Advertisment

காலிஸ்தான் பிரிவினைவாதியைக் கொல்லும் சதியில் இந்தியர்- யார் இந்த நிக் குப்தா யார்?

இந்த அரசு ஊழியரின் பெயர் இதுவரை வெளியிடப்படவில்லை மேலும் அவர் அமெரிக்க நீதித்துறை அறிக்கையின் படி "CC-1" என்று குறிப்பிடப்பட்டுள்ளார். நிகில் குப்தா இந்த CC-1 இன் கூட்டாளி எனக் கூறப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Khalistan

US govt charges Indian in ‘foiled plot to kill Khalistani separatist’

அமெரிக்காவை தளமாகக் கொண்ட காலிஸ்தான் தலைவரைக் கொல்லும் சதியில் ஈடுபட்டதற்காக இந்தியர் ஒருவர் மீது அமெரிக்க நீதித்துறை (DoJ) குற்றம் சாட்டியுள்ளது.

Advertisment

புதன்கிழமை (நவம்பர் 29) அதன் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், ’இன்று நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்தில், நியூயார்க்கில் ஒரு அமெரிக்க குடிமகனை படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் தொடர்பாக, இந்திய நாட்டவர் நிகில் குப்தா என்ற நிக், (52) மீது கூலிக் கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாககூறப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தைப் பற்றி இதுவரை எங்களுக்குத் தெரிந்த அனைத்தும் இங்கே.

அமெரிக்க நீதித்துறை வெளியீட்டின் படி, இந்த ஆண்டின் தொடக்கத்தில், குப்தா உட்பட மற்றவர்களுடன் இணைந்து பணிபுரியும் இந்திய அரசு ஊழியர், இந்தியாவிலும் பிற இடங்களிலும், நியூயார்க் நகரில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க குடியுரிமை பெற்ற வழக்கறிஞர் மற்றும் அரசியல் ஆர்வலர் ஒருவரை அமெரிக்க மண்ணில் படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார்.

இந்த அரசு ஊழியரின் பெயர் இதுவரை வெளியிடப்படவில்லை மேலும் அவர் அமெரிக்க நீதித்துறை அறிக்கையின் படி "CC-1" என்று குறிப்பிடப்பட்டுள்ளார். நிகில் குப்தா இந்த CC-1 இன் கூட்டாளி எனக் கூறப்படுகிறது.

“CC-1 என்பவர் ஒரு இந்திய அரசாங்க நிறுவன ஊழியர், 'பாதுகாப்பு மேலாண்மை' மற்றும் 'உளவுத்துறை' ஆகியவற்றில் பொறுப்புகளைக் கொண்ட சீனியர் ஃபீல்ட் ஆபீசர்என்று பல்வேறு விதங்களில் தன்னை விவரித்தவர்.

மேலும் அவர் முன்பு இந்தியாவின் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணியாற்றியதையும், 'போர்' மற்றும் 'ஆயுதங்களில்' அதிகாரி பயிற்சி பெற்றதையும் குறிப்பிட்டுள்ளார்.

CC-1 இந்தியாவில் இருந்து படுகொலை சதியை இயக்கினார். அவர் அமெரிக்காவில் படுகொலையை திட்டமிடுவதற்காக குப்தாவை நியமித்ததாகக் கூறப்படுகிறது.

சதி எப்படி முறியடிக்கப்பட்டது?

இந்த சதி திட்டத்தை வெற்றிகரமான முடிக்க குப்தா "CC-1 இன் வழிகாட்டுதலின்படி ... ஒரு நபரைத் தொடர்பு கொண்டார்" அவர் இந்த சதியில் தனக்கு கூட்டாளியாக இருப்பார் என்று நம்பினார், ஆனால் உண்மையில் அவர் அமெரிக்க சட்ட அமலாக்கத்துடன் பணிபுரியும் ஒரு ரகசிய ஆதாரமாக இருந்தார்.

இந்த ஆதாரம், குப்தாவிடம் தன்னை ஒரு "ஹிட்மேன்" என்று அறிமுகப்படுத்திக் கொண்டார், ஆனால் அவர் உண்மையில் மறைமுக அமெரிக்க சட்ட அமலாக்க அதிகாரி. அதைத் தொடர்ந்து வேலையை முடிக்க 100,000 டாலர் ஒப்பந்தம் செய்யப்பட்டது,

முதற்கட்டப் பணம் செலுத்தப்பட்ட பிறகுசிசி-1 காலிஸ்தான் தலைவரை பற்றிய தனிப்பட்ட தகவல்களை குப்தாவுக்கு வழங்கினார், இதில் நியூயார்க் நகரில் உள்ள விக்டிம் வீட்டு முகவரி, தொடர்புடைய தொலைபேசி எண்கள் மற்றும் அவரது அன்றாட நடத்தை பற்றிய விவரங்கள் ஆகியவை அடங்கும்.

அதை குப்தா பின்னர், ஹிட்மேன் என்று தான் நம்பிரகசிய அதிகாரிக்கு அனுப்பினார்.

முடிந்தவரை விரைவில் படுகொலையை நடத்துமாறு 'ஹிட்மேனிடம்' குப்தா கேட்டுக்கொண்டார், ஆனால் அமெரிக்க மற்றும் இந்திய அரசாங்க உயர்மட்ட அதிகாரிகளுக்கு இடையே அடுத்த வாரங்களில் நடக்கவிருக்கும் எதிர்பார்க்கப்படும் சந்திப்பு தேதிகளில் "கொலை செய்ய வேண்டாம்" என்று அவருக்கு குறிப்பாக அறிவுறுத்தப்பட்டது.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு குருத்வாராவிற்கு வெளியே ஜூன் மாதம் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட பிறகு, குப்தா ஹிட்மேனிடம் நிஜ்ஜரும் ஒரு "இலக்கு" என்றும் "எங்களுக்கு பல இலக்குகள் உள்ளன" என்றும் கூறியதாக கூறப்படுகிறது.

CC-1 காலிஸ்தான் தலைவரைப் பற்றிய செய்திக் கட்டுரையை குப்தாவுக்கு அனுப்பி, ’இதுதான் இப்போது முன்னுரிமை’ என்று செய்தி அனுப்பினார்.

சதியின் இலக்கு யார்?

குப்தாவைத் தவிர, அமெரிக்க நீதித்துறை எந்தப் பெயரையும் குறிப்பிடவில்லை, அறிக்கை முழுவதும், கொலைக்கு இலக்கான காலிஸ்தான்  தலைவரை ’விக்டிம்’ எனக் குறிப்பிடுகிறது.

"இந்திய அரசாங்கத்தை கடுமையாக விமர்சிப்பவர் மற்றும் பஞ்சாப் பிரிவினைக்கு வாதிடும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு அமைப்பை வழிநடத்துபவர்" என்று கூறப்படும் இலக்கு- நியூயார்க்கை தளமாகக் கொண்ட வழக்கறிஞர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பஞ்சாப் இந்தியாவிலிருந்து பிரிந்து சீக்கிய இறையாண்மையை நிறுவ வேண்டும் என்று விக்டிம் பகிரங்கமாக அழைப்பு விடுத்ததாகவும், "இந்திய அரசாங்கம் அவரையும் அவரது பிரிவினைவாத அமைப்பையும் இந்தியாவில் தடை செய்துள்ளது" என்றும் அது கூறுகிறது.

கடந்த வாரம், பைனான்சியல் டைம்ஸ் நாளிதழ், வழக்கறிஞர் மற்றும் காலிஸ்தான் ஆதரவாளரான குர்பத்வந்த் சிங் பன்னுனை அமெரிக்க மண்ணில் படுகொலை செய்வதற்கான சதித்திட்டத்தை அமெரிக்கா முறியடித்தது.

மேலும் இந்த சதித்திட்டத்தில் ஈடுபட்டது குறித்து இந்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் செய்தி வெளியிட்டது.

இந்தியா, அதன் பதிலில், இந்தியா-அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த சமீபத்திய விவாதங்களின் போது, ​​ குற்றவாளிகள், துப்பாக்கி ஏந்தியவர்கள், பயங்கரவாதிகள் மற்றும் பிறருக்கு இடையேயான தொடர்பு குறித்த சில உள்ளீடுகளை அமெரிக்கத் தரப்பு பகிர்ந்து கொண்டது. இவை இரு நாடுகளுக்கும் கவலையை ஏற்படுத்துகின்றன.

இத்தகைய விஷயங்களை இந்தியா தீவிரமாக எடுத்துக்கொள்கிறது, ஏனெனில் அது நமது சொந்த தேசிய பாதுகாப்பு நலன்களையும் பாதிக்கிறது. அமெரிக்க கூறியதன் பின்னணியில் உள்ள சிக்கல்கள் ஏற்கனவே தொடர்புடைய துறைகளால் ஆராயப்பட்டு வருகின்றன’, என்று கூறியது.

"விவகாரத்தின் அனைத்து தொடர்புடைய அம்சங்களையும்" விசாரிக்க உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளதாக அரசாங்கம் புதன்கிழமை அறிவித்தது.

நிக் குப்தா யார், இப்போது எங்கே இருக்கிறார்?

குப்தா அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர் என்பதைத் தவிர, அவரைப் பற்றி அதிகம் தெரியவில்லை.

அமெரிக்காவிற்கும் செக் குடியரசிற்கும் இடையிலான இருதரப்பு ஒப்படைப்பு ஒப்பந்தத்தின்படி செக் அதிகாரிகள் குப்தாவை ஜூன் 30, 2023 அன்று கைது செய்து காவலில் வைத்தனர், என்று அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.

அவர் மீது கூலிக்கு கொலை மற்றும் கொலைக்கு சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது, இதில் ஒவ்வொன்றுக்கும் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

Read in English: US govt charges Indian in ‘foiled plot to kill Khalistani separatist’: What we know about Nikhil Gupta, the ‘murder conspiracy’

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

United States Of America
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment