பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்தப்பட்டு வரும் இரு விரல் பரிசோதனையை உச்சநீதிமன்றம் தடை செய்திருக்கிறது. இந்நிலையில் இதற்கு முன்பாக இந்த பரிசோதனைக்கு நிலவி வந்த எதிர்ப்பை பற்றி பேசியாக வேண்டியிருக்கிறது.
ஜார்கண்ட் மாநிலம் , 2004ம் ஆண்டு 18 வயதை எட்டாத பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்படுகிறார். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய நபரை உயர் நீதிமன்றம் விடுத்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் முக்கிய தீர்ப்பு வழங்கப்பட்டது கடந்த திங்கள்கிழமை. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்.
மேலும் பாலியவல் வன்கொடுமை செய்தவரை பரிசோதனை செய்யும் இரு விரல் சோதனைக்கு எதிராக நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஹிமா கோலி கேள்வி எழுப்பினர். இந்த சோதனை பெண்களின் மதிப்பை குறைப்பதாக இருக்கிறது. அவரது சுயமரியாதைக்கு கலங்கம் விளைவிக்கிறது. மேலும் ஒரு பெண்ணின் பாலியல் உறவு பற்றிய வரலாறை வைத்து அவரை மதிப்பிடுவது எப்படி சரியாக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பினர். மேலும் இந்த சோதனை அறிவியலுக்கு எதிராக உள்ளது என்றும் கூறினர்.
இந்நிலையில் இரு விரல் சோதனை என்றால் என்ன ? என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் பிறப்பு உறுப்பில் இரு விரலை நுழைத்து, ஹைமன் ( கன்னித்திரை) எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை ஆராய்வது.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நபர் புகார் கொடுத்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த பிறகு, மருத்துவ அறிக்கைக்காக இந்த இரு விரல் பரிசோதனையை செய்து வருகின்றனர்.
ஆனால் இங்கே ஹைமன் என்ற கன்னித்திரை என்பது அனைவருக்கும் இருக்காது என்றும், அது காலப்போக்கில் மறைந்துவிடும் ஒரு ஜவ்வுதான் என்று அறிவியல் கூறுகிறது.
ஏற்கனவே பெண்களுக்கு இந்த கற்பு என்ற நெறிமுறையால் ஏற்படும் சிக்கலில். பாலியல் வன்கொடுமை செய்யப்படும் பெண்ணிடம் இந்த இரு விரல் சோதனை செய்வது எப்படி நியாயமாக இருக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
மேலும் சட்டப்படி பெண் உறுப்பில், ஆண் குறியை வலுகட்டாயமாக செலுத்துவது மட்டுமே பாலியல் வன்கொடுமை என்று கூறிவிட முடியாது. வாய் மற்றும் இதர இடங்களில், ஆண் வலுகட்டாயமாக தனது பிறப்பு உறுப்பை நுழைக்க முயற்சித்தாலே அது பாலியல் வன்கொடுமைதான். பெண்களின் அனுமதியின்றி அவளை தொடுவதே குற்றம்தான் என்று சட்டம் சொல்கிறது.
2018-ம் ஆண்டு ஐ.நா சபை இந்தப் பரிசோதனை முறையை தடை செய்து அறிவித்தது என்பது குறிப்பிடதக்கது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் 2014-ல் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களை எப்படி அணுக வேண்டும் என்பது தொடர்பாக சில வழிமுறைகளை வெளியிட்டது. இதில் இரு விரல் பரிசோதனை குறிப்புகளை நீக்க வேண்டும் என்றும் இரு விரல் பரிசோதனை முறை இன்றளவும் நடைமுறையில் இருப்பது வருந்தத்தக்கது. பெண்ணின் உறுப்பு தளர்ச்சியை சோதிக்கும் செயல்முறை பெண்களின் கண்ணியத்துக்கு எதிரானது. இரு விரல் பரிசோதனையை நடத்தும் எந்தவொரு நபரும் குற்றவாளியாக கருதப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அறிவியல் பூர்வமாகவும், நாகரீகமாகவும் வளர்ச்சியடைந்த 2022ம் ஆண்டில்தான் இந்த பரிசோதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பதே ஒரு அநீதிதான் என்று சமூக ஆர்வளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இந்த இரு விரல் சோதனையின் பெயரே கன்னித்தன்மை சோதனை என்றுதான் பொருள் என்று மருத்துவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.