Advertisment

உபர் ஓட்டுனர்கள் பற்றி இங்கிலாந்து தீர்ப்பு: இந்தியாவில் தாக்கம் ஏற்படுத்துமா?

Uber Drivers are not freelance contractors : குறைந்தபட்ச ஊதிய சட்டம் உபர் ஓட்டுநர்கள் போன்ற அனைத்து முறைசாரா தொழிலாளர்களுக்கும் பொருந்தும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
உபர் ஓட்டுனர்கள் பற்றி இங்கிலாந்து தீர்ப்பு: இந்தியாவில் தாக்கம் ஏற்படுத்துமா?

உபர் ஓட்டுநர்கள் அந்நிறுவனத்தின் தொழிலாளர்களாக கருதப்பட வேண்டும் என்றும், ஒப்பந்தக்காரர் இல்லை என்றும் இங்கிலாந்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. இதன் மூலம்,  குறைந்தபட்ச ஊதியம், வருடாந்திர விடுமுறை, காப்பீடு போன்ற வேலைவாய்ப்பு சலுகைகளை பெறுவதற்கு தகுதியுடையவராக கருதப்படுவர்.

Advertisment

இந்த தீர்ப்பினால், இந்தியாவில் செயல்பட்டு வரும் உபர் போன்ற பிற சேவை வழங்கும் தளங்கள் சட்டம் மற்றும் ஒழுங்குமுறை சவால்களை எதிர்கொள்ளக்கூடும்.  ஏனெனில், பெரு தொழில்நுட்ப நிறுவனங்கள் புவியியல் ரீதியாக தங்கள் சேவை விதிமுறைகளை வேறுபடுத்தி வருவதை இந்தியா அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.

தீர்ப்பின் சாரம்சங்கள் என்ன? 

உபர் ஓட்டுநர்கள் தொடர்பாக இங்கிலாந்து வேலைவாய்ப்பு தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை எதிர்த்து யுபெர் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

வழக்கு விசாரணையின் போது, "பல நாடுகளிலும் நகரங்களிலும் தானுந்துப் பகிர்வு மற்றும் வாடகையுந்துச் சேவைகளை வழங்கி வருகிரோம். நுண்ணறிபேசி பயன்பாட்டுச் செயலி மூலம் சவாரிக் கோரிக்கைகளை ஏற்று அதனைத் தங்கள் ஓட்டுநர்களுக்கு அனுப்பி வைக்கிறோம். வாடிக்கையாளர்களும், ஓட்டுநர்களுக்கு  இடையே ஒப்பந்த அடிப்படையில் சேவைகள் நிறைவேறுகிறது. மேலும், இது நிலையான கால வேலைவாய்ப்பு இல்லை. உபர் ஓட்டுநர்கள் தாங்கள் விரும்பும் நேரங்களில் பணியை சுதந்திரமாக செய்கின்றனர். பணி செய்ய அவர்கள் நிர்பந்திக்கப்படவில்லை. எனவே, அவர்கள் உபர் நிறுவனத்துக்கு வேலை செய்யவில்லை என்று பொருள் கொள்ளப்படுகிறது" என்று தெரிவித்தது.

எவ்வாறாயினும், இந்த மனுவை நிராகரித்த இங்கிலாந்தின் உச்சநீதிமன்றம், "உபர் நிறுவனத்துக்கும்  ஓட்டுநர்களுக்கும் இடையே சட்ட ரீதியான ஒப்பந்தம் இல்லாதது தொழிலாளி, முதலாளி என்ற அடிப்படை உறவை மாற்றியமைக்காது என்றும், உபர் நிறுவனம்  முதலாளியாகத் தான் பொருள் கொள்ளப்படும்" என்று தெரிவித்தது.

"பாதிக்கப்படக்கூடிய நபர்களின் ஊதியத்தையும், மேம்பட்ட பணிச் சூழல்களை உருவாக்குவதுமே இதன் நோக்கம். ஓட்டுநர்கள் கீழ்ப்படிந்த மற்றும் சார்புடைய நிலையில் உள்ளனர்" என்று இங்கிலாந்து உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது.

தீர்ப்புக்கான ஐந்து காரணங்கள்: 

1. உபர் நிறுவனத்தின் நுண்ணறிபேசி பயன்பாட்டு அதிகபட்ச விலையை நிர்ணயிக்கிறது. இந்த விலைக்கு உட்பட்டு தான் ஓட்டுநர்களும், பயணிகளும் பயணங்களைத் தொடர்கின்றனர்.

2. ஓட்டுநர்களின் சேவை வழிமுறைகளை உபர் நிறுவனம் தன்னிச்சையாக தீர்மானிக்கிறது.

3. உபர் செயலிக்குள் உள்நுழைந்ததும் ஓட்டுநர்கள் பயண சவாரியை ஏற்றுக்கொள்து, நிராகரிப்பது போன்ற முக்கிய முடிவுகளில் ஓட்டுநர்கள் பங்கு குறைவாகவே உள்ளது. ஏனெனில், அவர்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுகின்றனர். சவாரியை ஏற்றுக்கொள்ளும் விகிதமும், நிராகரிக்கும் விகிதமும் தொடர்ச்சியாக கணக்கிடப்பட்டு வருகிறது.

4. சேவை மதிப்பீடு வழங்கும் திட்டத்தின் மூலம்  ஓட்டுநர்களை தக்கவைத்துக் கொள்ளவும் முழுமையான  அணுகுமுறைதை உபர் நிறுவனம் கையாள்கிறது.

5.  ஓட்டுநர்களுக்கும், பயணிகளுக்கும் இடையே உள்ள தகவல் தொடர்பை முழுமையாக துண்டிப்பதன் மூலம், உபர நிறுவனம் ஒரு இடைத்தரகராக விளங்குகிறது.

இந்தியாவில் ஏற்படும் தாக்கங்கள் என்ன? 

உடனடியாக எந்த மாற்றமும் ஏற்படாது. இருப்பினும்,பெரு நிறுவனங்கள் புவியியல் ரீதியாக தங்கள் சேவை விதிமுறைகளை வேறுபடுத்தி வருவதை இந்தியா அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.

அமைப்புசாரா தொழிலாளர் நலனுக்கான அரசின் முயற்சிகளை மேம்படுத்தும் வகையில், ஒரு முனையம் ( Portal) உருவாக்கப்படும் என நிர்மலா சீதாராமன் முன்னதாக அறிவித்தார். தனியாக வேலை பார்ப்பவர்கள் (கிக் பொருளாதாரம்), கட்டடங்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் குறித்த தகவல்கள் இதன் மூலம் சேகரிக்கப்படும்.

2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நிதி அறிக்கையில்,  குறைந்தபட்ச ஊதிய சட்டம் உபர் ஓட்டுநர்கள் போன்ற அனைத்து முறைசாரா தொழிலாளர்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டது. அத்தகைய தொழிலாளர்கள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவார்கள். இந்தியாவில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சில ஓய்வுக்கால ஆதாயங்களை வழங்குவதற்கும், அவர் இறந்து விட்டால் அவரை சார்ந்திருக்கும் குடும்பத்தினருக்கு சில உதவிகளை வழங்குவதையும் இச்சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்துடன் தொழிலாளர்களுக்கு சேமிப்பு உணர்வையும் வளர்க்கிறது.

முன்னதாக, வாகன சேவை நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு அவர்களை பொறுப்பேற்கச் செய்வதற்காக, ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

Explained: Will UK ruling on Uber drivers have an impact on India?

மேலும், தானுந்துப் பகிர்வு மற்றும் வாடகையுந்துச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கான சிறப்பு விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. புதிய விதிமுறையின் கீழ், பெரு நிறுவனங்கள் ஓட்டுநரிடம் இருந்து ஒரு சவாரிக்கு அதிகபட்சமாக 20 சதவீத தொகையை மட்டுமே வசூலிக்கக்கூடும். வாகன ஓட்டுநர்களின் பணி நேரம் அதிகபட்சமாக 12 மணி நேரம் என்றும் தெரிவிக்கப்பட்டது,

வாகனங்கள் மற்றும் ஓட்டுநர்கள் குறித்த விதிமுறைகளும், சேவைக்கான கட்டணங்கள், ஓட்டுநர்களின் நலன், மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள், வாகனங்களையும் பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவற்றையும் இந்த வழிகாட்டுதல்கள் கவனத்தில் கொள்கின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Uber
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment