Advertisment

மத்திய பட்ஜெட்: பிராணாம் முதல் மிஷ்தி வரை திட்டங்களுக்கு தொடரும் மோடி அரசின் ஆதரவு

உரங்களை குறைப்பது, சதுப்புநிலத் தோட்டம், இயற்கை வளங்களை ஊக்குவித்தல் ஆகியவை கவர்ச்சியான முழக்கங்களுடன் வடிவமைக்கப்பட்ட திட்டத்தின் சுருக்கமான பெயரின் நோக்கங்கள் ஆகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
budget 2023, union budget, narendra modi, nirmala sitharaman, பட்ஜெட், மத்திய பட்ஜெட் 2023, union budget 2023, பி.எம் பிராணாம், மிஷ்தி pm pranam, mishti, modi govt acronyms, modi news, bjp

2023-24-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், நரேந்திர மோடி அரசாங்கத்தின் சுருக்கமான பெயர்களில் அமைந்த பல திட்டங்களுக்கான ஆதரவு மீண்டும் பிரதிபலித்தது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது உரையில் மேலும் பலவற்றை வெளியிட்டார்.

Advertisment

புதிய மிஷ்தி (MISHTI) திட்டத்தின் கீழ் கடற்கரையோரத்தில் சதுப்புநில தோட்டங்களை அமைக்கும் திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

“சுழற்சி பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக" கோபர்தன் திட்டத்திற்காக ரூ. 10,000 கோடி முதலீடு புதன்கிழமை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. பாதுகாப்பு செய்யப்பட்ட இயற்கை உயிரி வேளாண்மை வளங்கள் தன் திட்டம் என்கிற கோபர்-தன் (GOBAR-DHAN) திட்டம், இது ஸ்வச் பாரத் மிஷன் கிராமின் - 2-வது கட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.

பி.எம். பிராணாம் என்கிற பிரதான் மந்திரி விவசாய மேலாண்மை யோஜனாவுக்கான மாற்று சத்துக்களை ஊக்குவித்தல் திட்டமானது ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைக்க மாநிலங்களை ஊக்குவிக்கிறது.

முன்னதாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்த திட்டத்திற்கு தனி பட்ஜெட் இல்லை என்றும், உரங்கள் துறையால் நடத்தப்படும் திட்டங்களின் கீழ் தற்போதுள்ள உர மானியத்தின் சேமிப்பு மூலம் நிதியளிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

உடான் அல்லது உதே தேஷ் கா ஆம் நாக்ரிக், ஏப்ரல் 2017-ல் தொடங்கப்பட்ட திட்டங்களுக்காக மோடி அரசாங்கம் கொண்டு வந்த திட்டங்களின் சுறுக்கமான பெயர்களில் அடங்கும் - குறைவாகப் பயன்படுத்தப்படும் பிராந்திய விமான நிலையங்களுக்கான இணைப்பை மேம்படுத்த முயற்சி எடுக்கப்படும்.

நவம்பர் 2022 இல் தொடங்கப்பட்ட ஷக்தி திட்டம் (SHAKTI) இந்தியாவில் கொய்லாவை வெளிப்படையாகப் பயன்படுத்துவதற்கும் ஒதுக்குவதற்குமான திட்டத்தைக் குறிக்கிறது. கொய்லா நிலக்கரிக்காக பயன்படுத்தப்படுகிறது.

சாகர் (SAGAR) என்பது கடல்சார் ஒத்துழைப்பு தொடர்பான அரசாங்கத்தின் குறிக்கோளுக்கான திட்டத்தின் பெயர் ஆகும். இது 'பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி'யை இலக்காகக் கொண்டது. இந்த திட்டம் மார்ச் 2015-ல் அறிவிக்கப்பட்டது.

உஸ்த்தாத் (USTTAD) என்பது மேம் 2015-ல் அறிவிக்கப்பட்ட பாரம்பரிய கைவினைப் பொருட்களை மேம்படுத்துவதற்கும் பயிற்சியாளர்களை ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்ட இந்த கைவினைப் பொருட்கள் மேம்பாட்டிற்கான திறன்கள் மற்றும் பாரம்பரிய கலைகள்/கைவினைகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் சுருக்கமான பெயர் ஆகும்.

ஜியான் (GIAN) அல்லது கல்வி வலையமைப்புகளின் உலகளாவிய முன்னெடுப்பு இந்தியாவிற்கும் உலகிற்கும் இடையிலான கல்வித் தொடர்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டம் நவம்பர் 2015-ல் முறையாக அறிவிக்கப்பட்டது.

பிரகதி (PRAGATI) என்பது நிர்வாகத்தின் செயல்பாட்டை துரிதப்படுத்தி குறிப்பிட்ட காலத்தில் அமல்படுத்துவது என்ற அடிப்படையில் பல்வேறு அரசாங்கத் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான ஒரு தளம். இது மார்ச் 2015-ல் தொடங்கப்பட்டது.

ஸ்விஃப்ட் (SWIFT) என்கிற வர்த்தகத்தை எளிதாக்குவதற்கான ஒற்றை சாளர தளம் திட்டத்தின் மூலம் வர்த்தக அனுமதியுடன் குறைந்தபட்ச அரசாங்கத்திற்கான அரசாங்கத்தின் உந்துதலை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ஏப்ரல் 2016-ல் தொடங்கப்பட்டது.

2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புனித யாத்திரை புத்துயிர் மற்றும் ஆன்மீகம், பாரம்பரிய பாதுகாப்பு இயக்கத்திற்கான பெயர் பிரசாத் திட்டம் (PRASHAD) யாத்திரை இடங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஜெ (GEM) அல்லது அரசு இ-சந்தை என்பது ஆகஸ்ட் 2016-ல் தொடங்கப்பட்ட இணையம் மூலம் பொது கொள்முதல் செய்வதற்கான திட்டத்திற்கான பெயர்.

மோடி தலைமையில் அமைந்த புதிய அரசின் முதல் அறிவிப்புகளில் ஒன்று திட்டக் கமிஷனின் பெயர் மாற்றம். ஜனவரி 2015-ல் இது நிதி ஆயோக் (NITI)- அல்லது இந்தியாவை மாற்றுவதற்கான தேசிய நிறுவனம் (NITI) ஆயோக் என பெயரிடப்பட்டது.

இந்த திட்டங்கள் மட்டுமில்லாமல், மோடி தனது பார்வையை முன்வைக்க எண்களின் மீது விருப்பம் காட்டியுள்ளார். கடந்த ஆண்டு தனது சுதந்திர தின உரையில், பிரதமர் “அமிர்த காலின் பஞ்ச் பிரான்” அல்லது இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் 2047 வரை அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஐந்து உறுதிமொழிகளைக் கொண்டு வந்தார். காலனித்துவ மனநிலையின் எல்லா தடயத்தையும் அகற்றுவது. நமது வேர்களில் பெருமை கொள்வது, தொழிலாளர்கள், குறிப்பாக பெண்கள் மத்தியில் ஒற்றுமை மற்றும் குடிமக்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள்” ஆகியவை இதில் அடங்கும்.

அவர் ஆட்சிக்கு வந்த சில மாதங்களுக்குப் பிறகு, செப்டம்பர் 2014-ல் நியூயார்க் நகரத்தில் உள்ள மேடிசன் ஸ்கொயர் கார்டனில் புலம்பெயர்ந்த இந்தியர்கள் இடையே அவர் ஆற்றிய உரையில், மோடி ‘மூன்று டி-களைக் காட்டினார் - ஜனநாயகம், மக்கள்தொகை ஈவுத்தொகை மற்றும் தேவை (emocracy, demographic dividend, and demand) ஆகியவற்றைக் குறிப்பிட்டார். இந்தியாவின் மூன்று தனித்துவமான பலங்கள் அதை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்று கூறினார்.

பிப்ரவரி 2016-ல் மும்பையில் ‘மேக் இன் இந்தியா’ வாரத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி தனது மூன்று டி-கள் என்ற யோசனையைக் கட்டியெழுப்பினார். மேலும், இந்தியாவை வணிகம் செய்வதற்கான எளிதான இடமாக மாற்றுவதற்கு இவை உதவும் என்று கூறினார். செப்டம்பர் 2019-ல் நியூயார்க்கில் நடந்த ப்ளூம்பெர்க் குளோபல் பிசினஸ் ஃபோரத்தில் பேசிய மோடி, நான்கு டி-களை கூறினார். “இன்று, இந்தியாவின் வளர்ச்சிப் போக்கில் நான்கு முக்கிய காரணிகள் உள்ளன, அவை உலகில் ஒன்றாகக் இருப்பது கடினம். இந்த 4 காரணிகள் ஜனநாயகம், மக்கள்தொகை, தேவை மற்றும் தீர்க்கமானவை” என்று கூறினார்.

இதைத் தொடந்து, அடுத்த ஆண்டு, செப்டம்பரில், தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-ன் கீழ் கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்த 21 ஆம் நூற்றாண்டில் பள்ளிக் கல்வி குறித்த மாநாட்டில் மோடி உரையாற்றினார். இந்த நிகழ்வில், பிரதமர் "ஐந்து இ-களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். ஈடுபாடு, ஆய்வு, அனுபவம், வேகம் மற்றும் சிறப்பான செயல்பாடு (Engage, Explore, Experience, Express, and Excel) என்று கூறினார்.

அந்த ஆண்டின் தொடக்கத்தில், ஜூன் 2020 இல், இந்திய வர்த்தக சம்மேளனத்தின் 95-வது ஆண்டு நிறைவு அமர்வின் தொடக்க விழாவில் பேசிய மோடி தனது உரையில் மூன்று பி-களைப் பற்றி பேசினார். “மக்கள், பூமி மற்றும் லாபம் (People, Planet and Profit) ஆகியவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. இம்மூன்றும் ஒரே நேரத்தில் செழித்து, இணைந்து இருக்க முடியும்” என்று கூறினார்.

பிரதமர் தனது உரைகளில் கணித சூத்திரங்களையும் பயன்படுத்துகிறார். இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையேயான உறவுகளை விளக்குவதற்கு "(a+b)2" என்ற கணித சூத்திரத்தைப் பயன்படுத்தியது அவரது மிகவும் பிரபலமான உரைகளி ஒன்றாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து பிரதமர் மொடி 2015-ல் டொராண்டோவில் விளக்கினார், அந்த சூத்திரத்தை விரிவுபடுத்தும்போது தோன்றும் 2ab போன்றது என்று கூறினார்.

2017 ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றத்தை காகிதமில்லாமல் பட்ஜெட்டாக தாக்கல் செய்ய உதவும் வகையில் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் அமைப்பை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தியபோது, ​​நாடு புதிய தொழில்நுட்பங்களை மாற்றியமைத்து வளைவில் முன்னேற வேண்டுமானால், அது ஐடி + ஐடி = ஐடி அல்லது ( Information Technology and Indian talent equals India Tomorrow) என்ற சமன்பாட்டைப் பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.

ஜம்முவில் உள்ள கதுவாவில் பிரச்சாரப் பாதையில் ஒரு கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர்மோடி “3 AK-47s”களால் பாகிதானுக்கு பலன் உள்ளது. 1 AK-47 துப்பாக்கி, காங்கிரஸின் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. ஆண்டனி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை ஏ.கே. என்று சுருக்கமாகக் ஏ.கே 47 என்று குறிப்பிட்டார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Pm Modi Nirmala Sitharaman Budget 2022 23
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment