Advertisment

பொருளாதாரத்தை மீட்கும் பாதை: தீர்மானிக்கும் காரணிகள் எவை?

உலகளாவிய விநியோகச் சங்கிலியின் ஒரு பகுதியாக இந்தியாவை மாற்றி  வரும் துறைகளில் நிலையான நீண்டகால வளர்ச்சி காணப்படுகிறது

author-image
WebDesk
New Update
பொருளாதாரத்தை மீட்கும் பாதை: தீர்மானிக்கும் காரணிகள் எவை?

Nilesh Shah

Advertisment

நிறுவனங்களின் பொருளாதார மீட்பு பாதையை தீர்மானிக்கும் காரணிகள் என்ன?

The road to economic recovery  : அந்நிய செலாவணி, செலவு அமைப்பு, ஆட்சி, மூலதனத்திற்கான அணுகள் மற்றும் சூழலுக்கு ஏற்ற வகையில் தகவமைத்துக் கொள்ளுதல் ஒரு நிறுவனத்தின் திறமையை தீர்மானிக்கின்றன. குறைந்த அந்நிய செலாவணி கொண்ட நிறுவனங்களின் நல்லாட்சி, மூலதனத்தை திரட்டும் திறன், செலவுகளை குறைத்தல் மற்றும் இந்த சூழ்நிலையில் தகவமைப்பிற்காக கண்டுபிடித்தல் போன்றவை ஒரு நிறுவனத்தை வாழ வைப்பதுடன் வளர்ச்சி அடைய வைக்கவும் செய்யவும். நம்முடைய பொருளாதார மீட்சியில் நிதி மற்றும் நிதி ஊக்கம் ஆகியவை மேல் கீழ் காரணிகளாகவும், தொழில் முனைவோர் முயற்சிகள் கீழ் மேல் காரணிகளாகவும் இருக்கும்.

தொற்று நோய் தொடரும் பட்சத்தில், என்ன காரணிகள் மீட்கும் நம்பிக்கையை மேம்படுத்தும்?

பொருளாதார நடவடிக்கைகள் இயல்பாக்கப்பட்ட போதிலும், ஆக்டிவ் கேஸ்கள் குறைந்து வருகின்றன. கொரோனா தடுப்பூசி மருந்து எப்போது என்பது குறித்த சந்தேகங்கள் தான் நிலவி வருகிறது. குறைந்த எண்ணெய், தங்கம் மற்றும் சீன பொருட்கள் இறக்குமதி ஆகியவை இந்தியாவை நடப்புக் கணக்கினை உபரியாக மாற்றியுள்ளது. அந்நியசெலவானி இருப்பு அந்நிய செலவாணி கடன்களை காட்டிலும் அதிகமாக உள்ளது. உலக நிறுவனங்கள் நேரடி மற்றும் போர்ட்ஃபோலியோ முதலீடுகளை பெற தயார் நிலையில் உள்ளது. வேளாண்துறை மாற்றங்கள் அதிகமான கிராமப்புற மக்களுக்கு லாபகரமாக உள்ளது. தொழிலாளர் சீர்திருத்தங்கள் மற்றும் அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் இந்தியா ஒரு உற்பத்தி மையமாக மாறுவதற்கான சரியான திசைகளில் இயங்குகிறது. இருப்பினும் களத்தில் இன்னும் நிறைய செய்ய வேண்டும்.

publive-image

2020ம் ஆண்டு செப்டம்பருடன் முடிவுற்ற காலாண்டில் எதிர்பார்ப்புகள் மிகப்பெரியவை. செலவுகள் குறைக்கப்பட்டதன் காரணமாக அனைத்து துறைகளிலும் மார்ஜின்கள் விரிவாக்கப்பட்டுள்ளது. ஆட்டோ மற்றும் கஸ்டமர் ட்யூரபுல்ஸ் மற்றும் வால்யூம்களும் எதிர்பார்ப்பை காட்டிலும் அதிகமாகவே உள்ளது. பெண்ட் - அப் தேவைகளுக்கு பலரும் இதனை கோரினார்கள். கோரிக்கை அல்லதி பெண்ட் அப் ஆகியவை கடந்த கால நடவடிக்கைகளின் காரணமாக அதிகரித்தது. இது எதிர்கால நடவடிக்கைகளால் எதிர்காலத்தில் நீடிக்கப்பட வேண்டும்.

To read this article in English

எந்த துறைகளில் கொள்கையில் அதிகம் கவனம் மேற்கொள்ளப்பட வேண்டும்?

பணவியல் கொள்கைகள் போதுமான வகையில் இருக்கின்றன. இருப்பினும் கடன் பரிமாற்றம் மேலும் மேம்படுத்தப்பட வேண்டும். கொள்கை விகிதங்கள் முன்பு எப்போதும் இல்லாத வகையில் குறைவாக உள்ளன. ஆனால் கடன்வாங்குவதற்கான செலவு ஏஏக்கு கீழே உள்ள கடன் வாங்கியவர்களுக்கு குறைக்கப்பட வேண்டும். சிறப்பு நிதி பேக்கேஜ் பிரமிட்டீன் அடிப்பகுதியில் உள்ள துறைகளை ஆதரிக்கிறது. சுற்றுலா, பயணம், ஹோட்டல், சில்லறை வர்த்தகம், விமானப்போக்குவரத்து, உள்கட்டமைப்பு போன்றவைகளில் கவனம் அதிகம் செலுத்த வேண்டும். நிதியை திரட்டுவதற்கான பாதை முக்கியமானது தான். ஆனால் அது வரி அல்லாத வளங்களை திரட்டுவதன் மூலமே சாத்தியமாகிறது.

