பொது சிவில் சட்டம் : ஆதரவும் எதிர்ப்பும்... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை என்னென்ன?

பொது சிவில் சட்டத்தை மூன்றாக பிரித்து தனித்தனி சட்டங்களாக உருவாக்க நேரு ஒப்புக் கொள்ள, நிறைய சட்டங்கள் மற்றும் விதிகள் நீர்த்துப் போனது.

Uniform Civil code : கடந்த வாரம், கோவாவில் ஒரு இடம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, நீதிபதிகள் பொது சிவில் சட்டத்திற்கான மிக முக்கியமான முன்னுதாரணம் இது என்று குறிப்பிட்டனர். சட்டத்தை உருவாக்கியவர்கள், இது போன்ற சூழல்கள் பின்னால் எழும் என்ற நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புடன் தான் சட்டங்களை உருவாக்கியுள்ளனர். ஆனால் அதனை வடிவமைத்து முறையாக கட்டமைக்கத்தான் எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறினார்கள்.

பொது சிவில் சட்டம் என்றால் என்ன?

இந்தியா மதசார்பற்ற நாடு. இந்து, இஸ்லாம், கிருத்துவம், சீக்கியம், மற்றும் புத்த மதங்களை பின்பற்றும் பலதரப்பட்ட மக்களுக்கான ஒரே சட்டக் கொள்கைகளுக்கு வழி அமைத்து தருவதே பொது சிவில் சட்டம் எனப்படும். இந்த சட்டத்தினை முறையாக கையாளும் வழி குறித்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 44-வது ஷரத்து பரிந்துரை செய்கிறது. திருமணம், விவாகரத்து, வாரிசு, சொத்துரிமை, தத்தெடுத்தல், ஜீவனாம்சம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இந்தச் சட்டங்கள் தெளிவுப்படுத்துகிறது.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க :  

மிக முக்கியமானவை எது – அடிப்படை உரிமைகளா அல்லது வழிநடத்தும் கொள்கைகளா?

அடிப்படை உரிமைகள் மிக முக்கியமானவை என்பதில் துளியும் சந்தேகம் வேண்டாம். மினெர்வா மில்ஸில் (1980) உச்ச நீதிமன்றம் இவ்வாறு தான் கூறுகிறது “இந்திய அரசியலமைப்பு சட்டமானது அதன் பாகங்கள் III (அடிப்படை உரிமைகள்) மற்றும் IV (வழிநடத்தும் கோட்பாடுகள்) இடையே சிக்கலான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டையும் சரியான முறையில் பின்பற்றாமல் ஒன்றுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் அளித்தால் அதனால் சமூக நல்லிணக்கம் தான் சீர் கெடும்” என்று வரையறை செய்தது. எவ்வாறாயினும், 1976 ஆம் ஆண்டில் 42 ஆவது திருத்தத்தில் மாற்றம் செய்யப்பட்ட அரசியல் சட்டப்பிரிவு 31 சி, எந்தவொரு கொள்கையையும் செயல்படுத்த ஒரு சட்டம் உருவாக்கப்பட்டால், அது இந்தியர்களின் அடிப்பரை உரிமைகளை உறுதி செய்யும் சட்டம் 14 மற்றும் 19 வது பிரிவுகளை மீறுவதாக எடுத்துக் கொள்ள இயலாது.

எந்தெந்த பிரிவுகளில் இந்திய பொது சிவில் சட்டத்தை ஏற்கனவே நடைமுறைப்படுத்துகிறது?

இந்திய ஒப்பந்தச் சட்டம், சிவில் நடைமுறைக் குறியீடு, பொருட்கள் விற்பனைச் சட்டம், சொத்து பரிமாற்றச் சட்டம் ஆகிய சட்டங்கள் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாக பின்பற்றப்படுகிறது. மத்திய அரசு சார்பில் இருந்து இந்த சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், மாநில வாரியாக சில இடங்களில் திருத்தங்கள் மேற்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. சமீபத்தில் இந்தியா முழுமைக்குமான மோட்டார் வாகனச் சட்டத்திற்கு சில மநிலங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தன. கடந்த ஆண்டு தான் சட்ட ஆணையம் பொது சிவில் கோட் இந்தியாவிற்கு சாத்தியமற்றது என்று அறிவித்திருந்தது. சட்டத்தை உருவாக்கியவர்கள் அனைவருக்குமான ஒரே சட்டம் வேண்டும் என்று நினைத்திருந்தால், பாராளுமன்றத்தில் அதற்கான வரம்பினை வழங்கியிருப்பார்கள். ஆனால் தனிப்பட்ட சட்டங்கள் கான்கரண்ட் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

ஒரு தனிப்பட்ட மதத்தின் கீழ் இருக்கும் அனைத்து பிரிவுக்கும் ஏற்ற வகையில் ஒரே மாதிரியான தனிப்பட்ட சட்டம் உள்ளதா?

அனைத்து இந்துக்களும் ஒரே மாதிரியான சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவதில்லை. அதே போன்று தான் முஸ்லீம் மற்றும் கிறித்துவ மதங்களைப் பின்பற்றும் மக்களும். ஆங்கிலேய மரபுகளில் மட்டுமல்ல சில போர்த்துகீசிய மற்றும் ஃப்ரெஞ்ச் பாரம்பரியத்திலும் சில பகுதிகள் இந்தியாவில் செயற்பட்டு வருகிறது.

ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி, 2019 ம் ஆண்டு வரை மத்திய இந்து சட்டங்களுக்கு மாறாக இருந்தது ஜம்மு காஷ்மீரில் செயற்பட்டு வந்த இந்து சட்டங்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு ஷரியத் சட்டம் 1937 ஜம்மு காஷ்மீர் வரை நீட்டிக்கப்பட்டாலும், பின்பு அது ரத்து செய்யப்பட்டடது. காஷ்மீரில் இருக்கும் இஸ்லாமியர்கள் தனித்துவமான ஒரு சட்டத்தின் கீழ் இயங்கி வருகிறார்கள். இது இந்தியாவில் இருக்கும் பல்வேறு இஸ்லாமியர்கள் பின்பற்றும் சட்டங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை. இஸ்லாமியர்களின் திருமண பதிவு முறைகளும் இடத்திற்கு இடம் வேறுபடுகிறது. காஷ்மீரில் திருமணப்பதிவு கட்டாயம் (1981 Act), பீகார், அசாம், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் கட்டாயம் இல்லை. விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.

வடகிழக்கு மாநிலங்களில் 200க்கும் மேற்பட்ட பழங்குடியினர் வாழ்கின்றனர். அவர்கள் தங்கள் சொந்த சட்டங்களைக் கொண்டுள்ளனர். நாகாலாந்தில் மாநிலத்தில் உள்ள உள்ளூர் பழக்கவழக்கங்களை இந்திய அரசியல் அமைப்பு சட்டமே பாதுகாக்கிறது. இதேபோன்ற பாதுகாப்புகளை மேகாலயா மற்றும் மிசோரம் மாநிலங்கள் அனுபவிக்கின்றன. சீர்திருத்தப்பட்ட இந்து சட்டம் கூட பலதரப்பட்ட மக்கள் மத்தியில் நிலவும் பழக்க வழக்கங்களை பாதுகாக்கிறது.

பொது சிவில் சட்டம், அடிப்படை உரிமைகளுடன் எப்படி தொடர்பினை உருவாக்குகிறது?

