எத்தியோப்பியாவில் புதிய “பஞ்சம்” ஏற்பட காரணம் என்ன?

இது தற்போதைய இராணுவ மோதலில் வேரூன்றிய பல காரணிகளின் விளைவாகும். எத்தியோப்பியாவின் பிரதமர் அபீ அகமதுவுக்கு ஆதரவாக மோதலில் இணைந்த எரித்திரிய படைகள், சொத்துக்களை அழித்து பயிர்களை எரித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளன.

இது தற்போதைய இராணுவ மோதலில் வேரூன்றிய பல காரணிகளின் விளைவாகும். எத்தியோப்பியாவின் பிரதமர் அபீ அகமதுவுக்கு ஆதரவாக மோதலில் இணைந்த எரித்திரிய படைகள், சொத்துக்களை அழித்து பயிர்களை எரித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளன.

author-image
WebDesk
New Update
Tigray crisis: A new ‘famine’ in Ethiopia

Neha Banka

Tigray crisis: A new ‘famine’ in Ethiopia : கடந்த ஆண்டு எத்தியோப்பிய மத்திய அரசுக்கும் நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்திருக்கும் திக்ரே பிராந்தியத்தின் ஆளும் கட்சிக்கும் இடையே ஆரம்பித்த மோதலானது தற்போது மிகப்பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. தற்போது திக்ரேவில் ஆயிரக்கணக்கானோர் பஞ்சத்தை எதிர்க் கொள்ளும் நிலையில் உள்ளனர் என்று ஐ.நா அறிவித்துள்ளது.

திக்ரேவில் நெருக்கடி

Advertisment

திக்ரே உள்ளூர் நிர்வாகிகள், 2.2 மில்லியன் மக்கள் சண்டையால் இடம் பெயர்ந்ததாகவும் பலர் அண்டை நாடுகளுக்கு தப்பிச் செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர் என்றும் நவம்பர் மாதம் ராய்ட்டர்ஸிடம் உள்ளூர் நிர்வாகிகள் கூறினார்கள். இந்த எண்ணிக்கையை அந்நாட்டு அரசு மறுத்தாலும் சுதந்திரமாக செயல்படும் அப்செர்வர்கள் இந்த எண்ணிக்கை அதிகமானது தான் என்று ஒப்புக் கொண்டனர்.

இப்பகுதியில் பெண்கள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏப்ரல் மாதத்தில், ஐ.நா. செய்தி நிறுவனங்கள் மற்றும் சுயாதீன பார்வையாளர்களின் விசாரணையில் பாலியல் வன்முறை போரின் ஆயுதமாக பயன்படுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது.

இந்த வாரம் ஐநாவின் அவசர நிவாரண ஒருங்கிணைப்பாளர் மார்க் லோகாக் தற்போது இப்பகுதியில் மக்கள் பரவலான பஞ்சத்தை காண்கின்றனர் என்று கூறினார். ஒருங்கிணைந்த உணவு பாதுகாப்பு சட்ட வகைபாடு பகுப்பாய்வின் Integrated Food Security Phase Classification (IPC) புதிய அறிக்கை வியாழக்கிழமை வெளியான பிறகு பஞ்சம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து மற்றும் வாழ்வாதாரத் தகவல்களை ஒருங்கிணைத்தல் ஒரு நெருக்கடியின் தன்மை மற்றும் தீவிரம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஐ.பி.சி. அலகானது ஐநாவால் உருவாக்கப்பட்டது.

பஞ்சத்தின் நிலைமை

Advertisment
Advertisements

திக்ரேவில், ஐ.பி.சி. பகுப்பாய்வு அடிப்படையில் ஐந்தாம் நிலை பஞ்சத்தை மக்கள் எதிர்கொண்டுள்ளனர். ஒரு பேரழிவு எச்சரிக்கையுடன் தொடங்கி ஒரு பிராந்தியத்தில் பஞ்ச அறிவிப்புக்கு உயர்கிறது என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. 60 லட்சம் மக்கள் தொகை கொண்ட திக்ரேவில் தோராயமாக 3, 50,000 நபர்கள் வறுமையை எதிர்கொள்கின்றனர். இது தற்போதைய இராணுவ மோதலில் வேரூன்றிய பல காரணிகளின் விளைவாகும். எத்தியோப்பியாவின் பிரதமர் அபீ அகமதுவுக்கு ஆதரவாக மோதலில் இணைந்த எரித்திரிய படைகள், சொத்துக்களை அழித்து பயிர்களை எரித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளன.

ராய்ட்டர்ஸ் இதழுக்கு பேட்டி அளித்த லோகாக், எரித்திரிய படைகள், திக்ரயன் மக்களிடையே உணவு பஞ்சத்தை ஏற்படுத்த முனைகின்றனர். 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு தேவையான உணவு பொருட்களை அனுப்பவிடாமல் அவர்கள் தடுத்து நிறுத்துகின்றனர். உணவு இங்கு போர் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது என்றார்.

இந்த புகார்களை அரசு மறுத்துள்ளது. உணவு பற்றாக்குறை அவ்வளவு மோசமாக இல்லை என்று கூறியுள்ளது. வரலாற்றில் 1984 மற்றும் 85 ஆண்டுகளில் ஏற்பட்ட எத்தியோப்பிய பஞ்சங்களை இதனுடன் ஒப்பீடு செய்வது தவறானது. அப்படியான சூழல் நிலவாது என்று அரசாங்கத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

திக்ரே மக்களுக்கு உணவு வழங்குகிறோம் என்று அந்நாட்டு அரசு கூறுகிறது. ஆனாலும், பி.பி.சி. ரேஷன்கள் வழங்கப்பட்ட இடங்களில் கூட, அளவு போதுமானதாக இல்லை என்று பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது. எரித்திரிய துருப்புக்கள் உட்பட படையினர் பலர் உணவுகளை திருடியதாகவும் அறிக்கைகள் வெளியாகியுள்ளன.

ஃபிளெட்சர் ஸ்கூல் ஆஃப் லா மற்றும் டிப்ளமசியின் அலெக்ஸ் டி வால் ஒரு பிபிசி பகுப்பாய்வில் அண்டை நாடுகளான அம்ஹாரா மற்றும் அஃபாரில் உணவுப் பாதுகாப்பு வேகமாக மோசமடைந்து வருகிறது, ஏனெனில் போரின் சிற்றலைகள் மற்றும் நாடு தழுவிய அளவில் பொருளாதார பொருளாதார நெருக்கடி ஆகியவை வாழ்வாதாரங்களை சீர்குலைத்து வருகின்றன. சூடானில் உணவுத் தேவைகள் அதிகரிப்பது பற்றிய எச்சரிக்கைகளும் உள்ளன என்று எழுதியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: