Advertisment

கொரோனா பரவலில் வானிலையின் பங்கு என்ன? ஓராண்டு ஆகியும் அவிழாத முடிச்சுகள்

Unknowns in the role of weather in covid 19 spread இறப்புகளில் பல வானிலை அளவுருக்களின் தாக்கம் குறித்து உறுதியான பதில்களைக் கண்டுபிடிக்கவில்லை.

author-image
WebDesk
New Update
Unknowns in the role of weather in covid 19 spread Tamil News

Unknowns in the role of weather in covid 19 spread Tamil News

Unknowns in the role of weather in covid 19 spread Tamil News : ஒரு முழு ஆண்டுக்கும் மேலாக கோவிட் -19 தொற்றுநோய் பரவல் பருவங்களையும் கடந்து சென்றபோதிலும், ​​இந்த வைரஸ் எவ்வாறு செயல்படுகிறது மற்றும் மாறிவரும் வானிலைக்கு எவ்வாறு பதிலளிக்கிறது என்பது இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளப்படவில்லை.

Advertisment

இது உலகளவில் ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக இருந்தாலும், உலக வானிலை அமைப்பு (World Meteorological Organization - WMO) அமைத்த 16 உறுப்பினர்களைக் கொண்ட கோவிட் -19 பணிக்குழு, உலகெங்கிலும் உள்ள கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் அதன் தொடர்புடைய இறப்புகளில் பல வானிலை அளவுருக்களின் தாக்கம் குறித்து உறுதியான பதில்களைக் கண்டுபிடிக்கவில்லை.

தொற்றுநோய் பரவும்போது, ​​வானிலை என்ன பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது?

டிசம்பர் 2019-ல் சீனாவின் வுஹானில் இருந்து முதல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட புகார் பதிவாகியதிலிருந்த ஆரம்பத்திலிருந்தே, பிரபலமான விஞ்ஞான ஊகங்கள் சுவாச வைரஸ் தொற்று சில பருவநிலைகளைக் காட்டக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

காய்ச்சலுடனான கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில், பல மருத்துவ மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் இலையுதிர் மற்றும் குளிர்கால மாதங்களில் சுவாச வைரஸ் தோற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்த்தார்கள். மேலும், இதுபோன்ற தொற்றுநோய்கள் மிதமான காலநிலையிலும் கோடை மாதங்களிலும் வெளிப்படும். தவிர, புவியியல் இருப்பிடம், உயரம் மற்றும் வருடாந்திர மாறுபாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபாடுகள் கணிக்கப்பட்டன.

இருப்பினும், கோவிட் -19 போக்குகள், அதாவது வானிலை மற்றும் காற்றின் தரம் ஆகியவற்றை ஆவணப்படுத்துவதற்கான ஆரம்ப முயற்சிகளில், முடிவுகள் எப்போதும் கணிக்கப்பட்டபடி இல்லை. பல ஆய்வுகள் நிச்சயமற்ற மற்றும் முரண்பாடான முடிவுகளைத் தந்தன.

கோவிட் -19 பாதிக்கப்பட்டவர்களில் வானிலை எந்த தாக்கத்தையும் கொண்டிருக்கவில்லையா?

தற்போதைய நிலவரப்படி, ஒரு குறிப்பிட்ட அளவிலான உறுதிப்பாட்டுடன் என்ன சொல்ல முடியும் என்றால், பல்வேறு மக்கள்தொகைகளின் நோயெதிர்ப்பு என்பது சுற்றுச்சூழல் காரணிகளை ஒரு பெரிய அளவிற்கு விட அதிகமாக உள்ளது. இந்த பருவகாலமானது ஒப்பீட்டளவில் சிறியது. ஆனால், தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.

WMO கோவிட் -19 பணிக்குழுவின் முதல் அறிக்கையின்படி, 'கோவிட் -19 தொற்றுநோயை பாதிக்கும் வானிலை மற்றும் காற்றின் தரக் காரணிகள் பற்றிய ஆய்வு' கடந்த வாரம் வெளியிடப்பட்டது.

இந்த ஆய்வுகள் என்ன பரிந்துரைக்கின்றன?

புற ஊதா கதிர்வீச்சு, காற்றின் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் ஆகிய மூன்று வானிலை அளவுருக்களில் WMO பணிக்குழு கவனம் செலுத்தியது. பல ஆய்வுகளின் அடிப்படையில், இப்போது அறியப்பட்டவை இங்கே..

புற ஊதா கதிர்வீச்சு (UV RADIATION):

கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வக அமைப்புகளின் கீழ், வைரஸ் உயிர்வாழ்வதில் புற ஊதாவின் தாக்கம் தெளிவாக உள்ளது. ஆனால், SARS-Cov-2 பரவுவதற்கான அதன் முக்கியத்துவம் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. பல ஆய்வுகள் புற ஊதா கதிர்வீச்சுகள் மற்றும் SARS-Cov-2 பரிமாற்றத்தின் குறிகாட்டிகளுக்கு இடையில் எதிர்மறையான தொடர்புகள் அல்லது நேரடி அல்லாத தொடர்புகளை ஈர்த்தன. இதில் வழக்கு வளர்ச்சி விகிதமும் அடங்கும். ஆனால், புற ஊதா கதிர்வீச்சின் தாக்கத்தின் சாத்தியம் மற்றும் பருவங்கள், அட்சரேகை உள்ளிட்ட அதன் தாக்கங்கள் நிறுவப்படாமல் உள்ளன.

வெப்பநிலை மற்றும் ஈரப்பதம்:

குளிர்ந்த வெப்பநிலை (5 ° C) மற்றும் ஒப்பீட்டளவில் குறைந்த ஈரப்பதம் (20-35%) கொண்ட சூழல்கள் ஏரோசோல்கள் மூலம் வைரஸ் பரவலை சாதகமாக பாதிக்கின்றன. குறிப்பாக நடு அட்சரேகை குளிர்கால அமைப்புகளில் பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். சூடான மற்றும் ஈரப்பதமான அமைப்புகளில், சிறிய சுவாச நீர்த்துளிகள் தண்ணீரை உறிஞ்சும் திறன் கொண்டவை. ஒரு பெரிய நீர்த்துளி அதன் மேற்பரப்பில் நிலைபெறும் போது, ​​அது குறிப்பாக வெப்பமண்டல காலநிலைகளில், வான்வழி வழியாக அல்லாமல் தொடர்பு வழியாகப் பரவுவதற்கு வழிவகுக்கிறது.

பெரிய வெப்பநிலை மாறுபாடுகளின் கீழ், சுவாச இறப்பு அதிகரிக்கிறது. அதிக சுற்றுப்புற வெப்பநிலைக்கு வெளிப்பாடு, குறிப்பாக வயதானவர்கள், குழந்தைகள், முன்பே இருக்கும் நிலைமைகளைக் கொண்டவர்கள் மற்றும் வெப்பத்தால் பாதிக்கப்படக்கூடியவர்கள், சுவாச மற்றும் இருதய நோய்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகின்றன.

காற்று மாசு:

மாசுபட்ட காற்றை, குறிப்பாக அதிக அளவு பி.எம் .2.5, ஓசோன் மற்றும் நைட்ரஜன் ஆக்சைடு ஆகியவற்றின் வெளிப்பாட்டின் மீது கோவிட் -19 தொற்று மோசமடையக்கூடும். இவை அனைத்தும் நோயெதிர்ப்பு மண்டல ஒழுங்குமுறையைத் தூண்டும். இதையொட்டி இணை நோய்கள் ஏற்படுவதற்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால், வைரஸ் பரவலில் காற்றின் தரத்தின் தாக்கம் குறித்த சான்றுகள் குறைவாகவே உள்ளன.

மனித நடத்தை:

இது SARS-Cov-2 பரிமாற்றத்தில் ஒரு பங்கைக் கொண்ட மிகவும் உறுதியான காரணியாகக் கருதப்படுகிறது. மோசமான காற்றோட்டத்துடன் மூடிய இடங்களுக்குள் மக்கள் கூடும் போது பரவல் பொதுவாக நிகழ்கிறது என்பது இப்போது நிறுவப்பட்டுள்ளது. அதிக வெப்பம் மாஸ்க்கை தவிர்க்க மக்களைக் கட்டாயப்படுத்தக்கூடும். இதனால், அதிக பரவலுக்கு உதவுகிறது. சூடான நிலைமைகள் ஏர் கண்டிஷனர்களின் பயன்பாட்டின் அதிகரிப்பு மற்றும் உட்புற பரிமாற்ற அபாயத்தையும் அதிகரிக்கும்.

WMO பணிக்குழுவின் முக்கிய முடிவுகள் என்ன?

SARS-Cov2 குளிர், வறண்ட மற்றும் குறைந்த புற ஊதா கதிர்வீச்சு நிலைகளில் நீண்ட காலம் வாழ்கிறது. ஆனால், 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் (ஜனவரி முதல் வாரம் வரை) கோவிட் -19 டிரான்ஸ்மிஷன் டைனமிக்ஸ் முதன்மையாக லாக் டவுன், பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் மாஸ்க்குகளின் பயன்பாடு போன்ற அரசாங்க தலையீடுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பிற பரிமாற்ற இயக்கிகள் மனித நடத்தை, புள்ளிவிவரங்கள், மக்கள்தொகையின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வைரஸ் பிறழ்வுகள் ஆகியவை அடங்கும்.

வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான தலையீட்டு நடவடிக்கைகளை அரசாங்கங்கள் தளர்த்துவதற்கான அடிப்படையாக வானிலை காரணிகளும் காற்றின் தரமும் இருக்கக்கூடாது என பணிக்குழு பரிந்துரைத்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment