இந்தியாவில் ஊட்டச்சத்து குறைவால் பறிபோகும் குழந்தைகளின் உயிர்கள்.. யுனிசெப் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை!

ஐந்து குழந்தைகளில், ஒரு குழந்தைக்கு வைட்டமின் 'ஏ' பற்றாக்குறை

UNICEF report : இந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட பாதி குழந்தைகள் சுமார் 69% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் உயிரிழப்பதாக யுனிசெப் அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் இதுக் குறித்த புள்ளி விவரங்களும் அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளன.

விரிவான தேசிய ஊட்டசத்து கணக்கெடுப்பு சார்பில் இது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது.இந்த ஆய்வின் முடிவுகள் கடந்த செவ்வாய்கிழமை வெளியிடப்பட்டன. இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, 2016-18 ஆம் ஆண்டில் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான நோய்களின் பாதிப்பு, 2015-16 ஆம் ஆண்டின் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் போது இருந்ததை விட குறைவாக இருந்தது, இது 38.3% குழந்தைகள் வளர்ச்சி குறைபாடு, 35.8% எடை குறைபாடு மற்றும் 21% உடல் மெலிந்ததால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இப்போதைய ஆய்வறிக்கையின் படி இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட 35% குழந்தைகள் வயதுக்கேற்ற வளர்ச்சி இல்லாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 17% குழந்தைகள் வளர்ச்சிக்கேற்ற எடையின்றி இருப்பதாகவும், 33% குழந்தைகள் வயதுக்கேற்ற எடையின்றி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்திய அளவில் உணவின்றி தவிக்கும் 6.4% குழந்தைகள் இருக்கும் நிலையில், குழந்தைகளுக்கு உணவளிக்கும் மாநிலங்களில் ஆந்திரப் பிரதேசம் முதலிடம் வகிக்கிறது. நாட்டிலேயே அங்கு தான் குறைந்தபட்சமாக 1.3% குழந்தைகள் உணவு பற்றாக்குறையுடன் உள்ளனர். அது தவிர 5 வயதுக்கு கீழுள்ள ஒவ்வொரு 5 குழந்தைகளில் ஒன்றுக்கு வைட்டமின் ஏ பற்றாக்குறை உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஒவ்வொரு 3 குழந்தைகளில் ஒன்றுக்கு வைட்டமின் பி12 பற்றாக்குறையும், ஒவ்வொரு 5 குழந்தைகளில் 2 குழந்தைகளுக்கு ரத்த சோகையும் ஏற்படுகிறது.

1. 42 சதவீத குழந்தைகளே போதிய அளவில் உணவை பெறுகின்றனர்.

2. 21 சதவீத குழந்தைகள் மட்டுமே போதிய அளவிலான பல்வேறு உணவுப் பொருட்களை பெறுகின்றனர்

3. 5 வயதுக்கு கீழுள்ள ஐந்து குழந்தைகளில், ஒரு குழந்தைக்கு வைட்டமின் ‘ஏ’ பற்றாக்குறை உள்ளது.

அதிகபட்சமாக சிக்கிம் மாநிலத்தில் 35.9% குழந்தைகள் போதிய உணவில்லாமல் இருக்கின்றனர் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.ஆந்திராவிற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிர மாநிலத்தில் 2.2% குழந்தைகளும், குஜராத், தெலங்கானா மற்றும் கர்நாடகாவில் தலா 3.6% குழந்தைகளும் உணவுப் பற்றாக்குறையுடன் உள்ளனர்.

ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் அதை அளவிடுவதோடு தவிர, உலகளவில் செயல்படுத்தப்பட்ட மிகப்பெரிய நுண்ணூட்டச்சத்து கணக்கெடுப்பு, இந்த ஆய்வாகும். ஊட்டச்சத்து குறைபாட்டைக் குறைப்பதற்கான இந்தியாவின் முதன்மை திட்டமான தேசிய ஊட்டச்சத்து இயக்கமான போஷன் அபியான், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகை ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்துகிறது மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டைக் குறிப்பிடவில்லை.

இதற்கிடையில் உணவு குறியீடு பட்டியலில் கடந்த ஆண்டு உலக அளவில் இந்தியாவுக்கு பின்னர் 16 நாடுகள் இருந்த நிலையில், இந்த ஆண்டு இந்தியாவுக்கு பின்னால் 15 நாடுகள் மட்டுமே உள்ளன. இதில் இந்தியாவை சுற்றி உள்ள பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், மியான்மர், சீனா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவை விட முன்னிலை பெற்றுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close