/tamil-ie/media/media_files/uploads/2022/03/AP22080470627283.jpg)
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தத் தொடங்கி இன்றுடன் 28-ஆவது நாளை எட்டியது. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை இதோ..
ராணுவ தளவாடங்களை அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு உக்ரைனுக்கு அளித்து வருகிறது.
வான்வழித் தாக்குதலை தடுப்பதற்கு தேவையான ராணுவத் தளவாடங்களையும் அளிக்கவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
உக்ரைனின் மரியுபோல், கார்கிவ் நகரங்களில் வான்வழியாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைன் ராணுவத்தினர் தரைவழியாக கடுமையாக தாக்குவதால் வான்வழித் தாக்குதலை ரஷ்யா தேர்வு செய்துள்ளதாக மேற்கத்திய ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இத்தகைய வான்வழித் தாக்குதலை தடுக்க இன்னும் அதிக ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்ப மேற்கத்திய நாடுகள் திட்டமிட்டுள்ளன.
உக்ரைன் வான்வழியாக எந்த விமானமும் பறக்கக் கூடாது என்பதை உறுதி செய்யுமாறு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேட்டோ படையிடம் வலியுறுத்தி வருகிறார்.
கருங்கடல் துறைமுகம் அருகே உள்ள உக்ரைனின் எரிபொருள் கிடங்கை அழிப்பதற்காக முதல்முறையாக கின்சல் ஹைபர்சோனிக் ஏவுகணையை பயன்படுத்தினோம் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
இந்த ஆயுதத்தை ரஷ்ய அதிபர் புதின் கடந்த 2017இல் பயன்பாட்டுக்கு ராணுவத்தில் சேர்த்தார்.
கின்சால் ஆயுதம் மணிக்கு 6,000 கி.மீ. வேகத்தில் செல்லக் கூடியது. அதாவது ஒலியைக் காட்டிலும் 5 மடங்கு வேகம் செல்லக் கூடியது. இலக்கு 2,000 கி.மீ. தொலைவைத் தாண்டி இருந்தாலும் கூட துல்லியமாகத் தாக்கி அழிக்கக் கூடியது.
ஜிர்கான், அவங்காட் என மேலும் இரண்டு ஹைப்பர்சோனி ஏவுகணைகளை ரஷ்யா தன்வசம் வைத்துள்ளது. இவை கின்சால் ஏவுகணையைக் காட்டிலும் அதிவேகமாக பயணித்து இலக்கை அழிக்கக் கூடியது.
எம்.ஐ.ஜி-3 போர் விமானத்தில் கின்சால் பொருந்துக் கூடிய வகையில் இருக்கும் என்று மேற்கத்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தைக்கு ரஷ்ய அதிபர் புதினை அழைத்து வருகிறார்.
இரு நாடுகளின் அதிகாரிகளுக்கு இடையே இதுவரை 3 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
இருப்பினும், போரை நிறுத்துவதற்கான எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை. நோட்டோ அமைப்பில் சேரும் முடிவையும் கைவிடுவதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துவிட்டார்.
ஆனாலும், ரஷ்யா தொடர்ந்து உக்ரைனுடன் போர் புரிந்து வருகிறது. பொதுவாக்கெடுப்பு நடத்தி மக்கள் எடுக்கும் முடிவு படி கிரீமியா, லுஹான்ஸ், டோன்ட்ஸ்க் ஆகிய நகரங்களை ரஷ்யாவுக்கு விட்டுக் கொடுக்க தயார் என்றும் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.
மரியுபோல் நகரில் குண்டு மழை
மரியுபோல் நகரில் ரஷ்ய ராணுவ குண்டு மழை பொழிந்து வருகிறது. இந்த நகரை விட்டு சரணடையுமாறு ரஷ்யா விடுத்த கோரிக்கை உக்ரைன் ராணுவம் நிராகரித்தது.
குண்டுவீச்சுக்கு மத்தியில் 8,000 மக்கள் மரியுபோல் நகரில் இருந்து வெளியேறினர். சுமார் 3 லட்சம் பேர் அந்த நகரிலியே இருக்கின்றனர்.
இதுவரை நடைபெற்ற உலகப் போர்களில் அதிக சேதங்களை எதிர்கொண்ட நகரங்களின் வரிசையில் மரியுபோல் இடம்பெற்றுவிடும் என்று மரியுபோல் நகரில் இருந்து வெளியேறிய கிரீஸ் அதிபர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ரஷ்யாவுக்கு எதிராக மேலும் பொருளாதாரத் தடைகள்
பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் நகரில் ரஷ்யாவுக்கு எதிராக மேலும் பொருளாதாரத் தடைகளை விதிப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்த ஐரோப்பிய யூனியன் வெளியுறவு அமைச்சர்கள் இந்த வார இறுதியில் சந்திக்கவுள்ளனர். இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் பங்கேற்கிறார்.
ரஷ்யா விவகாரத்தில் இந்தியா நடுங்குகிறது – ஜோ பைடன்
உக்ரைனில் நடந்த போரில் இதுவரை 925 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், சுமார் 1,496 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என ஐ.நா எச்சரித்துள்ளது. மரியுபோல் உள்ளூர் அதிகாரிகள் கூறுகையில், நகரில் 2000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்கின்றனர்.
கீவிவ் நகரில் உள்ள உயிரியல் பூங்கா தலைவர் கூறுகையில், இங்குள்ள விலங்குகளையும் வெளியேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.