யஷீ, கட்டுரையாளர்
இப்போது சில மாதங்களாக சீனா தன்னுடைய உய்குர் மக்களுக்கு என்ன செய்கிறது என்பது பற்றி சர்வதேச கவலைகள் வளர்ந்து வருகிறது. சீனாவின் வடமேற்கு ஷின்ஜியாங் மாகாணத்தில் குவிந்துள்ள உய்குர் மக்கள் ஒரு முஸ்லிம் சிறுபான்மை சமூகம்.
சீனாவில் இருந்து வெளிவரும் செய்திகள், உய்குர் மக்கள் சீனாவைவிட துருக்கி மற்றும் பிற மத்திய ஆசிய நாடுகளுடன் நெருக்கமான இன உறவுகளைக் கொண்டுள்ளதாக கூறுகின்றன. அவர்களை சீனா கொடூரமாக மிருகத்தனமான சக்தியுடன் கட்டுப்படுத்தி வருகிறது.
சுமார் ஒரு மில்லியன் உய்குர்கள், கசாக் மற்றும் பிற முஸ்லிம்கள் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் தங்கள் அடையாளத்தை விடுவதற்கான கல்வி கற்பிக்கப்படுவதாகவும், அவர்கள் ஹான் சீனர்கள் ஆதிக்கம் செலுத்தும் கம்யூனிச நாட்டில் சிறப்பாக ஒருங்கிணைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
குழந்தைகள் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளனர். குடும்பங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. மொத்த மக்களும் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உலகின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளனர். நாட்டிலிருந்து தப்பிக்க முடிந்த சிலரே இந்த முகாம்களில் நிலவும் உடல், மன ரீதியான சித்திரவதைகளையும் பாலியல் சித்திரவதைகளையும் பற்றி பேசுவதாகக் கூறப்படுகிறது.
சீனா இதுபோன்ற அனைத்து குற்றச்சாட்டுகளையும் உறுதியாக மறுக்கிறது. மேலும், இந்த முகாம்களை கல்விநிலையங்கள் எனக் கூறுகிறது. அங்கே உய்குர்க்களின் தீவிரவாத எண்ணம் தீவிரமயமாக்கல் ஆகியவற்றை குணப்படுத்தி தொழிற்திறன்களை கற்பிப்பதாகவும் கூறுகிறது.
இருப்பினும், சமீபத்தில், கசிந்த அரசாங்க ஆவணங்களின் தொகுப்பு தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு கிடைத்துள்ளது. இதில் முகாம்கள் எப்படி, ஏன் அமைக்கப்பட்டன; அங்கு என்ன நடக்கிறது; அரசாங்கம் அவர்களிடமிருந்து எதை அடைய முயல்கிறது என்பதைப் பற்றி திரைக்குப் பின்னால் ஒரு பார்வை அளிக்கிறது.
இந்த ஆவணங்களில் உண்மையில் என்ன இருக்கிறது?
தி நியூயார்க் டைம்ஸ் கருத்துப்படி “சீன அரசியல் கட்சியின் உறுப்பினர் ஒருவரால் இந்த ஆவணங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டன. அவர் தன்னுடைய பெயரை வெளியிடக் கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளார். அவர் யாரென தெரிவிப்பது சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட கட்சித் தலைவர்களின் வெகுஜன தடுப்புக்காவல் குற்றத்திலிருந்து தப்பிப்பதைத் தடுக்கும் என்று தெரிவித்தார்.” என்று குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக கசிந்த ஆவணங்கள் 24 ஆவணங்களைக் கொண்டிருப்பதாக அந்த செய்தித்தாள் கூறுகிறது. அதில் “ஷி ஜின்பிங் மற்றும் பிற தலைவர்களின் கிட்டத்தட்ட 200 பக்க உள்விவகார உரைகளும் 150-க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட உத்தரவுகளும், ஷின்ஜியாங்கில் உள்ள உய்குர் மக்களின் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு குறித்த அறிக்கைகளும் அடங்கும் உள்ளன.
இதில் இஸ்லாத்தின் மீதான கட்டுப்பாடுகளை சீனாவின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தும் திட்டங்கள் குறித்தும் குறிப்புகள் உள்ளன.
சீனா ஏன் உய்குர்களை குறிவைக்கிறது?
சீனாவின் மிகப்பெரிய பகுதியான ஷின்ஜியாங் நிர்வாக ரீதியாக சீனாவிற்குள் ஒரு தன்னாட்சி பகுதி. தாதுக்கள் நிறைந்துள்ள பகுதி. மேலும், அது இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட எட்டு நாடுகளுடன் எல்லைகளைப் பகிர்ந்துகொள்கிறது.
உய்குர்கள் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மாண்டரின் மொழியை தங்கள் சொந்த மொழியாகப் பேசமாட்டார்கள். அவர்கள் சீனாவின் பிரதான நிலப்பகுதியிலிருந்து வேறுபட்ட இனமும் கலாச்சாரமும் கொண்டவர்கள்.
கடந்த சில தசாப்தங்களாக, பொருளாதார செழிப்பு ஷின்ஜியாங்கிற்கு வந்துள்ளதால், அது அதிக எண்ணிக்கையிலான ஹான் சீனர்களை அங்கே கொண்டு வந்துள்ளது. அவர்கள் சிறந்த வேலைகளை குறிவைத்துள்ளனர். மேலும், உய்குர்கள் தங்களுடைய வாழ்வாதாரங்களையும் அடையாளத்தையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளதாக உணர்ந்தனர்.
இது 2009 ஆம் ஆண்டில் பரவலான வன்முறைக்கு வழிவகுத்தது. அந்த பிராந்தியத்தின் தலைநகர் உரும்கியில் உச்சக் கட்டத்தை அடைந்த ஒரு கலவரத்தில் 200 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெருமாலும் ஹான்சீனர்கள்.
2014 இல், ஜனாதிபதி ஷி ஜின்பிங் சிஞ்சியாங்கிற்கு வருகை தந்தார். அவரது பயணத்தின் கடைசி நாளில், உரும்கியில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். கிட்டத்தட்ட 80 பேர் காயமடைந்தனர்.
இதற்கு சில வாரங்களுக்கு முன்பு, உய்குர் ஆயுததாரிகள் ஒரு ரயில் நிலையத்தில் குத்திக் கொல்லப்பட்டனர். அதில் 31 பேர் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து, மே மாதம், அந்தப் பிராந்தியத்தில் ஒரு காய்கறி சந்தையில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 39 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த வன்முறைகளுக்குப் பிறகு பதிலடி கடினமாக்கப்பட்டது. சீன அரசாங்கம் எப்படியோ உய்குர்க்களை வெற்றிகொண்டது.
உலகின் பிற பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா விலகிய நிலையில், ஒரு உள்ளூர் போர்க்குணமானது ஒரு பயங்கரவாத-பிரிவினைவாத சக்தியாக வளரக்கூடிய ஒன்றாக கருதப்பட்டது. இது சீனாவிலிருந்து விலகி ஒரு சுயாதீனமான ‘கிழக்கு துர்கிஸ்தான்’ அமைப்பதில் உறுதியாக இருந்தது.
இங்கிருந்து வரும் சீனக் கொள்கை முழு சமூகத்தையும் சந்தேக நபர்களாகக் கருதுவதோடு, ஒரு தனித்துவமான உய்குர் அடையாளத்தை மெதுவாக நீக்குவதற்கு முறைப்படுத்தப்பட்ட திட்டத்தைத் தொடங்குகிறது.
இந்த முகாம்களில் என்ன நடக்கிறது?
தீவிரவாதம் என்றால் என்ன என்பதை அரசாங்கம் தீர்மானிப்பதன் மூலம், தீவிரவாதத்தின் எந்த அறிகுறிகளையும் காண்பிப்பதற்காக மக்களை அரசாங்கம் நடத்தும் தீவிரமயமாகுதலை நீக்கும் முகாம்களுக்கு அனுப்ப முடியும். தீவிரவாதத்தின் அறிகுறிகளாக நீளமான தாடி, ரம்ஜானின் போது உண்ணாவிரதம், பெரும்பான்மையினரிடமிருந்து மாறுபட்டு வித்தியாசமாக ஆடை அணிதல், ஈத் வாழ்த்துகளை அனுப்புதல், அடிக்கடி பிரார்த்தனை செய்தல், புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கத்தை கைவிடுதல், அல்லது மாண்டரின் மொழி தெரியாமல் இருப்பது ஆகியவை தீர்மாணிக்கப்படுகிறது.
புத்திசாலியான உய்குர் குழந்தைகள் உண்டு உறைவிடப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டனர். இதனால், அவர்கள் சீனாவுக்கு விசுவாசமான அரசு ஊழியர்களாக மதிக்கப்படுவார்கள்.
மூன்று ஆண்டுகளில், அரசாங்கம் ஒரு மில்லியன் மக்களை மறு கல்வி முகாம்களில் அனுப்பியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அவர்களுடைய வேலைகளையும், சொத்துக்களையும் அவர்களின் குழந்தைகளையும் விட்டு வெளியேறுகிறார்கள்.
தடுப்பு முகாம்கள் கட்டிடத்துடன் உண்டு உறைவிடப் பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகளின் பரபரப்பான கட்டிடமும் உள்ளது. பாதுகாவலர்களால் அழைத்துச் செல்லப்பட்ட குழந்தைகள் இந்த வசதிகளுடன் வைக்கப்படுகிறார்கள். அங்கு அவர்களுக்கு கற்பிக்கப்படும் விஷயங்களில் ஒன்று சீனாவுக்கு விசுவாசமாக இருப்பது.
இந்த தடுப்பு முகாம்களுக்குள் இருந்து சித்திரவதை செய்திகள் வந்துள்ளன.
ஒரு முன்னாள் கைதி பிபிசியிடம் கூருகையில், “அவர்கள் என்னை தூங்க விடமாட்டார்கள். அவர்கள் என்னை மணிக்கணக்கில் தொங்கவிடுவார்கள். அவர்கள் என்னை அடிப்பார்கள். அவர்கள் தடிமனான மரம் மற்றும் ரப்பர் தடிகள், முறுக்கப்பட்ட கம்பியிலிருந்து தயாரிக்கப்பட்ட சவுக்கு, தோலைத் துளைக்க ஊசிகள். நகங்களை வெளியே இழுப்பதற்கான இடுக்கி ஆகியவற்றை வைத்திருந்தனர். இந்த கருவிகள் அனைத்தும் எனக்கு முன்னால் உள்ள மேசையில் காட்டப்பட்டன. எந்த நேரத்திலும் பயன்படுத்த தயாராக இருந்தன. மற்றவர்கள் அலறுவதை என்னால் கேட்க முடிந்தது.
ஒரு சக பெண் கைதி மாதவிடாய் இரத்தப்போக்குக்கு மருத்துவ உதவி வேண்டியதற்காக எப்படி இறந்தார் என்பதை தான் பார்த்ததாக ஒரு பெண் கூறினார். முகாம்கள் எவ்வாறு கூட்டமாக இருந்தன என்றும் அவர்கள் ஷிப்டுகளில் நின்று தூங்க வேண்டியிருந்தது பற்றியும் கூறினார்.
கல்லூரிகளில் இருந்து திரும்பிய கைதிகளின் குழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ வரிகள் பற்றி நியூ யார்க் டைம்ஸ்-க்கு கசிந்த ஆவணங்கள் பேசுகின்றன. அவர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் சீனாவின் பிற பகுதிகளுடன் தொடர்பு கொண்ட உயர்தட்டு குழந்தைகள் ஆவர்.
தீவிரவாதத்தின் வைரஸால் பாதிக்கப்பட்ட தங்கள் உறவினர்களை சீர்திருத்த அரசாங்கம் வலியுறுத்துவதை அவர்கள் நன்றியுடன் இருக்க வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள். இன்னும் கேள்விகளைத் தொடர்ந்தவர்களுக்கு, கைதிகள் எப்போது முகாம்களை விட்டு வெளியேறலாம் என்பதை தீர்மானிக்க நன்நடத்தை மதிப்பிடும் அமைப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவர்களின் நடத்தை உறவினர்களின் நன்னடத்தையையும் பாதிக்கும்.
எந்தவொரு குற்றத்திற்கும் கைதிகள் மீது குற்றம் சாட்டப்படாததால், அவர்கள் காவலில் வைக்கப்படுவதற்கு எதிரான சட்டப் போராட்டம் பற்றி கேள்வி இல்லை.
ஆனால் முகாம்களில் இல்லாதவர்கள் கூட சுதந்திரமாக இல்லை.
முகத்தை வைத்து அடையாளம் காணும் கேமராக்கள், உய்குர்களின் தொலைபேசி செயல்பாடுகளை கண்காணிக்கும் மென்பொருள், வீடுகளுக்குள் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று அதிகாரிகளுக்குச் சொல்லும் கியூஆர் குறியீடுகள், எந்தவொரு உள்நாட்டு கருவியிலும் கியூஆர் குறியீடுகள் ஆகியவை ஒரு கத்தி போன்ற ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது.
சீனாவுக்கு வெளியே உள்ளவர்களைத் தொடர்புகொள்வது இந்த முகாமுக்கு அனுப்பப்படுவதற்கான உறுதியான வழிகளில் ஒன்று.
இது கைதிகளுக்கு தொழில் திறன்களை வழங்குவதற்காக என்று அரசாங்கம் கூறுகிறது. ஆனால், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் பலர் பேராசிரியர்கள், மருத்துவர்கள், திறமையான தொழில் வல்லுநர்கள் உள்ளனர். எனவே, இந்த திறன்கள் அவர்கள் எதை சாதிக்க வேண்டும் என்பதற்கா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இதில் சீனத் தலைமை வகிக்கும் பங்கு என்ன?
தனது நாட்டின் உய்குர் கொள்கையில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் பெரிய தனிப்பட்ட விருப்பம் இருப்பதாக நியூயார்க் டைம்ஸில் கசிந்த ஆவணங்கள் கூறுகின்றன.
நியூயார்க் டைம்ஸ் செய்தி கூறுகையில், “கட்சியின் தலைவரான அதிபர் ஷி ஜின்பிங், ஏப்ரல் 2014 இல் ஷின்ஜியாங்கிற்கு வருகை தந்தபோதும் அதற்குப் பின்னரும் அதிகாரிகளுக்கு தனிப்பட்ட முறையில் நிகழ்த்திய தொடர்ச்சியான உரைகளில் ஒடுக்குமுறைக்கான அடித்தளத்தை அமைத்தார்... ராஜதந்திர நன்மைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, மத்திய கிழக்கிற்கு ஷின்ஜியாங்கில் இஸ்லாமிய தீவிரவாதத்தின் தோற்றத்தை அவர் கண்டுபிடித்தார். மேலும், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட கொந்தளிப்பு சீனாவிற்கு ஏற்படும் என்றும் அபாயங்களை பெரிதாக்கும் என்று எச்சரித்தார். உய்குர்கள் இந்த இரு நாடுகளுக்கும் பயணம் செய்திருந்தனர். மேலும், அவர்கள் கிழக்கு துர்கிஸ்தான் என்று அழைக்கும் ஒரு சுதந்திர தாயகத்தைத் தேடும் அனுபவமுள்ள போராளிகளாக சீனாவுக்கு திரும்பலாம் என்று அவர் கூறினார்.” என்று குறிப்பிட்டுள்ளது.
ஷி ஜின்பிங்கின் முன்னோடி ஹு ஜின்டாவோ, 2002-12 வரை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும், 2003-13 வரை சீன மக்கள் குடியரசின் தலைவராகவும் இருந்தார். ஹு ஜின்டாவோ, நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் மக்களை வன்முறையிலிருந்து விடுவிக்கவும் அவர்களை சீனாவுடன் சிறப்பாக ஒருங்கிணைப்பதிலும் நம்பினார்.
நியூயார்க் டைம்ஸ் செய்தியின்படி, மக்களுக்கு அதிக அளவில் மனித உரிமைகளை அனுமதிப்பதில் அரசு தெளிவற்ற பார்வையை மேற்கொண்டது.
