scorecardresearch

உக்ரைன் விவகாரத்தில் ஜெர்மனியின் நிலைப்பாடு ஏன் முக்கியமானது?

ஜெர்மனி தலைவர் ஓலாஃப் ஸ்கோல்ஸுடன் கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமெரிக்க அதிபர் பைடன், ரஷ்யாவின் துருப்புகள் அல்லது தாங்கிகள் உக்ரைனின் எல்லைக்குள் மீண்டும் ஒரு முறை நுழைந்தால், நார்ட் ஸ்ட்ரீம் என்ற ஒன்றே இருக்காது என்று எச்சரித்துள்ளார்.

Ukraine why Germany matters

 Nirupama Subramanian 

Ukraine why Germany matters: எல்லைப் பகுதியில் உள்ள சில துருப்புகளை திரும்பப் பெறுவதாக ரஷ்யா அறிவித்துள்ள நிலையில் உக்ரைன் விவகாரம் திசை மாறியுள்ளது. ஆனாலும் பதட்டமான சூழல் அப்படியே நிழவுகிறது. நார்ட் ஸ்ட்ரீம் 2 என்பது ரஷ்யாவில் இருந்து ஜெர்மனிக்கு கடலுக்கு அடியே எரிவாயு குழாய் அமைக்கும் திட்டம் என்றாலும் சர்வதேச அளவில் அது புவிசார் அரசியல் ஆயுதமாக பார்க்கப்படுகிறது.

உக்ரைன் வழியாக செல்லும் இந்த பைப்-லைன் திட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டை அந்நாடு எடுத்திருப்பது மட்டுமின்றி ரஷ்யாவின் எரிவாயு ஏற்றுமதிக்கான போக்குவரத்து கட்டணத்தையும் மறுத்துள்ளது. மேலும் ரஷ்யா தன்னுடைய சொந்த எரிவாயு ஏற்றுமதியை, மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு பாதிப்பில்லாமல், உக்ரைனுக்கு மட்டும் விநியோகத்தை நிறுத்தலாம் என்ற அச்சத்திலும் உக்ரைன் ஆழ்ந்துள்ளது. ஐரோப்பாவிற்கான எரிவாயு விநியோகத்தில் ரஷ்யா மேலாதிக்கம் செலுத்துவதோடு மற்ற நாடுகளின் மீது ச்செல்வாக்கையும் இதன் மூலம் அதிகரித்துக் கொள்ள இயலும். ரஷ்யாவும் ஜெர்மனியும் ஒன்றிணைவது மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு பழைய அச்சத்தை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகள், தங்கள் நாட்டு கடல் வளத்தில் ரஷ்யாவின் இருப்பு குறித்து அச்சம் அடைந்துள்ள நிலையில், ஃபின்லாந்து, ஸ்வீடன் மற்றும் போலாந்து வழியாக ஜெர்மனியை அடையும் 1,222 கி.மீ பைப்லைன் திட்டத்தில் இருந்து பாதுகாப்பு தேவை என்பதை உணர்ந்துள்ளனர்.

குஜராத் ஏபிஜி ஷிப்யார்டின் வளர்ச்சியும், வீழ்ச்சியும்… ரூ22,842 கோடி வங்கி கடன் மோசடி!

அமெரிக்காவின் கவலை

இந்த பைப்லைன் திட்டம் என்பது ஐரோப்பா முழுவதும் ரஷ்யாவின் செல்வாக்கை அதிகரிக்கும் என்று அமெரிக்கா நம்புகிறது. இது ரஷ்யாவின் உக்ரைன் படையெடுப்பு அச்சத்தை அதிகரிக்கிறது. மேலும் ரஷ்ய தலைவர் விளாடிமிர் புடினைக் கட்டுப்படுத்தும் அமெரிக்க முயற்சிகளை தடுக்கிறது என்ற கவலையில் அமெரிக்கா உள்ளது.

அமெரிக்கா ஆரம்பத்தில் இருந்தே இந்த பைப் லைன் திட்டத்தை எதிர்த்து வருகிறது. அலெக்ஸி நவல்னி விவகாரத்தில் மாஸ்கோ-பெர்லின் உறவுகளில் விரிசல் இருந்தபோதிலும், ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் மீதான தாக்குதலுக்கு க்ரெம்லினை மார்க்கெல் கடுமையாக சாடிய போதிலும், ஏஞ்சலா மார்க்கெல் தலைமையில் செயல்பட்ட அன்றைய ஜெர்மன் அரசு இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் அதிக அக்கறை காட்டியது. 11 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இந்த பைப்லைன் திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் செயல்பாட்டிற்கு வர ஜெர்மன் அரசு இன்னும் அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கவில்லை.

உக்ரைன் விவகாரம் விஷ்வரூபம் எடுப்பதற்கு முன்பே பொருளாதார தடையை விதித்தது அமெரிக்கா. ஆனால் ராஜதந்திர வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு மே மாதம் 2021ம் ஆண்டு, இந்த திட்டத்தையே கேள்விக்குள்ளாக்கியிருக்கும் இரண்டு முக்கிய தடைகளை திரும்பப்பெற்றது.

2021ம் ஆண்டு ஜூலை மாதம், ரஷ்யா எக்காரணம் கொண்டும் இந்த பைப்லைன் திட்டத்தை உக்ரைனுக்கு எதிரான ஆயுதமாக மாற்றக் கூடாது என்று ஜோ பைடன் மெர்க்கலுடன் ஒரு சந்திப்பில் பேசினார். இந்த திட்டம் எதை உள்ளடக்கியது என்பது குறித்து வெவ்வேறு மதிப்பீடுகளுக்கு இருநாடுகளும் வந்துள்ளோம் என்று மெர்க்கல் பதில் உரைத்தார்.

இந்த பைப்லைன் திட்டத்திற்கு ஆதரவு அளித்த ஜெர்மனி மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளான ஃபிரான்ஸ், ஆஸ்த்திரியா, மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகள் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடைகளால் ஏற்பட இருந்த அட்லாண்டிக் கூட்டணி முறிவை இரண்டு தலைவர்களும் தடுத்துவிட்டதாக கருதினார்கள். ஆனால் இது அமெரிக்காவின் சரணாகதி என்றும் சிலர் நம்பினர்.

கடந்த சில வாரங்களாக பைடன் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் பலரும், ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தால் நார்ட் ஸ்ட்ரீம் திட்டம் தான் முதலில் தாக்குதலுக்கு ஆளாகும் என்று கூறி வருகின்றனர்.

ஜெர்மனி தலைவர் ஓலாஃப் ஸ்கோல்ஸுடன் கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமெரிக்க அதிபர் பைடன், ரஷ்யாவின் துருப்புகள் அல்லது தாங்கிகள் உக்ரைனின் எல்லைக்குள் மீண்டும் ஒரு முறை நுழைந்தால், நார்ட் ஸ்ட்ரீம் என்ற ஒன்றே இருக்காது என்று எச்சரித்துள்ளார். ”இதனை நாங்கள் முடிவுக்கு கொண்டு வருவோம்” என்றும் நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார் பைடன்.

ரஷ்யாவும் ஜெர்மனியும் பொருளாதாரக் கூட்டாண்மையில் ஒன்றிணைவதை ஐரோப்பாவில் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பதில் அதன் பங்கை மேம்படுத்துவதற்கான முன்னோடியாக அமைந்ததை கண்ட அமெரிக்கா தற்போது நார்ட் ஸ்ட்ரீம் திட்டம் இரண்டாம் உலகப்போர் மற்றும் பனிப்போருக்கு இடையே நிலவிய சூழலுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்றும் அமெரிக்கா கருதுகிறது.

ஸ்கோல்ஸின் நடவடிக்கை

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கெய்வ் மற்றும் மாஸ்கோ இடையே தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதோடு, பதட்டத்தை தணிய வைக்க தேவையான முயற்சிகளை மேற்கொண்ட போதும்,
உக்ரைன் விவகாரத்தில் மௌனம் காத்துவரும் ஜெர்மனியின் நிலைப்பாட்டால் உள்நாடு மற்றும் உலக நாடுகளில் இருந்து விமர்சனத்தை சந்தித்து வரும் சூழலில் ஜெர்மன் நாட்டு அதிபர் ஸ்கோல்ஸ் அமெரிக்காவிற்கு அரசுப் பயணம் மேற்கொண்டார். அப்போது முதன்முறையாக நேட்டோ கூட்டணியில் இருந்து ஒரு போதும் விலக மாட்டோம் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.

நாங்கள் ஒரே குரலாக செயல்படுகின்றோம். ரஷ்யா உக்ரைனுக்கு எதிராக ராணுவ படையெடுப்பை முன்னெடுத்தால் அதன் பின்னர் கடுமையான விளைவுகளை அந்நாடு சந்திக்கும் என்று கூறினார். அதே சமயத்தில் தன்னுடைய பயணத்தின் போது நார்ட் ஸ்ட்ரீம் குறித்து ஒரு வார்த்தை கூட அவர் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மக்ரோனைப் போன்றே ஸ்கோல்ஸும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார், மேலும் புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்த அடுத்த முயற்சி மேற்கொண்டார். தங்களின் நிலைப்பாடு மற்றும் கோரிக்கைகள் வெவ்வேறாக இருந்தாலும், அவர்கள் இருவரும் சந்தித்த அதே நாளில் ரஷ்யா உக்ரைனில் நிறுத்தப்பட்டிருக்கும் அந்நாட்டு துருப்புகளை பாதியாக திரும்பப் பெறுவதாக அறிவித்தார். ஆனால் இந்த அறிவிப்பிற்கும் ஜெர்மனி அதிபரின் சந்திப்பிற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பது இன்னும் தெளிவாகவில்லை. ஆனால் அது ஐரோப்பாவின் தலைவராக அவரது பிம்பத்தைக் காப்பாற்ற உதவியது.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் எரிவாயு

