இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பேசியதாவது, இந்தியாவும், அமெரிக்காவும், இதுவரத இல்லாத அளவிற்கு மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ள உள்ளோம். இந்த வர்த்தக உறவுகளில் நிலவும் தடைகளை தகர்த்தெறிய இருநாடுகளும் முக்கிய ஆலோசனைகளில் ஈடுபட உள்ளது.
இந்த புதிய வர்த்தக உறவு. இந்தியாவுக்கே பெரும்சாதகமாக அமையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க - இந்தியா வர்த்தக உறவு
2018ம் ஆண்டில் அமெரிக்கா - இந்தியா நாடுகளுக்கிடையே 142.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவில் சரக்கு மற்றும் சேவைகள் பிரிவில் வர்த்தகம்
2018ம் ஆண்டில் அளவில் இந்தியாவுடனான அமெரிக்க வர்த்தக பற்றாக்குறை 25.2 பில்லியன்
2018ம் ஆண்டில் இரு நாடுகளுக்கிடையே 87.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு வர்த்தம் நடைபெற்றுள்ளது. இந்தியா, அமெரிக்காவின் 9வது பெரிய வர்த்தக உறவு கொண்ட நாடு ஆகும். இந்தாண்டில், அமெரிக்கா, இந்தியாவிற்கு 33.5 பில்லியன்
அமெரிக்க டாலர்கள் அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவிடமிருந்து 54.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு இறக்குமதி செய்துள்ளது.
சேவைகள் பிரிவில் 25.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவில் ஏற்றுமதியும், 29.6 பில்லியன் டாலர்கள் அளவிற்கு இறக்குமதியும் மேற்கொண்டுள்ளது.
இந்தியாவிற்கு சரக்கு மற்றும் சேவைகள் ஏற்றுமதி தொடர்பாக, 1,97,000 அமெரிக்கர்கள் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு ஏற்றுமதி
இந்தியா, அமெரிக்காவுக்கு 12வது பெரிய ஏற்றுமதி நாடாக 2018ம் ஆண்டில் விளங்கியது.
2018ம் ஆண்டில் இந்தியாவுக்கு 33.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு அமெரிக்கா ஏற்றுமதி மேற்கொண்டுள்ளது. இது 2017ம் ஆண்டை ( 7.9 பில்லியன் டாலர்கள்) ஒப்பிடுகையில் 30.6 சதவீதம் அதிகம் ஆகும் .2008ம் ஆண்டை ஒப்பிடுகையில், 89.5 சதவீதம் அதிகம் ஆகும்.
சேவைகள் பிரிவில், 2018ம் ஆண்டில் 25.2 பில்லியன் டாலர்கள் அளவிற்கு ஏற்றுமதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது 2017ம் ஆண்டை ( 1.6 பில்லியன் டாலர்கள்) ஒப்பிடுகையில் 6.6 சதவீதம், 2008ம் ஆண்டை ஒப்பிடுகையில் 151 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது .
2018ம் ஆண்டில் முதன்மை ஏற்றுமதி பொருட்கள்
வைரம் மற்றும் விலையுயர்ந்த உலோகங்கள் ( 7.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள்)
கனிம எரிபொருள்கள் ( 6.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள்)
விமான பாகங்கள் (2.9 பில்லியன் டாலர்கள்)
இயந்திர பாகங்கள் (2.2 பில்லியன் டாலர்கள்)
ஆர்கானிக் கெமிக்கல்ஸ் ( 1.6 பில்லியன்)
இந்தியாவிலிருந்து இறக்குமதி
2018ம் ஆண்டில், இந்தியா, அமெரிக்காவின் 10வது மிகப்பெரிய இறக்குமதி நாடாக விளங்கியது.
54.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு அமெரிக்கா இறக்குமதி செய்துள்ளது. இது 2017ம் ஆண்டை ( 5.8 பில்லியன் டாலர்கள்) ஒப்பிடுகையில்ல 11.9 சதவீதம் அதிகம் ஆகும். 2008ம் ஆண்டை ஒப்பிடுகையில், 111.4 சதவீதம் அதிகம் ஆகும்.
சேவைகள் பிரிவில், 29.6 பில்லியன் டாலர்கள் அளவிற்கு இறக்குமதி நடைபெற்றுள்ளது. இது 2017ம் ஆண்டை ( 1.4 பில்லியன் டாலர்கள்) ஒப்பிடுகையில் 4.9 சதவீதம் அதிகம். 2008ம் ஆண்டை ஒப்பிடுகையில், 134 சதவீதம் அதிகம் ஆகும்.
2018ம் ஆண்டில் முதன்மை இறக்குமதி பொருட்கள்
வைரம் மற்றும் விலையுயர்ந்த கற்கள் - 11 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
மருந்து பொருட்கள் - 6.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
இயந்திர பாகங்கள் - 3.3பில்லியன் அமெரிக்க டாலர்கள்
கனிம எரிபொருட்கள் - 3.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
வாகன உதிரி பாகங்கள் - 2.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.