Total lunar eclipse and supermoon – the two celestial events coinciding on May 26 : புவிக்கு மிக அருகில், பௌர்ணமி நிலவு பயணிப்பதை நாம் சூப்பர் மூன் என்று வரையறுக்கின்றோம். இன்று இந்த வானியல் நிகழ்வு இடம் பெருகிறது. இந்த ஆண்டின் மிகப்பெரிய சூப்பர் மூன் நிகழ்வு என்றும் கூறப்படுகிறது.
இன்று நடைபெறும் இந்நிகழ்வு, இந்த ஆண்டின் ஒரே ஒரு சந்திரகிரகண நிகழ்வோடு சேர்ந்து நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 2019ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு இந்த நிகழ்வு நடைபெறுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் இது போன்று சந்திர கிரகணமும், சூப்பர் மூன் நிகழ்வும் ஒரே நேரத்தில் தற்போது நிகழ்கிறது.
சூப்பர் மூன் என்றால் என்ன?
முழு நிலவானது, அதன் சுற்றுவட்டப்பாதையில் பூமிக்கு மிக அருகில் பயணிக்கும் நிகழ்வை சூப்பர் மூன் என்று வரையறுக்கிறது நாசா. சந்திரன் பூமியைச் சுற்றிவருகையில், இரண்டுக்கும் இடையேயான தூரம் மிகக் குறைவாக இருக்கும்போது , பூமியிலிருந்து சராசரி தூரம் 360,000 கி.மீ தொலைவில் இருக்கும்போது பெரிஜீ என்று அழைக்கப்படுகிறது. தூரம் மிக அதிகமாக இருப்பதை, அதாவது பூமியிலிருந்து 405,000 கி.மீ தூரத்தில் இருக்கும்போது அப்போஜீ என்று அழைக்கப்படுகிறது.
பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரம் மிகக் குறைவாக இருக்கும்போது ஒரு முழு நிலவு தோன்றும் போது, அது பிரகாசமாகத் தோன்றுவது மட்டுமல்லாமல், வழக்கமான பௌர்ணமி நிலவைக் காட்டிலும் பெரிய அளவில் அது தோன்றும். சூப்பர்மூன் என்ற பதத்தை வானிலை ஆராய்ச்சியாளர் ரிச்சர் நோல்லே 1979ம் ஆண்டு கண்டறிந்தார் என்று நாசா கூறுகிறது. ஒரு பொதுவான ஆண்டில், ஒரு வரிசையில் இரண்டு முதல் நான்கு முழு சூப்பர்மூன் நிகழ்வுகள் ஏற்படலாம். சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு ஏப்ரல் 26 அன்று பௌர்ணமி நிலவு இருந்தது. ஆனால் சூப்பர் மூன் நிகழ்வு இன்று தான் நடைபெறுகிறது. 0.04 சதவீத வித்தியாசத்தில் பூமிக்கு நெருக்கமாக இருக்கும்.
மே 26ம் தேதி அன்று என்ன நிகழ உள்ளது?
மே 26ம் ஆண்டு இரண்டு வானிலை நிகழ்வுகள் ஒரே நேரத்தில் நடைபெற உள்ளது. ஒன்று சூப்பர் மூன் மற்றொன்று சந்திர கிரகணம். சந்திர கிரகணம் நிகழ்வு சந்திரனும், சூரியனும் பூமிக்கு நேர் எதிரே பயணிக்கும் போது உருவாகிறது. சந்திர கிரகணத்தின் காரணமாக நிலா சிவப்பு நிறத்தில் இன்று காட்சியளிக்கும். ஏன் என்றால் சூரியனில் இருந்து சந்திரனுக்கு கிடைக்கும் ஒளியை பூமி மறைக்கும். மேலும் பூமியின் வளிமண்டலம் ஒளியை வடிகட்டும்போது, கிரகத்தின் நிழலின் விளிம்பை மென்மையாக்கும். மேலும் சந்திரனுக்கு ஆழமான பிரகாசத்தைக் கொடுக்கும்.
புதன்கிழமை காலை, சந்திரன் பூமியின் எதிர் பக்கத்தில் அமைந்திருக்கும், மேலும் காலை 6:13 மணிக்கு (CDT) முழுமையான பிரகாசத்தில் ஒளிரும். இந்திய நேரப்படி இது மாலை 4 மணிக்கு நிகழ்வும். உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்த நிகழ்வை வானம் தெளிவாக இருந்தால் இரவு முழுவதும் காண முடியும். ஆனால் சந்திரகிரகண நிகழ்வை இந்தியா, நேபாளம், மேற்கு சீனா, மங்கோலியா மற்றும் கிழக்கு ரஷ்யாவில் வாழும் மக்கள் மட்டுமே காண முடியும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil