பணி விசாக்களின் காலளவு இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது என்று பிரிட்டிஷ் உள்துறை அலுவலகம் அறிவிப்பால், இந்தியாவைப் போன்ற வெளிநாட்டு மாணவர்கள், தங்கள் படிப்பை முடித்தவுடன் இரண்டு வருடங்கள் அவர்கள் விரும்பும் வேலையை செய்யவோ , அல்லது விரும்பிய வேலையைத் தேடவோ அனுமதிக்கும் என்பது குறிப்பிடத் தக்கது
இந்த தாராள விசாவை 2012 இல் உள்துறை செயலாளர் தெரசா மே மிகவும் கடுமையாக்கினார் என்பது குறிப்பிடத் தக்கது. 2012-க்கு முன் இருந்த நடைமுறை மீண்டும் திரும்பியுள்ளதால் அங்குள்ள பல்கலைக் கழகங்களும், மாணவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதிய விதிகள்
2012 ஆம் ஆண்டில், அப்போதைய உள்துறை செயலாளர் தெரேசா மே, மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட விசா கொள்கையை அறிமுகப்படுத்தினார். அந்தக் கொள்கையின் கீழ், வெளிநாட்டு மாணவர்கள் இங்கிலாந்தில் படித்து முடித்து வேலை தேடும் காலத்தை இரண்டு ஆண்டுகளில் இருந்து நான்கு மாதங்களாகக் குறைத்தார்.
2019-ல் தெரேசா மேக்குப் பின் பிரிட்டிஷ் பிரதமாராக வந்த போரிஸ் ஜான்சனின் அரசாங்கம், 2012 க்கு முந்தைய தாராள விசா கொள்கையை மீண்டும் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த விதிமுறைகள் இங்கிலாந்து பல்கலைக்கழகங்களின் 2020-21 பேட்ச்களில் இருந்து தொடங்கப்படும்.
அடுத்த ஆண்டில் டயர் 4 விசாக்களை வைத்துக் கொண்டு இளங்கலை மட்டத்திலோ அல்லது அதற்கு மேற்பட்ட பாடத்திலோ பாடத்தை முடிக்கும் சர்வதேச மாணவர்களுக்கு இந்த தாராள விசக் கொள்கை கொள்கை பொருந்தும் என்று தி கார்டியன் தெரிவித்துள்ளது. புதிய கொள்கை நடைமுறைக்கு வந்தவுடன், இரண்டு ஆண்டுக்குள் வேலைவாய்ப்பைப் பெரும் மாணவர்கள், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்கில்டு வொர்க்போர்ஸ் விசாவிற்கு மாற முடியும்.
தற்போது, வெளியிட்டுள்ள புது விதியில் மாணவர்கள் தேடக்கூடிய வேலைகள் மீது எந்த தடையும் விதிக்கவில்லை, பணி விசாவைப் பெறக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கையில் எந்தவிதமான குறைப்பும் இல்லை. ஆனால், 2012 க்கு முந்தைய கொள்கையில் இல்லாத புதிய அம்சங்களும் இதில் சில விசயங்களும் உள்ளன
இங்கிலாந்தில் இந்திய மாணவர்கள்
2017-2018 கல்வியாண்டில் சுமார் 22,000 இந்திய மாணவர்கள் பிரிட்டிஷ் நாட்டிற்க்கு சென்றார்கள். முந்தைய ஆண்டுகளை விட இது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்,
2012 கொள்கையைத் தொடர்ந்து அந்நாட்டிற்குள் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை சரியத் தொடங்கினாலும், இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளை விட குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும் .கடந்த பத்து ஆண்டுகளில், ப்ரிட்டிஷ் சென்ற இந்திய மாணவர்களில் பாதி பேர் ‘ஸ்டெம்’ (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) மாணவர்களாகவே இருந்துள்ளனர்
இங்கிலாந்து வர்த்தக செயலாளர் ஆண்ட்ரியா லீட்சம் இது குறித்து தெரிவிக்கையில், “பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் STEM பாடங்களுக்கு வருகிறார்கள். இது இங்கிலாந்து உண்மையில் முன்னோக்கி செல்ல வைக்கும்” என்றும் “சர்வதேச மாணவர்களுக்கும், இங்கிலாந்து பொருளாதாரத்திற்கும் கிடைத்த வெற்றி” என்றும் தெரிவித்தார்.