Advertisment

உதய்பூர் கொலையாளிகள்… தாவத்-இ-இஸ்லாமி அமைப்பின் சித்தாந்தம் பின்னணி என்ன?

உதய்பூரில் தையல்காரரைக் கொன்ற 2 பேரில் ஒருவரை, ராஜஸ்தான் போலீஸார் தாவத்-இ-இஸ்லாமி அமைப்புடன் தொடர்புபடுத்தி தெரிவித்துள்ளனர். மும்பையைத் தளமாகக் கொண்ட இந்தியாவில் உள்ள இந்த சன்னி குழு, தாவத்-இ-இஸ்லாமி அமைப்புக்கு பாகிஸ்தானுடன் எந்த தொடர்பும் இல்லை.

author-image
WebDesk
New Update
udaipur tailor killed, kanhaiya lal udaipir, udaipur murder, Da’wat-e-Islami, udaipur news, udaipur tailor, உதய்பூர் கொலை, தாவத் இ இஸ்லாமி, தப்லிகி ஜமாத், பாகிஸ்தான், udaipur tailor murder, udaipur tailor Kanhaiyalal, udaipur tailor killed, tailor killed nupur sharma, udaipur nupur sharma tailor killed, rajasthan news, tamil indian express

உதய்பூரில் தையல்காரரைக் கொன்ற 2 பேரில் ஒருவரை, ராஜஸ்தான் போலீஸார் தாவத்-இ-இஸ்லாமி அமைப்புடன் தொடர்புபடுத்தி தெரிவித்துள்ளனர். மும்பையைத் தளமாகக் கொண்ட இந்தியாவில் உள்ள இந்தக் குழு பிரிந்து சென்ற சன்னி குழுவான தாவத்-இ-இஸ்லாமி அமைப்புக்கு பாகிஸ்தானுடன் எந்த தொடர்பும் இல்லை.

Advertisment

உதய்பூரில் செவ்வாய்க்கிழமை தையல்காரர் கன்ஹையா லாலைக் கொன்ற கவுஸ் முகமதுவை ராஜஸ்தான் காவல்துறை தாவத்-இ-இஸ்லாமி அமைப்புடன் தொடர்புபடுத்தியுள்ளது. 40 ஆண்டுக்ளுக்கு முன்னர் சன்னி பரேல்வி மதமாற்றக் குழு பாகிஸ்தானில் தொடங்கப்பட்டது. இது பல மேற்கத்திய நாடுகளில் நடவடிக்கைகளைக் கொண்டுள்ளது. மும்பையைத் தளமாகக் கொண்ட இந்தியாவில் உள்ள தாவத்-இ- இஸ்லாமி அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற சன்னி குழுவுக்கு பாகிஸ்தானுடன் எந்த தொடர்பும் இல்லை.

தெஹ்ரீக்-இ-லப்பைக் பாகிஸ்தான் (TLP), பரேல்வி குழு 2016 ஆம் ஆண்டிலிருந்து மத நிந்தனை மற்றும் நபியின் பிரச்சினைகளில் அதன் பேரணித் திறனையும் தெருமுனை போராட்ட சக்தியையும் பலமுறை வெளிப்படுத்தியுள்ளது.

தாவத்-இ இஸ்லாமி உறுப்பினர்கள் பலர் இப்போது 2015 இல் வந்த லப்பைக் அமைப்பின் ஒரு பகுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

நபி கார்ட்டூன் சர்ச்சையில் இஸ்லாமாபாத் பிரான்சுடனான இராஜதந்திர உறவுகளை துண்டிக்க வேண்டும் என்று 2020-21 இல் லப்பைக் அதன் தொண்டர்களைத் திரட்டியது. இந்த அமைப்பு 2018 தேர்தலில் போட்டியிட்டு சிந்து சட்டமன்றத்தில் 2 இடங்களை வென்றது.

ஜனவரி 2011 இல், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண ஆளுநரான சல்மான் தசீரை, போலீஸ் மெய்க்காப்பாளர் மும்தாஜ் காத்ரி சுட்டுக் கொன்றபோது, அவருக்கு தாவத்-இ-இஸ்லாமி அமைப்புடன் தொடர்பு இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். காத்ரி தனது கட்சியைச் சேர்ந்தவரா என்பது குறித்து தனக்கு எந்தத் தகவலும் தெரியாது என்று தாவத்-இ இஸ்லாமி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் அகமது அட்டாரி கூறியதாக ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் செய்தியில் கூறியுள்ளது. தாவத்-இ-இஸ்லாமி உறுப்பினர்கள் சன்னி இஸ்லாத்தின் பரேல்விசம் பிரிவை மிதமாக பின்பற்றுபவர்கள் என்றும் அவர்கள் போராட்டம் அல்லது ஆர்ப்பாட்டங்களில் நம்பிக்கை இல்லாதவர்கள் என்றும் அவர் கூறினார்.

காத்ரி விடுதலையாகி லப்பைக் அமைப்பில் இருந்து வெளியேறி வளர்ந்தார். தசீரைக் கொன்றதற்காக அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட பிறகு, அவரைப் பின்பற்றுபவர்களை வேகமாக பெற்றார்.

இந்த அமைப்பு 1981 இல் உருவாக்கப்பட்டது, தாவத்-இ-இஸ்லாமி என்பது சன்னி பிரிவினர் இஸ்லாத்தை மெய்நிகர் தேவ்பந்தி கையகப்படுத்தியதற்கு பரேல்வி பதிலாக இருந்தது. அந்த காலகட்டத்தில் பாகிஸ்தான் இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும் ஜிஹாதிசத்திற்கு சவூதிகளால் நிதியுதவி அளித்து அமெரிக்காவின் உதவியுடன் சோவியத் ரஷ்யாவுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியது.

ஜிஹாதி டான்சீம்கள் தேவ்பந்தி மசூதிகளைக் கட்டி, தியோபந்தி போதனைகளில் பயிற்றுவிக்கப்பட்டனர். பாகிஸ்தானில் உள்ள பரேல்வி சன்னி தலைமையின் பரிசீலனையில், பாகிஸ்தான் இராணுவத்தின் பயிற்சியும் ஆதரவும் தியோபந்தியை பெரியதாக்கியது. சோவியத் பின்வாங்கலுக்குப் பிறகு, தலிபான்களின் தோற்றத்திற்கும் இஸ்லாத்தின் தீவிர விளக்கத்திற்கும் தியோபந்திகள் பங்களித்தனர்.

தாவத்-இ இஸ்லாமி அமைப்பின் நிறுவனர் முஹம்மது இலியாஸ் அத்தர் காதிரி, 1950 இல் கராச்சியில் கச்சி மேமன் குடும்பத்தில் பிறந்தார். அவரது பெற்றோர் பிரிவினைக்கு முந்தைய இந்தியாவில் உள்ள ஜுனாகரைச் சேர்ந்தவர்கள். 1921 இல் உருவாக்கப்பட்ட செல்வாக்குமிக்க நாடுகடந்த தியோபந்தி மிஷனரி குழுவான தப்லிகி ஜமாத் போலவே அவர் தாவத்-இ இஸ்லாமி அமைப்பை வடிவமைத்தார். தப்லிகி ஜமாத் போலவே, தாவத்-இ இஸ்லாமி அமைப்பு, பின்பற்றுபவர்களை மிஷனரி பணிக்காக நீண்ட சுற்றுப்பயணங்களுக்கு அனுப்புகிறது. வெவ்வேறு இடங்களில் இஜ்திமா அல்லது சபைகளை நடத்துகிறது. தப்லிகி ஜமாத்தைப் போலவே, இது உள் ஆன்மீக சீர்திருத்தத்திற்கான தேடலான தப்லிகி மற்றும் சமூகத்தின் சீர்திருத்தம் ஆகியவற்றிலும் கவனம் செலுத்துகிறது. ஆனால் தாவத்-இ-இஸ்லாமி மற்றும் தப்லிகி சித்தாந்தம், இறையியல் மற்றும் கோட்பாட்டில் வேறுபடுகின்றன. தாவத்-இ-இஸ்லாமி அமைப்பின் உறுப்பினர்கள் தங்கள் பச்சை தலைப்பாகையால் வேறுபடுகிறார்கள். அது மதீனாவில் உள்ள நபி மசூதியின் பச்சை குவிமாடத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

தப்லிகி ஜமாத் எந்த அரசியல் சித்தாந்தத்துடனான தொடர்பையும் மறுக்கிறது. 1980கள் மற்றும் 1990 களில் பாகிஸ்தானில் உருவான வன்முறை ஜிஹாதி இயக்கங்களுடனான தொடர்பை மறுக்கிறது. ஆனால், இந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் 9/11 க்குப் பிந்தைய பயங்கரவாத எதிர்ப்பு விசாரணைகள் பரபரப்பானது. பல தீவிரமான நபர்கள் தப்லிகி ஜமாத் உறுப்பினர்களாக இருந்ததை வெளிப்படுத்தியது.

உதய்பூரை சேர்ந்தவர் முகமது ரியாஸ், கவுஸ் முகமது. தசீரைக் கொல்லப்படுவதற்கு முன்பு, தாவத்-இ-இஸ்லாமி அமைப்பு செல்வாக்கு இல்லாத அமைப்பாக இருந்தது. ஆனால், அந்த சம்பவம் மற்றும் தெஹ்ரிக்-இ-இலப்பைக்-இன் செயல்பாடுகள் காரணமாக சமீபத்திய ஆண்டுகளில் பரேல்விஸத்தின் செல்வாக்கு மற்றும் பாக்கிஸ்தான் ராணுவத்துடன் அதன் வெளிப்படையான நெருக்கம் ஆகியவை வெளிச்சத்திற்கு வந்தன.

“லஷ்கர் இ ஜாங்வி மற்றும் பிற தியோபந்தி குழுக்களுடன் தப்லிகி ஜமாத் கொண்டுள்ள அதே உறவை லப்பைக்குடன் தாவத்-இ-இஸ்லாமி அமைப்பும் கொண்டுள்ளது” என்று பாகிஸ்தானிய எழுத்தாளரும் கருத்து சொல்பவருமான ஆயிஷா சித்திக் கூறினார். “தாவத்-இ-இஸ்லாமி அமைபினர் பலர் இப்போது லப்பைக்கில் சேர்ந்துள்ளனர்.” என்று கூறினார்.

பரேல்விகள் பாகிஸ்தான் மக்கள்தொகையில் 50% க்கு அருகே உள்ளனர். ஆனால், பாகிஸ்தானிய இராணுவ ஸ்தாபனம் தியோபந்தியர்களுடன் சேர்ந்து அரசியல் ரீதியாக ஓரங்கட்டப்பட்டதை அவர்கள் கண்டனர். தப்லிகி ஜமாத் போன்ற ஒரு பெரிய சர்வதேச வலையமைப்பாக மாறுவதற்கு தாவத்-இ-இஸாமி அமைப்பு ஆசைப்பட்டாலும், உறுப்பினர்கள் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அல்லது காஷ்மீரில் வன்முறை ஜிஹாதை கையில் எடுக்கவில்லை. மாறாக, லஷ்கர்-இ-ஜாங்வி, சிபா-இ-சஹாபா மற்றும் தலிபான் போன்ற குழுக்களால் பரேல்விஸம் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. பரேல்வியை வழிபடும் மசூதி இஸ்லாமாபாத்தில் உள்ள பாரி இமாம் மற்றும் லாகூரில் உள்ள டேட்டா தர்பார் உட்பட பாகிஸ்தானில் உள்ள அனைத்து முக்கியமான தர்காக்களையும் குண்டுவீசித் தாக்கியதைக் கண்டுள்ளது.

சன்னி தெஹ்ரீக், பரேல்வி மசூதிகளை தியோபந்திஸ் மற்றும் அஹ்லே ஹதீஸ் (வஹாபிசத்தின் தாக்கம் மற்றும் செல்வாக்கு பெற்ற மற்றொரு சன்னி சீர்திருத்த இயக்கம்) கைப்பற்றாமல் பாதுகாக்க உருவாக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு நிஷ்தார் பூங்கா, கராச்சி குண்டுவெடிப்பிலிருந்து அதன் முக்கிய தலைவர்கள் மீளவில்லை அனைவரும் கொல்லப்பட்டனர்.

பரேல்வி சிந்தனைப் பள்ளி ஒரு காலத்தில் இஸ்லாத்தின் மிதவாத முகமாக முன்னிறுத்தப்பட்டது. மேலும், அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றிய பாகிஸ்தானின் முன்னாள் இராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப், தலிபான்களை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள பரேல்விசத்தைப் பயன்படுத்தலாம் என்று நினைத்தார். இருப்பினும், அந்த திட்டம் 2011-இல் காத்ரியால் தசீரின் படுகொலைக்குப் பிறகு முடிவுக்கு வந்தது. முன்பு இருந்ததைப் போல, பரேல்விசம் இனி மென்மையான இஸ்லாம் மற்றும் சூஃபிஸத்துடன் தொடர்புபடுத்தப்படாது என்பதை தெஹ்ரீக்-இ-இலப்பை பாகிஸ்தான் உறுதி செய்துள்ளது.

மத நிந்தனை விவகாரம் பரேல்விசத்தை இப்படி தீவிரமாக்கியுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள, சன்னி தெஹ்ரீக் (இப்போது பாகிஸ்தான் சன்னி தெஹ்ரீக் என்று அழைக்கப்படும் ஒரு அரசியல் கட்சி), அதன் மசூதிகளைப் பாதுகாப்பது குறித்த முழக்கத்துடன் தொடங்கிய ஜவானியன் லுடைங்கை, மஸ்ஜிதைன் பச்சயீங்கை - இப்போது “தௌஹீன்” என்ற முழக்கத்தைப் பயன்படுத்துகிறது. ரஸலத் கி ஏக் ஹி சஜா, தன் சே சர் ஜூடா” (அதாவது நபியை அவமதிக்கும் எவருக்கும் தலை துண்டிப்பது மட்டுமே தண்டனை).

தாவத்-இ-இஸ்லாமி இன்று

கராச்சியை தளமாகக் கொண்ட இந்த குழு இப்போது உலகம் முழுவதும் உள்ளது. இது மதானி சேனல், தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் என்ற தொலைக்காட்சி சேனலை நடத்துகிறது.

1992 ஆம் ஆண்டில், மும்பையை தளமாகக் கொண்ட தாவத்-இ-இஸ்லாமியின் இந்தியா பிரிவு, தப்லிகி ஜமாத் மாதிரி போல காபி செய்து வேறுபட்டதால், அதன் பாகிஸ்தானிய மூரிங்க்களில் இருந்து பிரிந்தது. இந்தியக் கிளையின் தலைவரான மௌலானா முகமது ஷாகிர் அலி நூரி, மும்பையில் சன்னி தாவத்-இ இஸ்லாமி என்று ஒரு தனி அமைப்பைத் தொடங்கினார்.

உதய்பூர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாக்கிஸ்தான் பிரிவுடன் கருத்தியல் தொடர்புகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஏனெனில் இருவரும் தாவத்-இ இஸ்லாமி தலைவர் முகமது இலியாஸ் அட்டர் காத்ரிக்குப் பிறகு அட்டாரி என்ற வார்த்தையை தங்கள் பெயர்களுக்குப் பிறகு பயன்படுத்துகின்றனர். இது பாகிஸ்தான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பின்பற்றும் நடைமுறையாகும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Rajasthan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment