திருவள்ளுவர் சர்ச்சைக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் : பா.ஜ., – திமுக இடையே இத்தனை முரண்டு ஏன்?

Thiruvalluvar crisis : தமிழகத்தில் திருவள்ளுவர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அரசியல் நோக்கத்திற்காகவே, பா.ஜ. கட்சி இதை கையில் எடுத்துள்ளதாக திமுக உள்ளிட்ட திராவிட கட்சிகள் விமர்சித்துள்ளன.

By: Updated: November 5, 2019, 04:29:27 PM

தமிழகத்தில் திருவள்ளுவர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அரசியல் நோக்கத்திற்காகவே, பா.ஜ. கட்சி இதை கையில் எடுத்துள்ளதாக திமுக உள்ளிட்ட திராவிட கட்சிகள் விமர்சித்துள்ளன.

சில நாட்களுக்கு முன், தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் தங்களது டுவிட்டர் பக்கத்தில், திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்திருந்ததோடு மட்டுமல்லாது, அவரது நெற்றியில் விபூதி பூசியிருந்த போட்டோவை பதிவிட்டிருந்ததோடு மட்டுமல்லாது, திமுக, திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகளை கடுமையாக சாடியிருந்தது. இந்த நிகழ்வு, அரசியல்வாதிகளிடையே மட்டுமல்லாது, தமிழ் ஆர்வலர்களிடையேயும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள், அரசியல் காரணத்திற்காகவே, திருவள்ளுவரை காவி உடை அணிவித்து அதற்கு மதச்சாய் பூச நினைக்கின்றனர் என்று திமுக உள்ளிட்ட திராவிட கட்சிகள் குற்றம் சுமத்தியிருந்தன.
பா.ஜ. உள்ளிட்ட இந்து அமைப்புகள் மற்றும் திமுக உள்ளிட்ட திராவிட கட்சிகளிடையே, திருவள்ளுவர் குறித்த முரண்பாடு நீடித்து வந்தநிலையில், தஞ்சாவூர் அடுத்த பிள்ளையார்பட்டி பகுதியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மர்மநபர்கள் கறுப்பு உடை அணிவித்ததோடு மட்டுமல்லாது அவரது முகத்தில் மாட்டுச்சாணம் பூசியிருந்த சம்பவம் அங்குமட்டுமல்லாது, தமிழகம் எங்கும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

யார் இந்த திருவள்ளுவர்?

திருவள்ளுவரை, தமிழக மக்கள் வள்ளுவன் / வள்ளுவர் என்று அழைத்து வருகின்றனர். அவர் எழுதிய 1330 குறள்கள், பண்டையகால தமிழக மக்களின் வாழ்க்கை நெறிகளை பறைசாற்றுவதாக உள்ளதால், திருக்குறளில் எடுத்துரைக்கப்பட்ட நெறிகளே, தமிழர்களின் வாழ்வியல் கோட்பாடுகளாக உள்ளது. தமிழகத்தில் திருக்குறள் புத்தகம் இல்லாத வீட்டை, விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்தளவுக்கு தமிழர்களின் வாழ்க்கையோடு இணைந்தது திருக்குறள், அதன் ஆசிரியர் திருவள்ளுவர்…
வட இந்திய மக்களின் வாழ்க்கை நெறியோடு எவ்வாறு பகவத் கீதையும், ராமாயணமும் ஒன்றியுள்ளதோ அதுபோல, தமிழக மக்களின் வாழ்க்கை நெறிகளோடு திருக்குறள் உள்ளது.

தமிழக பா.ஜ.வின் டுவீட்டிற்கு தமிழ் அமைப்புகள், அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது ஏன்?

2017ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் தேசிய கவுன்சில் கூட்டத்தில், சங் பரிவார் உள்ளிட்ட இந்து அமைப்புகள் தங்களது அரசியல் லாபத்திற்காக தமிழ் துறவிகள் மற்றும் பிரபலங்களை பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து அமைப்புகள் காலூன்ற முடியாதநிலை நிலவுவதால், அரசியல் சுயலாபத்திற்காக தமிழ் புலவர்கள், துறவிகள் உள்ளிட்டோர்களை பயன்படுத்திக்கொள்ள ஆர்எஸ்எஸ் திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.
தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் தங்களது டுவிட்டர் பக்கத்தில், திருவள்ளுவருக்கு வெள்ளை உடைக்கு பதிலாக, காவி உடையை அணிவித்துள்ளனர்.

திருவள்ளுவர், சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர். அவர் மீது இந்து மத சாயம் பூச பாரதிய ஜனதா திட்டமிடுவதாக திமுக கட்சி கூறியுள்ளது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பா.ஜ. கூறியுள்ளதாவது, திருவள்ளுவர் இந்து துறவி, அவரது இந்த்துத்துவ அடையாளங்களை திராவிட கட்சிகள் சமீபகாலமாக திட்டமிட்டே அழித்து வருவதாக தெரிவித்துள்ளது.

கி.மு 5ம் நூற்றாண்டு அல்லது அதற்கு முன்பாக வாழ்ந்தவர் திருவள்ளுவர். இப்போது ஏன் அவர் முக்கியத்துவம் பெறுகிறார்?

மதுரையை அடுத்த கீழடி பகுதியில் நடைபெற்ற அகழாய்வில் கிடைத்த ஆவணங்கள், பொருட்களின் படி, தமிழ் நாகரிகம், மொழி, பண்பாடு உள்ளிட்டவைகள் குறைந்தது 300 ஆண்டுகளுக்கும் மேலாக அதாவது கி.மு 300 முதல் 600 ஆண்டுகளுக்கு முந்தையவை என்பது தெரியவந்துள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தங்களுடையதே தொன்மையான மொழி, பண்பாடு என்று கூறிவரும் திராவிட கட்சி மற்றும் அமைப்புகளுக்கு இந்த அகழாய்வின் முடிவுகள் சாதகமாக அமைந்துள்ளன.
இந்நிலையில் தான், திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டு பரபரப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கீழடி அகழாய்வு முடிவுகள், இந்துத்துவா ஆதரவாளர்களுக்கும், திராவிட கருத்து கொண்டவர்களுக்கும் இடையே கருத்து மோதலை, சமூகவலைதளங்களில் உருவாக்கியுள்ளன.
கீழடி அகழாய்வில், இந்து மதத்துக்கான அடையாளங்கள், இந்து கடவுளின் சிலைகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்று திராவிட ஆர்வலர்கள் கருத்தை எழுப்ப, இந்து மதத்திற்கான ஆதாரங்கள் கீழடி ஆய்வில் கிடைத்துள்ளதாக இந்துத்துவா ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Thiruvalluvar why is an ancient tamil saint at the centre of a bjp dmk slugfest

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X