தேசிய தலைவரா? சுதந்திர போராட்ட வீரரா? சர்வாதிகாரியா? யார் இந்த திப்புசுல்தான்?

ஹைதர் மற்றும் திப்புவின் கனவான தென்கேரளாவிலுள்ள திருவிதாங்கூர் சமஸ்தானத்தை கைப்பற்றும் கனவு நிறைவேறவில்லை.

VISHNU VARMA

திப்புசுல்தான் இந்திய வரலாற்றின் ஒரு அங்கம் என்பது நமக்கு தெரியும். ஆனால் அவர் தேசிய தலைவரா? சுதந்திர போரட்ட வீரரா? சர்வாதிகாரியா என்ற பன்முககோண அலசலுக்கு வித்திட்டுள்ளது. கர்நாடக பாரதிய ஜனதா அரசு. அவரைப் பற்றிய பாடங்களை வரலாற்று புத்தகங்களிலிருந்தே நீக்கியுள்ளது. கேரளா – கர்நாடக மாநில வட – தென் எல்லைப்பகுதியை உள்ளடக்கிய மலபார் பகுதி முஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதியாகும். அப்பகுதியைச் சேர்ந்தவர்தான் திப்புசுல்தான்.

“திப்பு” என்பது பன்முகத்தன்மை கொண்டவர் என்பது பொருள். “சுல்தான்” என்பது மன்னன் என்று பொருள். தற்போது இந்திய வரலாற்றில் கேரளாவை யொட்டியுள்ள மைசூர் பகுதியை தனது போரின் மூலம் கைப்பற்றி மைசூர் மகாணத்தை ஆண்டவர் திப்பு சுல்தான் என்பது வரலாறு. தற்போது கர்நாடக பாரதிய ஜனதா அரசின் இந்த நடவடிக்கை (அவரது வரலாற்றைக் நீக்கியது) அவரைப்பற்றிய வரலாற்றை வருங்கால தலைமுறையினர் அறிந்து கொள்ளாவண்ணம் இருட்டடிப்பு செய்வதுதான்.

ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கம்பெனிக்கு சவால்விடும் வகையில் ஆட்சி செய்தவர். ஆங்கிலேருக்கு எதிரான மைசூர் போரில் உயர்ந்தவர். ஆனால் போரினால் கேரளாவில் உள்ள மலபார் பகுதிகளையும், கர்நாடகாவில் உள்ள குடகு பகுதியையும் தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தவர். ஆனால் அவரது ஆட்சியின் கீழ் மாற்றுமதத்தினரையும் கையகப்படுத்திய பகுதியை சேர்ந்த மக்களையும் அவரது இராணுவத்தினர் நடத்திய விதம் சர்ச்சையை ஏற்படுத்தியது. திப்புவின் ராணுவ வீரர்கள் மாற்று மதத்தினரை அவர் நடத்திய விதத்தையும் மதம் சார்ந்த தவறான கண்ணோட்டமாக கருதப்படுகிறது.

கர்நாடக அரசின் முடிவான திப்புசுல்தான் வரலாறு பற்றிய பாடங்கள் பள்ளிப்புத்தகங்களிலிருந்து நீக்கப்பட்ட விதம் பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே சர்ச்சையை ஏற்ப்படுத்தி வருகிறது. 2013ல் கர்நாடகாவில் பதவியேற்ற காங்கிரஸ் அரசு திப்பு சுல்தானின் பிறந்த நாளை “திப்பு ஜெயந்தி” என்று அரசு விழாவாக கொண்டாடியது. திப்பு சுல்தானை சுதந்திர போரட்ட வீரர் என்றே கர்நாடகாவில் முந்தைய காங்கிரஸ் அரசு அறிவித்து விழா எடுத்தது. இந்நிலையில் வரலாற்றில் திப்புசுல்தானை எவ்வாறு ஒப்பிடுவது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

கேரளாவில் உள்ள மலபார் பகுதியில் உள்ள பெரும்பான்மை மக்களின் கருத்து திப்பு சுல்தானுக்கு எதிராகவே உள்ளது. அப்போது கேரளாவில் துறைமுகங்கள் மூலமாக ஏலக்காய், கிராம்பு மற்றும் மிளகு ஏற்றுமதியும் மரங்கள் ஏற்றுமதியும் சிறப்பாக நடந்து வந்தது. இது மைசூர் மன்னனால் கண்காணிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 1766ம் ஆண்டு திப்புவின் தந்தையான ஹைதர் அலி தனது படையுடன் மலபார் பகுதிக்கு சென்று கண்ணனுரைச் சேர்ந்த முஸ்லிம் மன்னரிடம், அவரது ஆளுமைக்கு அடுத்துள்ள பகுதியை சேர்ந்த மன்னனான கொலித்ரி மன்னரை வீழத்தி கோழிக் கோடு சமஸ்தானத்தை கைப்பற்ற உதவுதாக உறுதியளித்தான். மலபார் பகுதியில் குறுநில மன்னர்கள் பிரிந்திருந்த வேளையில் மைசூர் மன்னன் மலபார் பகுதியை படையெடுத்து வென்றான்.

