ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையே 272 கி.மீ தூரம் இந்தாண்டு இறுதி டிசம்பர்(2023) அல்லது ஜனவரி, பிப்ரவரியில் மாதத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கடந்த மாதம் தெரிவித்தார். இது யூனியன் பிரதேசத்தில் போக்குவரத்து சேவையில் புரட்சியை ஏற்படுத்தும் என்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கை முன்பை விட இந்தியாவின் பிற பகுதிகளுடன் நெருக்கமாக இணைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையே 272 கி.மீ தூரம் உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் பாதையில் (USBRL) பணிகள் முடிவடைந்த பிறகு, ரயில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
திட்டத்தின் வரலாறு
ஜம்மு- காஷ்மீர் மலை பகுதிகளில் இருப்பதால் அங்கு போக்குவரத்து சேவை மிகக் குறைவாகவே உள்ளது. இதை எளிதுபடுத்த பல்வேறு திட்டங்கள் செய்யப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரயில் பாதையானது பள்ளத்தாக்கில் உள்ள ஸ்ரீநகர் மற்றும் பாரமுல்லா பாதை வழியாக நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும். மேலும் நிலச்சரிவுகளால் அடிக்கடி மூடப்படும் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலைக்கு மத்தியில் இது அனைத்து வகையான கால சூழ்நிலையிலும் பயன்படும்படி மேற்கொள்ளப்படுகிறது.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் முதல் ரயில் பாதை 1897 ஆம் ஆண்டில் ஜம்மு மற்றும் சியால்கோட் இடையே 40-45 கிமீ தூரத்தில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. அதன்பின் ரயில் சேவைகள் ஆங்காங்கே மேற்கொள்ளப்பட்டது. 2002-க்குப் பிறகு, பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஜம்மு- காஷ்மீரில் ரயில் சேவைகள் மிகவும் சவாலான பணிகளில் ஒன்றாக இருப்பதால், இது ஒரு தேசிய திட்டமாக அறிவித்தார். அந்தவகையில் தற்போது திட்டச் செலவு 35,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
சவால்கள் மற்றும் புதுமைகள்
புவியியல் ரீதியாக நிலையற்ற ஷிவாலிக் மலைகள் மற்றும் பிர் பஞ்சால் மலைகள் நில அதிர்வு மிகுந்த மண்டலங்களான IV மற்றும் V-ல் அமைந்துள்ளன. நிலப்பரப்பு கடினமானது மற்றும் குளிர்காலத்தில் கடுமையான பனியைக் காண்கிறது. இதானல் அங்கு பாலங்கள் மற்றும் சுரங்கங்கள் அமைப்பதில் கடுமையான சவால் ஏற்பட்டுள்ளது.

சுரங்கப்பாதை மற்றும் 320 பாலங்கள் உட்பட 205 கிமீக்கும் அதிகமான வாகனச் சாலைகள் ரூ. 2,000 கோடி செலவில் அங்கு கட்டப்பட்டுள்ளன. கனரக இயந்திரங்கள், கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்வதற்கு ஏற்ப கட்டப்பட்டுள்ளது. நிலையற்ற மலைப்பாங்கான நிலப்பரப்பில் மிகவும் சிக்கலான சுரங்கங்கள் மற்றும் பெரிய பாலங்கள் அமைப்பதில் உள்ள சவால்களைக் கருத்தில் கொண்டு, ரயில்வே பொறியாளர்கள் அதற்கு ஏற்றவாறு சுரங்கப்பாதை முறையை (HTM) உருவாக்கினர். இதில் வழக்கமான D- வடிவ சுரங்கங்களுக்கு பதிலாக குதிரைவாலி வடிவ சுரங்கங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த முறையில், தளம் ஒரு வளைவில் கீழே வரும், அதன் மேலே உள்ள மண் தளர்வாக இருக்கும் வகையில் கட்டமைக்கப்படுகிறது. இது சாலைக்கு வலிமை அளிக்கிறது.
பாதுகாப்பு
அகல ரயில் பாதையில் 0.5-1 சதவீதம் சாய்வு பாதை இருக்கம். மலைப் பகுதியில் வங்கி இயந்திரங்களின் தேவையைத் தவிர்க்கும். ரயில்கள் தற்போதைக்கு டீசல் இன்ஜின்களால் இயக்கப்படும், ஆனால் எதிர்காலத்தில் மின்மயமாக்குவதற்கான ஏற்பாடு உள்ளது. பயணத்தின் முழு நீளத்திற்கும் ரயில்கள் மணிக்கு 100 கிமீ வேகத்தில் இயக்க முடியும்.

அனைத்து முக்கிய பாலங்கள், சுரங்கப்பாதைகள் மற்றும் ரயில் நிலையங்கள் விளக்குகள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் கொண்டிருக்கும். பாதை மற்றும் சுரங்கப்பாதைகள் முடிந்தவரை சிறிய பராமரிப்பு தேவைப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
நன்மைகள் என்ன?
புதிய வந்தே பாரத் ரயிலால் பயண நேரம் 3 முதல் 3.30 மணி நேரமாக குறையும். ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு இடையே தற்போது சாலை வழியாக சென்றால் 6 மணி நேரம் ஆகும். இது புதிய ரயிலால் 3 முதல் 3.30 மணி நேரமாக குறையும். ரயில்வே அமைச்சர் வைஷ்னாவின் கூற்றுப்படி, வந்தே பாரத் ரயில்கள் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு மக்களை ஏற்றிச் செல்லும். மீண்டும் அங்கிருந்து அன்று மாலையே திரும்பலாம் என்றார்.
ஆப்பிள், உலர் பழங்கள், பாஷ்மினா சால்வைகள், கைவினைப் பொருட்கள் போன்ற பொருட்களை, நாட்டின் பிற பகுதிகளுக்கு மிகக் குறைந்த நேரத்திலும், குறைந்த செலவிலும் சிரமமில்லாமல் கொண்டு செல்வதன் மூலம் காஷ்மீர் மக்களுக்கு இந்த ரயில் பயனளிக்கும். நாட்டின் பிற இடங்களில் இருந்து காஷ்மீருக்கு அன்றாட விற்பனை பொருட்கள் கொண்டு செல்வதற்கான செலவும் கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பனிஹால் மற்றும் பாரமுல்லா இடையே நான்கு சரக்கு முனையங்கள் கட்டப்படும். இதற்கு இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“