scorecardresearch

முதலைக் கண்ணீர்… அறிவியல் காரணங்களும், கட்டுக் கதைகளும்!

2 நூற்றாண்டுகளுக்கு பிறகு ஆராய்ச்சியாளர் ஜார்ஜ் ஜான்சன் ஒரு சோதனை நிகழ்த்தினார். அதில் முதலைகளின் கண்ணில் உப்பு மற்றும் வெங்காயத்தை தேய்த்தார். ஆனால் முதலைகளின் கண்களில் இருந்து கண்ணீர் வராத போது அவர், முதலைகள் கண்ணீர் சிந்தும் பிரபலமான கருத்து முற்றிலும் ஒரு கட்டுக்கதை என்று கூறினார்.

The science and myth behind crocodiles tears

Dipanita Nath

The science and myth behind crocodile’s tears : தி வோயேஜ் அண்ட் ட்ராவல் ஆஃப் சர் ஜான் மண்டேவில் (The Voyage and Travel of Sir John Mandeville) என்ற புத்தகம் முதலில் ஃப்ரெஞ்ச் மொழியில் 1356 – 57-ல் வெளியானது. பிறகு அது ஆங்கிலத்தில் 1375ம் ஆண்டு வெளியானது. இது சர் ஜான் மண்டேவில் என்பவரின் பயணத்தை குறிப்பாக, விசித்திரமான பகுதிகளில் அவரின் பயணத்தை விவரிப்பதாக அமைந்துள்ளது. அதிலும் இருண்ட நிலம் குறித்து உண்மையான கற்பனைகள் நிறைந்த பல பகுதிகள் இடம் பெற்றுள்ளன.

அத்தகைய ஒரு சாகசமானது ஒரு விசித்திரமான நாட்டில் உள்ளது. ”இன் தட் கன்ட்ரே பென் க்ரெட் ப்ளெண்டீ ஆஃப் கொகொட்ரிலிஸ். தெய்ஸ் செர்பெண்டீஸ் ஸ்லென் மென் அண்ட் தெய் எடென் ஹெம் வெபியெங்க்” என்று அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது, “அந்த நாட்டில் நிறைய முதலைகள் இருக்கின்றன. அந்த மிருகங்கள் மனிதர்களை கொன்று அழுதபடியே உண்ணுகின்றன” என்று கூறப்பட்டுள்ளது.

மண்டேவில்லே முதலைகள் மனிதர்களை உண்ணும் போது கண்ணீர் வடிக்கின்றன என்று கூறியது முதலைகளுக்கு நற்பெயரை முத்திரை குத்தியது. முதலை இரண்டாம் நூற்றாண்டின் கிரேக்க தத்துவஞானி புளூடார்ச் மற்றும் வில்லியம் ஷேக்ஸ்பியர் போன்றோரும், மண்டேவில்லே குறிப்பிற்கு பிறகு சில நூற்றாண்டுகள் கழித்து முதலைக் கண்ணீர் குறித்து எழுதியுள்ளனர்.

பிரபலமான கற்பனையில், முதலையின் கண்ணீர் நேர்மையற்ற உணர்ச்சிகளின் காட்சியாக காணப்படுகிறது. குறிப்பாக போலியான சோகம், வருத்தம் மற்றும் பச்சாதாபத்தை குறிப்பதாகும். உலகம் முழுவதும் போலியாக இருக்கும் அரசியல்வாதிகளை குறிப்பிடுவதற்காக இந்த பதம் பலமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

முதலைகள் உண்மையிலேயே கண்ணீர் வடிக்குமா?

மக்கள் பல ஆண்டுகளாக முதலைகள் அழும் என்பதை நிரூபிக்க முயலுகின்றனர். 18ம் நூற்றாண்டில் சுவிஸ் மருத்துவரும் இயற்கை ஆர்வலருமான ஜோஹன் ஜகோப் ஸ்கூட்சர் முதலைகள் சாப்பிடும்போது அழும் என்ற பரவலான நம்பிக்கை தவறானது என்று அறிவித்தார். இந்த புகழ்பெற்ற பழைய கதையின் அஸ்திவாரங்களும் பொருளும் மிகவும் பலவீனமாக உள்ளன என்று அவர் கூறியுள்ளார்.

2 நூற்றாண்டுகளுக்கு பிறகு ஆராய்ச்சியாளர் ஜார்ஜ் ஜான்சன் ஒரு சோதனை நிகழ்த்தினார். அதில் முதலைகளின் கண்ணில் உப்பு மற்றும் வெங்காயத்தை தேய்த்தார். ஆனால் முதலைகளின் கண்களில் இருந்து கண்ணீர் வராத போது அவர், முதலைகள் கண்ணீர் சிந்தும் பிரபலமான கருத்து முற்றிலும் ஒரு கட்டுக்கதை என்று கூறினார். (‘Crocodile Tears: And thei eten hem wepynge’, Shaner and Vliet: BioScience, July 2007)

2006 ஆம் ஆண்டில், நரம்பியல் நிபுணர் டி மால்கம் ஷானர் மற்றும் விலங்கியல் நிபுணர் கென்ட் ஏ வ்லீட் ஆகியோர் மூன்று அமெரிக்க முதலைகள், இரண்டு பொதுவான கைமன்கள் மற்றும் இரண்டு யாகரே கெய்மன்களிடம் ஆராய்ச்சிகள் நடத்தினர். ஈரப்பதமற்ற தரையில், தண்ணீருக்கு தொலைவில் அந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டு அதனை படமாக்கியுள்ளனர். அப்போது முதலைகள் இயற்கையாகவே கண்ணீர் விட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

7 முதலைகளில் ஐந்து முதலிகளின் கண்கள், குமிழ்கள் ஈரப்பதமானது. அவை சாப்பிடுவதற்கு முன்பு அல்லது சாப்பிட்டதற்கு பின்பு கண்ணீர் விடுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஒரு யாகரே கெய்மனும் ஒரு பொதுவான கைமனும் கண்ணீர்விடவில்லை. முதலைகள் சாப்பிடும்போது உண்மையில் அழுகின்றன. முதலை உணவின் போது மந்தமாகிறது என்பதை வித்தியாசமான தனிப்பட்ட முறையில் வெளிப்படுத்துகிறது என்பது இந்த ஆய்வின் மூலம் உறுதியானது என்று ஷானர் மற்றும் வ்லீட் தெரிவித்தனர்.

முதலைகள் அழுவதற்கு காரணம் என்ன?

சாப்பிடும்போது தாடைகளின் அதிகப்படியான இயக்கம் ஒரு சாத்தியமான காரணம், இது முதலைகளின் சைனஸ்களுக்குள் காற்றை கட்டாயமாக அனுப்புகிறது மற்றும் கண்ணீர் சுரப்பிகளைத் தூண்டுகிறது என்று ஷானர் மற்றும் வ்லீட் கூறினார். முதலை கண்ணீர், எனவே, உணர்ச்சி துயரத்திலிருந்து வருவதல்ல.

உணவு உண்ணும் போது மனிதர்களால் அழ முடியுமா?

உண்மையில் க்ரோக்கோடைல் டியர் சிண்ட்ரோம் அல்லது போகோரட் சிண்ட்ரோம் என்ற ஒரு மருத்துவ நிலை உள்ளது. Bell’s Palsy-ல் இருந்து குணம் அடைந்து வரும் நபர்களில் பொதுவாக காணப்படும் இந்த மருத்துவ நிலையின் போது, அவர்கள் உண்ணும் போதும் நீர் அருந்தும் போது கண்ணீர் விடுவார்கள். Bell’s Palsy என்பது முக தசைகள் தற்காலிக பலவீனம் அல்லது பக்கவாதத்தால் பாதிக்கப்படும் ஒரு அரிய நிலை. இது முக தசைகளை கட்டுப்படுத்தும் ஒரு நரம்பின் சுருக்க அல்லது வீக்கத்தின் விளைவாகும், மேலும் இது வைரஸ் தொற்று காரணமாக ஏற்படலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: The science and myth behind crocodiles tears