ஒபாமா, ட்ரம்ப் மற்றும் பைடன் என்று தொடர்ச்சியாக அமெரிக்க நிர்வாகம் இந்த பைப்லைன் திட்டத்திற்கு தங்களின் எதிர்ப்புகளை பதிவு செய்து வந்தனர். ஒரு மோதல் தொடர்பான விவாதம் தலையெடுக்கும் போதெல்லாம் அமெரிக்கா, “இது வெறும் எண்ணெய்க்கான, அல்லது எரிவாயு, சம்பந்தப்பட்ட விஷயம் தானா?” என்ற பழையை கேள்வியை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியம் தன்னுடைய எரிவாயு தேவையில் 5%க்கும் குறைவான தேவையை அமெரிக்காவிடம் இருந்து பெற்றுக் கொள்கிறது. ரஷ்யா 41%, நார்வே 16%, அல்ஜீரியா 7.6% மற்றும் கத்தார் 5.2% – ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எரிவாயு விநியோகிக்கும் நான்கு முன்னணி நாடுகள். ஆனால் கடந்த தசாப்தத்தின் நடுப்பகுதியில் இருந்து எல்என்ஜியின் நிகர ஏற்றுமதியாளராக, அமெரிக்கா தனது சந்தைகளை விரிவுபடுத்தி ஐரோப்பாவை அடைய விரும்புகிறது. அமெரிக்க எரிவாயு ஏற்றுமதியில் 23% இப்போது ஐரோப்பிய ஒன்றியத்தை அடைகிறது. 2021ம் ஆண்டில் அது 21 பில்லியன் கன மீட்டர்களாக ஏற்றுமதி செய்யப்பட்டது என்று ஒரு மதிப்பீடு குறிப்பிடுகிறது.

பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ், போர்ச்சுகல் மற்றும் இதர சிறிய நாடுகளும் இந்த விநியோகத்தை பெறும் ஐரோப்பிய நாடுகள் ஆகும். அமெரிக்க ஏற்றுமதிகள் ஐரோப்பாவின் எரிசக்தி விநியோகங்களின் பல்வகைப்படுத்தலுக்கும் அதன் ஆற்றல் பாதுகாப்பிற்கும் இன்றியமையாததாக சிலரால் பார்க்கப்படுகிறது. ஜனவரியில், ஒரு போர் போன்ற சூழ்நிலையில், ஐரோப்ப நாடுகள் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கு பதிலாக, அதிக எரிவாயுவை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்தது.

Ukraine why Germany matters

நார்ட் ஸ்ட்ரீமின் கொள்ளளவு என்ன?

நார்ட் ஸ்ட்ரீம் 2 என்பது நார்ட் ஸ்ட்ரீமின் விரிவாக்கம் ஆகும். 2011ம் ஆண்டு முதன்முறையாக இது பயன்பாட்டிற்கு வந்தது. நார்ட் ஸ்ட்ரீமைப் போன்றே இதுவும் இரண்டு பைப்லைன்களை கொண்டுள்ளது. ஆண்டு ஒன்றுக்கு 55 பில்லியன் கன மீட்டர் எரிவாயுவை எடுத்துச் செல்லும் தன்மை கொண்டது. 2020ம் ஆண்டில், உக்ரைன் வழியாக இதுவரை 168 பி.சி.எம். எரிவாயுவை ரஷ்யா ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்ததாக அறிவித்துள்ளது. ஜெர்மனி இதில் 56 பி.சி.எம். எரிவாயுவை வாங்கியுள்ளது. இத்தாலி 20 பி.சி.எம். மற்றும் நெதர்லாந்து 11 பி.சி.எம். எரிவாயுவை இறக்குமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி தான் ரஷ்யாவின் பிரதான பொருளாதார பிரிவுகள். ஐரோப்பா தான் இதன் சந்தையாக உள்ளது. எனவே தான் நார்ட் ஸ்ட்ரீம் 2 என்பது இரண்டையும் இணைக்கும் புள்ளியாக உள்ளது. இது தான் போரைத் தடுப்பது என்பது தன்னுடைய பணி என்று ஸ்கோல்ஸை சிந்திக்க வைத்திருக்கும் காரணியாகவும் உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Ukraine why germany matters