நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் மாநிலங்கள் தங்கள் தலைநகரங்களிலோ, மிக முக்கியமான சுற்றுலா மையங்களிலோ அல்லது நிதி தலைநகரங்களிலோ “யூனிட்டி மால்” அமைக்க ஊக்குவிக்கப்படும் என்று அறிவித்தார்.
யூனிட்டி மால் என்றால் என்ன?
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் யூனிட்டி மால்கள் குறித்து அறிவித்தார். எனினும் அது எப்படி இருக்கும் எவ்வாறு செயல்படும் என்பது குறித்து எந்தத் தகவலையும் கொடுக்கவில்லை.
இருப்பினும் யூனிட்டி மால்கள் உள்ளூர் மாவட்ட தயாரிப்புகள், இந்திய அரசின் பொருள்கள், கைவினைப் பொருள்கள் உள்ளிட்டவற்றை வணிகம் செய்யும், விளம்பரப்படுத்தும் ஒன்றாக இருக்கும் எனக் கூறினார்.
தற்போது இது குஜராத் மாநிலம் கேவாடியாவில் உள்ள ஏக்தா நகரில் செயல்பட்டுவருகிறது. இது மாநில உள்ளூர் பொருள்கள், கைவினைப் பொருள்களின் ஷோ ரூம் ஆகும்.
இரண்டு தளங்களில் 35000 சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த மாலில், மாநிலங்களின் பாரம்பரிய ஜவுளி மற்றும் கைவினைப் பொருட்களின் 20 எம்போரியங்கள் உள்ளன.
ஒரு மாவட்டம் ஒரு பொருள் என்றால் என்ன?
ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு என்பது அரசாங்கத்தின் முன்முயற்சியாகும், இது பிராந்திய தயாரிப்புகளை எளிதாக அணுகக்கூடியதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அதே நேரத்தில் அவற்றை உற்பத்தி செய்பவர்களுக்கு மூலதனத்தையும் வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ், மாநிலம் ஒரு மாவட்டத்திற்கான முதன்மைப் பொருளைக் கண்டறிந்து, அதன் செயலாக்கம், சேமிப்பு மற்றும் சந்தைப்படுத்துதலுக்கான ஆதரவை வழங்குகிறது.
இந்த தயாரிப்புகள் விவசாய பொருட்கள், தானியங்கள் சார்ந்த பொருட்கள் அல்லது மாம்பழம், உருளைக்கிழங்கு, இறைச்சி மற்றும் மீன்வளம் போன்ற உணவுப் பொருட்களாக இருக்கலாம்.
இந்தத் திட்டம், தேன் மற்றும் மூலிகை உணவுப் பொருட்கள் போன்ற கழிவுகளிலிருந்து செல்வப் பொருட்கள் உட்பட பாரம்பரிய மற்றும் புதுமையான தயாரிப்புகளை ஆதரிக்கிறது.
புவியல் குறியீடு என்றால் என்ன?
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (APEDA) படி, ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் விவசாய, இயற்கை அல்லது உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கு புவியியல் குறியீடு (GI) வழங்கப்படுகிறது.
அந்த குறிப்பிட்ட பகுதியில் இருந்து தயாரிப்பு வருகிறது என்பதற்கு இந்த குறிச்சொல் உத்தரவாதம் அளிக்கிறது. இது சர்வதேச சந்தையில் ஒரு வகையான வர்த்தக முத்திரை ஆகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/