/indian-express-tamil/media/media_files/2025/03/24/fW6sjfeWxvET7GAv5OEm.jpg)
அமெரிக்கா 3 முக்கிய பயிர்களை இந்தியாவில் சந்தைப்படுத்த ஆர்வம் கொண்டுள்ளது. சோயாபீன், சோளம் (மக்காச்சோளம்) மற்றும் பருத்தி ஆகியன ஆகும். ஏப்.2 முதல் இந்திய ஏற்றுமதி பொருட்கள் மீது பரஸ்பர வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ள நிலையில், சந்தைப்படுத்துதலுக்கான வரிநீக்க கோரிக்கை அதிரிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
அமெரிக்கா 3 விளைப்பொருட்களின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக உள்ளது. சோயாபீன், சோளம் (மக்காச்சோளம்) மற்றும் பருத்தி ஆகியன ஆகும். அவற்றின் ஒருங்கிணைந்த ஏற்றுமதி மதிப்பு 2022-ல் 62 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது.
2022-2024க்கு இடையில் அமெரிக்காவின் சோயாபீன்ஸ் மற்றும் பருத்தியின் கொள்முதல் முறையே 17.9 பில்லியன் டாலரிலிருந்து 12.8 பில்லியன் டாலராகவும், 2.9 பில்லியன் டாலரிலிருந்து 1.5 பில்லியன் டாலராகவும் குறைந்துள்ளது. சீனா மற்றும் அமெரிக்க சோயாபீன்ஸ் மற்றும் பருத்திக்கான மிகப்பெரிய சந்தையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
2022-ல் 5.2 பில்லியன் டாலர்களுடன் அமெரிக்காவிலிருந்து அதிக அளவில் சோளத்தை இறக்குமதி செய்யும் நாடாக சீனா இருந்தது. பின்னர் 2024-ல் அது 328 மில்லியன் டாலர்களாகக் குறைந்தது. 2023 முதல் மெக்சிகோவும் ஜப்பானும் அமெரிக்க சோளத்தை வாங்கும் முதல் 2 நாடுகளாகின.
இந்தியா ஒரு சாத்தியமான சந்தையா?
அமெரிக்க வேளாண்மைத் துறையின் பொருளாதார ஆராய்ச்சி சேவையின் "இந்தியாவில் இறைச்சி மற்றும் தீவனத்திற்கான தேவை அதிகரிக்கிறது" என்ற தலைப்பில் ஒரு புதிய அறிக்கை வெளியாகி இருந்தது.
மக்கள்தொகை மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து வருவதால், இந்தியாவின் விலங்குகளில் இருந்து கிடைக்கும் பொருட்களான பால், முட்டை, மீன் மற்றும் இறைச்சி ஆகியவற்றின் நுகர்வு அதிகரிக்கும் என்று அறிக்கை காட்டுகிறது. இது தீவனத்திற்கான தேவையை அதிகரிக்கும் எனத் தெரிகிறது. "2030களின் முற்பகுதியில்" சோளம் மற்றும் சோயாபீன் போன்ற பொருட்களின் இறக்குமதிக்கான தேவையை அதிகரிக்கும்.
வருமான வளர்ச்சி (ஆண்டுக்கு 6.6%) இந்தியாவின் உள்நாட்டு சோள நுகர்வு 2022-23ம் ஆண்டில் 34.7 மில்லியன் டன் (மெட்ரிக் டன்)லிருந்து 2040-ல் 98 மில்லியன் டன் (மெட்ரிக் டன்) ஆகவும், 2050-ல் 200.2 மில்லியன் டன் ஆகவும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருமான வளர்ச்சி ஆண்டுக்கு 4.6%ல் இருந்தால், இது 2040-ல் 62.8 மில்லியன் டன் மற்றும் 2050-ல் 93 மில்லியன் டன் எனக் குறையும். சோயாபீன் நுகர்வு 2022-23ம் ஆண்டில் 6.2 மில்லியன் டன் லிருந்து 30.9 மில்லியன் டன் மற்றும் 68.3 மில்லியன் டன் ஆகவும், "மிதமான" வருமான வளர்ச்சி சூழ்நிலைகளின் கீழ் 17.7 மில்லியன் டன் மற்றும் 28.3 மில்லியன் டன் ஆகவும் உயர வாய்ப்புள்ளது.
"விரைவான" வருமான வளர்ச்சியின்போது, அதிக தேவையை பூர்த்தி செய்ய 2040 மற்றும் 2050-ம் ஆண்டுகளில் 46 மில்லியன் டன் சோளமும் 134 மில்லியன் டன் சோளமும், 19 மில்லியன் டன் சோயாபீனும் 53 மில்லியன் டன் சோயாபீனும் இறக்குமதி தேவைப்படும். வருமான வளர்ச்சி "மிதமானதாக" இருந்தால், சோள இறக்குமதி 2040-ல் 11 மில்லியன் டன்களாகவும், 2050-ல் 26 மில்லியன் டன்களாகவும் இருக்கும். அதே நேரத்தில் சோயாபீக்கு முறையே 6 மில்லியன் டன் மற்றும் 13 மில்லியன் டன்களாக இருக்கும்.
சீனா அதன் இறக்குமதியைக் குறைத்தாலும் அல்லது பிரேசில் மற்றும் அர்ஜென்டினா போன்ற பிற நாடுகளிடமிருந்து அதிகமாகப் பெற்றாலும், அமெரிக்க சோளம் மற்றும் சோயாபீன்களுக்கு இந்தியா மிகப்பெரிய சந்தை ஆற்றலை வழங்குகிறது. USDA அறிக்கையின்படி, 2020-ல் இந்தியாவில் விலங்கு பொருட்கள் தனிநபர் நுகர்வு 82.6 கிலோவாக இருந்தது. இது 143 கிலோ உலகளாவிய சராசரியை விட மிகக் குறைவு. 82.6 கிலோவில் கூட பால் (66.3 கிலோ), மீன் (7.9 கிலோ), முட்டை (3.9 கிலோ), கோழி இறைச்சி (2.6 கிலோ), மாட்டிறைச்சி (1.1 கிலோ), ஆட்டிறைச்சி (0.6 கிலோ) மற்றும் பன்றி இறைச்சி (0.2 கிலோ) ஆகியவை ஆகும்.
விலங்குப் பொருட்களின் நுகர்வு மற்றும் பெறப்பட்ட தீவனத் தேவை இந்திய சந்தைகளில் எதிரொலிக்குமா என்பது ஒரு சர்ச்சைக்குரிய விஷயம். இதுவரை இந்தியா தீவனப் பொருட்களை சிறிய அளவில் இறக்குமதி செய்து வருகிறது. சில ஆண்டுகளில்,குறிப்பிடத்தக்க அளவு சோளத்தையும் (2019-20ல் 458,470 டன்) சோயாபீன் (2021-22ல் 679,843 டன்) இறக்குமதி செய்தது. 2022-ம் ஆண்டில் மொத்த தீவன நுகர்வு 46.4 மில்லியன் டன் என அறிக்கை மதிப்பிடுகிறது. தீவனப் பொருட்களின் இறக்குமதி வெறும் 178,969 டன்கள் மட்டுமே.
இந்த அளவுகள் சீனாவின் ஒரு பகுதியே என்றாலும், அமெரிக்கா இந்தியாவை அதன் சோளம் மற்றும் சோயாபீன்களுக்கு ஒரு பெரிய சந்தையாகக் கருதுகிறது என்பதில் சந்தேகமில்லை. இந்தியா தற்போது சோயாபீன் மீது 45% அடிப்படை சுங்க வரியையும், சோள இறக்குமதி மீது 50% அடிப்படை சுங்க வரியையும் விதிக்கிறது. மேலும், மரபணு மாற்றப்பட்ட (GM) தயாரிப்புகள் தொடர்பான கட்டுப்பாடுகளை இது கொண்டுள்ளது, இது அமெரிக்காவிலிருந்து சோளம், சோயாபீன் அல்லது உணவு இறக்குமதியை திறம்பட தடை செய்கிறது.
பருத்தி - ஏற்றுமதியாளர் முதல் இறக்குமதியாளர் வரை:
அமெரிக்காவின் 3வது ஆர்வமுள்ள பயிர் பருத்தி. பருத்தி ஏற்றுமதியில் உலகின் நம்பர் 1 ஏற்றுமதியாளராக அமெரிக்கா இருந்தது. 2023-24ம் ஆண்டில் பிரேசில் அமெரிக்காவை முந்தியது. 2002-03 மற்றும் 2013-14 க்கு இடையில் இந்தியாவின் பருத்தி உற்பத்தி 13.6 மில்லியனிலிருந்து 39.8 மில்லியன் பேல்களாக 3 மடங்காக உயர்ந்து. இந்த ஆண்டில் 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 29.9 மில்லியன் பேல்களாகக் குறைந்தது தெரிய வந்துள்ளது. 2024-25 (அக்.-செப்.)- ஆண்டிற்கான இந்தியாவின் பருத்தி இறக்குமதி 3 மில்லியன் பேல்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அதன் ஏற்றுமதியான 1.7 மில்லியன் பேல்களை விட அதிகமாகும்.
நிகர ஏற்றுமதியாளரான இந்தியா இறக்குமதியாளராக மாற்றம், அமெரிக்கா இந்தியாவிற்கு அதிக பருத்தியை அனுப்ப ஒரு வாய்ப்பை வழங்கும். இந்தியாவிற்கான அமெரிக்க ஏற்றுமதிகள் 2022ல் $491.2 மில்லியன், 2023ல் $231.2 மில்லியன் மற்றும் 2024ல் $210.7 மில்லியன் என மதிப்பிடப்பட்டன. இயற்கை இழை இறக்குமதிக்கான 11% வரி தற்போது நீக்கப்படுவதால் இது அதிகரிக்கக் கூடும்.
அமெரிக்காவிற்கு இந்தியா மிகப்பெரிய சந்தையாக மாறுவதற்கான வாய்ப்புகள் சோயாபீன்ஸ் அல்லது சோளத்தை விட பருத்தியில் அதிகமாக இருக்கலாம். மேலும், 2024-ல் 10.8 பில்லியன் டாலர்களாக இருந்த அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியை வரி இல்லாத மூல பருத்தி இறக்குமதி அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.