2024-ஆம் ஆண்டுக்கான துளசி விவாகம் இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது. வழக்கமாக கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படும் துளசி விவாகம், இந்த ஆண்டு ஐப்பசி மாதத்தில் வருகிறது. இந்து மக்கள் இதனை தேவுதானி ஏகாதசி எனவும் அழைப்பார்கள். இந்துக்களின் திருமண நிகழ்வுக்கு தொடக்கமாக இது கருதப்படுகிறது. இந்நிலையில், துளசி விவாகத்தின் அடிப்படை குறித்து இந்து புராணங்களில் கூறப்பட்டிருப்பதை இப்பதிவில் காணலாம்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Tulsi Vivah 2024: What is the legend behind the festival, which marks beginning of Hindu wedding season
துளசி விவாகம் என்றால் என்ன?
இந்துக்கள் புனிதமாக கருதும் துளசிக்கும், விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படும் சாளக்கிராமம் கல்லுக்கும் திருமணம் செய்வதை துளசி விவாகம் எனக் கூறுவார்கள்
துளசி தனது முற்பிறவியில் காலநெமி என்ற அசுரனுக்கு மகளாக பிறந்ததாகவும், அப்பிறவியில் துளசியின் பெயர் பிருந்தா எனவும் கருதப்படுகிறது. இப்பிறவியில் பிருந்தா ஜலந்தர் என்ற அசுரனை திருமணம் செய்திருந்தாள்.
பிருந்தாவின் பக்தி, ஜலந்தரை வெல்ல முடியாத வகையில் பாதுகாப்பு அரணாக அமைந்தது. தனது மனைவி தனக்கு விசுவாசமாக இருக்கும் வரை, தன்னை யாரும் வெல்ல முடியாது என்ற வரத்தை ஜலந்தர் பிரம்மாவிடமிருந்து பெற்றிருந்தான்.
இதனால், உலகத்தை வெல்ல ஜலந்தர் புறப்பட்ட போது, தேவர்கள் விஷ்ணுவின் உதவியை நாடி வந்தனர்.
“பிருந்தா விசுவாசமாக இருக்கும் வரை ஜலந்தரை தடுத்து நிறுத்த முடியாது என்பதை விஷ்ணு அறிந்திருந்தார். அசுரன் அழிக்கப்பட வேண்டும் என்பதற்காக, ஜலந்தரின் உருவம் கொண்டு பிருந்தாவை காண விஷ்ணு சென்றார்“ என புராணங்கள் கூறுவதாக ஆன்மிகவாதி ரமேஷ் குமார் உபத்யாய் தெரிவித்துள்ளார்.
தனது கணவன் தான் போரில் வென்று திரும்பியதாக கருதிய பிருந்தா, ஜலந்தர் உருவத்தில் இருந்த விஷ்ணுவை தழுவினாள். இதனால், பிருந்தாவின் புனிதத்தன்மை இழந்தது. தேவர்களும் ஜலந்தரை கொன்றனர். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பிருந்தா, விஷ்ணு சாளக்கிராமம் என்ற கருப்பு நிற கல்லாக மாற வேண்டுமென சாபம் விடுத்தாள். விஷ்ணுவும் இந்த சாபத்தை ஏற்றுக் கொண்டார். தான் அடுத்த பிறவியில் துளசிச் செடியாக பிறப்பேன் எனவும், அப்போது சாளக்கிராமம் கல்லாக மாறிய விஷ்ணுவை மணப்பேன் எனவும் பிருந்தா கூறினாள்.
இதனால் தான் துளசி பக்திக்குரிய பொருளாக இந்துக்களால் கருதப்படுகிறது.
இதையடுத்து, கார்த்திகை மாதத்தின் சுக்ல பக்ஷ ஏகாதசியில், நான்கு மாத தூக்கத்தில் இருந்து விஷ்ணு விழித்தார். இதன் காரணத்தால் குறிப்பிட்ட காலகட்டத்தில் சுப காரியங்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. விஷ்ணு துளசியை மணந்த பின்னர், திருமண காலம் தொடங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“