்பாசனத்தை அணுகுவதன் மூலம், அவர்கள் அரிசி, கோதுமை, கரும்பு அல்லது பருத்திக்கு மாற முனைவார்கள்.

publive-image

கம்புகள் பல ஆண்டுகளாக உற்பத்தி குறைந்து அழிந்து வருகிறது. ஈரப்பதம் ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது. 2003-04 மற்றும் 2021-22 க்கு இடையில், இந்தியாவின் தினை உற்பத்தி உண்மையில் 21.32 மில்லியன் டன்னிலிருந்து (mt) 15.92 mt ஆகக் குறைந்துள்ளது. அதில் ஏறக்குறைய 98% வெறும் மூன்று தானியங்கள் - பஜ்ரா (12.11 மீ டன்லிருந்து 9.62 மீ டன் வரை), ஜோவர் (6.68 மீ டன் முதல் 4.23 மீ டன் வரை) மற்றும் ராகி (1.97 மீ டன் முதல் 1.70 மீ டன் வரை) - சிறிய தினைகள் மீதமுள்ளவை (0.56 மீ. 0.37 மீ).

பள்ளிகள் மூலம் தீர்வு

இந்தியாவில், 2021-22-ம் ஆண்டிற்கான சமீபத்திய அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 14.89 லட்சம் பள்ளிகளில் 26.52 கோடி குழந்தைகள் தொடக்க நிலை மற்றும் மேல்நிலை நிலை வகுப்புகளில் சேர்ந்துள்ளனர். பள்ளிகளில் ஊட்டச்சத்து உணவு வழங்கப்படுகிறது.

மேலும், 13.91 லட்சம் அங்கன்வாடி பராமரிப்பு மையங்களில் 7.71 கோடி குழந்தைகள் மற்றும் 1.80 கோடி கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு கூடுதல் ஊட்டச்சத்து வழங்கப்படுகிறது. இது சிறுதானியங்களுக்கான மிகப்பெரிய "சந்தை" ஆகும். நுண்ணூட்டச் சத்து குறைபாட்டைத் தணிக்க வேண்டிய அவசியத்தைக் கருத்தில் கொண்டு - குறிப்பாக இரும்புச் சத்து மற்றும் ஜிங்க் குறைபாடு முறையே ரத்த சோகை மற்றும் வளர்ச்சி குறைபாடுகளுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. அதே சமயம் பலவீனமான அறிவாற்றல் செயல்திறன் மற்றும் வயிற்றுப்போக்கின் பாதிப்புக்கு பங்களிக்கிறது. சிறுதானியங்கள் குழந்தைகளின் உணவில் சிறுதானியங்கள் முக்கிய அங்கமாக இருக்க வேண்டும்.

பள்ளிக் குழந்தை மற்றும் அங்கன்வாடி பயனாளிகளுக்கு தினமும் ஒரு சூடான உணவு தயாரித்து வழங்கப்படுகிறது. பஜ்ரா, ஜோவர், ராகி, கோடோ அல்லது குட்கி 150-மிலி கிளாஸ் பால் மற்றும் ஒரு முட்டையுடன் வழங்கப்படுகிறது. இது மில்லியன் கணக்கான சிறுதானிய விவசாயிகளுக்கு, கோழி பண்ணை உரிமையாளருக்கு உற்பத்தி பெருகுகிறது. ஊக்கமளிக்கிறது. பிரதான் மந்திரி போஷன் சக்தி நிர்மான் மற்றும் சக்ஷம் அங்கன்வாடி & போஷன் 2.0 ஆகிய இரண்டு திட்டங்கள் பிரதானமாக உள்ளது. 2022-23-ம் ஆண்டு ரூ 30,496.82 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றில் அதிக சிறுதானியங்கள் சேர்ப்பதன் மூலம் திட்டத்தை சிறப்பாகப் பயன்படுத்த முடியும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment