Advertisment

Explained : பூடான் சுற்றுலாவுக்கு இனி அதிக செலவு ஏன் ?

ஊதியக்குழு அறிக்கையைத் தாண்டி, பூடான் சுற்றுலா கவுன்சிலும் இதுபோன்ற ஒரு மனநிலையில் இருந்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
bhutan, bhutan tourism, bhutan new Tourist Policy , bhutan travel costs

பூடானுக்கு செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகள் வரும் காலங்களில் 'நிலையான அபிவிருத்தி கட்டணம்' (சஸ்டெயினபில் டெவலப்மென்ட் பீ) 'பெர்மிட் ப்ராசஸிங் கட்டணம்' என இரண்டு வகையான கட்டணங்களை செலுத்த் வேண்டியிருக்கும். தனது, புதிய வரைவு சுற்றுலா கொள்கையில் இதைப் பற்றி குறிப்பிட்டுள்ளது அந்நாட்டு அரசு.

Advertisment

இந்த சுற்றுலா கொள்கை குறித்து கடந்த நாட்களில், பூடானின் வெளியுறவு மந்திரி, இந்தியா  வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் விவாதித்தாக, பெயர் சொல்லாத வட்டாரங்கள் தெரிவித்ததாக தி இந்து நாளிதழ் செய்தியும் வெளியிட்டிருந்தது.

பெடஸ்டிரியன் ப்ளாசா எப்படி இருக்கு? சென்னைவாசிகளின் கருத்து?

தற்போதுவரை இருக்கும் நடைமுறை:  

தற்போதைய நிலவரப்படி, பூடானில் சுற்றுலா வரும் இந்தியர்கள், பங்களாதேஷியர்கள், மாலத்தீவர்களை விடுத்து அனைத்து சுற்றுலா பயனர்களும் சுற்றுலா பருவ காலங்களில் ஒரு நாளைக்கு ஒரு நபர் கட்டணமாக 250 அமெரிக்க டாலரையும், சுற்றுலா பருவம் இல்லாத காலங்களில் ஒரு நாளைக்கு ஒரு நபர் கட்டணமாக 200 அமெரிக்க டாலரையும் செலுத்த வேண்டும்.

டிசம்பர் முதல் பிப்ரவரி வரை குளிர்காலமும் , ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான மழை பருவக் காலத்திலும் பூடானில் சுற்றுலா பருவம் இல்லாததாக கருதப்படும்.

இந்த ஒரு நாள் கட்டண பேக்கேஜ் மூலமாக பயனர்கள்  தங்குமிடம், உள்நாட்டு போக்குவரத்து, சுற்றுலா வழிகாட்டி, நுழைவு கட்டணம், உணவு மற்றும் மது அல்லாத பானம் (எனவே, அனைத்து செலவுகளையும் உள்ளடக்கிய ஒரு நாள்  பேக்கேஜ் ) என அனைத்தையும் அனுபவித்துக் கொள்ளலாம்.  இதில், 65 டாலரான நிலையான அபிவிருத்தி கட்டணமும் ( முன்னாளில், இது அரசு உரிமத் தொகை என்ற பெயரால் அழைக்கப்பட்டது ), சுற்றுலா விசா கட்டணமும்   உள்ளடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒரு  நாள் கட்டணத்தை தாண்டி, கூடுதலாக பூடான் அரசிற்கு கூடுதல் வரியையும் சுற்றுலா பயனர்கள் செலுத்த வேண்டும். உதாரணமாக, தனியாக பயணம் செய்யும் சுற்றுலா பயனர்கள் 40$, இரண்டு பேர் கொண்ட குழுவோடு பயணிக்கும் போது  ஒவ்வொரு சுற்றுலாப் பயனர்கள் 30 அமெரிக்க டாலர் வரி செலுத்த வேண்டும்.

இதன் விளைவாக, பூடான் நாட்டிற்கு வந்து போகும் செலவு, ஷாப்பிங், ஆல்கஹால், டிப்ஸ் போன்றவைகள் மட்டும் சுற்றுலா பயனர்கள் செலவு செய்தால் போதும்.

இருப்பினும், இந்தியா, பங்களாதேஷ் மற்றும் மாலத்தீவில் இருந்து வந்தவர்கள் - இந்த   ஒரு நாள்  பேக்கேஜ் (250/200 $) கட்டணங்களிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களால் பூடானுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.  மேலும், ஒரு நாள்  பேக்கேஜ் 200/250 அமெரிக்க டாலர்கள்  கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இதனால் ஒரு நாளைக்கு எதில் செலவு செய்யலாம், எதை மிச்சப்படுத்தலாம் என்ற முடிவை அவர்களே வகுத்துக் கொள்ள வாய்ப்பிருந்தது.

சர்வதேச பயணங்கள் குறித்து புத்தகம் வெளியிடும் 'லோன்லி பிளானட்'  நிறுவனத்தின் கூற்றுப்படி, பூடானின் தலைநகரமான திம்புபில் சராசரி ஓட்டல் ஒரு இரவுக்கு 20  முதல் 40 டாலர் கட்டணங்களாக உள்ளது.  ஒரு வேளை உணவிற்கு  7 முதல் 15 அமெரிக்கா டாலர்கள். உயர்தர ஓட்டலில், ஒரு இரவுக்கு மட்டும் 500 முதல் 1,750 அமெரிக்க டாலர் வரை செலவாகும் என்று லோன்லி பிளானட் கூறுகிறது.

ஏன், இந்த நடைமுறையில் தற்போது மாற்றம் :

சுற்றுலாப் பயணிகளின் பெருமளவில் வருகையால், இமயமலை சுற்றுச்சூழல் அமைப்பில் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து அந்நாடு கவலை கொண்டிருந்தது.

2018ம்  ஆண்டில் வந்த  மொத்த 2,74,000 சுற்றுலா பயனர்களில், 66% அதிகமானோர் (அதாவது,1,80,000) இந்தியர்கள் ஆவார்கள். எனவே, 66 சதவீத மக்கள் விசா கட்டணம், சஸ்டெயினபில் டெவலப்மென்ட் கட்டணம், 250/200 தினசரி கட்டாய பேக்கேஜ் போன்றவைகளுக்கு உட்படுத்தப்படாமல் இருப்பதால் தனது வருவாயை அதிகப்படுத்துவதற்கான சூலை இழப்தாகவும் பூடான் அரசு கருதுகிறது.

பூடானின் நான்காவது ஊதியக்குழு தனது பரிந்துரையில் பிராந்திய சுற்றுலாப் பயணிகள் மீதும்  எஸ்.டி.எஃப் அறிமுகப்படுத்த அரசுக்கு பரிந்துரைத்ததாக,  பூடானிய குவென்செல் நாளிதழ் கடந்த ஏப்ரல் மாதத்தில் செய்தி ஒன்றையும் வெளியிட்டிருந்தது.

ஒரு நபருக்கு  500 பூடான் நாணயம் (நுகல்ட்ரம்) எஸ்.டி.எஃப் அறிமுகம் செய்தால், ஒரு ஆண்டில் 425 மில்லியன் பூடான் நாணயத்தை  ஈட்டமுடியும்  என்று ஊதியக்குழுவின் அறிக்கையும் மேற்கோள் காட்டியிருந்தது  குயன்செல் நாளிதழ் . மேலும், கடந்த 40 ஆண்டுகளாக மாறாமல் இருக்கும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கான  எஸ்.டி.எஃப் 65 அமெரிக்க டாலரையும்  அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் பற்றியும் அந்த அறிக்கை பேசியிருப்பதாக குவென்செல்  நாளிதழ் தெரிவித்திருந்தது.

மேலும், அதே செய்தியில், பூடான் சுற்றுலா கவுன்சிலின்  இயக்குநர் ஜெனரல் டோர்ஜி திராதுல்  கருத்தையும் வெளியிட்டிருந்தது. அதில் அவர், பிராந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு குறைந்த கட்டணத்தை திட்டம் சில நாட்களாகவே இருந்து வருவதாக தெரிவத்துள்ளார்.

ஊதியக்குழு அறிக்கையைத் தாண்டி, சுற்றுலா கவுன்சிலும் இதுபோன்ற ஒரு மனநிலையில் இருந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், பிராந்திய சுற்றுலாப் பயணிகள் எந்த சுற்றுலா வழிகாட்டிகளையும் நாடுவதில்லை, அனைத்து சுற்றுலா தளங்களையும் தங்கள் சொந்த மன நிலையோடு அணுகிறார்கள், இதனால் அவர்களின் செயல்கள்  சில நேரங்களில் அடுத்தவர்களுக்கு இன்னல்கள் தரும் சூழ் நிலையை உருவாக்கி விடுகிறது,  என்று  டோர்ஜி திராதுல்   கூறியதாக  குவென்செல்  நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.

கடந்த மாதம், ஒரு இந்திய சுற்றுலாப் பயணி பூடானிய மக்களின் புனித நினைவுச்சின்னமான சோர்டன் கோபுரத்தின் மீது ஏறியதற்காக  பூடான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Himalaya India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment