Union Budget 2021 : வரும் 2021 -22-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இன்று தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், காலை 11 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார். சுமார் 1.50 மணி நேரம் நடைபெற்ற இந்த உரையில் பட்ஜெட் குறித்து விளங்கங்கள் அளிக்கப்பட்டது.
இந்த பட்ஜெட் உரையில், வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி அடிப்படையில், (ஏஐடிசி) ஒரு லிட்டருக்கு ரூ .2.5 மற்றும் டீசலுக்கு ரூ .4 வரி விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் நாளை முதல்பெட்ரோல் விலை உயரும் என்று பரவலாக பேசப்பட்டது. ஏற்கனவே இந்தியாவில் பெட்ரோல் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில், தற்போது வரிவிதிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கலகத்தில் இருந்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக, இந்த வரிவிதிப்பு நுகர்வோர் மீது கூடுதலாக எவ்வித சுமையையும் ஏற்படுத்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு காரணம் என்னவென்றால், பிராண்ட் செய்யப்படாத பெட்ரோல் முன்பு அடிப்படை கலால் வரி (BED) ரூ .2.98 மற்றும் சிறப்பு கூடுதல் கலால் வரி (எஸ்ஏஇடி) லிட்டருக்கு ரூ .12 இருந்தது. ஆனால் தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ .1.4 மற்றும் ரூ .11 ஆக குறைக்கப்பட்டுள்ளன. இதேபோல் டீசல் மீதான (BED) ரூ .4.83 லிருந்து 1.8 ஆகவும், லிட்டருக்கு ரூ .9 ல் இருந்து ரூ .8 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் (BED + SAEC + AIDC) மீதான ஒட்டுமொத்த கலால் வரி இப்போது லிட்டருக்கு ரூ 14.9 ஆக இருக்கும், இதற்கு முன்பு ரூ .14.98 ஆக இருந்தது. இதில் டீசலுக்கான கலால் வரி ரூ 13.8 ஆக இருக்கும் இதற்கு முன்பு ரூ. 13.83 ஆக இருந்தது.
தற்போது 150 சதவீத அடிப்படை சுங்க வரிகளுக்குட்பட்ட மதுபானங்களுக்கும் தற்போது வரி மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. 100 சதவீத வரி முன்மொழியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், மதுபானங்கள் இறக்குமதி வரி 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிகர நுகர்வோர் கூடுதல் எதையும் செலுத்த வேண்டிய அவசியமில்லை.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"