வணிகம் செய்வது எளிமையாகவிட்டது. ஆனால் அதற்கான சட்ட விதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். நல்ல நோக்கள் இருப்பினும் வர்த்த சர்ச்சைகள் 1992 பாதுகாப்பு மோசடியைப் போன்று ஒருபோதும் முடிவடையாத விசாரணையைப் போலவே தீர்க்கப்படுகின்றன. போதிய தண்டனைகள் இல்லாமல் வஞ்சகர்கள் தப்பிப்பதால் நம்முடைய சட்டங்கள் மிகக் குறைந்த பொதுவான வகுப்பிற்காக உருவாக்கப்படுகின்றன. இது மீதம் இருக்கும் இணக்க செலவை அதிகரிக்கவே செய்கிறது. முதலீட்டாளர்கள் சட்டத்தின் விதிகளை அனுபவிக்கவில்லை என்றால் முதலீடு நிலையானதாக எடுக்க இயலாது. இந்த சவாலான காலங்களில் பெரியது மிகப்பெரிதாகிவிட்டது, ஆனால் இறுதியில் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் போட்டியாளராக மாறவும் வளரவும் வேண்டும்.

மீண்டும் தாக்கத்தை ஏற்படுத்தும் கோவிட்19 பங்கு சத்தை வர்த்தகத்திற்கு அச்சுறுத்தலா?

முந்தைய கொரோனா உச்ச காலத்தில் ஸ்டாக் மார்க்கெட்டில் அதிக ”கேப்” குறியீடுகள் குறைவாக வர்த்தகம் மேற்கொண்டன. அடிப்படைகளை மேம்படுத்துதல் தான் தற்போதையை சந்தை நிலையை ருவுஆக்கியது. சந்தேகமேயின்றி நாம் இந்த நிலைக்கு வெளியே இல்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பில் ஏற்பட்டுள்ள இரண்டாம் கொரோனா அலை, அமெரிக்க தேர்தல்கள் போன்றவை நம்முடைய சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இத்தகைய கவலைகளுக்கு மத்தியில், சந்தை முன்னோக்கிச் செல்ல எது உதவும்?

பங்குச் சந்தை நீண்டகால வளர்ச்சிப் பாதையால் இயக்கப்படும். ஏராளமான பணப்புழக்கம் மற்றும் மிகக் குறைந்த வட்டி விகிதங்கள் நிறைந்த இந்த சகாப்தத்தில் உலகளாவிய மூலதனம் வருமானத்தைத் துரத்தும். பல முதலீட்டாளர்களுக்கு, வளர்ச்சி அல்லது கண்டுபிடிப்பு வருமானத்திற்கான பினாமியாக இருக்கும்.

சிறந்த முறையில் பங்கு எடுப்பவருக்கு பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. ஒருபுறம், எஃப்.எம்.சி.ஜி, பார்மா, தொழில்நுட்பம் போன்ற தற்காப்புத் துறைகள் அதிக மதிப்பீடுகளில் வர்த்தகம் செய்கின்றன. மறுபுறம், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகள் வாழ்நாளிலேயே குறைந்த மதிப்பீடுகளில் வர்த்தகம் செய்கின்றன. ஒருபுறம், பெரியது பெரிதாகி வருகிறது. பல்வேறு பாரிய இடையூறுகள் காரணமாக எதிர்காலம் நிச்சயமற்றதாக இருக்கிறது. ஆனால் சீர்குலைப்பவருக்கு இது மிகவும் உற்சாகமானது. ஒரு துறைக்குள், வெற்றியாளர்களுக்கு விகிதாச்சாரமாக வெகுமதி கிடைப்பதால், பரந்த அளவிலான வருமானம் உள்ளது. ஏராளமான தகவல்களும் செய்திகளும் உள்ளன, ஆனால் உண்மைகளைத் தீர்மானிப்பது கடினம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

முதலீட்டாளர்கள் முன்னோக்கிச் செல்வதற்கு எந்த துறைகள் வாக்குறுதியைக் கொண்டுள்ளன?

தவறாகச் செல்லும் செலவில், ஒரு சில போக்குகள் பணம் சம்பாதிக்கும் பார்வையில் இவைகள் முக்கியமானவை.

உலகளாவிய விநியோகச் சங்கிலியின் ஒரு பகுதியாக இந்தியாவை மாற்றி  வரும் துறைகளில் நிலையான நீண்டகால வளர்ச்சி காணப்படுகிறது. ஒப்பந்த உற்பத்தி மற்றும் ரசாயனங்கள் போன்ற துறைகள் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை இருந்தது போலவே, அதிக மதிப்பீடுகளைக் கொண்டவை.

தவறான பக்கத்தில் உள்ள ஈ.எஸ்.ஜி (environment, social and corporate governance) முதலீட்டின் மதிப்பீடுகள் எதிர்மறையாக மதிப்பிடப்படும். லாபம் வளர்ச்சியைப் பொருட்படுத்தாமல் குறைந்த மதிப்பீட்டையே பெறும்.

கேப்பிட்டல் பர்ன் சூழலிலும் கூட சாவல்விடுபவர்கள் மற்றும் சீர்குலைப்பவர்கள் அதிக மதிப்பீடுகளை பெறுவார்கள்.

பொதுத்துறை நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் துறை, வங்கி மற்றும் காப்பீடு போன்றவை, தனியார் நிறுவனங்களுக்கு நீண்டகால வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கும்.

முதலீட்டாளர்கள் இந்த சந்தையில் நிறைய டிசிப்ப்ளினுடனும், கொஞ்சம் அதிர்ஷ்டத்துடனும் பணம் சம்பாதிப்பார்கள்.

To read this article in English

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment