Advertisment

துருக்கி நிலநடுக்கம் எவ்வளவு பெரியது: எப்படி அளவிடப்படுகிறது?

நிலநடுக்கத்தின்போது நிலத்தின் இயக்கத்தை பதிவு செய்யும் சீஸ்மோகிராஃப்கள் எனப்படும் கருவிகளைப் பயன்படுத்தி, நிலநடுக்கத்தை ரிக்டர் அளவுகோல் அல்லது மொமன்ட் மேக்னிட்யூட் அளவுகோல் போன்ற பல்வேறு அளவுகளில் அளவிடப்படுகிறது.

author-image
WebDesk
New Update
earthquake, Turkey, Syria, Richter scale, magnitude, நிலநடுக்கம், துருக்கி, சிரியா, ரிக்டர் அளவு, மேக்னிடியூட், intensity, Tamil Indian Express, Express Explained, current affairs

நிலநடுக்கத்தின்போது நிலத்தின் இயக்கத்தை பதிவு செய்யும் சீஸ்மோகிராஃப்கள் எனப்படும் கருவிகளைப் பயன்படுத்தி, நிலநடுக்கத்தை ரிக்டர் அளவுகோல் அல்லது மொமன்ட் மேக்னிட்யூட் அளவுகோல் போன்ற பல்வேறு அளவுகளில் அளவிடப்படுகிறது.

Advertisment

தென்-மத்திய துருக்கி மற்றும் வடமேற்கு சிரியாவில் திங்கள்கிழமை அதிகாலை (பிப்ரவரி 6) 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஏ.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்பகுதி முழுவதும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவர்களைக் கண்டுபிடிக்க, பல இடங்களில் நடந்து வரும் பனி புயலுக்கு மத்தியில் மீட்பு நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலநடுக்கத்தில், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்த நிலையில் 1,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்வு ஏற்கனவே பத்தாண்டுகளாக உள்நாட்டு அமைதியின்மை மற்றும் அகதிகள் நெருக்கடியால் சிதைந்த பிராந்தியத்தில் மனிதாபிமான பேரழிவு நடந்துள்ளது.

நிலநடுக்கத்தின் மேக்னிடியூட் அளவு

இந்த நிலநடுக்கத்தில் உயிர்பிழைத்த பலர், தங்கள் வாழ்நாளில் உணர்ந்த மிகப் பெரிய நிலநடுக்கம் இது என்று கூறியுள்ளனர். என்னுடைய 40 வயதில் இது போன்ற எந்த நிலநடுக்கத்தையும் நான் பார்த்ததில்லை என்று நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகிலுள்ள துருக்கிய நகரமான காசியான்டெப்பில் வசிக்கும் எர்டெம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

மேக்னிடியூட் அளவுகோலில் 7.8 அளவு என்பது உண்மையில் வலுவானது. நிபுணர்களின் கருத்துப்படி, இந்த நிலநடுக்கம் துருக்கியில் (சுமார் 1900 முதல்) பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய கூட்டு நிலநடுக்கம். 1939 டிசம்பரில் வடகிழக்கு துருக்கியில் சுமார் 30,000 பேர் பலியான அதே அளவு நிலநடுக்கம்தான் இது என்று லண்டன் இம்பீரியல் கல்லூரியில் நில அதிர்வு ஆராய்ச்சியாளரான ஸ்டீபன் ஹிக்ஸ் ட்வீட் செய்துள்ளார்.

இந்த நிலநடுக்கம் காசியான்டெப்பில் இருந்து 33 கிமீ தொலைவில் 18 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யு.எஸ்.ஜி.எஸ்) தெரிவித்துள்ளது. இது அதிக மக்கள்தொகை கொண்ட பகுதி என்பதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருகிறது. நிலநடுக்கத்தின் விளைவுகள் மேற்கு ஆசியா, வட ஆபிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஐரோப்பா முழுவதும் உணரப்பட்டது, லெபனான், சைப்ரஸ், கிரீஸ், இஸ்ரேல் மற்றும் எகிப்தில் வசிப்பவர்களும் அதிர்வுகளை உணர்ந்ததாக புகாரளித்ததாக தி கார்டியன் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தை அளவிடும் மேக்னிடியூட்

பூமியின் ஓடுபோன்ற பகுதி டெக்டோனிக் தட்டுகளாக உடைகிறது. அவை தொடர்ந்து நகர்ந்து மெதுவாக,அடிக்கடி உராய்வதன் காரணமாக அவற்றின் விளிம்புகளில் சிக்கிக் கொள்கின்றன. விளிம்பில் உள்ள அழுத்தம் உராய்வைக் கடக்கும்போது, பூமியின் மேல்ஓடு வழியாக செல்லும் அலைகளில் சக்தி வெளிப்படுவதே நிலநடுக்கம். நிலநடுக்கத்தின் விளைவாக நில அதிர்வு உணரப்படுகிறது.

நில அதிர்வு வரைபடங்களின் வலையமைப்பு, நில அதிர்வுகளைப் பதிவுசெய்யப் பயன்படுகிறது. ஒரு நில அதிர்வு வரைபட கருவியானது பூமியின் மேற்பரப்பில் பாதுகாப்பாக நிறுவப்படுகிறது. இதனால் பூமி அதிரும்போது, ​​அந்த இடத்தில் அமைதியாக இருக்கும் கருவியின் ஸ்பிரிங்கில் உள்ள பெரிய பகுதியைத் தவிர்த்து முழு அலகும் அதிர்கிறது.

கைனெமெட்ரிக்ஸ் நில அதிர்வு வரைபடம்; இயக்கவியல் நில அதிர்வு வரைபடம். (விக்கிமீடியா காமன்ஸ்)

நிலம் அதிரும்போது, இந்த கருவியில் உள்ள பதிவு சாதனம் அதற்கும் மற்ற கருவிக்கும் இடையே உள்ள ஒப்பீட்டு இயக்கத்தை பதிவு செய்கிறது. இதனால், தரை இயக்கத்தை பதிவு செய்கிறது. யு.எஸ்.ஜி.எஸ் கருத்துப்படி, இந்த வழிமுறைகள் நீண்ட நாள் கையால் செய்யபடுவதாக இல்லை. மாறாக கருவியைப் பொறுத்து தரையின் இயக்கத்தால் உருவாக்கப்பட்ட மின்னணு மாற்றங்களை அளவிடுவதன் மூலம் செயல்படுகின்றன.

மேக்னிடியூட் முறையில் அளவிடுதல்

இன்று, நிலநடுக்கத்தின் அளவுக்கான பல அளவீடுகள் உள்ளன. இதில் மிகவும் பிரபலமானது ரிக்டர் அளவுகோலாகும். இதை யு.எஸ்.ஜி.எஸ் மேக்னிடியூட் அளவு காலாவதியான அளவு என்று கூறுகிறது.

ரிக்டர் அளவுகோல் 1935-ல் சார்லஸ் பிரான்சிஸ் ரிக்டர் என்பவரால் உருவாக்கப்பட்டது. ரிக்டர் அளவுகோல் (எம்.எல் என குறிப்பிடப்படுகிறது) இது ஒரு மடக்கை அளவுகோலாகும். இதில் ஒவ்வொரு அடியும் பத்து மடங்கு அளவு அதிகரிப்பைக் குறிக்கிறது. இவ்வாறு, ரிக்டர் அளவுகோலில் 7 அளவிடப்பட்ட நிலநடுக்கம், 6 அளவிடப்பட்ட ஒன்றின் அளவை விட 10 மடங்கு அளவைக் கொண்டுள்ளது. அளவு 0 அதிர்ச்சியை (100 கிமீ தொலைவில்) அதிகபட்சமாக 1 மைக்ரான் வீச்சை உருவாக்குகிறது என வுட்-ஆன்டர்சன் நில அதிர்வு வரைபடத்தைப் பயனபடுத்தி வரையறுத்து அளவீடு செய்யப்பட்டது.

யு.எஸ்.ஜி,எஸ் குறிப்பிட்டுள்ளபடி, உலகம் முழுவதும் அதிகமான நில அதிர்வு வரைபட நிலையங்கள் நிறுவப்பட்டதால், ரிக்டரால் உருவாக்கப்பட்ட முறையானது குறிப்பிட்ட அதிர்வெண் மற்றும் தூர வரம்புகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பது தெளிவாகியது. இதன் விளைவாக, அந்த தருணத்தின் அதிர்வை அளவிட மொமன்ட் மேக்னிடியூட் அளவு அளவுகோல் (Mw என குறிக்கப்படுகிறது) உருவாக்கப்பட்டது.

யு.எஸ்.ஜி.எஸ் குறிப்பிட்டுள்ளபடி, ஒரு கணம் என்பது அதிர்வு என்பது ஒரு அதிர்வின் விகிதாசார முறையிலான ஒரு இயற்பியல் அளவு ஆகும். எனவே, இது பூகம்பத்தில் வெளிப்பட்ட மொத்த ஆற்றலுடன் தொடர்புடையது. இந்த அளவுகோல் குறிப்பாக ஒரு அளவு மேலே செல்லும் போது அந்த அளவின் மிகவும் துல்லியமான மதிப்பீட்டை வழங்குகிறது. ரிக்டர் அளவுகோலைப் போலவே, இதுவும் ஒரு மடக்கை அளவுகோல் ஆகும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Explained
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment