ட்விட்டர் எப்படி ஹேக் செய்யப்பட்டது? தேர்தல் நேரத்தில் கேள்வி எழுப்பும் பாதுகாப்பு சிக்கல்
இந்த பிரச்னையை சரி செய்வதில் நாங்கள் தொடர்ந்து பணியாற்றும்போது, மீண்டும் இந்த சிக்கல் வந்து போகலாம். முடிந்தவரை விரைவாக இயல்பு நிலைக்கு வர நாங்கள் பணியாற்றி வருகிறோம்
அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள மிக முக்கிய பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளை ட்விட்டர் முடக்கியது
Nandagopal Rajan
ட்விட்டர் சரித்திரத்தில் இது ஒரு மோசமான நாள். “நினைவலையில் மிகவும் வெட்கக்கேடான ஆன்லைன் தாக்குதல்களில் ஒன்று” என்று அழைக்கப்படும் இந்த விஷயத்தில், அமெரிக்காவின் மிக சக்திவாய்ந்த சிலரின் ட்விட்டர் கணக்குகள் அனைத்தும் புதன்கிழமை பிற்பகலில் பிட்காயின்களைப் பற்றி ட்வீட் செய்தன. இது ஒரு மோசடி தான், ஆனால் அமெரிக்காவின் மிகப்பெரிய அரசியல் மற்றும் பொழுதுபோக்கு ஆளுமைகளின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு, அதில் ட்வீட் செய்யப்பட்டுள்ளன. ட்விட்டர் நிறுவனம், கட்டுப்பாட்டை மீட்டெடுக்கவும், டீவீட்களை நீக்கவும் முயன்றது. ஆனால் சில ட்விட்டர் கணக்குளில், மீண்டும் அதே போன்றே டிவீட்கள் பதிவிடப்பட்டுக் கொண்டே இருந்தன.
ஹேக் செய்யப்பட்ட டிவீட்களில் முக்கியமானவர்கள் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அடுத்த அதிபர்களாக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளவர்களாக கருதப்படும் ஜோசப் ஆர். பிடன் ஜூனியர் மற்றும் கன்யே வெஸ்ட், தொழில்நுட்ப நட்சத்திரங்கள் பில் கேட்ஸ் மற்றும் எலோன் மஸ்க், அத்துடன் ஆப்பிள் போன்ற நிறுவனங்களின் ட்விட்டர் கணக்குகளும் அடங்கும். ட்விட்டர், கட்டுப்பாட்டை மீட்டெடுக்க முயன்றபோது, உலகம் முழுவதும் வெரிஃபைட் செய்யப்பட்ட ட்விட்டர் ஹேண்டில்கள் சிறிது நேரம் முடக்கப்பட்டன, ட்வீட் செய்ய முடியவில்லை.
ட்விட்டர் ஹேக் எதைப் பற்றியது?
அமெரிக்காவில் புதன்கிழமை மாலை 4 மணியளவில், பல முக்கிய பிரபலங்களின் ட்விட்டர் ஹேண்டிலில், ஒரு லிங்க் ஒன்று கொடுக்கப்பட்டு, அந்த லிங்க் மூலம் அனுப்பபப்டும் பணம், இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கப்படும் என்று ட்வீட் செய்யப்பட்டிருந்தது.
ஆப்பிள் மற்றும் உபெர் நிறுவனங்களின் ட்விட்டர் ஹேண்டில்கள் முதன்முதலில் பாதிப்புக்குள்ளாகின. அதைத் தொடர்ந்து மஸ்க் மற்றும் பில் கேட்ஸ் ட்விட்டர் கணக்கில் இவ்வாறு பதிவிடப்பட்டது. ஓரிரு மணி நேரத்தில், ஒபாமா, பிடன், மைக் ப்ளூம்பெர்க் மற்றும் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் ஆகியோரின் ட்விட்டர் கணக்கிலும் இதே ட்வீட் வெளியானது. குத்துச்சண்டை வீரர் ஃபிலாய்ட் மேவெதர் மற்றும் கிம் கர்தாஷியன் ஆகியோரின் ட்விட்டர் ஹேக் செய்யப்பட, அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள மிக முக்கிய பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளை ட்விட்டர் முடக்கியது.
இருப்பினும், அடுத்த நான்கு நேரங்களில், ட்வீட்கள் மீண்டும் வெளியாக, பிட்காயின் வாலட்டில் குறைந்தது 300 பரிவர்த்தனைகள் மூலம், $100,000 தொகை பெறப்பட்டதாக வெளியானது.
இந்த சம்பவம் குறித்து ட்விட்டர் என்ன சொல்கிறது?
ட்விட்டரின் product lead கெய்வோன் பெய்க்பூர் “பாதுகாப்பு சம்பவம் குறித்த விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது” என்று ட்வீட் செய்ததோடு, ட்விட்டர் சப்போர்ட்டிலிருந்து கூடுதல் தகவல் பெற்றுக் கொள்ளலாம் என உறுதியளித்தார். “இதற்கிடையில், இந்த சம்பவத்தால் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட இடையூறு மற்றும் விரக்திக்கு நான் மிகவும் வருந்துகிறேன் என்று நான் கூற விரும்புகிறேன்” என்று அவர் கூறினார்.
தொடர்ச்சியான ட்வீட்களில், ட்விட்டர் சப்போர்ட் “பாதுகாப்பு சம்பவத்தை” ஒப்புக் கொண்டது மற்றும் மைக்ரோ-பிளாக்கிங் தளம் இந்த சம்பவத்தை மதிப்பாய்வு செய்யும் வரை ட்வீட் செய்யவோ அல்லது பாஸ்வேர்டை மாற்றியமைக்கவோ முடியாது என்று பயனர்களுக்கு அறிவித்தது.
மேலும், “பெரும்பாலான கணக்குகள் மீண்டும் ட்வீட் செய்ய முடியும். இந்த பிரச்னையை சரி செய்வதில் நாங்கள் தொடர்ந்து பணியாற்றும்போது, மீண்டும் இது வந்து போகலாம். முடிந்தவரை விரைவாக இயல்பு நிலைக்கு வர நாங்கள் பணியாற்றி வருகிறோம். ”
ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி இதை “ட்விட்டரில் எங்களுக்கு” ஒரு கடினமான நாள் என்றுதெரிவித்தார். “இதை நாங்கள் அனைவரும் பயங்கரமாக உணருகிறோம். நாங்கள் கண்டறிந்து வருகிறோம், என்ன நடந்தது என்பதைப் பற்றி முழுமையான புரிதல் இருக்கும்போது எங்களால் முடிந்த அனைத்தையும் பகிர்ந்து கொள்வோம், ”என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
ட்விட்டர் ஹேக் எப்படி நடந்தது?
Twitter Support தகவலின் படி, இந்த “coordinated social engineering attack” தாக்குதல் “எங்கள் ஊழியர்கள் சிலரை டார்கெட் செய்து, உள் அமைப்புகள் மற்றும் கருவிகளுக்கான அணுகலை வெற்றிகரமாக குறிவைத்த சில நபர்களால் செயல்படுத்தப்பட்டது. “இதன் மூலம் அவர்கள் மிகவும் பிரபலமான (வெரிஃபைட்) கணக்குகள் வழியாக ட்வீட் செய்துள்ளனர் என்பது எங்களுக்குத் தெரியும். அவர்கள் நடத்திய பிற தீங்கிழைக்கும் செயல்கள் அல்லது அவர்கள் அணுகியிருக்கக்கூடிய தகவல்களை நாங்கள் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம், மேலும் எங்களிடம் உள்ள தகவல்களை உங்களிடம் அதிகம் பகிர்ந்து கொள்வோம் ”என்று மற்றொரு ட்வீட் கூறியுள்ளது.
இந்த பாதுகாப்பு சம்பவத்தின் தாக்கங்கள் என்ன?
மிகவும் சக்திவாய்ந்த மற்றும் பிரபலமான கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளன என்பதன் தாக்கங்கள் மிகப்பெரியவை. உலகளவில் அரசியல் உரையாடல்களில் ட்விட்டர் ஏற்படுத்தியிருக்கும் செல்வாக்கைக் கருத்தில் கொண்டு, குறிப்பாக அமெரிக்காவில், பல அரசியல்வாதிகளின் வெரிஃபைட் ஹேண்டில்கள் சமரசம் செய்யப்படுவதை பார்க்க முடிகிறது. ஆனால், ட்விட்டர் தளத்தில் இது நடைபெற்றிருப்பது பார்க்க நன்றாக இல்லை.
மிசோரியைச் சேர்ந்த ஜோஷ் ஹவ்லி என்ற ஒரு செனட்டராவது ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சிக்கு கடிதம் எழுதியுள்ளார். ட்விட்டர் சில நாட்களில் அமெரிக்க அரசியல் ஸ்தாபனத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்குகிறது.
இது ஒரு தேர்தல் ஆண்டில் நடந்ததால் இந்த சம்பவம் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.. கடந்த தேர்தல்களில், சமூக ஊடகங்கள் அரசியல் லாபத்திற்காக கையாளப்படுவது பற்றியும் பல கருத்து மோதல்கள் இருந்தது.
இந்த புதிய சம்பவம் சமூக ஊடக ஜாம்பவான்கள் முன்பை விட மிகவும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்பதையும் காட்டுகிறது.