இந்தியாவில் டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு தடை - எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும்?
Tiktok ban : இந்தியாவில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டிருப்பது இது ஒன்றும் முதன்முறையல்ல. கடந்தாண்டு சென்னை உயர்நீதிமன்றம், இந்த செயலிக்கு தடைவிதித்திருந்தது. பின் சில நிபந்தனைகளுடன் மீண்டும் செயலி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது
Tiktok ban : இந்தியாவில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டிருப்பது இது ஒன்றும் முதன்முறையல்ல. கடந்தாண்டு சென்னை உயர்நீதிமன்றம், இந்த செயலிக்கு தடைவிதித்திருந்தது. பின் சில நிபந்தனைகளுடன் மீண்டும் செயலி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது
Tiktok, tiktok ban , Indian governmen, tchinese app ban, tiktok, tiktok app ban, tiktok app ban in india, tiktok app banned india, tiktok app ban india, share it, chinese app ban in india, chinese app bans in india, chinese app ban india, chinese app ban news
Nandagopal Rajan
Advertisment
இந்தியாவில் டிக்டாக், யுசி பிரவுசர், ஷேர்இட், கேம் ஸ்கேனர் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு, மத்திய அரசு, அதிரடி தடைவிதித்துள்ளது. இந்த தடையுத்தரவு, இளைய தலைமுறையினரிடையே பெரும்தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எந்த சட்டத்தின் அடிப்படையில் இந்த தடை?
2000ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப சட்டம் 69வது பிரிவின் கீழ், மத்திய அரசு, சீன செயலிகளுக்கு எதிராக இந்த தடையை பிறப்பித்துள்ளது. இந்த தடையின் மூலம், ஒரு பயனாளரின் தகவல்களை அவரது அனுமதியின்றி பெறும் உரிமை தடுக்கப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒற்றுமையை காக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு, மாநிலங்களின் பாதுகாப்பு, அந்நிய நாடுகளுடனான உறவு உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு இந்த தடை பிறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பொதுமக்கள் இந்த செயலிகளை விதிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால், பயனாளர்களின் தகவல்கள், இந்த செயலிகளின் சர்வர்களில் சேகரமாவது தடுக்கப்படுவதுடன், மற்ற நாடுகளுக்கு இந்த தகவல்கள் சென்று சேர்வது தடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் டிக்டாக் போன்ற செயலிகளின் பயன்பாடு மிக அதிகளவில் உள்ளது. இந்த செயலிகளை பயன்படுத்தும் நபர்களின் அனைத்து தகவல்களும், இந்த செயலிகள் சார்ந்த சர்வர்களில் சேகரம் ஆவதாகவும், இதனால், மக்களின் பிரைவசி பாதிக்கப்படுவதாக மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு புகார்கள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. இந்த செயலிகளின் சர்வர்கள், வெளிநாடுகளில் இருப்பதால், நாட்டின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக இவை விளங்கிவந்ததாலேயே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை எவ்வாறு அமல்படுத்தப்படும்?
டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளை பயன்படுத்தி வருபவர்களுக்கு, இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்களிடமிருந்து விரைவில் அறிவிப்பு வரும். அரசின் தடையால், இந்த செயலிகளின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். இருந்தபோதிலும் டிக்டாக், யுசி நியூஸ் உள்ளிட்ட சேவைகளை பெற்றிருப்பவர்கள், இன்டர்நெட் வசதி இல்லாமலேயே இந்த சேவைகளை தொடர்ந்து பெற்றுவரலாம். ஆனால், இதன் அப்டேட்கள், கேம் ஸ்கேனர் உள்ளிட்ட செயலிகள், கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் ஸ்டோரிலிருந்து டவுன்லோடு செய்ய முடியாதபடி இருக்கும்.
இந்த தடையினால் என்ன பாதிப்பு நிகழும்?
மத்திய அரசால் தடை செய்யப்பட்ட செயலிகளின் பட்டியலில், இந்தியாவில் அதிகமாக பிரபலமடைந்த டிக்டாக் செயலியும் இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் 100 மில்லியனுக்கு அதிகமானோர் டிக்டாக் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல், ஹலோ, லைக்கி, வீடியோ சாட் செயலியான பிகோ லைவ் உள்ளிட்ட செயலிகள், இந்தியாவிலும் பெரும்பாலானோரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
டிக்டாக் உள்ளிட்ட செயலிகளால் தங்களது தனித்திறமையின் மூலம் பலர் அதை வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். தனிநபர் மட்டுமல்லாது, பெரும்பாலான அலுவலகங்களிலும் இந்த செயலிகளின் பயன்பாடு குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது. தற்போதைய இந்த தடையால், பலரின் வருமானம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த தடை நிரந்தரமானதா?
இந்தியாவில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டிருப்பது இது ஒன்றும் முதன்முறையல்ல. கடந்தாண்டு சென்னை உயர்நீதிமன்றம், இந்த செயலிக்கு தடைவிதித்திருந்தது. பின் சில நிபந்தனைகளுடன் மீண்டும் செயலி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், நாட்டின் பாதுகாப்பு கருதி தற்போது மத்திய அரசு எடுத்திருக்கும் இந்த நடவடிக்கை, சீனாவிற்கு பெரும் எச்சரிக்கையாக அமையும். இந்தியாவின் இந்த தடையால், இந்தியாவில் சீனாவின் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாது. இதன் தாக்கம் சீனாவிலும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil