Advertisment

உக்ரைன் வான் எல்லையை பாதுகாக்கும் ஆயுதம்!

வான்வழியாக உக்ரைனை ரஷ்யா தாக்கி விடாமல் தடுத்துவருவதில் இந்த மேன்பேட்ஸ் முக்கிய பங்காற்றியிருக்கிறது.

author-image
WebDesk
New Update
உக்ரைன் வான் எல்லையை பாதுகாக்கும் ஆயுதம்!

உக்ரைன் மீதான தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது ரஷ்ய ராணுவம். நேட்டோ அமைப்பில் சேராமல் விட்டுவிடுகிறோம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்த போதிலும்கூட போரை நிறுத்தாமல் தொடர்ந்து தாக்குதலை தொடுத்து வருகிறது ரஷ்யா.

Advertisment

சமீபத்தில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி காணொலி காட்சி வழியாக உரை ஆற்றினார்.

அப்போது அவர் எங்களுக்கு உங்கள் உதவி இப்போது தேவை என்று உருக்கமாக கூறினார். இதனைத் தொடர்ந்து 800 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.6ஆயிரம் கோடி) அளிக்க அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார்.

ரஷ்யாவின் தாக்குதலை சமாளிப்பதற்காக அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட நிலத்திலிருந்து வானில் தாக்கி எதிரிகளின் ஏவுகணைகளை அழிக்கும் ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தி வருகிறது.

இந்த அதிநவீன ஏவுகணைகளை அமெரிக்கா அளித்து வருகிறது. அத்துடன், சக்திவாய்ந்த ரஷ்ய ராணுவ டாங்கிகளையும், போர் விமானங்களையும் இடைமறித்து அழிக்கும் ராணுவ உபகரணங்களையும் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு வழங்கி வருகிறது.

இதில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் என்ன? இது எப்படி பயன்படுத்தப்படுகிறது? உக்ரைனுக்கு இதுவரை இந்த ஏவுகணைகள் எப்படி பயன்பட்டன? என்பதை இந்தக் கட்டுரையில் அலசுவோம்.

போர் விமானங்களை இடைமறித்து அழிக்கும் தடுப்பு ஆயுதத்தை ஆங்கிலத்தில் MANPADS என்று அழைக்கிறார்கள்.

MANPADS என்றால் என்ன?

ஆளில்லா விமானங்களான டிரோன்கள், ஆயுதங்கள், 800 ஸ்டிரிங்கர்கள் அதாவது, வீரர்கள் கையில் எடுத்துச் செல்லக் கூடிய வான் பாதுகாப்பு கருவி (MANPADS), சிறிய ரக ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் வல்லமைப் படைத்த கருவிகள் உள்ளிட்டவற்றை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி வருகிறது.

ஏற்கனவே 600க்கும் அதிகமான ஸ்டிரிங்கர்களை உக்ரைனுக்கு அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. உக்ரைன் எல்லையில் உள்ள ஈஸ்டோனியா, லிதுவேனியா, லாத்வியா ஆகிய நாடுகளையும் உக்ரைனுக்கு ஸ்டிரிங்கர்களை வழங்குமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.

ஜெர்மனி, நார்வே, நெதர்லாந்து போன்ற நாடுகளும் இதை அனுப்பியுள்ளன. இது குறிப்பிட்ட உயரத்தில் குறைந்த அளவிலான இலக்கில் எதிரிகளின் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்க உதவும்
ஆயுதம் மேன்பேட்ஸ் ஆகும். ராணுவ வீரர்கள் இந்த ஆயுதத்தை தோள்பட்டையில் எளிதாக வைத்துக் கொண்டு இலக்கை குறிவைத்து தாக்கலாம்.

மேன்பேட்ஸை அமெரிக்கா வடிவமைத்தது. அகச்சிவப்பு கதிர்களை கொண்டு எதிரி ஏவுகணையை இடைமறித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. ஆளில்லா விமானங்கள், போர்விமானங்கள் ஆகியவற்றை இதைப் பயன்படுத்தி வீழ்த்த முடியும்.

ரஷ்யாவின் இக்லா-எஸ் ஏவுகணைகளுடன் இதனை ஒப்பிடலாம். மேன்பேட்ஸ் வான்வழியாக வரும் எதிரி போர் விமானங்களையும், ஆளில்லா விமானங்களையும் தாக்கி அழித்துவிடும்.

தரைவழியாக தாக்குதல் நடத்தவரும் டாங்கிகளையும் கவச வாகனங்களையும் அகச்சிவப்பு கதிர் சென்சார் மூலம் இடைமறித்து அழிக்கும் ஆயுதத்தையும் அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கியுள்ளது.

தோள்பட்டையில் வைத்து பயன்படுத்தும் இலகுரக ஆயுதங்களை உக்ரைனுக்கு இங்கிலாந்து வழங்கியுள்ளது.
ஸ்வீடன் மற்றும் இங்கிலாந்து கூட்டு தயாரிப்பில் இந்த ஆயுதம் உருவானது. அகச்சிவப்பு சென்சார் இல்லை என்றாலும் எடுத்துச் செல்ல எளிதாக இருக்கும்.

மேன்பேட்ஸ் உக்ரைனுக்கு எவ்வாறு உதவியது?
வான்வழியாக உக்ரைனை ரஷ்யா தாக்கி விடாமல் தடுத்துவருவதில் இந்த மேன்பேட்ஸ் முக்கிய பங்காற்றியிருக்கிறது. ரஷ்யாவின் வான்வழித் தாக்குதலின் வீரியத்தை இது குறைத்து விடுகிறது. இதை அதிக எண்ணிக்கையில் வைத்துக் கொண்டு ரஷ்ய ராணுவத்தை வீழ்த்திவிட முடியாது.

இருப்பினும்,ரஷ்யாவுக்கு இழப்பை ஏற்படுத்த முடியும் என்று உக்ரைனின் கிவிவ் நகரில் உள்ள புள்ளியியல் கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறினார். ரஷ்ய ஹெலிகாப்டர்களை வீழ்த்தும் வீடியோ காட்சி கீழே உள்ளது.

சர்வதேச ஊடகச் செய்திகளை பார்க்கும்போது இதுவரை 20 ரஷ்ய போர் விமானங்கள் மேன்பேட்ஸை வைத்து அழிக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது. உக்ரைன் ராணுவம் வெளியிட்ட தகவலின்படி இதுவரை 86 ரஷ்ய போர் விமானங்களும், 108 ஹெலிகாப்டர்களும் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ரஷ்ய ராணுவம் இதுவரை இதுதொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை. செயின் ஜாவ்லின் என்ற டாங்கி அழிப்பு ஆயுதத்தை கொண்டு இதுவரை ரஷ்யாவின் 444 டாங்கிகளை உக்ரைன் அழித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் போரில் செயின் ஜாவ்லின் அதிக பங்காற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேன்பேட்ஸ் போதுமானதாக இருக்கிறதா?

இல்லை என்பதே பதில். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் அதையே தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவிடமும், மேற்கத்திய நாடுகளிடமும் அவர் மேலும் ஆயுதங்களை கோரியிருக்கிறார்.

ரஷ்ய தயாரிப்பான எஸ்-300 ரக ஆயுதங்களை அனுப்ப அமெரிக்கா முயற்சி எடுத்து வருகிறது. ஏனென்றால் இதை உக்ரைன் ராணுவத்தினர் பயன்படுத்துவது எளிதானதாக இருக்கும். மேலும், அதுகுறித்து அவர்கள் ஏற்கனவே அறிந்தும் வைத்திருக்கிறார்கள்.

எம்ஐஜி-29, சு ஜெட் ஃபைட்டர்ஸ் ஆகியவற்றையும் அனுப்புமாறு உக்ரைன் கோரிக்கை விடுத்துள்ளது.
மேன்பேட்ஸ் வரலாறை சுருக்கமாக பார்ப்போம். முதல்முறையாக அமெரிக்கா இதை தயாரித்தது.

1968 ஆம் ஆண்டில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இதன் மேம்படுத்தப்பட்ட வடிவம் 1970 காலகட்டத்தில் வெளியிடப்பட்டது. ஆப்கனில் முஜாஹிதீனிடம் அவை வழங்கப்பட்டது. முஜாஹிதீன் சோவியத் போர் விமானங்களை எதிர்த்து சண்டையிட்டது.

சோவியத்தும் ஸ்டெர்லா மற்றும் இக்லா என்ற மேன்பேட்ஸை தயாரித்தது. அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, ஸ்வீடன், வடகொரியா, போலந்து உள்பட 20 நாடுகள் மேன்பேட்ஸை தயாரிக்கிறது.

எனினும், மேன்பேட்ஸ்கள் அல்-காய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு சட்டவிரோதமாக அனுப்பப்படுவதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்து வருகிறது.

ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேன் மறைவுக்கு பிறகு அந்நாட்டில் இருந்து 4,000 மேன்பேட்ஸ்கள் காணாமல் போனதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம்சாட்டினர்.

உக்ரைன் அகதிகளை ஏன் அமெரிக்கா ஏற்கவில்லை?

பயங்கரவாத அமைப்புகளின் கைகளுக்கு மேன்பேட்ஸ் செல்வது ஆபத்தானது என்று அமெரிக்க எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

-Written by Sonal Gupta

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Explained
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment