The making of Pegasus : தாங்கள் உருவாக்கும் மென்பொருள்களில் இருக்கும் தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் பிரச்சனைகளை சரி செய்ய ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான சைபர் செக்யூரிட்டி ஆராய்ச்சியாளர்களை பெரிய பெரிய நிறுவனங்கள் பணிக்கு அமர்த்துகின்றனர். தொழில்நுட்ப மென்பொருள்கள் மற்றும் தீர்வுகளை உருவாக்கும் நிறுவனங்கள் பல, அவர்களின் மென்பொருள்களில் இருக்கும் குறைகளை கண்டுபிடித்து தரும் சுதந்திரமான சைபர் செக்யூரிட்டி ஆராய்ச்சியாளர்களுக்கு ரிவார்டுகளையும் வழங்குவது வழக்கம். இது போன்ற சூழலில், உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களால் இணைக்கப்படும் ஒரு சைபர்-தாக்குதல் கருவி, இலக்குகளை மட்டுமல்லாமல், அதனை வழங்கும் தளத்தையும் ஏமாற்றுவதற்கான பொறிமுறையை கொண்டிருக்க வேண்டும்.
“பெகாசஸ் ஸ்பைவேர்” பத்திரிக்கையாளர்கள் பட்டியலில் இடம் பெற்ற 3 எக்ஸ்பிரஸ் ஆசிரியர்கள்
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஆயிரக்கணக்கான மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அதிருப்தியாளர்களின் அரசு கண்காணிப்பின் மையத்தில் இருக்கும் இஸ்ரேலின் என்.எஸ்.ஒ குழு, பெகாசஸ் என்ற அத்தகைய கருவியை உருவாக்கியுள்ளது. உலகின் மிகவும் தீவிரமான கண்காணிப்பை மேற்கொள்ளும் உளவு ஸ்பைவேர் ஆகும். இது சாதனத்தின் டெவலப்பருக்கும் அதன் மென்பொருளுக்கும் தெரியாத இலக்குகளின் செல்போன்களில் ஊடுருவ முடியும். மேலும் இதற்காக எந்த ஒரு இணைப்பையும் க்ளிக் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
மேலும் படிக்க : 2 அமைச்சர்கள் மற்றும் 3 எதிர்க்கட்சி தலைவர்களின் தொலைபேசி எண்கள் கண்காணிப்பு
பெகாசஸ் ஆரம்பம்
என்எஸ்ஓ குழுமத்தின் சுய விபரத்தை வெளியிட்ட பிரான்ஸ் நாட்டின் லாபநோக்கமற்ற ஊடகவியல் அமைப்பான ஃபோர்பிடன் ஸ்டோரீஸ் பெகாசஸ் ப்ரோஜெக்ட் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஷாலெவ் ஹுலியோ மற்றும் ஓம்ரி லாவி என்ற இரண்டு நண்பர்கள் மீடியாஅண்ட் என்ற ப்ரோடெக்ட் ப்ளேஸ்மெண்ட் நிறுவனத்தை 2000ம் ஆண்டில் துவங்கினார்கள். ஆரம்ப காலத்தில் நன்றாக செயல்பட்டாலும் 2008ம் ஆண்டு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது. ஆனால் 2007ம் ஆண்டு ஹுலியோ மற்றும் லாவி ஆப்பிள் ஐபோன் வெளியீட்டில் ஒரு வாய்ப்பைக் கண்டனர். இந்த காலத்தில் தான் அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி அனுப்பதலை தாண்டி பல்வேறு தேவைகள்ளுக்காக செல்போன்கள் பயன்படுத்த ஆரம்பமான காலம்.
ஹூலியோ மற்றும் லாவி, ஒரு ஸ்மார்ட்போனை வெகு தொலைவில் இருந்து கட்டுப்படுத்தும் செயலியான கம்யூனிடேக் என்ற தொழில்நுட்பத்தை கண்டறிந்தார்கள். தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படும் போது அதனை சரி செய்ய மொபைல்களை முழுமையாக அணுக மொபைல் ஆப்பரேட்டர்களுக்காக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பமாகும். ஆனால் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு பரவுவதோடு, மறைகுறியாக்கப்பட்ட செய்தியிடல் சேவைகள் போன்ற பாதுகாப்பு அம்சங்களை வழங்குவதற்கான தேவை எழுந்ததும், இது சட்ட அமலாக்க மற்றும் உளவுத்துறை நிறுவனங்களுக்கு ஒரு சவாலாக அமைந்தது.
மேலும் படிக்க : இஸ்ரேல் நாட்டில் உருவாக்கப்பட்ட பெகாசஸ் ஸ்பைவேர் என்றால் என்ன?
இதுவரை, புலனாய்வு அமைப்புகள் தொலைதொடர்பு நிறுவனங்களின் நெட்வொர்க்குகளில் ஒரு செய்தியை அல்லது அழைப்பை இடைமறிக்கும். ஆனால் மறைகுறியாக்கப்பட்ட சேவைகள் என்பது அவர்கள் சாதனத்தை அணுகி தகவல்தொடர்புகளை என்க்ரிப்ட் செய்யும் வரை அவர்கள் செய்தியை அணுக முடியாது. அதற்கு அவர்களுக்கு குறியாக்க விசை (Encryption Key) தேவைப்படுகிறது.
ஆனால் இவை அனைத்தும் தெரியாமலே ஹூலியோ மற்றும் லாவி தங்களின் பிரச்சனைகளை சரி செய்து கொண்டனர். ஏஜென்சிகள், குறியாக்கத்தைத் தவிர்த்து, அவர்களுக்குத் தேவையான அனைத்து தகவல்களையும் பைரேட் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். , இரண்டு இஸ்ரேலிய தொழில்முனைவோர் தங்கள் தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள புலனாய்வு அமைப்புகளால் அணுகப்பட்டனர் என்று ஹூலியோ சொல்வதுண்டு. சைபர்-இன்டலிஜென்ஸின் ஒளிபுகா உலகத்தைப் பற்றி ஹுலியோவும் லாவியும் கொஞ்சம் அறிந்திருந்தனர். ஆனாலும் தங்களால் முடியும் என்ற நம்பிக்கையுடன் களம் இறங்கினார்கள். அவர்கள் முன்னாள் மொசாட் உளவுத்துறை செயல்பாட்டாளர் மற்றும் பாதுகாப்பு நிபுணரான நிவ் கார்மியை அழைத்து வந்து 2010 இல் என்எஸ்ஓ குழுமத்தை உருவாக்கினர். மூவரும் (நிவ், ஷாலெவ் மற்றும் ஓம்ரி, அல்லது என்எஸ்ஓ, சுருக்கமாக) தெளிவான பாத்திரங்களுடன் இயங்கினர்: நிவ் கார்மி தொழில்நுட்பத்தை கையாண்டார் மற்றும் ஹூலியோ மற்றும் லாவி வணிகத்தை மேற்கொண்டனர் என்று ஃபோர்பிடன் ஸ்டோரீஸ் குறிப்பிட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
ஸ்பை-டெக் மற்றும் ஜீரோ க்ளிக்
புலனாய்வு அமைப்புகள் மற்றும் பொலிஸ் படையினருக்கான உளவு தீர்வாக பெகாசஸை உருவாக்குவதில் என்எஸ்ஓ கவனம் செலுத்தத் தொடங்கியது. பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றைச் சமாளிக்க அரசாங்க நிறுவனங்கள் இதைப் பயன்படுத்தும் என்ற கதையை அவர்கள் கட்டி எழுப்பியுள்ளனர். ஆனால் இதன் முதல் வாடிக்கையாளர் மெக்ஸிகோ. பின்னர் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராகப் போராடுவதற்கு சைபர்-உளவு கருவிகளைக் கொண்டு தன்னை கட்டமைத்துக் கொண்டது. 2016-2017 காலங்களில் மெக்ஸிகோவில் 15 ஆயிரம் நபர்கள் இலக்காக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் மக்களுக்கு நெருக்கமாக இருந்த வேட்பாளர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர், தற்போதைய மெக்ஸிகோ அதிபர் உளவு பார்க்கப்பட்டுள்ளார். மேலும் பத்திரிக்கையாளர்கள், அரசு அதிருப்தியாளர்கள், அவர்களுடன் பணியாற்றும் நபர்கள், மற்றும் குடும்ப உறுப்பினர்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்தனர் என்கிறது ஃபோர்பிடன் ஸ்டோரீஸ்.
பெகாசஸ் செல்போன்களில் ஊடுருவி எவ்வாறு உளவு பார்க்கிறது? விரிவாக கூறும் விளக்கப்படங்கள்
மெக்ஸிகன் அரசங்காத்திற்கு பெகாசஸ் மிகவும் பிடித்துவிட்ட நிலையில் அந்த ஸ்பைவேர் டூலை அந்நாட்டின் பல விசாரணை முகமைகளோடு இணைத்தது. கூடுதலாக அட்டர்னி ஜெனரலின் அலுவலகத்திற்கு, மெக்சிகோவின் உளவுத்துறை மற்றும் இராணுவத்திற்கும் அணுகல் வழங்கப்பட்டது. இதையொட்டி என்எஸ்ஓ குழுமம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குவதை தொடர்ந்தது. ஒவ்வொரு புதிய அப்டேட்டும் பழைய அப்டேட்களைக் காட்டிலும் அதி நவீனமாக வடிவமைக்கப்பட்டது என்று ஃபோர்பிடன் ஸ்டோரீஸ் கூறுகிறது.
இது உளவு தொழில்நுட்பத்தில் என்.எஸ்.ஒ. நிறுவனத்தை, ஐரோப்பிய நிறுவனங்களான ஹேக்கிங் டீம் மற்றும் ஃபின்ஃபிஷர் போன்ற நிறுவனங்களை பின்னே தள்ளி முதலிடத்திற்கு வர உதவியது. அதுவரை, பெகாசஸ் மின்னஞ்சல்கள் மற்றும் எஸ்எம்எஸ்ஸில் தீங்கிழைக்கும் இணைப்புகள் போன்ற தாக்குதல் திசையன்களைப் பயன்படுத்தியது. இணைப்பை ஒரு க்ளிக் செய்தால் போதும். அந்த ஸ்பைவேர் உடனே இன்ஸ்டால் ஆகி, டிவைஸின் முழுமையான அணுகல்களையும் இலக்கிற்கு தெரியாமல் ஹேக்கருக்கு வழங்கிவிடும். தற்போது ஜீரோ-க்ளிக் முறைக்கு மாறியுள்ளது.
வாட்ஸ்அப் மற்றும் ஐமேசேஜ் ஹேக்குகளில் பயன்படுத்தப்படும் இத்தகைய ஹேக்கிங்குள் இறுதி பயனரிடமிருந்து எந்த தலையீட்டையும் கோருவதில்லை. வாட்ஸ்ஆப்பில் ஒரு மிஸ்டுகால் இந்த ஸ்பைவேரை இன்ஸ்டால் செய்ய போதுமானதாக இருக்கும். ஐமேசேஜில் குறுஞ்செய்திக்கான “preview" போதுமானதாக இருக்கும்.
பரந்த வாடிக்கையாளர்கள்
2014 ஆம் ஆண்டில், அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் முதலீட்டு நிறுவனமான பிரான்சிஸ்கோ பார்ட்னர்ஸ், என்எஸ்ஓ குழுமத்தை 120 மில்லியன் டாலருக்கு வாங்கியது. இதன் மூலம், நிறுவனம் ஸ்மார்ட்போன் நுகர்வோர் பயன்படுத்தும் பல்வேறு பயன்பாடுகளில் பாதிப்புகளைக் கண்டறிவதில் கவனம் செலுத்தத் தொடங்கியது. இது வாடிக்கையாளர்களின் பரந்த தொகுப்பைப் பெறவும் உதவியது.
கனடாவின் தி சிட்டிசன் ஆய்வகத்தின் 2018ஆம் ஆண்டின் அறிக்கையில் 45 நாடுகளில் அடையாளம் காணப்பட்ட 36 பெகாசஸ் ஆபரேட்டர்களில் 33 பேர் உளவு பார்க்கப்பட்டதாக கூறியுள்ளது.
சவூதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை தொடர்பாக என்எஸ்ஓ குழுமத்தின் பெயர் அடிபட்டது. 2019ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற கொலைக்கு சற்று முன்பு நோவால்பினா நிறுவனத்தின் உதவியுடன் ஃபிரான்சிஸ்கோ பார்ட்னர்ஸிடம் இருந்து அந்த நிறுவனத்தை ஹூலியோ மற்றும் லேவி மீண்டும் வாங்கினார்கள். நோவல்பினா என்பது , ஐரோப்பிய முதலீட்டாளர்களின் உதவியுடன் 850 மில்லியன் டாலர் மதிப்பில் செயல்படும் முதலீட்டு நிறுவனம் ஆகும்.
அந்த நேரத்தில், நோவல்பினா, என்எஸ்ஓ குழுமத்தின் தொழில்நுட்பம் சட்டபூர்வமான நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யும் என்று கூறியது. ஆனாலும் சில மாற்றங்கள் அரங்கேறியுள்ளது. , கொஞ்சம் மாற்றப்பட்டது. ஜூலை 2020 இல், சிட்டிசன் லேப் நோவல்பினாவில் முதலீடு செய்துள்ள தெற்கு யார்க்ஷயர் ஓய்வூதிய ஆணையத்திற்கு கடிதம் எழுதியதுடன், “சிவில் சமூகம், ஊடகங்கள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் அரசியல் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக என்எஸ்ஓ குழுமத்தின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைக் காட்டும் புதிய ஆராய்ச்சியை பற்றி குறிப்பிட்டிருந்தது.
ஒரு வருடம் கழித்து, ஃபோர்பிடன் ஸ்டோரீஸ் மற்றும் அம்னாஸ்ட்டி இண்டெர்நேசனல் மற்றும் 17 ஊடக நிறுவனங்கள் பெகாசஸ் உளவு பார்த்த ஊடகவியலாளர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள், மக்களால் தேர்வு செய்யப்பட்ட நபர்கள் என 50 ஆயிரம் பேர் அடங்கிய பட்டியலை வெளியிட்டது.
என்.எஸ்.ஓவின் பதில்
இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அனுப்பியுள்ள என்.எஸ்.ஓ. நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், இந்த விசாரணை ஆரம்பத்தில் இருந்தே ஒரு சினிமாவில் நடைபெறுவது போல் உள்ளது. வெள்ளை பக்கங்களைத் திறப்பதற்கும், தோராயமாக 50,000 எண்களைத் தேர்ந்தெடுப்பதற்கும், அதிலிருந்து தலைப்புச் செய்திகளை எடுப்பதற்கும் சமம் இந்த பட்டியல் என்று கூறினார். மேலும் எத்தனை தொலைபேசிகள் குறிவைக்கப்பட்டன அல்லது கண்காணிக்கப்பட்டன என்பது தெரியவில்லை என்று அறிக்கை கூறியது வாஷிங்டன் போஸ்டின் ஆசிரியர் கூட‘ பட்டியலின் நோக்கத்தை உறுதியாக தீர்மானிக்க முடியாது கூறியதை அவர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், முக்கியமாக, செய்தித் தொடர்பாளர் நிறுவனம் தனது தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தியதாக நம்பத்தகுந்த அனைத்து உரிமைகோரல்களையும் விசாரிப்பதாகவும், உத்தரவாதம் அளிக்கப்பட்டால் வாடிக்கையாளரின் அமைப்பை மூடுவது உட்பட வலுவான நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.
NSO குழு பெகாசஸ் தவறாக பயன்படுத்தப்பட்டதற்கான அனைத்து நம்பகமான கூற்றுக்களையும் தொடர்ந்து விசாரிக்கும் மற்றும் இந்த விசாரணைகளின் முடிவுகளின் அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்கும். இது ஒரு வாடிக்கையாளர்களின் அமைப்பை நிறுத்தும் சூழலை உருவாக்கினால் அதனையும் செய்யும். தவறான செயல்பாடுகள் உறுதி செய்யப்பட்ட பிறகு என்.எஸ்.ஒ. அதன் திறன் மற்றும் மேற்கொண்டு செய்ய விரும்பியதையும் நிருபித்துள்ளது. கடந்த காலங்களில் பல முறை செய்தும் உள்ளது. வருங்காலத்தில் இது போன்ற சூழல் நிலவும் பட்சத்தில் செய்யவும் தயங்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.