Advertisment

சென்னை 'டூ' விளாடிவோஸ்டோக் கடற்வழிப் பயணம் - ஒரு பார்வை

ரஷ்ய மொழியில், விளாடிவோஸ்டாக் ‘கிழக்கின் ஆட்சியாளர்’ என்றழைக்கப்படுகிறது. வட கொரியாவின் வடக்கே கோல்டன் ஹார்ன் விரிகுடாவில் இது அமைந்துள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
The sea route from Chennai to Vladivostok - சென்னை டூ விளாடிவோஸ்டாக் கடற்வழிப் பயணம் - ஒரு பார்வை

The sea route from Chennai to Vladivostok - சென்னை டூ விளாடிவோஸ்டாக் கடற்வழிப் பயணம் - ஒரு பார்வை

பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக்கிற்கு சென்றபோது, ரஷ்யாவின் கிழக்கு துறைமுக நகரத்துக்கும் சென்னைக்கும் இடையில் இந்தியாவின் கிழக்கு கடற்பரப்பில் ஒரு முழு அளவிலான கடல் வழியைத் திறக்க கையெழுத்திடப்பட்டது.

Advertisment

"சென்னை மற்றும் விளாடிவோஸ்டோக் இடையே இந்த வழியைத் திறப்பது முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில் இது இரண்டு பெரிய துறைமுகங்களுக்கிடையிலான இணைப்பை உறுதி செய்து, இந்தியாவிற்கும் கிழக்கு ரஷ்யாவுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கு உந்துதலைக் கொடுக்கும்" என்று வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே தெரிவித்துள்ளதாக பிடிஐ குறிப்பிட்டுள்ளது.

விளாடிவோஸ்டோக்

ரஷ்ய மொழியில், விளாடிவோஸ்டோக் ‘கிழக்கின் ஆட்சியாளர்’ என்றழைக்கப்படுகிறது. வட கொரியாவின் வடக்கே கோல்டன் ஹார்ன் விரிகுடாவில் இது அமைந்துள்ளது. மேலும், சீனாவுடனான ரஷ்யாவின் எல்லையிலிருந்து சிறிது தொலைவில் உள்ளது. இது ரஷ்யாவின் பசிபிக் கடற்கரையில் மிகப்பெரிய துறைமுகமாகும், மேலும் ரஷ்ய கடற்படையின் பசிபிக் கடற்படையின் தாயகமாகும். இது புகழ்பெற்ற டிரான்ஸ் சைபீரியன் ரயில்வேயின் கிழக்கு ரயில் தலைமையாகும். மேலும், இது ரஷ்யாவின் கிழக்கு பகுதிகளையும் தலைநகர் மாஸ்கோவையும், மேற்கில் ஐரோப்பா நாடுகளையும் இணைக்கிறது. விளாடிவோஸ்டோக்கின் மிகப்பெரிய துறைமுகத்தில், கப்பல் மற்றும் மீன்பிடித்தல் முக்கிய வணிக நடவடிக்கைகளாகும். ஆட்டோ மொபைல்கள் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் ஒரு முக்கிய அம்சமாகும். அவை பெரும்பாலும் உள்நாட்டிற்கு கொண்டு செல்லப்படுகின்றன.

சென்னைக்கு, கடல் வழியாக

விளாடிவோஸ்டோக்கிலிருந்து சென்னைக்குச் செல்லும் கடல் பயணமானது, ஜப்பான் கடலில் கொரிய தீபகற்பம், தைவான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவற்றைக் கடந்து தென் சீனக் கடலில், சிங்கப்பூரைக் கடந்தும், மலாக்கா ஜலசந்தி வழியாகவும் வங்காள விரிகுடாவில் வெளிவந்து பின்னர் அங்கிருந்து அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவு வழியாக சென்னை வந்து சேரும்.

நேரம் மற்றும் தூரம்

இந்த கடல் பாதை சுமார் 5,600 கடல் மைல் அல்லது 10,300 கி.மீ தூரத்தை உள்ளடக்கியது. ஒரு பெரிய கொள்கலன் கப்பல் சாதாரண 20-25 நாட் வேகம் அல்லது மணிக்கு 37-46 கி.மீ வேகத்தில் பயணித்தால், 10-12 நாட்களில் தூரத்தை கடக்க முடியும். 18-20 நாட் (மணிக்கு 33-37 கி.மீ) வேகமான “மெதுவான நீராவி” வேகத்தில், எரிபொருளைச் சேமிப்பதற்காக நீண்ட தூர கப்பல்கள் சில நேரங்களில் பயணிக்கின்றன, இதற்கு சற்று அதிக நேரம் ஆகலாம். 12-13 நாட்கள் வரை பயணம் செய்யக் கூடும்.

வர்த்தகம் மற்றும் செயல் திட்டம்

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் கடல் கடற்கரையில் கூடங்குளத்தில் ரஷ்யாவின் ஒத்துழைப்புடன் இந்தியா அணு மின் நிலையங்களை உருவாக்கி வருகிறது. கடல் வழியைத் திறப்பது இத்திட்டத்திற்கு உதவக்கூடும்.

அதுமட்டுமின்றி, இந்த அதிர்வான கடல் பாதை இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவை உயர்த்த உதவும். இது இந்தோ-பசிபிக் மற்றும் குறிப்பாக தென்சீனக் கடலில் இந்தியாவின் இருப்பை அதிகரிக்கும்.

"இந்தியா-ரஷ்யா நட்பு அந்தந்த நாடுகளின் தலைநகரங்களுக்கு மட்டுமானதல்ல. இந்த உறவின் மையத்தில் நாங்கள் மக்களை வைத்திருக்கிறோம், ”என்று பிரதமர் விளாடிவோஸ்டோக்கில் கூறினார்.

Russia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment