Advertisment

UAE விசா விதிகள் மாற்றம்; சுற்றுலாப் பயணி, வேலை தேடுவோருக்கு ஜாக்பார்ட்..!

சுற்றுலா விசாக்கள் தற்போது பார்வையாளர்கள் சட்டப்பூர்வமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 60 நாட்களுக்கு தங்குவதற்கு அனுமதிக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
UAEs visa rules changed How they benefit tourists and job seekers

கோல்டன் விசா வைத்திருப்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை நீண்ட கால புதுப்பிக்கத்தக்க குடியிருப்பு விசாக்கள் வழங்கப்படும்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) மேம்பட்ட விசா அமைப்பு, கடந்த மாதம் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்காக பெடரல் ஆணையத்தால் (ஐசிபி) புதிய விசா நடைமுறைகளை அறிவித்தது.
இது, நேற்றைய தினம் திங்கள்கிழமை (அக்டோபர் 3) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. முன்னதாக இது ஏப்ரல் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது.

Advertisment

புதிய விசா விதிகள் நாட்டின் குடிவரவு மற்றும் கொள்கைகளை சீர்திருத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இதில் சுற்றுலாப் பயணிகளுக்கு நீண்டநாள் விசா, குடியிருப்பு நீட்டிப்பு மற்றும் 10 ஆண்டு கோல்டன் விசா உள்ளிட்டவை அடங்கும்.
இது குறித்து வெளிநாட்டு விவகாரங்களுக்கான குடியிருப்பு பொது இயக்குனர் சுல்தான் யூசுப் அல் நுவாமி கூறுகையில், “இது வெளிநாட்டினருக்கான சுமைகளைத் தணிப்பது மற்றும் விசா நடைமுறைகளை எளிதாக்குவது தவிர, புதுப்பிக்கப்பட்ட விசா முறையானது "வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உதவும்.

இது தொழிலாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஆகியோரை மகிழ்ச்சியுடன் மாற்றும் முயற்சி ஆகும்” என்றார்.
புதிய விதிகள் என்ன, அவை சுற்றுலாப் பயணிகளை அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலை செய்ய அல்லது வசிக்க விரும்புபவர்களை எவ்வாறு பாதிக்கும்? என்பதை பார்க்கலாம்.

க்ரீன் விசா

க்ரீன் விசா, செப்டம்பர் 2021 இல் அறிவிக்கப்பட்டது, இது என்பது ஒரு வகையான புதுப்பிக்கத்தக்க-குடியிருப்பு விசா ஆகும், இது வெளிநாட்டினர் ஐந்தாண்டுகளுக்கு தங்களைத் தாங்களே ஸ்பான்சர் செய்துகொள்ள அனுமதிக்கும்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குடிமகன் அல்லது வேலை வழங்குநரைத் தங்கள் விசாவிற்கு ஸ்பான்சர் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஃப்ரீலான்ஸர்கள் அல்லது சுயதொழில் செய்பவர்கள், திறமையான தொழிலாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் அல்லது கூட்டாளர்கள் இந்த வகை விசாவிற்கு தகுதியுடையவர்கள்.

க்ரீன் விசா வைத்திருப்பவர்களுக்கு, வாழ்க்கைத் துணை, குழந்தைகள் மற்றும் முதல்-நிலை உறவினர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு அவர்களின் வதிவிட காலத்திற்கு நிதியுதவி செய்யும் திறன் போன்ற கூடுதல் நன்மைகள் வழங்கப்படுகின்றன.
பெற்றோர் தங்களின் ஆண் குழந்தைகளுக்கு 25 வயது வரை ஸ்பான்சர் செய்ய முடியும். இது முன்பு 18 ஆண்டுகளாக காணப்பட்டது. மேலும், தங்களுடைய குடியிருப்பு அனுமதி ரத்து செய்யப்பட்டாலோ அல்லது காலாவதியானாலோ, ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்பட்ட நெகிழ்வான கருணைக் காலத்தை வைத்திருப்பவர்கள் பெறுவார்கள்.

கோல்டன் விசாவின் விரிவாக்கம்

கோல்டன் விசா வைத்திருப்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை நீண்ட கால புதுப்பிக்கத்தக்க குடியிருப்பு விசாக்களை வழங்குகிறது. கோல்டன் விசாவிற்கு தகுதியானவர்களில் முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர், ஆராய்ச்சியாளர்கள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் அறிவியல் மற்றும் அறிவுத் துறைகளில் உள்ளவர்கள் மற்றும் சிறந்த மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் போன்ற விதிவிலக்கான திறமைகள் உள்ளவர்கள் அடங்குவர்.

நாட்டிற்குள் திறமையானவர்களை ஈர்ப்பதற்காகவும் தக்கவைத்துக்கொள்வதற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்ட கோல்டன் விசாக்கள் 2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அங்கீகரிக்கத் தொடங்கின.
முதல் ஆண்டில், அவற்றில் 44,000 துபாயில் மட்டும் வழங்கப்பட்டதாக ஐக்கிய அரபு எமிரேட் செய்தித்தாள் தி நேஷனல் தெரிவித்துள்ளது.
அவர்களின் வணிகங்களின் 100 சதவீத உரிமை போன்ற நன்மைகளைத் தவிர, புதிய விசா மாற்றங்கள் கோல்டன் விசா வைத்திருப்பவர்களுக்கு மற்ற நன்மைகளையும் வழங்குகிறது.

முன்னதாக, ஆறு மாதங்கள் நாட்டிற்கு வெளியே வசிப்பவர்கள் தங்களுடைய குடியுரிமையை இழந்த நிலையில், அவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வெளியே செலவழித்த நேரத்தைப் பொருட்படுத்தாமல் கோல்டன் விசா இப்போது செல்லுபடியாகும்.
அவர்கள் ஸ்பான்சர் செய்யக்கூடிய வீட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் எந்த வரம்பும் இல்லை. மனைவி மற்றும் குழந்தைகள் உட்பட - எந்த வயதினரையும் ஸ்பான்சர் செய்ய அனுமதிக்கும் - மேலும் கோல்டன் விசா இருந்தாலும் குடும்ப உறுப்பினர்களை UAE இல் தங்க அனுமதிக்கும். விசா வைத்திருப்பவர் இறந்தாலும், விசா உயிர்ப்புடன் இருக்கும்.

மேலும் பலர் இப்போது கோல்டன் விசாவிற்கு தகுதி பெற்றுள்ளனர். கலீஜ் டைம்ஸ் அறிக்கையின்படி, அறிவியல் மற்றும் பொறியியல், மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், வணிகம் மற்றும் நிர்வாகம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் திறமையான நிபுணர்களும் இப்போது 10 வருட விசாவைப் பெறலாம்.
மாதச் சம்பளமும் AED 50,000 (ரூ. 11.1 லட்சம்) என்ற வரம்பிலிருந்து AED 30,000 ஆக (ரூ. 6.6 லட்சம்) குறைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் மற்றும் பிறருக்கான மாற்றங்கள்

சுற்றுலா விசாக்கள் தற்போது பார்வையாளர்கள் சட்டப்பூர்வமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 60 நாட்களுக்கு தங்குவதற்கு அனுமதிக்கும், இது முந்தைய 30 நாட்களை விட அதிகமாகும்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடர்ந்து 90 நாட்கள் தங்குவதற்கு அனுமதிக்கும் ஐந்தாண்டு, நெகிழ்வான பல நுழைவு சுற்றுலா விசாவும் அறிமுகப்படுத்தப்பட்டன.

மேலும், திறமையான வல்லுநர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலை தேடுவதை எளிதாக அனுமதிக்கும் வேலை ஆய்வு விசாவிற்கு ஸ்பான்சர் அல்லது ஹோஸ்ட் தேவையில்லை.
இவர்கள், மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகத்தின் முதல், இரண்டாவது அல்லது மூன்றாவது திறன் நிலை வகைப்பாட்டின் கீழ் வருபவர்கள்.
மேலும், இந்த விசாவுக்கு உலகின் சிறந்த 500 பல்கலைக்கழகங்களில் இருந்து புதிய பட்டதாரிகள் வேலை ஆய்வு விசாவிற்கு தகுதி பெறுவார்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Uae Visa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment