UAE new 5-year visa scheme : அமீரகத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த புதிய திட்டங்கள் போடப்பட்டு வருகிறது. தற்போது உலக நாடுகளை கவரும் விதமாக 5 ஆண்டுகளுக்கான விசாவை அனைத்து நாட்டினருக்கும் நடைமுறைப்படுத்தியுள்ளது அமீரகம். நாங்கள் ஆண்டுக்கு சுமார் 21 மில்லியன் சுற்றுலாவாசிகளை வரவேற்கின்றோம்.
எங்களின் சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்தி, சிறந்த சுற்றுலாத்தளங்களை கொண்ட நாடாக வளர்ச்சி அடையும் விதமாக எங்களின் குறிக்கோள்களை கொண்டுள்ளோம். இன்று நாங்கள் எங்கள் விசா திட்டங்களில் பெரிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளோம். சுற்றுலா விசாவின் காலம் ஐந்து ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. பலமுறை வெளிநாட்டினர் அமீரகத்திற்கு வருவது இந்த விசாவின் மூலம் உறுதி செய்யப்படுகிறது என்று அந்நாட்டின் துணை அதிபர் மற்றும் பிரதமரான ஷேக் முகமது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
முக்கிய அம்சங்கள்
இதற்கு முன்பு அமீரகத்திற்கு செல்ல ஒருமுறை அல்லது பலமுறை அனுமதி அளிக்கும் டூரிஸ்ட் விசாக்கள் 30 அல்லது 90 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது வந்திருக்கும் இந்த புதிய திட்டத்தின் படி ஒருவர் 6 மாதங்கள் வரை ஒரே முறை வந்து தங்கிக் கொள்ளலாம். இதர திட்டங்கள் இன்னும் முறையாக அறிவிக்கப்படவில்லை.
பிரதமர் ஷேக் முகமது ஏற்கனவே இந்த 2020ம் ஆண்டு மிகச்சிறந்த வருடமாக அமையும் என்றும் அடுத்த 50 ஆண்டுகளுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தும் ஒரு ஆண்டாக இந்த ஆண்டு இருக்கும் என்று அறிவித்திருந்தார்.
ஒவ்வொரு ஆண்டும் அமீரகத்திற்கு பயணிப்பவர்களின் எண்ணிக்கை 2.1 கோடியாக உள்ளது. சமீபத்தில் இந்த எண்ணிக்கை மிகவும் அதிகமாகியுள்ளது. அதனால் வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறை வளர்ச்சியடையும்.
வருகின்ற அக்டோபர் மாதம் துபாய் ஒரு மாபெரும் கண்காட்சியை நடத்த உள்ளது. EXPO 2020 எனப்படும் இந்த கண்காட்சி உலகின் மிகப்பெரிய கண்காட்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2019ம் ஆண்டு ஜூலை மாதத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் பெண்களுக்கு தங்கள் கணவர்கள், தந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கான வேலை அனுமதிப்பத்திரங்களை வழங்க அனுமதித்தது, மேலும் 145 சேவைகள் மற்றும் பரிவர்த்தனைகளுக்கு வேலை அனுமதி பெறுவதற்கான கட்டணத்தை 50 சதவீதம் குறைத்து. அதே மாதத்தில், துபாய் எமிரேட் பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை (ஐ.என்.ஆர்) ஏற்றுக்கொள்வதாகக் கூறியது.