சட்டம் 25 தனி மனிதர்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கிறது. சட்டம் 26 (பி) ஒவ்வொரு மதம் மற்றும் இனம் தங்களின் மதம் சார்ந்த பிரச்சனைகளையும் விவகாரங்களையும் நிர்வாகிக்க உரிமை அளிக்கிறது. சட்டம் 29, தனித்துவம் வாய்ந்த கலாச்சாரத்தினை பாதுகாக்க வழிவகை செய்கிறது. சட்டம் 25-ல் தனி மனிதரின் மத சுதந்திரம் என்பது, பொது ஒழுங்கு, சுகாதாரம், மற்றும் அறநெறியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது.  அரசியல் அமைப்பு சபையில் அடிப்படை உரிமைகளில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இருந்தது. அந்த விவகாரம் வாக்கெடுப்பு நடத்தி தீர்த்துக் கொள்ளப்பட்டது. சர்தார் வல்லபாய் படேல் தலைமையிலான அடிப்படை உரிமைகள் துணைக்குழு இந்த வாக்கெடுப்பினை நடத்தியது. அதில் 5:4 என்ற விகிதத்தில் மத சுதந்திரத்தை விட சீரான சிவில் கோட் முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை என்று வாக்கெடுப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அரசியலமைப்பு சபையில் இருந்த இஸ்லாமிய உறுப்பினர்களின் கருத்துகள் என்னவாக இருந்தது?

சில உறுப்பினர்கள் முஸ்லீம் தனிநபர் சட்டத்தை மாநில ஒழுங்குமுறையில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். முகமது இஸ்மாயில் என்பவர் மூன்று முறை தனிநபர் சட்டத்தை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இருந்து நீக்குவதற்கு 3 முறை முயற்சி செய்து தோல்வி அடைந்தார். ஒரு மதசார்பற்ற அரசானது மக்களின் தனிப்பட்ட சட்டங்களில் தலையிடக் கூடாது என்று குறிப்பிட்டார். ஹூசைன் இமாம் என்பவர், இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் என்பது சாத்தியமா என்று கேள்வி எழுப்பினார். அம்பேத்காரோ, எந்த ஒரு அரசாங்கமும் இஸ்லாமியர்களை போராட்டத்தில் தள்ளும் வகையில் இந்த விதிகளை பயன்படுத்தக் கூடாது என்று கூறினார். அல்லாடி கிருஷ்ணசாமி யூனியன் சிவில் கோட்டிற்கு ஆதரவாக தன்னுடைய நிலைப்பாட்டினை அறிவித்தார்.

இந்துக்களுக்கான பொது சிவில் சட்டம் குறித்து?

1948ம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சபையின் தலைவராக இர்நுதார் ராஜேந்திர பிரசாத். முற்போக்கான கருத்துகளை தனிச்சட்டத்தில் திணிப்பதற்காக அடிப்படை மாற்றங்களை கொண்டு வந்ததிற்காக நேருவை அவர் கடுமையாக எச்சரித்தார். சர்தார் வல்லபாய் படேல், பட்டாபி சித்தராமையா, எம்.ஏ. ஐயங்கார், எம்.எம். மாலவியா மற்றும் கைலாஷ் நாத் கட்ஜூ போன்றோர் தங்களின் எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.

இந்துக்களுக்கான பொதுசிவில் சட்டம் குறித்த விவாதம் 1949ம் ஆண்டு, டிசம்பர் மாதம் நடத்தப்பட்டது. அப்போது 28 உறுப்பினர்களில் 23 பேர் இந்த பொது சிவில் சட்டத்தை எதிர்த்தனர். செப்டம்பர் 15, 1951ம் ஆண்டு, ராஜேந்திர பிரசாத் மீண்டும் தன்னுடைய அதிகாரங்களை பயன்படுத்தி இந்த பிரச்சனையை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தார். இறுதியாக அம்பேத்கார் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை உருவானது. பொது சிவில் சட்டத்தை மூன்றாக பிரித்து தனித்தனி சட்டங்களாக உருவாக்க நேரு ஒப்புக் கொள்ள, நிறைய சட்டங்கள் மற்றும் விதிகள் நீர்த்துப் போனது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close