Advertisment

கூகுள் நிறுவனம் சட்ட விரோதமாக மேலாதிக்கம் செலுத்துகிறது: அமெரிக்கா நீதித்துறை

கூகுள் நிறுவனம் தேடல் மற்றும் ஆன்லைன் விளம்பரச் சேவையின் மீது மேலாதிக்க கட்டுப்பாட்டை சட்டவிரோதமாக பாதுக்காத்து வருவதாக அமெரிக்கா நீதித்துறை தெரிவித்தது.

author-image
WebDesk
New Update
கூகுள் நிறுவனம் சட்ட விரோதமாக மேலாதிக்கம் செலுத்துகிறது: அமெரிக்கா நீதித்துறை

கூகுள் நிறுவனம் தேடல் மற்றும் ஆன்லைன் விளம்பரச் சேவையின் மீது மேலாதிக்க கட்டுப்பாட்டை சட்டவிரோதமாக பாதுக்காத்து வருவதாக அமெரிக்கா நீதித்துறை தெரிவித்தது

Advertisment

அமெரிக்கா நீதித்துறை, அமெரிக்க  செனட் , 50 அமெரிக்கா மாகாணங்கள் மேற்கொண்ட  விசாரணைகளின் விளைவாக ஆல்பாபெட்  கூட்டு குழுமத்துக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல்  நம்பிக்கை மோசடி வழக்கு இதுவாகும்.

ஆன்லைன் விளம்பரத் துறையில் கூகுள் நிறுவனத்தின் நடத்தை குறித்து மாநில அட்டர்னி ஜெனரல் மற்றும் கூட்டாட்சி அமைப்பு அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.  கூகுள் நிறுவனத்துக்கு எதிரான மேலும் சில மோசடி வழக்கை மாகாணங்கள் ஆராய்ந்து வருகிறது.

உண்மையில் என்ன நடக்கிறது?

இது உலகளாவிய நிறுவனத்திற்கு எதிரான முதல் படி. உலக சந்தைகள், தகவல் தொடர்பு மற்றும் பொதுக் கருத்தை வடிவமைக்கும் சக்தி படைத்த இன்றைய தொழில்நுட்ப நிறுவனங்களைத் தடுக்க தேவைப்படும் நடவடிக்கைகள் என்ன?  என்ற கொள்கை ரீதியிலான கேள்விக்கு இந்த வழக்கு ஒரு பதிலாகவும் அமையும்.

அமெரிக்காவில் மாறிவரும் அரசியல் சூழ்நிலைகளும் இந்த வழக்கை வழிநடத்தியது. பெரு நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறார்  என்ற கருத்தை தேர்தலுக்கு முன் மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் அட்டர்னி ஜெனரல் வில்லியம் பார் துரிதப்படுத்தி இருக்கிறார். இந்த, வழக்கில் 11 மாகணங்கள் தங்களை இணைந்துள்ளன.

அமெரிக்கா நீதித்துறையின் குற்றச்சாட்டுகள் என்ன ?

ஏகபோகம் அல்லது தனியுரிமை (Monopoly) தொடர்பான வழக்கு. ஆப்பிள் போன்ற பெரு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, தேடல் மற்றும் ஆன்லைன் விளம்பரச் சேவையின் மீது மேலாதிக்க கட்டுப்பாட்டை சட்டவிரோதமாக பாதுக்காத்து வருவதாக அமெரிக்கா நீதித்துறை தெரிவித்தது. ஐபோன்கள் மற்றும் பிற சாதனங்களில் இயல்புநிலை தேடல் இன்ஜினாக அமைத்துக் கொள்ள கூகுள் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு பில்லியன் டாலர்களை செலுத்துகிறது.

ஆண்ட்ராய்டு (Android) இயக்க முறைமைகளை (OS) பயன்படுத்தும்  ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுடன் கூகுளை இயல்புநிலை தேடல் இன்ஜினாக அமைத்துக் கொள்ளும் ஒப்பந்தத்தையும் அமெரிக்கா நீதித்துறை சுட்டிக்காட்டியது.

வீடியோ விளம்பரங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் விளம்பரத்திற்கான ஒட்டுமொத்த சேவையில், கூகுள் நிறுவனத்தின் நடத்தை மற்றும் கையகப்படுத்துதல் செயல்முறை பற்றியும் நீதித்துறை ஆய்வு செய்தது. கடந்த ஆண்டு,  ஆல்பாபெட்  கூட்டு குழுமத்தின் 34 பில்லியன் டாலர் என்ற ஒட்டுமொத்த லாபமும், ஏறக்குறைய  ஆன்லைன் விளம்பரங்களின் மூலமே பெறப்பட்டது.

வழக்கில் வெற்றிபெற, நீதித்துறை இரண்டு விஷயங்களைக் காட்ட வேண்டும்: (i) தேடல் சேவையில் கூகுள் ஆதிக்கம் செலுத்திகிறது. (ii) ஆப்பிள் போன்ற பிற நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள், போட்டியாளர்களை சந்தையில் நுழைவதைத் தடுக்கின்றன.

கூகுள் தரப்பு வாதம்? 

நாங்கள் ஆதிக்கம் செலுத்தவில்லை என்பதே கூகுளின் ஒற்றைப் பதிலாக உள்ளது.

காங்கிரசில் அண்மையில் அளித்த சாட்சியங்களின் சாராம்சம் அதுதான். அமெரிக்காவின் இணையத் தேடுபொறித் தொழில்நுட்ப சந்தையில் 80%  பங்கை கூகுள் நிறுவனம் கொண்டுள்ளது. ஆனால், இது பொதுவான ஒரு வாதம். இதை மட்டும் நாம் கருத்தில் கொள்ள முடியாது. உதாரணமாக, ஆன்லைன் ஷாப்பிங் தேடல் சேவையில்  அமேசான் நிறுவனம் கோலோச்சி வருகிறது என்று அமெரிக்கா செனட்டில் கூகிள் நிர்வாகம் பதில் அளித்தது.

அடுத்ததாக, நீதித்துறை மேற்கோள் காட்டும் ஒப்பந்தங்கள் முற்றிலும் சட்டபூர்வமானவை என்று கூகுள்  கூறுகிறது. இதுபோன்ற, ஒப்பந்தங்கள் ( நிறுவனகளுக்கு இடையேயான) செயல்பாட்டு ரீதியில் போட்டியாளர்களை தேடுபொறித் தொழில்நுட்ப சந்தையில் நுழைவதை தடுப்பதாக நிருபீத்தால் மட்டுமே சந்தைப் போட்டி சட்டங்கள் மீறப்படுவதாக கருதப்படும். பயனர்கள் எப்போது வேண்டுமானாலும், மைக்ரோசாப்டின் பிங் யாகூ தேடல் போன்ற பிற தேடுபொறிகளுக்கு சுதந்திரமாக மாறலாம் என்று கூகுள் வலியுறுத்துகிறது. மேலும், இந்த சேவையில் நாங்கள் சந்தையில் மேலாதிக்க நிலையில் இருக்கிறோம், ஏனெனில் மக்கள் எங்கள் சேவையை விரும்புகிறார்கள் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்தது.

கூகுள் சேவை இலவசம்?  

இலவசமாக அளிக்கப்படும் சேவைகள் நுகர்வோரின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று நீதித்துறை வாதாடிகிறது. போட்டி குறைந்த சந்தையில்  குறைந்த கண்டுபிடிப்புகளும், நுகர்வோர் தேர்வும் குறைந்து காணப்படும். இலக்கு விளம்பரங்களில்( targeted advertising)  கூகுள் நிறுவனத்தை விட குறைந்த தரவை சேகரிக்கும் போட்டியாளர்கள் சந்தையில் நுழைவது தடுக்கப்படும். இதனால், நுகர்வோரின் தனியுரிமை மற்றும் பாதுகாப்புக் கோட்பாடுகள் மேம்படுத்தப்படாமல் போகும்.

அதேபோன்று, நுகர்வோருக்கு இலவசமாக அளிக்கும் சேவைகளுக்கு சந்தைப் போட்டி சட்டங்களில் இருந்து விலக்கு அளிக்கப்படவில்லை. 1990 களின் பிற்பகுதியில் மைக்ரோசாஃப்ட் வழக்கில், மென்பொருள் நிறுவனமானது அதன் ஆதிக்க விண்டோஸ் இயக்க முறைமையில் இணைய உலாவியை இலவசமாக தொகுத்தது.  விண்டோஸ்  இயக்க முறைமைகளை பயன்படுத்தும் உற்பத்தியாளர்கள் கட்டயாம் தனது இணைய உலாவியை பயன்படுத்த வேண்டும் என்று மைக்ரோசாப்ட் ஒப்பந்தம் செய்தது. இந்த வழக்கில், மைக்ரோசாஃப்ட்டின் செயல் சட்ட விரோதமானது என்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்பளித்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Google Apple Microsoft
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment