/tamil-ie/media/media_files/uploads/2022/10/Arif-Mohammed-Khan-Pinarayi.jpg)
கேரள அரசு நடத்தும் கேரள பல்கலைக்கழகத்தில் நியமனங்கள் உட்பட பல்வேறு பிரச்சினைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துடன் மோதலில் ஈடுபட்டுள்ள கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், திங்களன்று தனது அலுவலகத்தின் "கண்ணியத்தைக் குறைத்த" அமைச்சர்களை பதவி நீக்கம் செய்வதாக மிரட்டினார்.
ஆளுநர் ஆரிப் முகமது கானின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குழுவிற்கு ஆளுநருக்கு ஆலோசனை வழங்க முழு உரிமை உண்டு. ஆனால் கவர்னர் பதவியின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் தனிப்பட்ட அமைச்சர்களின் அறிக்கைகள், அவர்கள் மீது பதவி நீக்க நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும்,” என்று பதிவிடப்பட்டது.
Hon’ble Governor Shri Arif Mohammed Khan said:“The CM and Council of Ministers have every right to advise Governor.But statements of individual ministers that lower the dignity of the office of the Governor,can invite action including withdrawal of pleasure”:PRO,KeralaRajBhavan
— Kerala Governor (@KeralaGovernor) October 17, 2022
இதையும் படியுங்கள்: முஸ்லீம் பெண்களின் திருமண வயது குறித்த விவகாரம்; உச்ச நீதிமன்றம் விசாரிப்பது ஏன்?
இடது ஜனநாயக முன்னணி (LDF) அரசாங்கத்தை வழிநடத்தும் CPI-M இன் மத்திய தலைமை, அரசியலமைப்பு ஆளுநருக்கு "சர்வாதிகார அதிகாரங்களை" வழங்கவில்லை என்றும், அரசாங்கத்திற்கு எதிரான ஆரிப் முகமது கானின் "அரசியல் சார்பு" "அம்பலமாகியுள்ளது" என்றும் கூறியது.
அரசாங்கத்தில் இருந்து ஒரு அமைச்சர் ஒருவரை ஆளுநர் ஒருதலைப்பட்சமாக நீக்கிய சந்தர்ப்பம் இதுவரை இல்லை.
நாடாளுமன்ற அமைப்பில் ஆளுநர் என்ன பங்கு வகிக்கிறார்?
ஆளுநரின் பதவி, பொறுப்பு, அதிகாரங்கள் மற்றும் நிபந்தனைகள் அரசியலமைப்பின் 153-161 பிரிவுகளில் விவரிக்கப்பட்டுள்ளன. ஒன்றியத்தில் குடியரசுத் தலைவருக்கு நிகரான பதவிதான் கவர்னர் பதவி. அவர் மாநிலத்தின் நிர்வாக அதிகாரத்தின் தலைவராக உள்ளார், மேலும் சில விஷயங்களைத் தவிர்த்து, நாடாளுமன்ற முறைப்படி, மாநில சட்டமன்றத்திற்கு பொறுப்பான அமைச்சர்கள் குழுவின் ஆலோசனையின் பேரில் செயல்படுகிறார்.
ஆளுநர் குடியரசுத் தலைவரால் (மத்திய அரசின் ஆலோசனையின் பேரில்) நியமிக்கப்படுகிறார், எனவே, மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே முக்கிய இணைப்பாகச் செயல்படுகிறார். பதவியானது அரசியலற்றது என்று கருதப்பட்டது; இருப்பினும், பல தசாப்தங்களாக மத்திய-மாநில உறவுகளில் கவர்னர்களின் பங்கு ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினையாக உள்ளது. மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது அல்லது நிறுத்தி வைப்பது அல்லது ஒரு கட்சி தனது பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான நேரத்தை நிர்ணயித்தல் அல்லது பொதுவாக தொங்கு சட்டசபைக்கு பிறகு, எந்தக் கட்சியை பெரும்பான்மையை நிரூபிக்க முதலில் அழைக்க வேண்டும் போன்ற சில அதிகாரங்களை ஆளுநர் அனுபவிக்கிறார், இது அரசியல் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக அடுத்தடுத்து வந்த மத்திய அரசுகளால் ஆயுதம் ஏந்தப்பட்டவை.
சட்டப்பிரிவு 164(1) கூறுகிறது “அமைச்சர்கள் கவர்னரின் விருப்பத்தின் போது பதவி வகிப்பார்கள்”. இதன் பொருள் கவர்னர் ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்யலாமா?
இதைத்தான் கேரள கவர்னர் மறைமுகமாக குறிப்பிடுகிறார். லோக்சபாவின் முன்னாள் பொதுச் செயலர் பி.டி.டி. ஆச்சாரி கூறியதாவது: ”பிரிவு 164(1) முதல்வர் மற்றும் பிற அமைச்சர்களின் நியமனம் குறித்து கூறுகிறது. முதலமைச்சரை நியமிக்கும் போது ஆளுநர் யாருடைய ஆலோசனையையும் பெற வேண்டியதில்லை என்றாலும், முதல்வரின் பரிந்துரையின் பேரில்தான் அவர் அமைச்சரை நியமிக்க முடியும். ஆளுநருக்கு தான் தேர்ந்தெடுக்கும் யாரையும் அமைச்சராக்க அதிகாரம் இல்லை. முதல்வரின் ஆலோசனையின் பேரில்தான் அவர் அமைச்சரை நியமிக்க முடியும்” என்று கூறினார்..
ஷம்ஷேர் சிங் & சிலர் எதிர் பஞ்சாப் மாநிலம் (1974) என்ற வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச் இவ்வாறு கூறியது: “குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர், அனைத்து நிர்வாக அதிகாரங்களின் பாதுகாவலர்கள் மற்றும் பிறர், பல்வேறு பிரிவுகளின் கீழ், இந்த விதிகளின் மூலம், ஒரு சில நன்கு அறியப்பட்ட விதிவிலக்கான சூழ்நிலைகளைத் தவிர்த்து, தங்கள் அமைச்சர்களின் ஆலோசனையின்படி மட்டுமே அவர்கள் தங்கள் முறையான அரசியலமைப்பு அதிகாரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று நமது அரசியலமைப்பின் இந்த பிரிவின் சட்டத்தை நாங்கள் அறிவிக்கிறோம்.”
பிரதமரோ அல்லது முதலமைச்சரோ சபையில் பெரும்பான்மையைப் பெறுவதை நிறுத்தினால், அரசாங்கம் பெரும்பான்மையை இழந்தாலும், பதவியில் இருந்து விலக மறுத்தால், மற்றும் "நாட்டிற்கு சபையைக் கலைக்க அவசியமான முறையீடு" போன்ற சூழ்நிலைகள் ஏற்படலாம். ஆனால் மூன்றாவது சூழ்நிலையில் கூட, மாநிலத் தலைவர் (ஜனாதிபதி அல்லது ஆளுநர்) "அரசியலில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும், மேலும் அவரது பிரதமரால் (முதலமைச்சர்) அறிவுறுத்தப்பட வேண்டும், அவர் இறுதியில் நடவடிக்கைக்கு பொறுப்பேற்க வேண்டும்" என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நபம் ரெபியா மற்றும் பலர் எதிர் துணை சபாநாயகர் மற்றும் பலர் (2016) வழக்கில் உச்ச நீதிமன்றம் பி.ஆர் அம்பேத்கரின் அவதானிப்புகளை மேற்கோள் காட்டியது: “அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் ஆளுநருக்கு அவர் சுயமாகச் செய்யக்கூடிய செயல்பாடு இல்லை; செயல்பாடுகள் எதுவும் இல்லை. அவருக்குச் செயல்பாடுகள் எதுவும் இல்லை என்றாலும், அவருக்குச் செய்ய வேண்டிய சில கடமைகள் உள்ளன, மேலும் இந்த வேறுபாட்டை சபை மனதில் கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
கவர்னர் ஆரிப் முகமது கான் அலுவலகம் குற்றம் சாட்டியது போல், உண்மையிலேயே ஒரு அமைச்சர், கவர்னர் அல்லது அவரது அலுவலகத்தின் கண்ணியத்தை குறைத்தால், ராஜ் பவன் முதலமைச்சரை விசாரிக்கச் சொல்லலாம் என்று ஆச்சாரி கூறினார். “அமைச்சர் ஆளுநரை அவமதித்ததாகவோ அல்லது மரியாதை குறைவாக நடந்துக்கொண்டதாகவோ கண்டறியப்பட்டால், அமைச்சரை கைவிடுமாறு அவர் முதலமைச்சரிடம் கேட்கலாம்,” என்று ஆச்சாரி கூறினார்.
