scorecardresearch

ரஷ்ய படையெடுப்பு; வான்வெளியை மூடிய உக்ரைன்; இந்தியர்களை மீட்கும் விமான திட்டத்தின் நிலை என்ன?

உக்ரைன் அனைத்து சிவிலியன் விமானங்களையும் அந்நாட்டுப் பகுதிக்கு தடை செய்துள்ளது. ஏர் இந்தியா வெளியேற்றும் விமானங்களுக்கு இதனால் என்ன நடக்கும்?

ரஷ்ய படையெடுப்பு; வான்வெளியை மூடிய உக்ரைன்; இந்தியர்களை மீட்கும் விமான திட்டத்தின் நிலை என்ன?

Pranav Mukul

Russia invasion: Why Ukraine closed its airspace, what it means for Air India evacuation flights: “சிவில் விமானப் போக்குவரத்துக்கு சாத்தியமான அபாயத்தை” மேற்கோள் காட்டி, உக்ரைன் காலை 7.30 மணியளவில் அந்நாட்டுப் பகுதிக்கு அனைத்து சிவிலியன் விமானங்களையும் கட்டுப்படுத்தும் ஒரு NOTAM (விமானப் பணிகளுக்கான அறிவிப்பு) ஒன்றை வெளியிட்டது. உக்ரைனின் கியேவிலிருந்து (Kyiv) இந்திய குடிமக்களை வெளியேற்றுவதற்காக ஏர் இந்தியா விமானம், NOTAM வழங்கப்பட்ட சில நிமிடங்களில் டெல்லியில் இருந்து புறப்பட்டது, ஆனால் கட்டுப்பாடுகளின் காரணமாக இந்தியா திரும்புகிறது. இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு அந்த விமானம் ஈரான் வான்வெளியில் இருந்தது.

உக்ரேனிய அதிகாரிகள் ஏன் NOTAM ஐ வெளியிட்டுள்ளனர்?

NOTAM என்பது ஒரு குறிப்பிட்ட வான்வெளியின் நிலை குறித்து விமானிகள், ஏடிசி பணியாளர்கள் மற்றும் விமான செயல்பாட்டுக் குழுக்களுக்கான ஒரு அறிவிப்பு ஆகும்.

உக்ரேனிய எல்லைக்கு அருகே ரஷ்யப் படைகள் கட்டமைக்கப்பட்டதன் மூலம் அதிகரித்து வரும் பதட்டங்களை கருத்தில் கொண்டு NOTAM வெளியிடப்பட்டுள்ளது. உக்ரைனில் சில வாரங்களுக்கு முன்பு இந்தப் பதற்றம் தொடங்கிய நிலையில், இந்திய மாணவர்கள், தூதரக ஊழியர்களின் குடும்பத்தினர் உட்பட அத்தியாவசியமற்ற வெளிநாட்டினர் நாட்டிற்கு வெளியே பறக்க அனுமதிக்கும் வகையில் அதன் வான்வெளியை பொதுமக்கள் விமானங்களுக்கு உக்ரைன் திறந்து வைத்தது.

ஏர் இந்தியா ஏன் இன்று கியேவுக்கு பறக்கிறது?

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய குடிமக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்காக ஏர் இந்தியா தனது மூன்று திட்டமிடப்பட்ட வெளியேற்றும் விமானங்களில் இரண்டாவது விமானத்தை கிய்வ் நகருக்கு இயக்குகிறது.

இதையும் படியுங்கள்: மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் கைது; அமலாக்கத் துறை சொல்லும் குற்றங்கள் என்ன?

விமான கண்காணிப்பு போர்டல் Flightradar24 இன் படி, காலை 9.50 IST நிலவரப்படி, கிய்வ் போரிஸ்பில் விமான நிலையத்திற்கு செல்லும் மூன்று விமானங்களில் ஏர் இந்தியாவும் ஒன்றாகும். மற்ற விமானங்களில் ஒன்று பாகுவிலிருந்து வரும் உக்ரைன் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ், இது மால்டோவாவில் உள்ள ஒரு விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது, மால்டோவா உக்ரைனுடன் அதன் வடக்கு எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.

ஏர் இந்தியாவின் மூன்றாவது விமானம் கியேவுக்குப் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறதா?

பயணம் ரத்து செய்வதை விமான நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், சனிக்கிழமையன்று மூன்றாவது விமானம் இயக்கப்படாமல் போகலாம். உக்ரேனிய NOTAM அறிவிப்பு வெள்ளிக்கிழமை காலை 5.30 மணி வரை மட்டுமே அமலுக்கு வந்தாலும், அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு அது நீட்டிக்கப்படலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Ukraine airport notam air india flights explained