Advertisment

கொரோனா தொற்று பரவுவதைத் தடுப்பதில் காற்றோட்டத்தின் பங்கு என்ன?

Covid 19 Update In India Tamil News : திறந்த கதவுகள் மற்றும் ஜன்னல்கள் கொண்ட நன்கு காற்றோட்டமான அறைகள் தொற்றுநோயைக் குறைக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

author-image
WebDesk
New Update
கொரோனா தொற்று பரவுவதைத் தடுப்பதில் காற்றோட்டத்தின் பங்கு என்ன?

India Covid 19 prevention ventilation role Update : இந்தியாவில் அதிகரித்து வந்த கொரோனா தொற்று பாதிப்பு தற்போது வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாம் கொரோனா பரவாமல் தடுப்ப எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். அந்த வகையில் கொரோனா தொற்று சுவாச பாதை வழியாக பரவுவதால், நோய்த்தொற்றின் அபாயத்தைக் குறைக்க, வீடுகள், வகுப்பறைகள், உணவகங்கள், அலுவலகங்கள் மற்றும் அருகிலுள்ள மளிகைக் கடைகள் போன்ற உட்புற இடங்களில் காற்றோட்டம் குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

Advertisment

நீர்த்துளிகளில் இருக்கும் வைரஸ்

பொதுவாக ஒருவர் பேசும்போதும், ​​சிரிக்கும்போதும் தும்மும்போதும் இருமும்போதும் ​​அவர்களிடம் இருந்து  நீர்த்துளிகளை வெளியேறும். இந்த நீர்துளிகளே தொற்று நோய்யை உண்டாக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் இந்த செயலை செய்யும்போது இந்த நீர்த்துளிகள் மிகச் சிறியவை (ஏரோசோல்கள் என குறிப்பிடப்படுகின்றன) முதல் பெரியவையாக இரக்குதம், ஆனால் இது ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவாகவே உள்ளன.

இதில் பெரிய நீர்த்துளிகள் அவற்றை வெளியேற்றும் நபரின் 1-2 மீட்டருக்குள் ஈர்ப்பு விசையின் கீழ் தரையில் விழுந்தாலும், சிறிய நீர்த்துளிகள்(ஏரோசோல்கள்) காற்றில் இடைநிறுத்தப்பட்டு 8 மீட்டர் தொலைவில் பெரிய தூரத்திற்கு கொண்டு செல்ல வாய்ப்புள்ளது. இதனால் வைரஸ் தொற்று அதிகம் பரவும் அபாயம் ஏற்படும்.

முககவசம் அணிவது கட்டாயம்

முககவசங்கள் நீர்த்துளிகளைப் அகற்றுக்கின்றன. மேலும் அவை எடுத்துச் செல்லப்படும் வரம்பை சரியான முறையில் குறைக்கின்றன. இதனால், முககவசங்கள் அணிவது மக்களால் வெளியேற்றப்படும் நீர்த்துளிகளின் எண்ணிக்கையையும் வரம்பையும் குறைக்க மிகவும் பயனுள்ள வழியாகும்.

இதில் என் 95 முககவசங்கள் போன்ற நன்கு பொருத்தப்பட்ட, அதிக வடிகட்டுதல் திறன் கொண்ட முககவசங்களை அணிந்திருப்பவர்களுக்கு நீர்த்துளிகள் மூலம் ஏற்படுவதற்கான வாய்ப்பை கிட்டத்தட்ட குறைவு என்றே கூறலாம். இருப்பினும், முககவசத்தின் தரம் மிக முக்கியமானது, மற்றும் ஒரு சரியான பொருத்தம், எந்த இடைவெளிகளும் இல்லாமல், ஒரு பொதுவான முககவசத்தை நடைமுறையில் அடைவது கடினம். இதற்கு இரண்டு முககவசங்கள், ஒரு துணி அணிவது ஆபத்தை கணிசமாகக் குறைக்கிறது.

இந்த முறை வெளியில் பாதுகாப்பானது

நல்ல காற்றோட்டம் மூலம் வான்வழி நோய்க்கிருமி மற்றும் தொற்றுநோய் பரவுவதற்கான வாய்ப்புகளை வெகுவாகக் குறைக்கிறது. ஒருவர் வெளியில் இருக்கும்போது, ​​நோய்க்கிருமிகளைக் தடுப்பதற்கும் அவற்றின் திறனை பெரிய அளவில் நீர்த்துப்போகச் செய்வதற்கும் காற்றின் சாதாரண வரைவுகள் மக்கியமாக செயல்படுகின்றன. மேலும் ஒருவர் வெளியில் இருக்கும்போது, ​​அதிக கூட்டம் இல்லாத சூழ்நிலைகள் தொற்றுநோய்க்கான ஆபத்தை குறைக்கும் வழியாகும்..

நம் நாட்டில் நகர்ப்புற ரயில் நிலையங்கள் அல்லது சந்தைகளுகளில் காணப்படும் பொதுவான அடர்த்தியான கூட்டம் அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது, அவை வெளியில் இருந்தாலும் கூட, அதிக எண்ணிக்கையிலான மக்கள் அருகிலேயே இருப்பதால். ஆபத்து அதிகம் இருக்கும். இதனை தடுக்க கூட்டத்தின் வெளிப்புற அமைப்பில், நன்கு பொருந்தக்கூடிய முககவசங்களை பயன்படுத்தி இரட்டை முகமூடி அணிந்துகொள்வது சிறந்த செயலாக இருக்கும், மேலும் மற்றவர்களுடன் அருகிலேயே செல்வதை குறைப்ப நல்லது.

வீட்டுக்குள்ளேயே பாதிக்கப்படக்கூடியது

வீடுகளில், ​​உடல் ரீதியான தொலைவு எப்போதும் சாத்தியமில்லை. மூடிய அறைகள், உணவு விடுதிகள், அலுவலகங்கள் அல்லது சமூக அமைப்புகளில் உள்ளவர்களுடன் நாம் தொடர்பு கொள்ள வேண்டிய நேரங்கள் இருக்கும். மேலும் பேசுவது கூட கொரோனா தொற்றை பரப்பக்கூடும்; குறுகிய உரையாடல்கள் கூட தொற்றுநோய்க்கான குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

உட்புற அமைப்புகளில், காற்றோட்டம் பொதுவாக வெளிப்புற இடங்களை விட ஆபத்தானது. மேலும் நோய்த்தொற்றின் ஆபத்து அதற்கேற்ப அதிகமாக இருக்கும். வீட்டிற்குள் வான்வழி நோய்த்தொற்றின் அபாயத்தை மதிப்பிடுவதற்கு பொறியியல் அறிவியலில் நன்கு படித்த முறைகளை பயன்படுத்தப்படலாம். இந்த முறைகள் ஒரு மூடிய இடத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை, வெளிப்படும் நேரம் மற்றும் அறையில் காற்றோட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் தொற்றுநோயைக் குறைக்கும் அபாயத்தை மதிப்பிடுகின்றன. ஒரு அறையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகும், போதும் அதே அறையில் நீண்ட நேரம் செலவழிக்கும்போதும், ​​தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.

எவ்வளவு காற்றோட்டம்?

நோய் தொற்றை தடுக்க முக்கிய அம்சமாக பார்க்கப்படுவது காற்றோட்டம். காற்றோட்டத்தின் எளிய நடவடிக்கை சராசரி காற்று பரிமாற்ற வீதமாகும். ஒரு அறையில் உள்ள காற்று எவ்வளவு என்றும் அடிக்கடி புதிய காற்றால் மாற்றப்படுகிறது என்பதை இது நமக்குக் கூறுகிறது.

ஒரு அறையிலிருந்து காற்றை வெளியேற்றும் ஒரு வெளியேற்ற விசிறியைக் கவனியுங்கள். முழு திறனில் பணிபுரியும் போது நிமிடத்திற்கு 250 கன அடி மதிப்பீட்டைக் கொண்ட ஒரு வெளியேற்ற விசிறி, சராசரியாக, 15 அடி x 10 அடி x 10 அடி அறையில் சுமார் 6 நிமிடங்களில் காற்றை பரிமாறிக்கொள்ளும். பொதுவாக, அதிக விசிறி மதிப்பீடு, சிறந்த காற்றோட்டத்தை கொடுக்கும்..

கதவுகள் அல்லது ஜன்னல்களுக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள விசிறிகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு அறையை காற்றோட்டம் செய்வது தொற்றுநோயான ஏரோசோல்களை நீர்த்துப்போகச் செய்து நீக்குகிறது, இதனால் தொற்றுநோய்க்கான ஆபத்து குறைகிறது. எனவே, திறந்த கதவுகள் மற்றும் ஜன்னல்கள் கொண்ட நன்கு காற்றோட்டமான அறைகள் தொற்றுநோயைக் குறைக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதில்  நீங்கள் ஒரு மூடிய அறையில் இருக்கக்கூடிய பாதுகாப்பான காலத்தை மதிப்பிடுவதற்கான ஆன்லைன் கால்குலேட்டர், மற்றும் தொற்றுநோய்க்கான வாய்ப்பை மட்டுப்படுத்துவது எம்ஐடியில் ஒரு குழுவால் உருவாக்கப்பட்டுள்ளது. இதை https://indoor-covid-safety.herokuapp.com/ இந்த இணையதளத்தில் பார்வையிடலாம்.

இந்த காற்று பரிமாற்றக் கணக்கீடுகளின் அடிப்படையிலான அனுமானங்களில் ஒன்று அறையில் உள்ள காற்று நன்கு கலந்திருக்கிறது மற்றும் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான, நோய்க்கிருமிகளின் திறனை கொண்டிருக்கும். மேலும் ஒரு  அறையின் குறிப்பிட்ட பகுதிகள், மூலைகள் போன்றவை, மறுசுழற்சி மண்டலங்களை உருவாக்கும் காற்றின் இயல்பை கொண்டுள்ளன. இந்த மண்டலங்களில் சிக்கியுள்ள நோய்க்கிருமிகள் எளிதில் வெளியேறாது. இந்த மண்டலங்களில் உள்ள நீர்த்துளிகள் அறையின் நன்கு காற்றோட்டமான பகுதிகளை விட 10 மடங்கு நீடிக்கும் என்பதைக் குறிக்கின்றன. மறுசுழற்சி மண்டலத்தில் அமர்ந்திருக்கும் ஒருவர் தொற்று நோய்க்கிருமிக்கு அதிகமாக பாதிக்கப்படும் அபாயம் அதிகரிக்கும்.

ஒரு அறையில் மறுசுழற்சி செய்யும் மண்டலங்களை அடையாளம் காண்பதற்கான ஒரு எளிய உத்தி, புகை சறுக்கலின் திசையை அளவிட ஒரு அகர்பட்டியைப் பயன்படுத்துவது தான். குழாய்கள், ஜன்னல்கள் அல்லது கதவுகள் போன்ற திறப்புகளில் ஒன்றை நோக்கி புகை வேகமாக நகர்ந்தால், இது நன்கு காற்றோட்டமான மண்டலமாகும். ஆனால்  புகை செங்குத்தாக மேல்நோக்கி உயர்ந்தால், அல்லது அதே பகுதியில் சுருள்கள் இருந்தால், இது மறு சுழற்சி மண்டலம் என்பதை குறிக்கும்.

உட்புற இடைவெளிகளில் காற்றோட்டம் படிப்பதற்கான இந்த எளிய முறைகள் கணினி உருவகப்படுத்துதல்களுடன் இணைப்பதன் மூலம் சோதிக்கப்பட்டு சுத்திகரிக்கப்படலாம், ஆனால் வெளியேற்ற விசிறி வேகத்தை அதிகரிப்பதன் மூலம் மறு சுழற்சி மண்டலங்களை அகற்ற முடியாது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். எவ்வாறாயினும், பீட விசிறிகளின் பொருத்தமான இடத்தால் அவை குறைக்கப்படலாம். முடிதிருத்தும் கடைகள் போன்ற வரையறுக்கப்பட்ட இடங்களில் காற்று ஓட்டத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை ஆய்வு செய்ய இந்த முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சிறிய, மூடிய, குளிரூட்டப்பட்ட அறைகள் மேம்பட்ட ஆபத்தைக் கொண்டுள்ளன. கோடையின் வெப்பத்தைத் தொடர்ந்து இந்தியா தற்போது பருவமழை காலத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில, ​​காற்றுச்சீரமைப்பின் பயன்பாட்டைக் குறைப்பது சாத்தியமாகும். கதவுகள் மற்றும் ஜன்னல்களைத் திறந்து வைப்பது நல்லது.  இந்த இடங்கள் காற்றின் ஓட்டத்தைத் தக்கவைத்துக் கொள்வதையும் மறு சுழற்சி மண்டலங்கள் தவிர்க்கப்படுவதையும் இந்த நடவடிக்கை உறுதிசெய்கின்றன.

கொரோனா தொற்று பரவுவதற்கு எதிராக பாதுகாப்பை உறுதி செய்வதில் காற்றோட்டத்தின் பங்கு இதுவரை போதுமான அளவில் வலியுறுத்தப்படவில்லை, என்றாலும் இந்தியாவின் எதிர்கால நடவடிக்கைளின் ஒரு முக்கிய பகுதியாக காற்றோட்டம் இருக்க வேண்டும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Covid 19 In India Covid 19 Explained
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment