scorecardresearch

60 டாலர்களை கடந்த கச்சா எண்ணெய் விலை; இந்தியாவில் எத்தகைய மாற்றத்தை உருவாக்கும்?

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் இரண்டு தயாரிப்புகளின் சர்வதேச விலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.

The significance of crude crossing a barrel

The significance of crude crossing $60 a barrel :  ஒருவருடம் கழித்து திங்கள் கிழமை அன்று ப்ரெண்ட் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 60 டாலர்களாக உயர்ந்தது. கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி போடும் பணி உலகம் முழுவதும் விரைவாக நடைபெற்று வருவதால் உலக அளவிலான தேவைகள் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிரது. அக்டோபார் மாத இறுதியில் இருந்து 50% வரை ப்ரெண்ட்டின் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளாது. ஆனால் அதற்கு முன்பு ஐந்து மாதங்களாக கச்சா எண்ணெய் விலை 40 டாலர்களாகவே இருந்தது.

ஏன் இந்த விலை உயர்வு?

அனைத்து எண்ணெய் உற்பத்தி நாடுகளும் கொரோனா வைரஸால் எண்ணெய் தேவை வீழ்ச்சியை சந்தித்தன. ஆனாலும் உற்பத்தியை மட்டுபடுத்தி விலையை உயர்த்தியது. சவுதி அரேபியா நாள் ஒன்றுக்கு 1 மில்லியன் பேரல்கள் எண்ணெய் உற்பத்தியை குறைத்து விலையை நிலையாக வைத்திருந்தது. உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடப்பதால் கச்சா எண்ணெய் தேவை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

“ஜனவரி 2020க்கு அருகில் கச்சா வர்த்தகம், சவுதியின் உற்பத்தி குறைப்பு, சில அமெரிக்க மாநிலங்களில் வைரஸ் நிலைமை மேம்பாடு, தடுப்பூசி முன்னேற்றம் மற்றும் கூடுதல் அமெரிக்க தூண்டுதலின் நம்பிக்கைகள் ஆகியவற்றால் ஆதரிக்கப்படுகிறது” என்று கோடக் செக்யூரிட்டிஸின் வி.பி. ரவிந்திர ராவ் தெரிவித்தார்.

இது இந்தியாவை எவ்வாறு பாதிக்கும்?

ப்ரெண்ட் கச்சாவின் விலை உயர்வு இந்தியாவின் இறக்குமதி விலையில் அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைகளில் 80 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது மற்றும் இந்தியாவில் கச்சா எண்ணெயின் சராசரி விலை ஜனவரி மாதத்தில் பீப்பாய் ஒன்றுக்கு 54.8 டாலர்களாக உயர்ந்துள்ளது.

கச்சா விலையின் மேலதிக நடவடிக்கை நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை மேலும் அதிகரிக்கும். இது சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வு மட்டும் இன்று மாநில மத்திய அரசு விதித்துள்ள கூடுதல் வரிகளால் முன்னெப்போதும் இல்லாத வகையில் விலை உயர்வை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் விலை செவ்வாய் கிழமை அன்று மெட்ரோ பகுதிகளில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது என்று தான் கூற வேண்டும். டெல்லியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 35 பைசாவை உயர்த்தியுள்ளது. மேலும் அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 87.3வுக்கு விற்பனை செய்யப்பட்டது. டீசல் விலை மும்பையில் புதிய உச்சத்தை எட்டி ரூ. 84.36க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பொருளாதார பின்னடைவு காலகட்டத்தின் மத்தியில் வருவாயை அதிகரிக்கும் பொருட்டு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ. 11, டீசலுக்கு ரூ.13-ஐ உயர்த்தி அறிவித்தது மத்திய அரசு. வரி உயர்வால், பெட்ரோல் டீசல் விலை குறைவாக இருந்த காலகட்டத்திலும் குறைந்த விலையில் இந்தியர்களால் கச்சா பொருட்களை பயன்படுத்த இயலவில்லை. இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் இரண்டு தயாரிப்புகளின் சர்வதேச விலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: The significance of crude crossing 60 dollars a barrel

Best of Express