The Reclining Buddha and his various other depictions in art : மே 26ம் தேதி அன்று, புத்த ஜெயந்தி, புத்த பூர்ணிமா அல்லது வெசாக் என்று அழைக்கப்படும் நாளில், இந்தியாவின் மிகப் பெரிய சயன புத்தர் சிலை புத்த கயாவில் உள்ள புத்த சர்வதேச நலத்திட்ட கோவிலில் நிறுவ திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கோவிட்19 கட்டுப்பாடுகள் காரணமாக அவ்விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் கொல்கத்தாவில் 22 கைவினைஞர்களின் குழுவினரால் மூன்று மாதங்களுக்கு மேலாக உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான 100-அடி கண்ணாடியிழை சிலை (Fiberglass statue) ஒரு ஈர்க்கக்கூடிய கலைப்படைப்பாகவே உள்ளது.
சயன புத்தர்
சயன புத்தர் அல்லது அவருடைய இறுதி காலகட்டங்களில் உடல் நிலை குன்றி இருந்த நிலையை வெளிப்படுத்தும் சித்தரிப்பு, பரிநிர்வாணத்திற்குள் நுழையவிருப்பதைக் குறிக்கிறது. இது இறப்பிற்கு பிறகு மோட்ச நிலையை அடையும் கட்டமாக வர்ணிக்கப்படுகிறது. இது அறிவொளி பெற்ற ஆத்மாக்களால் மட்டுமே அடைய முடியும். தியான நிலையில் இருந்தபடியே தன்னுடைய 80வது வயதில் புத்தர் கிழக்கு உ.பியில், பிகாரின் எல்லை பகுதியில் உள்ள குஷிநகரில் மரணம் அடைந்தார்.
மும்பையின் கே.சி கல்லூரியின் உதவி பேராசிரியர் டாக்டர் வ்ருதந்த் மன்வட்கர், புத்தரின் வாழ்க்கையின் மிக நன்கு பதிவுசெய்யப்பட்ட இந்த பகுதி அவரின் இறுதி காலகட்டத்தில் இருந்து வருகிறது. அதனால் தான் சிலைகள் மற்றும் ஓவியங்களில் இந்த தோரணை தனித்துவமான விவரங்களுடன் மீண்டும் மீண்டும் உருவாக்கப்படுகிறது” என்று அவர் கூறினார். “இது புத்தரின் கடைசி தீக்ஷத்தையும் குறிக்கிறது – அவரது மரணப் படுக்கையில் இருந்தபோதும், அவர் ஒரு பின்தொடர்பவரை தன்னோடு அழைத்து சென்றார்” என்று கூறினார்.
பீகார் நாலந்தாவில் உள்ள நவா நாலந்தா மகாவிஹாரா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மற்றும் புத்த அறிஞர் ரவீந்திர பந்த், “குஷிநகரில் நடைபெற்ற மிகப்பெரிய நிகழ்வு புத்தரின் மஹாபரிநிர்வாணம் தான். இது வெறுமனே ஒரு மறைவு அல்ல, அது மிகப்பெரிய மறைவு, அதன் பிறகு அவருக்கு மறுபிறப்பு இல்லை. எனவே, அது அவருடைய இறுதிப் பயணமாகும்” என்று குறிப்பிட்டார்.
உருவ பிரதிநிதித்துவம்
சயன புத்தர் சிலைகளும் உருவங்களும் அவர் வலதுபுறமாக சாய்ந்து, மெத்தை அல்லது வலது முழங்கையில் அவருடைய தலை இருப்பது போல் காட்டப்படுகிறது. இது புத்தமதத்தில் காட்டப்படும் மிக பிரபலமான ஒரு பிரதிநிதித்துவமாகும். அனைத்து உயிரினங்களும் விழித்துக் கொள்ளவும், இறப்பு மற்றும் மறுபிறப்பு சுழற்சியில் இருந்து விடுவிக்கவும் சாத்தியம் இருப்பதைக் காட்டுவதாகும்.
கந்தாரா கலையில் முதன்முதலில் சயன புத்தரின் சித்தரிப்பு காட்டப்பட்டது. இது கிமு 50 முதல் கிபி 75 வரை நீடித்த கலை அமைப்பாகும். குஷாணர்கள் காலத்தில் இது உச்சம் அடைந்தது. குஷாணர் காலம் கி.பி. ஒன்று முதல் 5 நூற்றாண்டுகள் வரை நீடித்தது என்று மன்ட்வட்கர் கூறினார்.
உருவ வழிப்பாட்டிற்கு புத்தர் எதிரானவர் என்பதால் அவருடைய பரிநிவாரண நிலையை (483 BC) தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளில், அவருடைய பிரதிநிதித்துவம் சின்னங்களாக காட்டப்பட்டது என்றார் பந்த். பக்தி அம்சம் பிறகு புத்த நடைமுறையில் தொடர்ந்த போது புத்தரின் உருவ வழிபாடு நடைமுறைக்கு வந்தது.
இந்தியாவிற்கு வெளியே சயன புத்தர்
மன்ட்வட்கர் ”இந்தியா மற்றும் இலங்கையில் புத்தர் அமர்ந்த நிலையிலேயே பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார். தாய்லாந்து மற்றும் இதர தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சயன புத்தர்கள் சிலைகளை காண முடியும். மியான்மரில் தான் உலகிலேயே மிகப்பெரிய சயனபுத்தர் சிலை உள்ளது. 600 அடி கொண்ட வின்செய்ன் தவ்ய புத்தர் சிலை 1992ம் ஆண்டு மவ்லம்யினியில் (Mawlamyine) உருவாக்கப்பட்டது.” என்று கூறினார்.
15ம் நூற்றாண்டில் 70 மீட்டர் நீளம் கொண்ட சயன புத்தர் சிலை 15ம் நூற்றாண்டில், கம்போடியாவில் உள்ள அன்கோர்வாட்டில் அமைந்திருக்கும் இந்து கோவிலில் உருவாக்கப்பட்டது. பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ( Khyber Pakhtunkhwa ) 2ம் நூற்றாண்டில் பமலா புத்தா பரிநிர்வாண சிலை கட்டப்பட்டுள்ளது. சயன புத்தர் சிலைகளிலேயே மிகவும் பழமையானது இந்த சிலை என்று கருதப்படுகிறது. சீனா, தாய்லாந்து, ஜப்பான், இந்தோனேசியா, மற்றும் மலேசியா போன்ற நாடுகளிலும் இது போன்ற சயன புத்தர் சிலைகளை காணமுடியும்.

இந்தியாவில் சயன புத்தர்
யுனெஸ்கோ உலக பாரம்பரிய நினைவுச்சின்னங்களில் இடம் பெற்றிருக்கும் அஜந்தா குகை எண் 26ல் 24 அடி நீள, 9 அடி உயர சயன புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. பாறைகளை குடைந்து உருவாக்கப்பட்ட குடைவறை சிற்பமான இந்த சிலை கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் உருவாக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அஜந்தாவின் மங்கலான கலைப்படைப்புகளை டிஜிட்டல் முறையில் மீட்டெடுக்க இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக பணியாற்றி வரும் நாசிக்கை சேர்ந்த மீட்டமைப்பாளரும் ஆராய்ச்சி புகைப்படக் கலைஞருமான பிரசாத் பவார் இந்த சிற்பத்தைப் பற்றி “புத்தர் தனது வலது பக்கத்தில் சாய்ந்திருப்பதை இது காட்டுகிறது, அவருக்குப் பின்னால் இரண்டு சாலா மரங்கள் உள்ளன. சிற்பத்தின் அடிப்பகுதியில் அவரது பிச்சைக் பாத்திரம், ஒரு தண்ணீர் குடம் மற்றும் அவருக்கு நடக்க உதவியாக ஒரு ஊன்றுகோல் உள்ளது. அவருடைய சீடர்கள் துக்கத்தில் அமர்ந்திருப்பதைக் காட்டுகிறது. மேலும் வானத்தில் இருக்கும் தூதர்கள், சொர்க்கத்திற்கு புத்தர் வர இருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைவது போல் உருவாக்கப்பட்டுள்ளது” என்றார். புத்தர் உண்மையில் பரிநிர்வாணத்தை அடைந்த குஷிநகரில், பரிநிர்வண ஸ்தூபத்திற்குள் சாய்ந்திருக்கும் படி 6 மீட்டர் நீளத்தில் சிவப்பு ஒற்றைக்கல் புத்தர் சிலை உள்ளது.
புத்தரின் பிற சித்தரிப்புகள்
இந்தியாவில் மற்ற இடங்களில் புத்தர் அமர்ந்திருக்கும் சிலைகள் அதிகமாக உள்ளன. அவை பெரும்பாலும் புத்தரின் மறைவுக்கு பதிலாக அவரது அறிவொளியை காட்டும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று பேராசிரியர் பந்த் கூறுகிறார்.
மகாபோதி கோயிலில், புத்தர் பூமி-ஸ்பர்ஷா முத்திரையில் அமர்ந்திருக்கிறார், அங்கு அவரது கை தரையை நோக்கி சுட்டிக்காட்டுகிறது. இது பூமியை அவரது அறிவொளிக்கு சாட்சியாகக் குறிக்கிறது.
புத்தர் தனது முதல் பிரசங்கத்தை வழங்கிய சாரநாத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கல் சிலையில் தர்ம-சக்ரா கை முத்திரையுடன் அவர் காட்சி அளிக்கிறார். இது பிரசங்கத்தை குறிக்கிறது. போதி மரம் சித்தரிப்புடன் இது இந்தியாவில் மிகவும் பிரபலமான சிலை அமைப்பில் ஒன்றாகும்.
உலகெங்கிலும் நூற்றுக்கும் மேற்பட்ட தோற்றங்களில் புத்தர் சித்தரிக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். உட்கார்ந்த புத்தர் – மிகவும் பொதுவான சித்தரிப்பு – கற்பித்தல் அல்லது தியானம் செய்வதாக நம்பப்படுகிறது, நிலையான புத்தர் நிர்வாணத்தை அடைந்த பிறகு கற்பிப்பதற்கான எழுச்சியைக் குறிக்கிறது.
நடக்கும் புத்தர் சிலை பொதுவாக அறிவொளியை தேடி அவர் துவங்கிய பயணத்தை குறிக்கிறது அல்லது பிரசங்கத்தை முடித்துவிட்டு திரும்பும் நிலையை குறிக்கிறது. இது புத்த தோரணைகளில் மிகக் குறைவானது. ஆனால் பெரும்பாலும் தாய்லாந்தில் அதிகம் காணப்படும் ஒன்றாகும்.
தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் புத்தர் சிலைகள் மஹாபரினிர்வனா உட்பட அவரது பல்வேறு தோரணைகள் மற்றும் வாழ்க்கை நிகழ்வுகளின் ஒருங்கிணைப்பாகும் என்று அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil