Advertisment

நேரு, எட்வினா, மவுண்ட்பேட்டனின் தனித்துவமான பிணைப்பு

மவுண்ட்பேட்டனும் நேருவும் அன்பும் மரியாதையும் கொண்ட உறவைப் பகிர்ந்து கொண்டனர். இது சுதந்திர இந்தியா எவ்வாறு உருவானது என்பதில் அழியாத முத்திரையைப் பதித்தது. அவர்களைப் பற்றிய சில நிகழ்வுகள் இங்கே:

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Nehru and edwina, nehru edwina affair, lord louis mountbatten, edwina mountbatten, india independence, express explained, indian express

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 133வது பிறந்தநாளில், நாட்டில் அதிகம் பேசப்படும் அரசியல்வாதிகளில் ஒருவராக உள்ளார். பிரதமராக அவரது கொள்கைகள் மற்றும் முடிவுகள் தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டாலும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை, குறிப்பாக லேடி எட்வினா மவுண்ட்பேட்டனுடனான அவரது உறவு, ஆர்வத்தையும் கருத்தையும் தொடர்ந்து ஈர்த்து வருகிறது.

Advertisment

நேரு மற்றும் மவுண்ட்பேட்டன் தம்பதியினருக்கு இடையேயான உறவுகள், அவர்களின் மகள் பமீலா ஆகியோரை ‘மகிழ்ச்சியான மூன்று- பேர்’ என்று விவரித்த அலெக்ஸ் வான் துன்செல்மானின் 'இந்தியன் சம்மர்' (2007) உட்பட பல்வேறு புத்தகங்களில் அதிகம் கையாளப்பட்டுள்ளது. இதில் வெளிப்படும் ஆழமான அன்பும் மரியாதையும் கொண்ட உறவு, சுதந்திர இந்தியா எப்படி உருவானது என்பதில் அழியாத முத்திரையை பதிக்கும் சித்திரம் அது.

அவர்கள் எப்படி நெருக்கமானார்கள்?

மே, 1947-ல், ஜவஹர்லால் நேரு, வைஸ்ராய் லார்ட் லூயிஸ் மவுண்ட்பேட்டன் மற்றும் லேடி எட்வினா மவுண்ட்பேட்டன் ஆகியோரால் சிம்லாவில் உள்ள மஷோப்ராவுக்கு ‘முறைசாரா வார இறுதி கொண்டாட்டத்துக்கு’ அழைக்கப்பட்டார்.

ஆரம்பத்தில் நேரு பதற்றமாக இருந்ததாகவும், ஆனால் விரைவில் அவர் இயல்பாக இருந்ததாகவும் துன்செல்மேன் எழுதியுள்ளார்.

“ஜவஹர்லால் நேரு டிக்கி (மவுண்ட் பேட்டன்) மற்றும் எட்வினாவுடன் பழத்தோட்டம் மொட்டை மாடி மற்றும் மலைப் பாதைகளைச் சுற்றி நடந்தார். அந்த பாதை மலையைச் சுற்றி வந்தது, அதில் இருந்து லார்ட் கிச்சனரின் முன்னாள் மாளிகையான வைல்ட்ஃப்ளவர் ஹால், அடுத்த சிகரத்தைப் பார்க்க முடியும்.” நேரு ஒரு காலத்தில் சுறுசுறுப்பான இளைஞராக இருந்தபோதிலும், எளிமையான ரசனையுள்ள மனிதராக மாறியிருந்தார். இருப்பினும், அவர் கட்டுப்படுத்த முடியாத இரண்டு இன்பங்கள் இருந்தன: மலைக் காட்சிகளின் உயிர்ப்பான அழகும், ஒரு சுவாரஸ்யமான பெண்ணின் துணையும். மஷோப்ராவில், அவருக்கு இரண்டும் இருந்தன. விரைவில் அவர் மகிழ்ச்சியுடன் டிக்கி மற்றும் எட்வினா அவர்களை ஓய்வெடுக்க சரிவுகளில் பின்நோக்கி நடக்க கற்றுக்கொடுத்தார்” துன்செல்மேன் என்று எழுதியுள்ளார்.

மவுண்ட்பேட்டனின் இளைய மகள், லேடி பமீலா ஹிக்ஸ், ‘இந்திய நினைவுகள்: அதிகாரப் பரிமாற்றத்தின் போது மவுண்ட்பேட்டனின் தனிப்பட்ட குறிப்புகள்’ (India Remembered: A Personal Account of the Mountbattens During the Transfer of Power, 2007) என்ற புத்தகத்தில் எழுதியிருப்பதாவது: “… என் தந்தை ஆன்மாவைத் தேடத் தொடங்கினார். அவருடைய கருத்தைப் பெறுவதற்காக நேருவுக்கு மவுண்ட்பேட்டன் தனது திட்டத்தைக் தெரியப்படுத்த முடிவு செய்தார். நேரு, கிருஷ்ண மேனன் வந்த இரவு விடியும் வரை விழித்திருந்தார், அவர் மே 11 (1947) தேதியிட்ட வெடிகுண்டு கடிதத்தை என் தந்தைக்கு படித்துக் காட்ட்டினார். அதை அவர் தனது நாட்டின் மேல்நிலையாக்கப் பார்வை என்று அவர் பார்த்த திட்டத்தின் பல விஷயங்களை நிராகரித்தார். என் தந்தை மறுபரிசீலனை செய்தார். ஆச்சரியமான அளவில் கிருஷ்ண மேனனுடன், முழு திட்டத்தையும் மறுவடிவமைத்தார்.

அதே சம்பவத்தைப் பற்றி, துன்செல்மேன் எழுதுகையில், “ஜவஹருடன் விஷயங்கள் எந்த அளவுக்கு நன்றாக நடந்துகொண்டிருந்தது என்றால், டிக்கி விருப்பத்தின் பேரில் நெறிமுறையை மீறினார். அன்று இரவு உணவிற்குப் பிறகு ஆய்வில் இருந்த ரகசியத் திட்டத்தின் நகலை அவருடைய புதிய நெருக்கமான நண்பருக்கு காட்டுங்கள் என்று கூறி அவருடைய ஊழியர்களின் ஆலோசனையை புறக்கணித்தார். ஆனால், ஜவஹர் அந்த ரகசிய ஆவணங்களைப் படித்தபோது, ​​அவரது மனநிலை அன்பாக இருந்ததில் இருந்து அதிர்ச்சியாகவும், அதிர்ச்சியிலிருந்து கோபமாகவும் மாறியது.

மறுநாள் அதிகாலை இரண்டு மணிக்கு கிருஷ்ண மேனனின் படுக்கையறைக்குள் நுழைந்தார். அன்று இரவு டிக்கிக்கு எழுதிய வரைவு முன்மொழிவுகளில், “அவர்கள் வழங்கிய பிளவு, மோதல், சீர்குலைவு மற்றும், மகிழ்ச்சியற்ற வகையில், இந்தியா மற்றும் பிரிட்டனுக்கு இடையிலான உறவுகள் மோசமடைந்து வருவதைப் பற்றிய சித்திரம் என் மீது பேரழிவு விளைவை ஏற்படுத்தியுள்ளது” என்று அவர் கூறினார்.

நேருவின் ஆட்சேபனைகளை மவுண்ட்பேட்டன் கவனத்தில் கொண்டு, மேலும் அந்த திட்டம் ஒரு ஏற்றுக்கொள்ளக்கூடிய வடிவத்தில் மென்மையாக்கப்பட்டது. அங்கு எட்வினா நேருவிடமிருந்து ஒரு சலுகையைப் பெற்றார். இந்த திட்டத்தில் சில திருத்தங்களை செய்தார்.

ஜின்னாவுடனான உறவு

முகமது அலி ஜின்னாவின் அறிவு அல்லது சந்தேகத்தால் நேருவுக்கு இந்த வரைவுத் திட்டம் காட்டப்பட்டது என்பது மவுண்ட்பேட்டன் பிரபு மீதான அவரது அணுகுமுறை மற்றும் அவரது முன்மொழிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. மவுண்ட்பேட்டன் நேருவின் விரல் அசைவில் கட்டுப்பட்டு இருந்தார் என சந்தேகிக்க ஜின்னாவுக்கு வலுவான காரணங்கள் இருந்ததாக துன்செல்மேன் கூறுகிறார். எனினும், துன்செல்மேன் கருத்துப்படி, ஜின்னா ஒருமுறை எட்வினா-ஜவஹர்லால் பரிமாணத்துக்கு சௌகரியம் அளிக்க மிகவும் நெருக்கமாக கொண்டுவரப்பட்டார். பின்னர், பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் எஸ்.எஸ். பிர்சாடாவின் கருத்துப்படி, ஜூன் 1947-இல், எட்வினா நேருவிடம் எழுதியதாகக் கூறப்படும் சில கடிதங்கள் ஜின்னாவிடம் ஒப்படைக்கப்பட்டன.

“இந்தக் கடிதங்களைப் என்ன செய்வது என்று ஜின்னா அவரது சகோதரி பாத்திமா மற்றும் அவருடைய சக ஊழியர்களுடன் விவாதித்ததாக பிர்சாடா கூறினார். இறுதியில், ஜின்னா சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்று முடிவுசெய்து, கடிதங்களைத் திருப்பி அனுப்பினார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரத்திற்குப் பிறகு

நேருவின் அரசியல் குருவும், வழிகாட்டியுமான மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, இறுதிச் சடங்கில் துயரத்தில் இருந்த நேருவின் அருகில் அமர்ந்திருந்தவர் எட்வினா. அவர்களின் உறவு நெருக்கமானது.

“அந்தப் பதற்றமான நாட்களிலும், பின்னர் நேரு இந்தியக் குடியரசின் பிரதமரான பிறகு அவர் <எட்வினா> என் சகோதரனுடன் தங்க வந்தபோது, அவருடைய சோகமான மனநிலையை தேற்றக்கூடிய ஒரு சிலரில் (எட்வினா) ஒருவராக இருந்தார்” என்று ஜவஹரின் சகோதரி பேட்டி நினைவு கூர்ந்தார். “அவர் (எட்வினா) இருக்கும் போது, ​​நாங்கள் சிறு வயதில் இருந்ததைப் போலவே அண்ணனின் (நேரு) சிரிப்பு வீட்டில் ஒலிக்கும்.” என்று நேருவின் சகோதரி கூறுகிறார்.

டிக்கி <லார்ட் மவுண்ட்பேட்டன்> இந்த உறவால் விலக்கப்பட்டதாக எந்த அறிகுறியும் காட்டவில்லை. அவரும் எட்வினாவும் அலகாபாத்தில் நடந்த கும்பமேளாவிற்கு ஜவஹருடன் சென்ற பிப்ரவரி மாத தொடக்கத்தில் எடுக்கப்பட்ட படங்களைத் தனது புகைப்பட ஆல்பத்தில் ஒட்டினார். டிக்கி, எட்வினா, ஜவஹர் மற்றும் பமீலா புகைப்படத்தில் டிக்கியின் கையெழுத்தில், ‘அலகாபாத்திற்கு குடும்பத்துடன் சென்றபோது’ என்று எளிமையாக எழுந்தியிருந்தார்” என்று துன்செல்மேனின் புத்தகம் கூறுகிறது.

எட்வினா ஒருமுறை ஆபத்தான முறையில் நோய்வாய்ப்பட்டபோது, ​​நேரு தனக்கு எழுதிய கடிதங்களை தன் கணவரிடம் ஒப்படைத்தார். அவர் மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் கூறினார், “அவை வழக்கமான ஜவாஹா (சுறுக்கமாக) எழுத்துக்களின் கலவை. அவை ஆர்வமும் உண்மைகளும் உண்மையான வரலாற்று ஆவணங்களும் நிறைந்தவை என்பதை நீங்கள் உணர்வீர்கள். அவைகள் சிலவற்றில் தனிப்பட்ட குறிப்புகள் இல்லை. மற்றவை ஒரு வகையில் காதல் கடிதங்கள், எங்களிடையே இருக்கும் விசித்திரமான உறவை - அதில் பெரும்பாலானவை ஆன்மீகத்தை பற்றியது - நீங்களே உணர்ந்து கொள்வீர்கள். இந்த கடைசி ஆண்டுகளில் ஜே என் வாழ்க்கையில் ஒரு பெரிய விஷயத்தை அர்த்தப்படுத்தியிருக்கிறார், அவருடைய வாழ்க்கையிலும்தான் என்று நான் நினைக்கிறேன். எங்கள் சந்திப்புகள் அரிதானவை, எப்போதும் விரைவானவை. ஆனால், நான் அவரைப் புரிந்துகொண்டேன் என்று நினைக்கிறேன். அனேகமாக, அவரும் நானும் போல, எந்த மனிதர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முடியும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

பமீலா தனது புத்தகத்தில், ஜூன் 1948 இல், லார்ட் மவுண்ட்பேட்டன் தனது மூத்த சகோதரிக்கு எழுதிய கடிதத்தை மேற்கோள் காட்டுகிறார்: “அவரும் <எட்வினா> மற்றும் ஜவஹர்லாலும் மிகவும் இனிமையானவர்கள், அவர்கள் ஒருவரையொருவர் மிகவும் நல்ல முறையில் நேசிக்கிறார்கள். பம்மியும் நானும் தந்திரமாகவும் உதவியாகவும் இருக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். மம்மி சமீபகாலமாக மிகவும் இனிமையாக இருக்கிறார். நாங்கள் மிகவும் மகிழ்ச்சியான குடும்பமாக இருந்தோம்.” என்று குறிப்பிடுள்ளார்.

மவுண்ட்பேட்டன் இறந்தபின், எட்வினா 1960-இல் இந்தோனேசியாவில் இறந்தபோது, ​​​​அவரது படுக்கை மேஜையில் ஒரு குவியல் கடிதங்கள் காணப்பட்டன - அவை அனைத்தும் ஜவஹர்லால் நேருவிடம் இருந்து வந்தவையாக இருந்தன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

India Jawaharlal Nehru
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment