ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான்கள் ஞாயிற்றுக்கிழமை நுழைந்தனர். இஸ்லாமியப் போராளிக் குழுவைத் தடுக்க போராடிய ஆப்கானிஸ்தான் அரசுப் படைகள் பின்வாங்கியதையடுத்து, ஒரு வாரத்தில் வேகமாக மாகாணங்களை கைப்பற்றி வந்தன. தாலிபான்களின் வரலாறு மற்றும் சித்தாந்தம் பற்றிய சில முக்கிய உண்மைகள் இங்கே காணலாம்.
பாஷ்தோ மொழியில் ‘மாணவர்கள்’ என்று பொருள்படும் தலிபான்கள் 1994ல் தெற்கு ஆப்கானிஸ்தான் நகரமான கந்தஹாரைச் சுற்றி உருவானார்கள். சோவியத் யூனியன் படைகள் திரும்பப் பெறப்பட்டதையடுத்து, அரசாங்கத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து நாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட பிரிவுகளில் இதுவும் ஒன்றாகும்.
இந்த அமைப்பு முதலில் ‘முஜாஹிதீன்’ போராளிகள் என்று அழைக்கப்படுபவர்களிடமிருந்து உறுப்பினர்களை ஈர்த்தது. அவர்கள் அமெரிக்காவின் ஆதரவுடன் 1980 களில் சோவியத் படைகளைத் தடுத்தனர்.
இரண்டு வருட இடைவெளியில், தலிபான்கள் அந்நாட்டின் பெரும்பகுதி மீது தனி கட்டுப்பாட்டைப் பெற்றனர். 1996ல் இஸ்லாமிய சட்டத்தின் கடுமையான விளக்கத்துடன் இஸ்லாமிய எமிரேட் என்று அறிவித்தனர். மற்ற முஜாஹிதீன் குழுக்கள் நாட்டின் வடக்கு பகுதியில் பின்வாங்கின.
செப்டம்பர் 11, 2001ல் அல் கொய்தாவால் அமெரிக்காவில் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் வடக்கு பகுதியில் அமெரிக்க ஆதரவுப் படைகள் அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களின் மூலம் நவம்பர் மாதம் காபூலுக்குள் நுழைந்தன.
தலிபான்கள் தொலைதூரப் பகுதிகளில் மறைந்திருந்து ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு எதிராக 20 ஆண்டு கால கிளர்ச்சியைத் தொடங்கினார்கள்.
தலிபான்களின் நிறுவனரும் உண்மையான தலைவர் முல்லா முகமது உமர் ஆவார். அவர் தலிபான்கள் வீழ்த்தப்பட்ட பின்னர் தலைமறைவானார். அவர் இரகசியமாக தலைமறைவாக இருந்ததால், அவரது மரணம், 2013ல் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவரது மகனால் உறுதிப்படுத்தப்பட்டது.
தாலிபான்களின் சித்தாந்தம் என்ன?
தலிபான்களின் 5 வருட ஆட்சியில், தலிபான்கள் ஷரியா சட்டத்தின் கடுமையாக அமல்படுத்தினர். முக்கியமாக பெண்கள் வேலை செய்வதற்கோ அல்லது படிப்பதற்கோ தடை செய்யப்பட்டனர். மேலும், ஒரு ஆண் பாதுகாவலருடன் இல்லாவிட்டால் அவர்கள் வீடுகளில் அடைக்கப்பட்டனர்.
பொது இடத்தில் மரண தண்டனை மற்றும் கசையடி தண்டனைகள் பொதுவானவையாக இருந்தன. மேற்கத்திய திரைப்படங்கள் மற்றும் புத்தகங்கள் தடை செய்யப்பட்டன. இஸ்லாத்தின் கீழ் விரோதமாக பார்க்கப்பட்ட கலாச்சார கலைப்பொருட்கள் அழிக்கப்பட்டன. எதிரிகள் மற்றும் மேற்கத்திய நாடுகள் தலிபான்கள் ஏற்கனவே கட்டுப்படுத்தும் பகுதிகளில் இந்த ஆட்சி முறைக்கு திரும்ப விரும்புவதாக குற்றம் சாட்டுகின்றன. ஆனால், தலிபான் குழு இதை மறுக்கிறது.
தலிபான்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானுக்கு ஒரு உண்மையான இஸ்லாமிய அமைப்பு வேண்டும் என்று விரும்பினார்கள். அது கலாச்சார பாரம்பரியங்கள் மத விதிகளுக்கு ஏற்ப பெண்கள் மற்றும் சிறுபான்மை உரிமைகளுக்கான ஏற்பாடுகளை செய்யும்.
இருப்பினும், சில பகுதிகளில் பெண்கள் வேலை செய்வதைத் தடை செய்வதற்கான குழு ஏற்கனவே தனது பணியைத் தொடங்கியதற்கான அறிகுறிகள் உள்ளன.
தலிபான்: சர்வதேச அங்கீகாரம்
அண்டை நாடான பாகிஸ்தான் உட்பட 4 நாடுகள் மட்டுமே தலிபான் அரசாங்கத்தை ஆட்சியில் இருந்தபோது அங்கீகரித்தன. காபூலின் வடக்கே உள்ள மாகாணங்களை வைத்திருக்கும் ஒரு குழுவை சரியான அரசாங்கத்திற்காக காத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையுடன் சேர்ந்து பெரும்பாலான நாடுகள் அங்கீகரித்தன.
அமெரிக்காவும் ஐக்கிய நாடுகளும் தலிபான்கள் மீது தடைகளை விதித்தன. மேலும், பெரும்பாலான நாடுகள் இந்த குழுவை இராஜதந்திர ரீதியாக அங்கீகரிக்கும் சிறிய அறிகுறியைக் காட்டுகின்றன.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், இந்த மாத தொடக்கத்தில் ஆப்கானிஸ்தான் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்து கொடூரங்களைச் செய்தால் அது ஒரு விரும்பப்படாத அரசாக மாறும் அபாயம் உள்ளது என்றார்.
ஆனால், சீனா போன்ற பிற நாடுகள் தலிபான்களை ஒரு சட்டபூர்வமான ஆட்சியாக அங்கீகரிக்கலாம் என்று எச்சரிக்கையுடன் சமிக்ஞை செய்யத் தொடங்கியுள்ளன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.