யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட வரலாற்று பாரம்பரியம் மிக்க இடங்கள் அதிகம் உள்ள நாடுகளில் ஒன்று என்ற பெருமையை ஈரான் (பெர்சியா) பெற்றிருப்பதோடு மட்டுமல்லாமல், உலகின் பழமையான நாகரீகத்திற்கு உரிமையாளராகவும் விளங்கி வருகிறது.
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சில சுவாரசியமான வேட்பாளர்கள்!
ஈரான் ராணுவ தளபதி காசீம் சுலைமானி, அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்கா மீது ஈரான் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மூன்றாம் உலகப்போரின் துவக்கமாக இருக்கும் என்று சர்வதேச ஊடகங்கள் ஆரூடம் தெரிவித்து வருகின்றன. இதை போர் துவக்கமாக கருதாதீர்கள் போர் நிறுத்த நடவடிக்கையாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அமெரிக்கா மீது ஈரான் தாக்குதல் நடத்த திட்டமிட்டால், ஈராக்கின் 52 வரலாற்று சிறப்புமிக்க இடங்களை தகர்ப்போம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். 52 அமெரிக்கர்களை, ஈரான் பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்ததை நினைவுகூரும் வகையில், ஈரானில் தாக்குதல் நடத்த 52 பாரம்பரிய இடங்களை அமெரிக்கா தேர்ந்தெடுத்து வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தர்பாருக்கு இசை அமைத்த அனிருத் மீது இப்படி ஒரு நடவடிக்கையா?
அமெரிக்கர்கள் அல்லது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் பட்சத்தில், மிக அதிக அளவிலான அழிவை ஈரான் சந்திக்க நேரிடும் என்று டிரம்ப், டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் (பெர்சியா) உலகிலுள்ள பழமையான நாகரிகத்தை உள்ளடக்கிய நாடு ஆகும். 4ம் நூற்றாண்டின் எலமைட் பேரரசு காலத்திலிருந்து அங்கு நாகரிகம் துவங்கிவிட்டது. வரலாற்று சிறப்புமிக்க பல்வேறு பேரரசர்களை உலகிற்கு தந்த நாடு ஈரான் ஆகும். அவர்களில் தி கிரேட் சைரஸ் தி கிரேட் டேரியஸ், அலெக்சாண்டர் தி கிரேட் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
வரலாற்று சிறப்புமிக்க ஈரான் நாட்டில், யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட 24 பாரம்பரிய சின்னங்கள் உள்ளன. அவற்றில் 5 இடங்கள் உங்கள் பார்வைக்கு…
மஸ்ஜெத் இ ஜாமே
இஸ்பாஹான் மாகாணத்தில் ஜாமே மசூதி உள்ளது. இந்த மசூதி, மஸ்ஜெத் இ ஜாமே மசூதி என்றும் வெள்ளிக்கிழமை மசூதி என்றும் அழைக்கப்படுகிறது. 12ம் நூற்றாண்டின் மசூதி கட்டடக்கலையை பறைசாற்றும் விதத்தில் அதன் கட்டமைப்பு அமைந்துள்ளது. மத்திய ஆசிய பகுதியில் உள்ள பழமையான மதவழிபாட்டுத்தலம் இது என்பது குறிப்பிடத்தக்கது. பாரம்பரிய முறையிலான முதல் இஸ்லாமிய கட்டடம் இது ஆகும். இஸ்லாமிய கலையின் ஆயிரம் ஆண்டு வடிவமைப்பு, வளர்ச்சி உள்ளிட்டவைகளின் மாதிரியாக இது விளங்கி வருகிறது.
கோலெஸ்தான் அரண்மனை

மேற்கத்திய பாணியிலான பழங்கால பெர்சியன் கைவினைப்பொருட்களின் மேம்பாடு மற்றும் வளர்ச்சியை தற்போதைக்கு பறைசாற்றும் வகையில், காஜர் காலத்தில் ( 1789-1925) கட்டப்பட்ட நினைவு சின்னமே இந்த கோலெஸ்தான் அரண்மனை.
இந்த அரண்மனையை சுற்றிலும் அழகிய மற்றும் அரிய தாவரங்களும் நீர்நிலைகளும் உள்ளன. 19ம் நூற்றாண்டின் அரிய பொருட்கள் இந்த அரண்மனையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள பொருட்கள், காஜர் காலத்தில், ஈரானிய கலைஞர்களின் கலைக்கு சான்று அளிப்பதாக உள்ளன.
பசார்கடே

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாக 6ம் நூற்றாண்டின் இரண்டாம் சைரஸால் தோற்றுவிக்கப்படடு, அசேமென்டிட் பேரரசின் தலைநகரமாக பசார்கடே விளங்கியது.
யுனெஸ்கோ இணையதளத்தில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பெர்சிய நாகரிகத்தின் நினைவு சின்னமாகவும், ராயஸ் அசேமென்டிட் கலை மற்றும் கட்டடவியல் பாரம்பரியத்தின் எடுத்துக்காட்டாகவும் இந்த இடம் விளங்கி வருகிறது. பசார்கடேவில், இரண்டாம் சைரஸின் கல்லறை, உயரமான இ -தாக்த், விசாலமான மேலறை, அழகிய வேலைப்பாடுகள் கொண்ட கேட் ஹவுஸ், கருத்தரங்கு அறை, குடியிருபு்புகள், தோட்டங்கள் உள்ளிட்டவைகள், இவர்களின் பாரம்பரியத்திற்கு சான்றாக அமைகின்றன.
மேற்கு ஆசியாவில், முதல் மல்டிகல்சுரல் பேரரசின் தலைநகரமாக பசார்கடே திகழ்கிறது. கிழக்கு மத்திய தரைக்கடல் மற்றம் எகிப்தின் இந்துஸ் ஆற்றங்கரையில் இது அமைந்துள்ளது. பல்வேறு மக்கள், அவர்களின் பாரம்பரியங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் இது அமைந்துள்ளது.
பெர்சிபோலீஸ்
518 பிசி காலத்தில் முதலாம் டேரியஸ் பேரரசர் இந்த நகரை உருவாக்கினார். இந்த நகரம், அசேமெனிட் பேரரசின் தலைநகரமாக விளங்கியது. பாதி இயற்கை, பாதி செயற்கை என்ற கலவையினடிப்படையில் இந்த நகரம் உருவாக்கப்பட்டுள்ளது. மெசபடோமிய மாடலில், பல்வேறு பேரரசர்களின் பங்களிப்பில், இந்த நகரம் உருவாக்கப்பட்டுள்ளதால், பல்வேறு தனித்தன்மைகளுடன் இந்த நகரம் திகழ்ந்து வருகிறது.
தக்த் இ சோலேமென்

ஈரானில், ஜோரோஸ்டிரியன் நம்பிக்கையின் முக்கிய அடையாளமாக இந்த தக்த் இ சோலேமென் பகுதி விளங்கி வருகிறது. எரிமலை அபாயம் கொண்ட வடமேற்கு மலைப்பகுதியில் இந்த நகரம் அமைந்துள்ளது. இங்குள்ள ஜோரோஸ்டிரியன் பறவைகள் சரணாலயத்தின் ஒருபகுதி 13ம் நூற்றாண்டிலும், அங்குள்ள கோயில்ல 6 மற்றும் 7ம் நூற்றாண்டு கட்டமைப்பை ஒத்துள்ளன. நெருப்புக்கோயில் வடிவமைப்பிலான இந்த நகரம், இஸ்லாமிய கட்டடக்கலைக்க சிறந்த சான்றாக விளங்கி வருகிறது.