இதனால் கொச்சி சமஸ்தானமும் மைசூர் மன்னனின் கீழ் வந்தது. இருப்பினும் ஹைதர் மற்றும் திப்புவின் கனவான தென்கேரளாவிலுள்ள திருவிதாங்கூர் சமஸ்தானத்தை கைப்பற்றும் கனவு நிறைவேறவில்லை. கேரளாவை சேர்ந்த வரலாற்று நிபுணர் எம்.ஜி.எஸ். நாராயணன் “திப்பு தனது ஆளுமையின் கீழ் பல சமஸ்தானங்களை கொண்டு வரவேண்டுமென்ற தீராத வேட்கை கொண்டவர்”. அதிகாரத்திற்காகவே தனது ஆளுமையின் கீழ் பல்வேறு தென் பகுதிகளை கொண்டு வந்த பிறகு மாற்று மதத்தினரையும் தனது கருத்துக்கு உட்பட செய்தார், உன்றே குறிப்பிடுகிறார். குறிப்பாக மேல் ஜாதி இந்துக்களின் கலாச்சார நடைமுறைகளுக்கு மதிப்பளிக்காமல் புறந்தள்ளியதாகவும்;, இது போன்ற அடக்கு முறைகள் இந்திய, பிரிட்டீஷ் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திப்பு போர் திறனில் வலிமைமிக்கராகவும் சிறந்த நிர்வாக திறன் படைத்திருந்தாலும் அவரை தேசிய தலைவராகவோ அல்லது சுதந்திர போரட்ட வீரராகவோ கருத இயலாது என்கின்றனர் வரலாற்று ஆசிரியர்கள் கோவில்களை கொள்ளையடிப்பதையும், தடுத்தவர்களை கொலை செய்து அவரும் அவரது படையினர் வென்றவிதம் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்திருக்கிறது. அத்துடன் இந்து பெண்களை கற்பழித்த செயல்பாடுகளும் அவரை சிறுமைப்படுத்தியுள்ளது என்கிறார் வரலாற்று ஆய்வாளர் சசிபூஷண். அதே நேரத்தில் தனது ராணுவத்தில் கேரளா உயர் சாதி இந்துக்களையும் முக்கிய பொறுப்பில் நியமித்தார் திப்பு. அவரது ஆட்சியின் விரைவான சமூக, பொருளாதார மேம்பாடு ஏற்பட்டது.

சாதிய கட்டமைப்புக்களையும் தாண்டி நிலசீர்திருத்தம் கொண்டு வரப்பட்டது. மலபார் பகுதியில் உயர் சாதி மக்களான நம்பூதிரிகள் மற்றும் நாயர்களின் ஆட்சியில் இருந்த பெரும்பாலான நிலங்கள் நிலமில்லாத சமுதாய மக்களுக்கு மாறின. ஹைதர் அலி காலத்தில் தான் முதன் முதலாக நில சர்வே நடைபெற்றது. நிலவரி கட்டாயமாக்கப்பட்டதால் நிலச்சுவான்தார்கள் திப்பு சுல்தான் மீது அதிருப்படைந்தனர் என்று வரலாற்று போராசிரியர் முனிபூர் ரஹ்மான் தொவிக்கிறார். திருவனந்தபுரத்திலுள்ள கல்வி மையத்தின் வரலாற்று ஆராய்ச்சியாளர் தேவிகா திப்பு மலபார் பகுதியிலுள்ள ஏழை முஸ்லிம்களை மட்டும் தான் திப்பு அதிகாரம் படைத்தவர்களாக மாற்றினார் என்று குறிப்பிடுகிறார்.

அவர்களுக்கு நிலமானியங்களை அள்ளி வழங்கினார் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் வரலாற்று ஆய்வாளர் திப்புவை வரையறை செய்ய இயலாது. அவரது காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளுக்கேற்ப அவர் தன்னை மாற்றிக் கொண்டுள்ளார் என்று குறிப்பிடுகிறார். இத்தகைய வரலாற்று ஆளுமை கொண்ட திப்புவின் மீதான நிகழ்வுகள், நிழல்களாக நம் கண்முன் தோன்றுகின்றன. வரலாற்று ஆராயச்சியாளர்கள் பிரிவினைவாதிகள் அல்ல ஆனால் வரலாற்று நிகழ்வுகளை தங்களது குறுகிய லட்சியங்களுக்கான பயன்படுத்துபவர்கள் தான் பிரிவினைவாதிகள். மன்னர் என்பவர் கூட்டு ஆளுமை குணாதிசயங்களை கொண்டவர். அவரது ஆட்சியின் முடிவுகள் அப்போதைய சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு அமையும் ஆனால் நம்மில் பலர் வரலாற்று ஆளுமைகளுக்கு பல்வேறு வகையில் வண்ணங்களை தீட்டி வருகிறோம். திப்புசுல்தான் தேசிய தலைவரா? சுதந்திரா போராட்ட வீரரா? சர்வாதிகாரியா? என்று விவாதிப்பதைவிட அவர் ஒரு சூழலுக்கு ஏற்றவாறு செயல்பட்டார் என்பதையும் மறுக்க முடியாது.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

தமிழாக்கம் : த.வளவன்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close