அப்படியானால் ஆளுநரின் "ப்ளஷர் (Pleasure)" என்றால் என்ன?
முதல்வர் அல்லது அமைச்சர்களை விருப்பத்தின் பேரில் பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு உரிமை உள்ளது என்று அர்த்தம் இல்லை என்று ஆச்சாரி கூறினார். “சபையில் அரசாங்கம் பெரும்பான்மையை அனுபவிக்கும் வரை ஆளுநர் தனது விருப்பத்தைப் பெற முடியும். பெரும்பான்மையை இழந்த அரசு பதவி விலக மறுத்தால் மட்டுமே கவர்னர் தனது விருப்பத்தை வாபஸ் பெற முடியும். பின்னர் அவர் விருப்பத்தைத் திரும்பப் பெற்று அதைத் தள்ளுபடி செய்கிறார், ”என்று ஆச்சாரி கூறினார்.
மேலும், “முதலமைச்சரின் ஆலோசனையின்றி ஒரு ஆளுநரால் அமைச்சரை நியமிக்கவோ, பதவி நீக்கம் செய்யவோ முடியாது. அதுதான் அரசியலமைப்பு நிலை” என்றும் ஆச்சாரி கூறினார்.
கவர்னர்கள் செய்ததாகக் கூறப்படும் பாரபட்சமான நிலைப்பாடு பற்றிய கவலைகளைத் தீர்க்க என்ன முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன?
2000 ஆம் ஆண்டில் அடல் பிஹாரி வாஜ்பாய் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அரசியலமைப்பின் செயல்பாட்டை மறுபரிசீலனை செய்வதற்கான தேசிய ஆணையம் ஆளுநர்கள் தேர்வில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை பரிந்துரைத்தது. “ஒரு மாநிலத்தின் ஆளுநரை அந்த மாநில முதல்வருடன் கலந்தாலோசித்த பிறகு குடியரசுத் தலைவர் நியமிக்க வேண்டும் என்று ஆணையம் பரிந்துரைத்தது.
"பொதுவாக ஐந்தாண்டு பதவிக் காலம் கடைபிடிக்கப்பட வேண்டும் மற்றும் கவர்னரை நீக்குவது அல்லது மாற்றுவது என்பது சம்பந்தப்பட்ட மாநில முதல்வருடன் கலந்தாலோசித்த பிறகே நியமனத்தில் செய்யப்பட்ட நடைமுறையைப் பின்பற்றுவதன் மூலம் இருக்க வேண்டும்."
1983ல் மத்திய-மாநில உறவுகளை ஆராய அமைக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன், இந்திய துணை ஜனாதிபதி மற்றும் லோக்சபா சபாநாயகர் ஆகியோரிடம், கவர்னர்கள் தேர்வில், பிரதமர் ஆலோசனை பெற வேண்டும் என முன்மொழிந்தது.
மத்திய-மாநில உறவுகள் தொடர்பாக 2007ல் அமைக்கப்பட்ட நீதிபதி மதன் மோகன் புஞ்சி கமிட்டி, மார்ச் 2010ல் சமர்ப்பித்த அறிக்கையில், பிரதமர், உள்துறை அமைச்சர், துணைக் குடியரசுத் தலைவர், சபாநாயகர் மற்றும் சம்பந்தப்பட்ட முதல்வர் ஆகியோர் அடங்கிய குழு ஆளுநரை தேர்வு செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தது.
மதன் மோகன் புஞ்சி கமிட்டி அரசியலமைப்பிலிருந்து "விருப்பக் கோட்பாட்டை" நீக்க பரிந்துரைத்தது, ஆனால் மாநில அரசின் ஆலோசனைக்கு எதிராக அமைச்சர்கள் மீது வழக்குத் தொடர ஆளுநரின் உரிமையை ஆதரித்தது. மேலும் மாநில சட்டமன்றத்தால் ஆளுநரை பதவி நீக்கம் செய்வதற்கான ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வாதிட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.