மத்திய பட்ஜெட் 2023-ல் மத்திய அரசு மூலதனச் செலவினங்களை உயர்த்தியுள்ளது, நிதி நிர்வாகத்தையும் காட்டியுள்ளது. தனிநபர் புதிய வருமான வரியை இயல்பான வருமான வரி என அறிவித்துள்ளது.
2023-24-ல் மத்திய பட்ஜெட்டை மூன்று பெரிய எடுத்துக்காட்டில் சுருக்கமாகக் கூறலாம். சாராம்சத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019-20-ம் ஆண்டில் அவர் வெளியிட்ட அறிவிப்பில் பரந்த வளர்ச்சி உத்தியில் உறுதியாக உள்ளார்.
இந்த வளர்ச்சி உத்தி இரண்டு முனைகளைக் கொண்டது.
- ஒன்று, பொருளாதாரத்தில் தனியார் துறையை உற்பத்தித் திறனில் முதலீடு செய்ய ஊக்குவித்து, அதன் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி வளர்ச்சிய ஊக்குவிப்பது.
- இரண்டாவது பகுதி பொருளாதாரத்தில் அரசாங்கத்தின் பங்கு பற்றியது. இங்கே, குறைந்தபட்ச அரசாங்கம் என்பதுதான் மந்திரம். இது ஒருபுறம் மூலதனச் செலவினத்தை அதிகரிப்பதையும் மறுபுறம் பங்கு விலக்கல் மூலம் அதிக வருவாயை உயர்த்துவதையும் குறிக்கிறது. சாராம்சத்தில், அரசாங்கம் நிதி நிர்வாகத்தைக் கடைபிடிப்பதையும் புகழ்பெற்ற திட்டங்களுக்குப் பணத்தைத் வாரி இறைக்காமல் இருப்பதையும் உறுதிப்படுத்துவதற்காக இது செய்யப்பட்டது.
சமீபத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் மீண்டும் அதே உத்தியை கடைபிடித்துள்ளார்.
1: அரசாங்கம் மூலதனச் செலவினங்களை உயர்த்துதல்
மூலதனச் செலவு என்பது சாலைகள், பாலங்கள், துறைமுகங்கள் போன்ற உற்பத்திச் சொத்துக்களைக் கட்டுவதற்கு செலவிடப்படும் பணமாகும். இது பொருளாதாரத்திற்கு அதிக வருவாயைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு ரூ.100 செலவழித்தால், பொருளாதாரத்திற்கு ரூ.250 லாபம் கிடைக்கும். மறுபுறம் வருவாய் செலவினம் 100 ரூபாய்க்கும் குறைவாகவே கிடைக்கும்.
சமீபத்திய பட்ஜெட்டில் அரசாங்கத்தின் மூலதனச் செலவினம் ரூ.10 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது - இது 2020-21ஆம் ஆண்டை ஒப்பிடும்போது அப்போது ஒதுக்கப்பட்ட ரூ. 4.39 லட்சம் கோடியை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
2: நிதி நிர்வாகம்
நிதிப்பற்றாக்குறை (அரசாங்கத்தால் சந்தை கடன் வாங்குதல்) ஜி.டி.பி-யில் 5.9% ஆக குறையும் என்று நிதியமைச்சர் உறுதியளித்துள்ளார். இது பரந்த பொருளாதாரத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில், இது தனியார் தொழில்முனைவோர் கடன் வாங்குவதற்கு பணம் கிடைக்கும் என்று கூறுகிறது.
3: புதிய தனிநபர் வருமான வரி இப்போது இயல்பான வருமான வரி
புதிய தனிநபர் வருமான வரி பட்ஜெட்டில் அதிகம் பேசப்படும் முடிவாக இருக்கிறது. சம்பளம் வாங்கும் இந்தியர்கள் வருமான வரித்துறையில் சில நிவாரணங்களை எதிர்பார்த்தனர். நிதியமைச்சர் அதை வழங்கியதாகத் தெரிகிறது. ஆனால், புதிய தனிநபர் வருமான வரி ஆட்சி என்று அழைக்கப்படும், வருமான வரி, கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், நிறைய பேர் ஏற்கவில்லை. வருமான வரியைப் பிரபலப்படுத்த நிதியமைச்சர் ஊக்கம் அளிக்கிறார். அதே நேரத்தில் இது இப்போது இயல்புநிலை திட்டமாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு வரை, நீங்கள் இதை ஏற்றுக்கொண்டிருந்தால், பழைய வருமான வரி முறைக்கு மீண்டும் செல்ல முடியாது என்ற நிபந்தனையுடன் மக்களுக்கு விருப்பத் தேர்வாக உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.