Advertisment

ஓய்வு எனும் அறிவியல்

நவீன உலகில் ஓய்வு எடுப்பது எப்படி? (The Art of Rest: How to Find Respite in the Modern Age ) என்ற புத்தகத்தில் பொதுமக்கள் போதுமான ஓய்வு எடுப்பதில்லை என்று வாதங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
The science of why rest not sleep matters - ஓய்வு எனும் அறிவியல்

The science of why rest not sleep matters - ஓய்வு எனும் அறிவியல்

தூக்கத்தின் முக்கியத்துவம் குறித்து அதிக அளவுக்கு எழுதப்பட்டிருக்கும் சூழலில், நம் உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பது எப்படி, மனதுக்கு ஓய்வளிப்பது, எப்படி நாம் ஓய்வெடுப்பது?- ஓய்வு என்பது தூக்கத்தில் இருந்து வித்தியாசப்படுகிறது.

Advertisment

2014-ம் ஆண்டு இங்கிலாந்து பத்திரிகையாளர் காலவ்டியா ஹமோந்த் உலகம் முழுவதும் ஒரு ரேடியோ சர்வே ஒன்றை மேற்கொண்டார். அதிக ஓய்வு அளிக்கக் கூடிய செயல்பாடுகள் எவை என்பது குறித்து பதில் அளிக்கும்படி சர்வேயில் அவர் கேள்வி எழுப்பி இருந்தார். ஓய்வு குறித்து முன் எப்போதும் இல்லாத அளவுக்கு எடுக்கப்பட்ட பெரிய சர்வே என்று இந்த ஓய்வு குறித்த சர்வே சொல்லப்படுகிறது. 135 நாடுகளைச் சேர்ந்த 18000 பேர் இந்த சர்வேயில் பங்கேற்று பதில் அளித்திருந்தனர். பங்கேற்ற மூன்றில் இரண்டு பங்கினர், அதிக ஓய்வை விரும்புவதாக கூறி இருந்தனர். சர்வே பதில்களில் இருந்து முதல் 10 ஓய்வு செயல்பாடுகளை ஹமோந்த் தொகுத்திருக்கிறார். இவைதான் இப்போது அவர் வெளியிட்டிருக்கும் புதிய புத்தகத்தின் அத்தியாயங்களாக இருக்கின்றன.

ஓய்வு எனும் கலை; நவீன உலகில் ஓய்வு எடுப்பது எப்படி? (The Art of Rest: How to Find Respite in the Modern Age ) என்ற புத்தகத்தில் பொதுமக்கள் போதுமான ஓய்வு எடுப்பதில்லை என்று வாதங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. பிசியாக இருக்கின்றோம் என்று அவர்கள் சொல்ல விரும்புகின்றனர். சோர்வாக இருந்தபோதிலும் கூட அதை மறைத்துக் கொண்டு ஓய்வின்றி இருக்கின்றோம் என்று தங்களுக்கு தாங்களே கவுரவ சின்னம் அணிந்திருப்பதை விரும்புகின்றனர்.

இக்கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

ஹமோந்த் இது குறித்து கூறுகையில், ஓய்வின் அளவு என்பது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற உணர்வுடன் நேரடியாகத் தொடர்புடையது என்று நான் கண்டுபிடித்திருக்கின்றேன். எனவே, சுயபாதுகாப்பு என்ற முறையில் மக்கள் ஓய்வு எடுக்கத் தொடங்க வேண்டும் என்று வாதிடுகிறார்.

தூக்கத்தின் முக்கியத்துவம் குறித்து அதிக அளவுக்கு எழுதப்பட்டிருக்கும் சூழலில், நம் உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பது எப்படி, மனதுக்கு ஓய்வளிப்பது , எப்படி நாம் ஓய்வெடுப்பது?- ஓய்வு என்பது தூக்கத்தில் இருந்து வித்தியாசப்படுகிறது.

சர்வே அடிப்படையில், எழுதப்பட்ட இந்த புத்தகம் அதிக ஓய்வு அளிக்கும் செயல்பாடுகளாக மக்கள் கண்டுபிடித்த முதல் பத்து செயல்பாடுகளை வாசகர்களுக்கு அளிக்கின்றது. இந்த பட்டியல் கடைசியில் இருந்து முதல் என்ற தலைகீழ் வரிசையில் எழுதப்பட்டுள்ளது. விழிப்புணர்வுடன் இருப்பதில் தொடங்கி, டி.வி பார்ப்பதில் தொடர்ந்து, பகல் கனவு, குளிப்பது, நடைப்பயிற்சி மேற்கொள்வது, அதிக பளு இல்லாத வேலை பார்ப்பது, இசை கேட்பது , உள்ளுணர்வில் இருப்பது, இயற்கையை ரசிப்பதில் நேரம் செலவிடுவது என்று கூறப்பட்டிருக்கிறது. இறுதியாக படிப்பது என்பது அதிக ஓய்வு தரும் செயலாக கூறப்பட்டுள்ளது.

ஹமோந்த், ஓய்வு என்பது ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை விளக்குகிறார், முடிவுக்குப் பின்னால் உள்ள அறிவியலை ஆய்வு செய்வதுடன், ஓய்வு உண்மையில் எப்படி செயல்படுகிறது என்பதை உருவாக்குகிறார்.

கார்டியன் பத்திரிகையின் மதிப்புரையில், ஓய்வு எனும் கலை என்பது அறிவியல்பூர்வமான ஓய்வுக்கு சம மாக இருக்க வேண்டும் என்றதுடன், இந்த அற்புதமான புத்தகம் இளைப்பாறுதலின் அவசியத்தை அதிக அளவுக்குத் தூண்டுவதில் தூரத்தில் இருக்கிறது என்பதுதான் ஒரே பிரச்னை.

தமிழில் கே.பாலசுப்ரமணி

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment