Advertisment

உக்ரைன் அகதிகளை ஏன் அமெரிக்கா ஏற்கவில்லை?

ரஷ்யா போரைத் தொடங்கியபோது, ​​ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 514 உக்ரைன் அகதிகளை மட்டுமே அமெரிக்கா அனுமதித்தது என்று புள்ளிவிவரங்கள் காட்டுகிறது.

author-image
WebDesk
New Update
Ukraine war US refugees admissions policy, Ukraine war, US refugees policy, உக்ரைன் அகதிகளை ஏன் அமெரிக்கா ஏற்கவில்லை, ரஷ்யா படையெடுப்பு, உக்ரைன் போர், அமெரிக்கா, US, America, Russia invasion

ரஷ்யா போரைத் தொடங்கியபோது, ​​ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 514 உக்ரைன் அகதிகளை மட்டுமே அமெரிக்கா அனுமதித்தது என்று புள்ளிவிவரங்கள் காட்டுகிறது. உக்ரைனில் போர் தீவிரமடைந்து வெளியேறும் உக்ரைனியர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருவதால், மார்ச் 1-16-ம் தேதி வரை 7 உக்ரைன் அகதிகள் மட்டுமே அமெரிக்காவில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

Advertisment

ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்களின்படி, பிப்ரவரி 24ம் தேதி ரஷ்யா படையெடுத்ததில் இருந்து 3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உக்ரைனை விட்டு அண்டை நாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர். ஆனால், அமெரிக்கா இதுவரை சில நூறு உக்ரைன் அகதிகளை மட்டுமே அனுமதித்துள்ளது. சில விமர்சகர்கள் அமெரிக்க அரசின் கொள்கையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.

அமெரிக்கா ஏன் அதிக உக்ரைன் அகதிகளை ஏற்கவில்லை?

அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் அவருடைய உயர் அதிகாரிகளும், தேவைப்பட்டால் அகதிகளை ஏற்றுக்கொள்ள அமெரிக்கா தயாராக இருப்பதாகக் கூறியுள்ளனர். ஆனால், உக்ரைனியர்களின் முதன்மையான இடமாக ஐரோப்பா இருக்க வேண்டும் என்று நிர்வாகம் மீண்டும் மீண்டும் சமிக்ஞை செய்துள்ளது.

“உக்ரைனிய அகதிகள் இங்கு வந்தால், நாங்கள் அவர்களை இருகரம் நீட்டி வரவேற்கப் போகிறோம்” என்று பைடன் மார்ச் 11ம் தேதி பிலடெல்பியாவில் ஜனநாயகக் கட்சியினரின் கூட்டத்தில் கூறினார். துணை அதிபர் கமலா ஹாரிஸ், வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் வெள்ளை மாளிகை செய்தித் துறை செயலாளர் ஜென் சாகி ஆகியோர் இதே போன்ற கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

“பெரும்பாலான அகதிகள், பல குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் முன்னாள் முதலாளிகள் அண்டை நாடுகளில் இருக்க விரும்புவார்கள் என்று நிர்வாகம் நம்புகிறது” என்று சாகி மார்ச் 10ம் தேதி கூறினார்.

“அமெரிக்காவில் மீள்குடியேற்றம் செய்வது என்பது விரைவான செயல் அல்ல என்பதை மனதில் கொண்டு, உக்ரைனிய அகதிகளுக்கு ஐரோப்பாவில் பாதுகாப்பு இல்லாத பட்சத்தில் அவர்களை அமெரிக்காவிற்கு அழைத்து வருவதற்கு ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து செயல்படுவோம்” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம், அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியதைத் தொடர்ந்து பைடன் நிர்வாகம் ஆப்கானிஸ்தானுக்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டாலும் அகதிகள் மீள்குடியேற்றம் செய்யப்படுவதற்கு பல ஆண்டுகள் ஆகலாம் என்று கூறியது.

அந்த அனுபவத்தின் படிப்பினைகள் மற்ற அகதிகளின் மீள்குடியேற்றத்தை விரைவுபடுத்த உதவும் என்று மூன்று அமெரிக்க அதிகாரிகள் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தனர்.

அதிக அளவில் அகதிகள் அனுமதிப்பதற்கு அழைப்பு விடுப்பவர்கள் யார்?

மூன்று டஜன் ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழு மார்ச் 11ம் தேதி எழுதிய கடிதத்தில் பைடனை அகதிகள் அனுமதிப்பதை அதிகரிக்கவும், அமெரிக்காவில் உள்ள குடும்ப உறுப்பினர்களுடன் உக்ரைனியர்களை மனிதாபிமான பரோல் எனப்படும் தற்காலிக பொறிமுறையின் மூலம் வேகமாக நுழைய அனுமதிக்கவும் வலியுறுத்தியது.

அவசர கால மருத்துவத்தில் பயிற்சி பெற்ற மருத்துவரும், கடிதத்தை எழுதிய காங்கிரஸின் ஹிஸ்பானிக் காகஸின் தலைவருமான பிரதிநிதி ரவுல் ரூயிஸ், ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் குழுவின் ஒரு பகுதியாக இந்த மாத தொடக்கத்தில் போலந்து-உக்ரைன் எல்லைக்கு பயணம் செய்தார். “இந்த நெருக்கடி தற்போது உக்ரைனிய அகதிகளால் பல நாடுகள் நிரம்பி வழியக்கூடும். மேலும், போரிலிருந்து தப்பிக்கும் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு உதவி செய்யும் நாடுகளுக்கு உதவுவதற்கான முயற்சியில் அமெரிக்கா வழிநடத்த வேண்டும்” என்று அவர் பைடனுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டார்.

இந்தியானாவிலிருந்து குடியரசுக் கட்சி மற்றும் உக்ரைனிய குடியேறியவர்களின் பிரதிநிதி, விக்டோரியா ஸ்பார்ட்ஸ் இந்த தூதுக்குழுவில் இருந்தார். அவர் ஃபாக்ஸ் நியூஸிடம் கூறுகையில், மனிதாபிமான நடவடிக்கை அண்டை நாடான போலந்தின் பிரச்சினையாக மட்டும் இருக்க கூடாது என்று கூறினார்.

நெருக்கடியின் அவசரத்தை உக்ரைனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் மனைவி ஒலேனா ஜெலென்ஸ்கா அடிக்கோடிட்டுக் காட்டினார். அவர் ஏபிசி நியூஸ் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், உக்ரைனிய பெண்கள் மற்றும் தஞ்சம் கோரும் குழந்தைகளை ஆதரிக்க அமெரிக்கப் பெண்களை அழைப்பதாகக் கூறினார்.

இரண்டு டஜனுக்கு மேற்பட்ட யூத-அமெரிக்க அமைப்புகளின் கூட்டணி, கடந்த வாரம் பைடனை சந்தித்து உக்ரைனிய அகதிகளின் சேர்க்கையை அதிகரிக்கச் செய்தது. “அமெரிக்கா தனது கதவுகளை அகதிகளுக்கு மூடும்போது என்ன நடக்கும் என்பது எங்கள் சமூகத்திற்கு நன்றாகவே தெரியும்” என்று கூறினர்.

அமெரிக்க வெளியுறவுத் துறையின் தகவல்களின்படி, ரஷ்யா போரைக் தொடங்கியபோது, ​​ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் 514 உக்ரைனிய அகதிகளை மட்டுமே அமெரிக்கா அனுமதித்துள்ளது.
மார்ச் 1-16-ம் தேதி வரை அமெரிக்காவில் 7 உக்ரைனிய அகதிகள் மட்டுமே குடியமர்த்தப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் உள்நாட்டு புள்ளிவிவரங்களின்படி, போர் உக்கிரமடைந்தால் வெளியேறும் உக்ரைனியர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரங்கலை நன்கு அறிந்த ஒருவர் கூறுகையில், பல உக்ரைனிய அகதி விண்ணப்பதாரர்கள் அமெரிக்காவிற்குப் பயணம் செய்ய அனுமதித்துள்ளனர். மோதல் தொடர்பான விமான ரத்துகளால் அவர்கள் நிறுத்தப்பட்டனர். இது மார்ச் மாதத்தில் அனுமதியை நிறுத்தப்படுவதற்கு வழிவகுத்தது என்று கூறினார்.

பைடன் இந்த ஆண்டுக்கான ஒட்டுமொத்த அகதிகளின் உச்சவரம்பை 1,25,000-ஆக நிர்ணயித்தார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப், தனது முன்னோடியான குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரான 15,000 ஆகக் குறைத்ததை அடுத்து, அகதிகள் அனுமதிக்கப்படும் செயலை முடக்கியது. ஏற்கனவே, கோவிட்-19 தொற்றுநோயால் அகதிகள் அனுமதிக்கும் செயல்பாடுகளை தாமதப்படுத்த வழிவகுத்தது. பைடன் 1,25,000 அகதிகளில் 10,000 இடங்களை ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவைச் சேர்ந்தவர்களுக்காக ஒதுக்கியுள்ளார். இது உக்ரைனையும் உள்ளடக்கியது. ஆனால், தேவைப்பட்டால் அந்த ஒதுக்கீட்டை விரிவுபடுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவிற்குள் நுழைய முயற்சிக்கும் உக்ரேனியர்களுக்கு என்ன நடக்கும்?

ஆயிரக்கணக்கான உக்ரேனியர்கள் மற்றும் ரஷ்யர்கள் புகலிடம் கோருவதற்காக அமெரிக்கா-மெக்சிகோ எல்லைக்கு பயணித்து வருகின்றனர். இது மனிதாபிமான நெருக்கடி மோசமடைந்து வருவதால் இது வேகமடையக்கூடும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இந்த மாத தொடக்கத்தில் தெரிவித்தது.

கடந்த அக்டோபரில் தொடங்கிய இந்த நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில், தென்மேற்கு எல்லையில் உள்ள அமெரிக்க அதிகாரிகள் சுமார் 1,300 உக்ரைனியர்களை எதிர்கொண்டனர். பெரும்பாலும் நுழைவுத் துறைமுகங்களில், கடந்த நிதியாண்டு முழுவதும் 680 பேர் இருந்தனர்.

பெரும்பாலான உக்ரைனியர்கள் தங்கள் குடியேற்ற நடவடிக்கைகளைத் தொடர அமெரிக்காவிற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற நாடுகளில் இருந்து குடியேறுபவர்களைப் போலல்லாமல், அவர்கள் பெரும்பாலும் தலைப்பு 42 எனப்படும் தொற்றுநோய் கால உத்தரவின் கீழ் மெக்ஸிகோ அல்லது பிற நாடுகளுக்கு வெளியேற்றப்படுகிறார்கள்.

இருப்பினும், சமீப நாட்களில் ஒரு சில உக்ரைனியர்கள் தென்மேற்கு எல்லைக்கு வந்து நுழைய மறுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

பல உக்ரைனிய அகதிகளை அமெரிக்கா ஏற்காமல் என்ன செய்கிறது?

அகதிகளைப் அனுமதிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்க அரசு கணிசமான பொருளாதார உதவிகளைச் செய்து வருகிறது. பைடன் செவ்வாய்க்கிழமை ஒரு செலவின மசோதாவில் கையெழுத்திட்டார். அந்த மசோதா உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கு உதவ 13.6 பில்லியன் டாலர்களை வழங்குகிறது.

ஏற்கனவே அமெரிக்காவில் உள்ள சுமார் 75,000 உக்ரைனியர்களுக்கு தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்தை (TPS) வழங்குவதாக அமெரிக்க அரசாங்கம் இந்த மாத தொடக்கத்தில் அறிவித்தது. இந்த நிலை அவர்களுக்கு 18 மாதங்களுக்கு நாடுகடத்தப்பட்ட நிவாரணம் மற்றும் பணி அனுமதிகளை வழங்கும். அந்த காலகட்டத்தின் முடிவில் புதுப்பிக்கப்படலாம். ஆனால், மார்ச் 1 க்குப் பிறகு வந்தவர்களுக்கு இது பொருந்தாது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Ukraine Russia America
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment