ஓம் மராத்தே
அந்தமான், நிக்கோபார் தீவுகளை மூன்று நாட்கள் பார்வையிடுவதற்காக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் டிசம்பர் 29, 1943-ம் ஆண்டு போர்ட்பிளேய்ர் வந்தார். அவருடைய வருகையின்போது, அவர் போர்ட் பிளேய்ரில் உள்ள ஜிம்கானா மைதானத்தில் - இன்றைய நேதாஜி ஸ்டேடியத்தில் இந்தியர்களின் மூவண்ணக் கொடியை ஏற்றினார்.
இரண்டாம் உலகப் போரின்போது இந்த தீவுகள் மூன்று ஆண்டுகள் (1942-45) ஜப்பான் ஆக்கிரமிப்பின் கீழ் இருந்தன. மேலும், அந்த நாட்களில், சுபாஷ் சந்திர போஸின் ஆசாத் ஹிந்த் அரசாங்கத்திடம் அவை முறையாக ஒப்படைக்கப்பட்டன. இருப்பினும், அவை நடைமுறையில் ஜப்பான் கட்டுப்பாட்டிலேயே இருந்தன.
அந்தமான், நிக்கோபார் தீவுகள் இந்தியப் பெருங்கடலில் மியான்மர் இந்தோனேசியா, இந்தியாவின் முக்கிய நிலப்பகுதி இடையே ராஜாங்க உறவுகள் ரீதியாக அமைந்துள்ளது. மேலும், இந்த தீவுகள் முக்கியமான கடல் வழித்தடங்களுக்கு அருகில் உள்ளன.
இந்த தீவுகள் முதலில் டச்சுக்காரர்களின் கட்டுப்பாட்டிலும் பின்னர் பிரிட்டிஷார் கட்டுப்பாட்டிலும் இருந்தன. இரண்டாம் உலகப் போரின்போது முன்னேறிய ஜப்பான் இராணுவத்தால் அவை கைப்பற்றப்பட்டன.
அந்த போரின் போது ஜப்பானியர்களுடன் கூட்டணி வைத்திருந்த சுபாஷ் சந்திர போஸ், ஆகஸ்ட் 1943 இல் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் ஆசாத் ஹிந்த் ஃபௌஜ் அந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய மண்ணில் இருக்கும் என்று அறிவித்தார்.
அக்டோபர் 24-ம் தேதி சிங்கப்பூரில் 50,000 இந்தியர்கள் ஒன்றுகூடிய கூட்டத்தின் முன்பு சுபாஷ் சந்திர போஸ் தனது வாக்குறுதியை மீண்டும் வலியுறுத்தினார். அங்கே அவர் “இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவின் புனித மண்ணில்” இருப்பார் என்று கூறினார்.
ஆசாத் ஹிந்த் அரசாங்கத்தால் 1943-ம் ஆண்டின் இறுதியில் ஜப்பானியர்களிடமிருந்து தீவுகளின் கட்டுப்பாட்டைப் பெற்ற சுபாஷ் சந்திர போஸ் டிசம்பர் 29-ம் தேதி போர்ட் பிளேய்ருக்கு வந்தார்.
ஹார்வர்ட் வரலாற்றாசிரியர் சுகதா போஸ் எழுதிய, மாட்சிமை தங்கிய மன்னரின் எதிர்ப்பாளர்: சுபாஸ் சந்திரபோஸ் மற்றும் பேரரசிற்கு எதிரான இந்தியாவின் போராட்டம் என்ற நூலில், சுபாஷ் சந்திர போஸ் இந்த தீவுகளுக்கு மூன்று நாள் பார்வையிடுவதற்காக டிசம்பர் 29 அன்று போர்ட்பிளேய்ருக்கு வருவதன் மூலம், அந்த ஆண்டு முடிவதற்குள் இந்திய மண்ணில் கால் வைப்பதாக அவர் அளித்த தனது கடுமையான வாக்குறுதியை மீட்டெடுத்தார்.
வழக்கம் போல, அவரது வருகை குறியீட்டளவில் அமைந்தது. அந்தமான் தீவில் உள்ள மோசமான செல்லுலார் சிறையில் ஆங்கிலேயர்கள் இந்தியாவின் மிகப் பெரிய புரட்சியாளர்கள் சிலரை சிறையில் அடைத்திருந்தனர். அங்கு பலர் கடுமையான ஆயுள் தண்டனைகளை அனுபவித்தனர். ஆனால், அவர்களில் சிலர் தூக்கு மேடைக்கு அனுப்பப்படவில்லை. அங்கே தண்டனை அனுபவித்த புரட்சியாளர்களுக்கு நேதாஜி அஞ்சலி செலுத்தினார். மேலும், அவர் செல்லுலார் சிறை வாயில்கள் திறக்கப்பட்டதை பாஸ்டிலின் விடுதலையுடன் ஒப்பிட்டார்.
போர்ட்பிளேய்ரில் உள்ள ஜிம்கானா மைதானத்தில் அவர் இந்தியர்களின் மூவண்ணக் கொடியை ஏற்றினார். அதே நேரத்தில் ஒரு கோரஸ் தேசிய கீதமும் பாடினார்கள். அவர் அங்கிருந்து புறப்படுவதற்கு முன்பு, அந்தமானை ஷாஹீத் (தியாகிகள்) தீவு என்றும், நிக்கோபாரை ஸ்வராஜ் (சுதந்திரம்) தீவு என்றும் பெயர் மாற்றினார்.