Advertisment

ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் படைகள் எப்படி தங்களை வலுப்படுத்திக் கொண்டன?

ரஷ்யா உக்ரைனின் வடக்கில் இருக்கும் பெலாரஸில் ராணுவ பயிற்சிக்காக கணிசமான அளவில் துருப்புகளை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

author-image
WebDesk
New Update
How Ukraine’s armed forces shape up against Russia’s

Ukraine's armed forces shape up against Russia's: உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மூன்று ஆண்டுகளில் உக்ரைன் ராணுவ துருப்புகளின் எண்ணிக்கையை 1 லட்சமாக உயர்த்துவது மற்றும் அவர்களின் சம்பளத்தை உயர்த்துவது தொடர்பான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார். உக்ரைனின் ராணுவம் மற்றும் ஆயுதங்கள் ரஷ்யாவின் நிலையோடு ஒப்பிடும் போது குறைவாகவே உள்ளது. தற்போது எல்லைப் பகுதியில் முகாமிட்டிருக்கும் ரஷ்ய ராணுவம் படையெடுப்பை மேற்கொண்டால் உக்ரைன் ராணுவத்தினரால் கணிசமாக ரஷ்ய ராணுவத்தினரை எதிர்க்க முடியும். அதே நேரத்தில் அதிகப்படியான உயிரிழப்புகளை சந்திக்க நேரிடும் என்று துறைசார் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Advertisment

படைகளை அனுப்பி வரும் அமெரிக்கா, பிரபல ஊடக நிறுவன தலைவர் ராஜிநாமா… மேலும் முக்கிய உலகச் செய்திகள்…

உக்ரைனின் க்ரீமியா தீபகற்பத்தை ரஷ்யா எந்த போரும் இன்றி உக்ரைனிடம் இருந்து 2014ம் ஆண்டு கைப்பற்றிய போது அந்நாட்டில் இருந்த ராணுவ நிலைமை தற்போது சிறப்பாகவும் அதிக பயிற்சி பெற்ற ஒன்றாகவும் இருக்கிறது. தற்போது நாட்டின் மைய பகுதியை பாதுகாக்க அதிக உந்துதல் பெற்றதாக பரவலாகக் கருதப்படுகிறது.

உக்ரைன் ராணுவம் குறித்த சில தகவல்கள் இங்கே

ராணுவ தளவாடங்கள் மற்றும் துருப்புகளின் பலம் எப்படி உள்ளது?

ராணுவ வீரர்கள் மற்றும் ஆயுதங்கள் அடிப்படையில் பார்க்கும் போது உக்ரைனின் நிலைமை மோசமானதாக உள்ளது. உக்ரைனுடன் ரஷ்யா பகிர்ந்து கொள்ளும் எல்லைப் பகுதியில் ரஷ்ய துருப்புகள் 1 லட்சத்திற்கும் அதிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனாலும் மாஸ்கோ, படையெடுப்பை நிகழ்த்த திட்டம் ஏதும் இல்லை என்று கூறிவருகிறது. அதே நேரத்தில் ரஷ்யா உக்ரைனின் வடக்கில் இருக்கும் பெலாரஸில் ராணுவ பயிற்சிக்காக கணிசமான அளவில் துருப்புகளை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவின் ராணுவம் சுமார் 2,80,000 வீரர்களையும் கொண்டுள்ளது. மொத்தமாக அனைத்து ஆயுதமேந்திய பிரிவுகளையும் இணைத்தால் இந்த எண்ணிக்கை 9 லட்சமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதே போன்று 2840 தாங்கி வாகனங்களை கொண்டுள்ளது. இது ஒப்பீட்டளவில் உக்ரைனிடம் இருக்கும் எண்ணிக்கையைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமானது என்று கூறுகிறது லண்டனை தலைமையகமாக கொண்டு செயல்படும் இண்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஃபார் ஸ்ட்ரேடஜிக் ஸ்டடீஸ் (IISS).

ஜெலென்ஸ்கி கையெழுத்திட்ட ஒப்பந்தம் நாட்டின் பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்த முன்னுரிமை அளித்துள்ளது. மேலும் இது ராணுவ சேவைகளை அதிகரிக்கவும், ஒரு தொழில்முறை ராணுவ அமைப்பாக படிப்படையாக மாறும் என்றும், இறுதியாக உக்ரைனின் ராணுவத்தில் உள்ள வீரர்களின் எண்ணிக்கை 3,61,000 ஆக அதிகரிக்கும் என்றும் உக்ரைன் பிரதமர் அறிவித்துள்ளார்.

2010 முதல் 2020 வரையில் உக்ரைன் தன்னுடைய ராணுவத்திற்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என்று கூறினாலும், அது 4.3 பில்லியன் அமெரிக்க டாலார்கள் மட்டுமே. ஒப்பீட்டளவில் ரஷ்யாவின் ராணுவ பட்ஜெட்டில் இது பத்தில் ஒன்றாகும்.

kraine's armed forces shape up against Russia's

ராணுவ ஆய்வாளர்கள், உக்ரைனின் ஆண்ட்டி-ஏர்க்ராஃப்ட் மற்றும் ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு மிகவும் பலவீனமாக உள்ளது என்று கூறியுள்ளனர். அதன் முக்கியமான உள்கட்டமைப்பு மீதான ரஷ்ய தாக்குதல்களில் அதிக பாதிப்பை சந்திக்கும் ஒன்றாக இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. உக்ரைனின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை தடை செய்ய தன்னுடைய மேம்பட்ட மின்னணு அனுபவத்தை பயன்படுத்தி களத்தில் இருக்கும் ராணுவத்தினருக்கும் கட்டுப்பாட்டு மையத்திற்கும் இடையே அமைந்திருக்கும் தொலைத்தொடர்பை ரஷ்யா துண்டிக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

உக்ரைன் படையினரின் அனுபவம் எப்படி உள்ளது?

உக்ரைனின் படைகள் நாட்டின் கிழக்கில் உள்ள டான்பாஸ் பகுதியில் போர் அனுபவத்தைப் பெற்றுள்ளன, அங்கு அவர்கள் 2014 முதல் ரஷ்யா ஆதரவு பிரிவினைவாதிகளுடன் சண்டையிட்டு வருகின்றனர்.

உக்ரைன் நாட்டினரிடம் குறைந்த தூரம் சென்று தாக்கும் வான்வெளி ஆயுதங்களும், தாங்கிகள் தாக்குதலுக்கு எதிரான ஆயுதங்களையும் கொண்டுள்ளனர். அவர்களின் ஆயுதங்களில் அமெரிக்கா விநியோகித்த ஜாவேலின் ஏவுகணையும் அடங்கும். இது , இது ரஷ்ய முன்னேற்றத்தை மெதுவாக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

kraine's armed forces shape up against Russia's

வழக்கமான ராணுவத்தினர் மட்டுமின்றி, உக்ரைனின் தன்னார்வ பிராந்திய ராணுவ அலகுகள் போர் ஏற்படும் பட்சத்தில் கை கொடுக்கும். பெரும்பாலான ஆண்கள் அடிப்படை ராணுவ பயிற்சியை பெற்றுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 9 லட்சமாக உள்ளது. எனவே ரஷ்யா நாட்டின் ஏதேனும் ஒரு பகுதியை கைப்பற்ற முயற்சி செய்தால் நீடித்த பிடிவாதமான எதிர்ப்பை ரஷ்யா ராணுவம் எதிர்க்கொள்ளும்.

சோவியத் யூனியன் சரிவிற்கு பிறகு ரஷ்யா மேற்கொண்ட போர்களில் இது நிச்சயமாக ஒப்பிடமுடியாத அளவிற்கு சவால் மிகுந்ததாக இருக்கும். 1990களில் பிரிந்த செச்சினியா மற்றும் 2008இல் ஜோர்ஜியாவிற்கு எதிராக நடத்தப்பட்ட போர்களைக் காட்டிலும் சவால் நிறைந்த ஒன்றாக இந்த போர் இருக்கும்.

உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் எவ்விதம் உதவுகின்றன?

மேற்பத்திய நாடுகள் உக்ரைன் நாட்டிற்கு ஆயுதங்களை வழங்க முன்வந்துள்ளன. ஆனால் உக்ரைன் தலைநகர் க்யேவ், மேலும் ஆயுத தேவை இருப்பதை குறிப்பிட்டுள்ளது. போரில் கலந்து கொள்ள அமெரிக்க ராணுவம் வீரர்களை உக்ரைனுக்கு அனுப்பி வருகிறது. 2014ம் ஆண்டில் இருந்து அமெரிக்கா 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் ராணுவ உதவிகளை வழங்கியுள்ளது. ஜேவலின் ஏவுகணைகள், கடலோர ரோந்து படகுகள், ஹம்வீஸ், துப்பாக்கிகள், ட்ரோன்கள், ரேடார் அமைப்புகள், நைட் விஷன் மற்றும் ரேடியோ உபகரணங்கள் உள்ளிட்டவையும் இதில் அடங்கும். ஸ்டிங்கர் விமான எதிர்ப்பு ஏவுகணைகள், சிறிய ஆயுதங்கள் மற்றும் படகுகளை உள்ளடக்கிய கூடுதல் பொருட்களை வழங்குவதாக அமெரிக்க செனட்டர்களின் இரு கட்சி குழு உறுதியளித்துள்ளது.

துருக்கி கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கு எதிராக நிலைநிறுத்தப்பட்ட பைரக்டர் TB2 ட்ரோன்களின் பல அலகுகளை உக்ரைனுக்கு விற்பனை செய்துள்ளது.

பிரிட்டன் ஜனவரி மாதம் உக்ரைனுக்கு 2,000 ஷார்ட் ரேஞ்ச் ஆண்டி டேங்க் மிஷைல்களை வழங்கியுள்ளது. மேலும் பயிற்சி அளிப்பதற்காக பிரிட்டன் ராணுவத்தின் சிறப்பு நிபுணர்களை உக்ரைனுக்கு அனுப்பியுள்ளது. மேலும் இது சாக்சன் கவச வாகனங்களையும் வழங்கியுள்ளது.

எஸ்டோனியா ஜாவெலின் கவச எதிர்ப்பு ஏவுகணைகளை அனுப்புவதாகவும், லாட்வியா மற்றும் லிதுவேனியா ஸ்டிங்கர் ஏவுகணைகளை வழங்குவதாகவும் கூறியுள்ளது. செக் குடியரசு 152 எம்.எம். பீரங்கிகளை வழங்குவதாக கூறியுள்ளது.

ஜெர்மனி ராணுவ உபகரணங்களை வழங்க இயலாது என்று தெரிவித்துள்ள நிலையில் 6 மில்லியன் டாலர்கள் மதிப்பில் கள மருத்துவமனைகளுக்கு நிதி அளிக்கவும், ராணுவ வீரர்களுக்கு பயிற்சி வழங்கவும் ஒப்புக் கொண்டது.

kraine's armed forces shape up against Russia's

முழுவீச்சில் படையெடுப்பை மேற்கொள்ளுமா?

பெரும்பாலான இராணுவ ஆய்வாளர்கள் இது சாத்தியமில்லை என்று கூறுகிறார்கள் ஏனெனில் இது ஒரு நீண்ட மற்றும் குழப்பமான போரை உள்ளடக்கியது. இதனால் தவிர்க்க முடியாத அளவிற்கு உயிரிழப்புகள் ஏற்படும் என்றும் கூறியுள்ளனர். ரஷ்யா பெரிய நகரங்களை கைப்பற்றுவதற்கு பதிலாக வான்வெளி தாக்குதல் மற்றும் குறிப்பிட்ட நில அபகரிப்புகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ரஷ்ய சார்பு சக்திகளால் கட்டுப்படுத்தப்பட்ட கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் இருந்து ரஷ்யா தெற்கு மற்றும் மேற்கு நோக்கி நகர்ந்து, புத்தாக இணைக்கப்பட்டுள்ள க்ரீமியாவுடன் இணைந்து கருங்கடலை நோக்கி முன்னேறும் என்று கூறப்பட்டுள்ளது. பெலாரஸ் இராணுவப் பயிற்சியில் பங்கேற்கும் துருப்புக்கள் எந்தவொரு தாக்குதலின் ஒரு பகுதியாக உக்ரைனின் வடக்கு எல்லையை கடக்கக்கூடிய வாய்ப்பும் உள்ளது.

மற்றொரு ஸ்லாவ் நாட்டினர் மீது படையெடுப்பது குறித்து புடின் மீது சொந்த மக்களே அதிருப்தி அடைந்துள்ளதால் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும். மேலும் இது உக்ரைனில் உள்ள ரஷ்யாவிற்கு எதிரான மனப்பான்மையை அதிகப்படுத்தும். உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால், முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என மேற்குலகம் அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ukraine Russia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment