/indian-express-tamil/media/media_files/2025/02/10/PQJVZ7eZ9eme8iDFsm8v.jpg)
பெரும்பாலான அமெரிக்க வெளிநாட்டு நிதி உதவிகளை 90 நாட்களுக்கு முடக்கும் அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவு, பட்டினி மற்றும் கொடிய நோய்களுக்கு எதிராக போராடும் திட்டங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Trump’s foreign aid freeze has created chaos. Here is what to know
அமெரிக்க தூதரகம் மற்றும் அமெரிக்க உதவி ஆணையம் (யுஎஸ்ஏஐடி) என்பது, உணவு, மருத்துவ உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் போன்ற மனிதாபிமான உதவிகளை வழங்கும் முக்கிய அமைப்பாகும். இந்த அமைப்பு தற்போது டிரம்பின் உத்தரவால் முடக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் ஊழல் மற்றும் மோசடி நடைபெற்றதாக ஆதாரங்களை வழங்காமல் அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டினார்.
டிரம்பின் நிர்வாகம், இந்த ஏஜென்சியின் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு திரும்ப உத்தரவிட்டது. அவர்களை காலவரையற்ற நிர்வாக விடுப்பில் வைத்து, ஏஜென்சியின் மேற்பார்வையை வெளியுறவுத்துறைக்கு மாற்றியது.
கடந்த வியாழன் அன்று, ஏஜென்சியின் ஊழியர்களைக் குறைப்பதற்கான திட்டங்களை நிர்வாகம் அறிவித்தது. 10,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள், நூற்றுக்கணக்கான அளவிற்கு குறைக்கப்பட்டனர். இந்த அமைப்பின் செயல்பாடுகளையும் தற்காலிகமாக முடக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
டிரம்பின் இந்த உத்தரவு மனிதாபிமானத்தை பாதித்து பேரழிவை ஏற்படுத்தும் என்றும், அமெரிக்காவின் செல்வாக்கு, நம்பகத்தன்மை மற்றும் உலகளாவிய நிலைப்பாட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
வெளிநாட்டு நிதியுதவியாக அமெரிக்கா வழங்குவது எவ்வளவு?
மொத்தத்தில், அமெரிக்கா கடந்த 2023 ஆம் ஆண்டில் வெளிநாட்டு உதவிக்காக கிட்டத்தட்ட 72 பில்லியன் டாலர்களை செலவிட்டது, இதில் அமெரிக்க தூதரகம் மற்றும் அமெரிக்க உதவி ஆணையம், வெளியுறவுத்துறை போன்ற அமைப்புகளால் நிர்வகிக்கப்படும் திட்டங்கள் ஆகியவை அடங்கும்.
அதன் பொருளாதார உற்பத்தியின் சதவீதமாக, உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட அமெரிக்கா, மற்ற வளர்ந்த நாடுகளை விட மிகக் குறைவான வெளிநாட்டு உதவிகளை வழங்குகிறது.
2023 நிதியாண்டில் சுகாதார சேவைகள், பேரிடர் நிவாரணம், வறுமை எதிர்ப்பு முயற்சிகள் மற்றும் பிற திட்டங்களுக்காக அமெரிக்க தூதரகம் மற்றும் அமெரிக்க உதவி ஆணையம், சுமார் 38 பில்லியன் டாலர்கள் செலவிட்டது. இது மத்திய பட்ஜெட்டில் சுமார் 0.7 சதவீதம். 2021 இல், உக்ரைனில் போருக்கு முன்பு, இது 0.4 சதவீதமாக இருந்தது.
இதன் பயனாளிகள் யார்?
அமெரிக்க வெளிநாட்டு உதவி மீதான டிரம்பின் முடக்கம் இஸ்ரேல் மற்றும் எகிப்து போன்ற நாடுகளுக்கான ஆயுத ஆதரவுக்கு பொருந்தாது. அவசரகால உணவு உதவிக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும். ஆனால் இதுபோன்ற பல திட்டங்கள் அரசாங்கத்தின் கட்டண முறைகளில் ஏற்பட்ட இடையூறுகளால் பாதிக்கப்பட்டுள்ளன.
பிப்ரவரி 2022 இல் மாஸ்கோவின் முழு அளவிலான படையெடுப்பிற்குப் பிறகு ரஷ்யாவிற்கு எதிராகப் போரை நடத்தி வரும் உக்ரைன், 2023 ஆம் ஆண்டில், 16.6 பில்லியன் டாலர்களைப் பெற்றது. இது மற்ற நாடுகளுக்கு அமெரிக்க வழங்கியதை விட அதிகப்படியான உதவியாகும். அதில் பெரும்பகுதி பொருளாதார வளர்ச்சிக்கும், மனிதாபிமான உதவி மற்றும் பாதுகாப்புக்கும் சென்றது.
மேலும், அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தொடங்கிய போர் சுமார் 16 மாதங்கள் நீடித்தது. இந்த போரில் நிதியுதவியாக 3.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டன.
பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது?
அமெரிக்க வெளிநாட்டு உதவி என்பது அரசு சாரா நிறுவனங்கள் மூலம் நேரடி நிதி உதவியாக கட்டமைக்கப்படலாம்; இராணுவ ஆதரவு; உணவு மற்றும் மருத்துவ உதவி; அல்லது தொழில்நுட்ப நிபுணத்துவம் ஆகியவற்றை இது உள்ளடக்கும்.
வெளிநாட்டு உதவி என்பது ஒரு நாட்டின் மூலோபாய நலன்களுக்கு சேவை செய்வது, நட்பு நாடுகளை வலுப்படுத்துவது மற்றும் மோதல்களைத் தடுக்க உதவும் மென்மையான நடவடிக்கையின் ஒரு வடிவமாக இருக்கலாம்.
இந்த விஷயத்தில், உக்ரைனில் மனிதாபிமான உதவி, மேம்பாட்டு உதவி மற்றும் நேரடி பட்ஜெட் ஆதரவுக்கு பணம் சென்றது; சோமாலியாவில் அமைதியை கட்டியெழுப்புதல்; கம்போடியாவில் நோய் கண்காணிப்பு; நைஜீரியாவில் தடுப்பூசி திட்டங்கள்; உகாண்டாவில் எச்.ஐ.வி தடுப்பு; மற்றும் ஜாம்பியாவில் சுகாதார உதவி; எபோலாவின் பரவலை கட்டுப்படுத்தல், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் திட்டங்களுக்கு நிதியளிக்கவும் இந்த நிறுவனம் உதவியுள்ளது.
டிரம்பின் கூற்றுக்கு மாறாக, ஹமாஸின் பயன்பாட்டிற்காக காசாவிற்கு ஆணுறைகளை அனுப்ப அமெரிக்க பணம் பயன்படுத்தப்படவில்லை என்று சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த மாதத்தின் பிற்பகுதியில், சர்வதேச மருத்துவப் படையானது, 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் அமெரிக்க உதவி ஆணையத்திலிருந்து 68 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையைப் பெற்றதாகக் கூறியது. பல்வேறு மருத்துவ உதவிகளுக்காக இந்த பணம் செலவு செய்யப்படுவதாக கூறுகின்றனர்.
இதன் பயன்பாட்டை முடக்க எதற்காக உத்தரவிடப்பட்டது?
பல ஆண்டுகளாக, பழமைவாத விமர்சகர்கள் அமெரிக்க வெளிநாட்டு உதவித் திட்டங்களின் மதிப்பைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.
"நாங்கள் செலவளிக்கும் ஒவ்வொரு டாலரும், நாங்கள் நிதியளிக்கும் ஒவ்வொரு திட்டமும், நாங்கள் பின்பற்றும் ஒவ்வொரு கொள்கையும் இந்த எளிய கேள்விகளுக்கான பதில்களுடன் நியாயப்படுத்தப்பட வேண்டும்" என்று வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ சமீபத்திய அறிக்கையில் தெரிவித்தார். "இவை அமெரிக்காவிற்கு பாதுகாப்பானதா? இது அமெரிக்காவை பலப்படுத்துகிறதா? இது அமெரிக்காவை மேலும் வளமாக்குமா?" என்று கேள்வி எழுப்பப்படுகிறது.
டிரம்ப் நிர்வாகம், வெளிநாட்டுக்கு அளிக்கும் உதவியை நிறுத்துவது அவசியம் என்று வாதிடுகின்றனர். அவர்களின் கூற்றுகளில் பல தவறானவை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன?
டிரம்பின் வெளிநாட்டு நிதியுதவி முடக்கத்தால் ஏற்பட்ட உடனடி இடையூறுகள் உலகளவில் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் மனிதாபிமானத் திட்டங்களில் பிரதிபலிக்கின்றன. நீண்ட கால விளைவுகளாக பல நாடுகளில் உலகளாவிய ஆரோக்கியம், ஆராய்ச்சி மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை மாற்றியமைக்கலாம்.
சுகாதாரம்: பல உலகளாவிய மருத்துவ பரிசோதனைகள் இதன் நிதியை நம்பியுள்ளன. எனவே, இது பல நாடுகளில் சுகாதாரம் மற்றும் மருத்துவத்தை பாதிக்கின்றன.
தென்னாப்பிரிக்காவில், எச்.ஐ.வி தடுப்பு சோதனையை நிறுத்த ஆராய்ச்சியாளர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர். இதனால் பெண்களுக்கு அவர்களின் உடலுக்குள் செலுத்தப்பட்ட பரிசோதனை உள்வைப்புகள் குறித்து தொடர்ந்து மருத்துவ மேற்பார்வை இல்லாமல் இருக்கிறது.
பிரிட்டனில் ஒரு மலேரியா தடுப்பூசி ஆய்வில் தன்னார்வலர்களுக்கு, அதன் டோஸ் வழங்கப்பட்டன. ஆனால், நிதியுதவி நிறுத்தப்பட்டதால் இந்த ஆய்வு பாதியில் நிற்கிறது.
உகாண்டாவில், காசநோய் சிகிச்சை சோதனையில் பதிவுசெய்யப்பட்ட குழந்தைகளின் உயிர்காக்கும் மருந்துகள் நிறுத்தப்பட்டன.
வங்கதேசத்தில், காலரா சிகிச்சை சோதனை கைவிடப்பட்டது. நோயாளிகளுக்கு அடுத்தகட்ட எந்த திட்டமும் இல்லை.
உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகுவதாக டிரம்ப் அறிவித்ததால், அதன் சொந்த செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் மூலம் பாதிப்பு அதிகரிக்கிறது.
டிரம்ப் உத்தரவுக்கு என்ன எதிர்வினை?
ஜனநாயக சட்டமியற்றுபவர்கள், இது போன்ற திட்டங்களை நிறுத்துவது அல்லது வெளியுறவுத்துறையுடன் இணைக்கும் நடவடிக்கைகள் சட்டவிரோதமானது எனக் கூறுகின்றனர்.
வியாழன் அன்று அமெரிக்க தூதரகம் மற்றும் அமெரிக்க உதவி ஆணைய ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு தொழிற்சங்கங்கள், பணியாளர்கள் குறைப்பு மற்றும் உலகளாவிய உதவி ஒப்பந்தங்களை ரத்து செய்வது அரசியலமைப்பிற்கு முரணானது என்று கூறு வழக்கு தொடர்ந்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகலில், கொலம்பியா அமெரிக்க நீதிமன்றத்தின் நீதிபதி கார்ல் நிக்கோல்ஸ், 2,200 ஊழியர்களின் நிர்வாக விடுப்பை இடைநிறுத்தி தற்காலிகத் தடை உத்தரவைப் பிறப்பித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.