“… ஜூன் 2017-இல் பிறப்பிக்கப்பட்ட 10 பக்க உத்தரவில் அப்போதைய ஷின்ஜியாங்கின் உயர் பாதுகாப்பு அதிகாரியான ஜு ஹைலூன் கையெழுத்திட்டுள்ளார். அதில் பிரிட்டனில் நடந்த சமீபத்திய பயங்கரவாத தாக்குதல்கள் நமக்கு ஒரு எச்சரிக்கை பாடம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இது பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பாதுகாப்பிற்கும் மேல், அதிகப்படியான மனித உரிமைகள் மற்றும் இணையத்திலும் சமூகத்திலும் தீவிரவாதத்தை பரப்புவதில்போதிய கட்டுப்பாடுகள் இல்லை என்று குற்றம் சாட்டியது என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி கூறுகிறது.
உள்ளூர் அதிகாரிகள் அரசாங்கத்தின் கடுமையான கொள்கையைப் பற்றி சந்தேகங்களை கொண்டிருந்தனர். இது பிராந்தியத்தில் இன பிளவுகளை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. ஆனால், உய்குர்களிடம் மிகவும் கருணை காட்டிய அதிகாரிகள் விரைவாகவும் பகிரங்கமாகவும் தண்டிக்கப்பட்டனர்.
இதில் சீனாவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்ன?
கடந்த ஆண்டு துருக்கி உய்குர்களுக்காகப் பேசியது. ஐக்கிய நாடுகள் சபையும் அமெரிக்காவும் கொஞ்சம் சத்தம் போட்டன. சீனா தனது தவறான குடிமக்களில் சிலரை தீவிரமயமாக்கலை நிக்குவதற்காக மட்டுமே பராமரித்து வருகிறது என்றும் அதன் உள் விஷயங்களை கையாள்வதில் அதன் இறையாண்மையை மதிக்க உலகை கேட்டுக்கொண்டது.
இருப்பினும், இந்த ஆண்டு ஜனவரியில், சில மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஊடக நிறுவனங்கள், சீனா சித்திரவதை மற்றும் துஷ்பிரயோகம் செய்ததாக அறிக்கை வெளிய்ட்டதற்குப் பிறகு, சீன அரசாங்கம் ஒரு சில பத்திரிகையாளர்கள் மற்றும் தூதர்களை முகாம்களுக்கு வருமாறு அழைத்தது.
கைதிகள் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், தங்கள் பாதையில் தவறைக் கண்டதாகவும், அரசாங்கம் அவர்களைச் சீர்திருத்துவதில் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தனர். மேலும் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்களாயின் அது உங்கள் கைகளைத் தட்டினால் தெரியும்” என்றும் நடனமாடினார்கள்.
நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை பொதுவில் ஆவணங்களை பகிரங்கப்படுத்திய பின்னர், சீனாவின் குளோபல் டைம்ஸின் தலைமை ஆசிரியர் ஹு ஷிஜின் டுவிட் செய்ததாவது: “ நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட ஆவணங்கள் உண்மையா அல்லது பொய்யா என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஷின்ஜியாங் வியத்தகு மாற்றங்களைக் கண்டிருப்பதாக நான் நம்புகிறேன்: அமைதியும் செழிப்பும் சுற்றுலாவும் மீண்டும் வந்துவிட்டன. ஷின்ஜியாங் பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் எல்லையாக உள்ளது. சீனாவின் தீவிரமயமாக்கல் நீக்கும் முயற்சிகள் ஷின்ஜியாங்கை அவர்களிடமிருந்து வேறுபடுத்தியுள்ளன. ” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டு ஒரு நாள் கழித்து, சீனாவின் வெளியுறவு அமைச்சகம், முகாம்கள் உருவாக்கப்பட்ட காரணங்களை நியூயார்க் டைம்ஸ் புறக்கணிப்பதாக குற்றம் சாட்டியது. செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷுவாங் கூறுகையில், “நியூயார்க் டைம்ஸின் உள் ஆவணங்கள் என்று அழைக்கப்படும் சின்ஜியாங்கில் சீனாவின் முயற்சிகளைப் பற்றிக் கூறுகிறது. நிகழ்ச்சி நிரல் என்ன? ஷின்ஜியாங்கின் தொடர்ச்சியான செழிப்பு, ஸ்திரத்தன்மை, இன ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகியவையே சில ஊடகங்கள் மற்றும் தனிநபர்களின் குற்றச்சாட்டுகளுக்கு வலுவான மறுப்பு” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.